-
இயேசு கிறிஸ்து யார்?
இயேசு கிறிஸ்து யார்- 1
தலைப்பை கேட்டதும் இயேசப்பாவை பத்திதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே, வேற எதுவும் முக்கியமானது சொல்ல போறீங்களா? அப்படீன்னு நீங்க கேட்டா, ஆமா குட்டிஸ் உங்களுக்கு மட்டுமில்ல நம்ம இயேசப்பாவை பத்தி தெரியாத உங்க நண்பர்களுக்கும் கூட இயேசப்பாவை குறித்து இந்த நாட்களில் தெரிந்து கொள்ளணும், இன்னும் அதிகமாய் நீங்க இயேசப்பாவை குறித்து சொல்லணும் என்பதற்காக தேவன் எங்களுக்காக காண்பித்த பாதை இது
இயேசு கிறிஸ்து யார் - 2(உலகம் உருவாகின விதம்)
நம்ம இயேசப்பாவை பத்தி தெரிந்து கொள்வதற்கு முன்னாடி நம்ம பிதாப்பா பற்றி தெரிந்து கொள்ளணுமே குட்டிஸ்! அதுனால முதல்ல பிதாப்பா பற்றி பார்ப்போமா!
இயேசு கிறிஸ்து யார் - 3 ( ஆளுகை செய்கிறார்)
நட்சத்திரங்களைப் பேரிட்டு அழைக்கிறதில இருந்து(சங்கீதம் 147 : 4), பூமிக்கு வெளிச்சம் கொடுத்து(யோபு 38 : 18, 19), துன்மார்க்கரை தாழ்த்தி( யோபு 40 : 10 – 14), எளியவர்களை உயர்த்துகிற காரியங்கள் வரைக்கும் நம்ம தேவன்தான் ஆளுகை செய்கிறார்.
இயேசு கிறிஸ்து யார்- 4 ( பிதாப்பாவும் இயேசப்பாவும்)
சுருக்கமா சொன்னா நம்ம இயேசப்பா, பிதாப்பாவுக்கு கீழ்படிகிற பிள்ளை. அப்ப எங்களை மாதிரி செல்லப்பிள்ளை கிடையாதான்னு நீங்க கேள்வி கேக்குறதும் புரியுது. அதற்கான பதில்:
நீங்க புதிய ஏற்பாடுல முதல் நான்கு புத்தகங்களை வாசித்து பார்த்தா நம்ம இயேசப்பா நிறைய தடவை பிதாவேன்னு சொல்லிருப்பாங்க.இயேசு கிறிஸ்து யார் - 5(தேவகுமாரன் மனிதனாய் பிறந்த விந்தை)
இந்த பூமியில நம்ம இயேசப்பாக்கு அம்மா, அப்பாவா தேவன் கொடுத்த மரியாளோ, யோசேப்போ ரொம்ப பெரிய ஆட்கள் கிடையாது. தீர்க்கதரிசிகளோ, பெரிய வியாபார குடும்பத்தை சேர்ந்தவங்களோ, இல்லாட்டி அரச குடும்பத்தை சேர்ந்தவங்களோ கிடையாது. யோசேப்பு ஒரு சாதாரண தச்சு வேலை பார்த்தவர். மரியாளும் ஒரு எளிமையான குடும்பத்தில இருந்து வந்தவங்க
இயேசு கிறிஸ்து யார் - 6 (பெத்தாபராவில் ஞானஸ்நானம்)
நம்ம தேவனை பற்றி மற்றவங்களுக்கு நீங்க சொல்லறதுக்கு மிக நீண்டதா பிரசங்கம் செய்ய தேவையில்லை குட்டிகளா. நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த ஒரு வார்த்தை போதும். ஏன்னா ஓடுகிறவனாலும் அல்ல பிரயாசப்டுகிறவனாலும் அல்ல, எல்லாவற்றையும் செய்கிற தேவனாலே ஆகும். அதுனால நம்ம தேவனால் தான் எல்லாம் கூடும். நம்ம பிரயாசங்கள் என்றும் விருதா. அதற்காக நான் பிரயாசம் எடுக்க மாட்டேன்னு தயவு செய்து நினைச்சிராதீங்க குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 7( இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்)
என்னைக்கி தேவனுக்கு விரோதமா படையெடுத்து தன்னுடைய உயர் பதவியான கேருபீன் பதவியை இழந்து நரகத்துக்கு தள்ளப்பட்டானோ அந்த நாள்ல இருந்து காத்திட்டு இருந்தான் லூசிபர் என்ற சாத்தான்.
சமயம் வாய்த்ததும் ரொம்பவே சந்தோசத்தோட நம்ம தேவனுடைய குமாரனாகிய இயேசப்பாகிட்ட வந்து நின்னான். எத்தனை கோபங்களோட, தந்திரத்தோட, கொல்லணும்னு எண்ணத்தோட நின்றிருப்பான்னு உங்களால யோசிச்சி பார்க்க முடியுதா.இயேசு கிறிஸ்து யார் - 8 (கல்லுகள் அப்பங்களாகும் படி சொல்லும்)
நம்ம இயேசப்பாக்கு பசி உண்டான போது சோதனைக்காரன்(நம்மளையும் சோதிக்கிறவனும் அவன்தான்) “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்”ன்னு சொன்னான். உங்களுக்கு ரொம்பவே தெரிந்த வார்த்தை. ஆனா அவன் எதற்கு இந்த கேள்வியை கேட்டான் உங்களுக்கு தெரியுமா குட்டிகளா?
இயேசு கிறிஸ்து யார் - 9( அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்)
பண்டைய காலங்களில் ராஜா என்பவருக்கு அவருடைய செங்கோலும், முத்திரை மோதிரமும் ரொம்பவே முக்கியமானது. செங்கோல் அவருடைய பாரபட்சம் இல்லாத நீதியையும், முத்திரை மோதிரம் என்பது அவருடைய வல்லமையை குறிக்கிற காரியம்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட முத்திரை மோதிரம் மாதிரி அவனை நம்ம தேவன் உருவாக்கியிருந்தா, எந்த அளவு வல்லமையை அவனுக்கு கொடுத்திருப்பார்.
இயேசு கிறிஸ்து யார் - 10( நமது வேதாகமம்)
ஏன் நம்ம இயேசப்பாவை தேவலாயம் மேல நிப்பாட்டிட்டு “ நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக் குதியும், ஏன்னா உங்க பிதாப்பா தன்னுடைய தேவ தூதர்களுக்கு உம்மை குறித்து கட்டளையிட்டு பாதம் கல்லில் இடறாதபடி அவங்க உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவாங்கன்னு எழுதியிருக்கிறதே”ன்னு சொன்னான்.
இயேசு கிறிஸ்து யார் - 11( தாழக் குதியும்)
சாத்தான் நம்ம இயேசப்பாகிட்ட கேட்ட இரண்டாவது கேள்வி உங்களுக்கு மனப்பாடம். சரிதானே. ஆனா நம்ம இயேசப்பாவை ஆலயத்தில இருந்து குதிக்க சொல்லுறதுக்கு அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?ன்னு உங்க மனது கேள்வி கேட்குதா? ஆமான்னுதான உங்க மனதும் சொல்லுது.
இயேசு கிறிஸ்து யார் - 12( களியாட்டுகள்)
உங்க முன்னாடி சாத்தான் வந்து உனக்கு இயேசப்பாவை பிடிக்குமா? இல்லை என்னை பிடிக்குமா?ன்னு கேட்டா நீங்க தைரியமா சொல்லுவீங்க. அப்பாலே போ சாத்தானே. எனக்கு என்றும் அவரை தான் பிடிக்கும்னு. அடுத்த கேள்வியை சாத்தான் கேட்கிறான். உனக்கு நீ பார்க்கிற கார்ட்டூன் சேனல்ல இது பிடிக்குமா? இல்லை அது பிடிக்குமா?ன்னு(சாரி குட்டிஸ், நம்ம இயேசப்பா உங்களுடைய கார்ட்டூன் பற்றி கூட சொல்ல விருப்பப்படலை) கேட்டா என்ன சொல்லுவீங்க?
இயேசு கிறிஸ்து யார் - 13 ( இராஜ்யமும் அதன் மகிமையும்)
சரி அவன் நம்ம பிதாப்பாக்கு இணையாவேன் சொன்னதுக்கும் இப்ப நம்ம இயேசப்பாகிட்ட இப்படி சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம் வந்திர போகுது?ன்னுதான நீங்க நினைக்கீறீங்க. சரிதானே! சம்பந்தம் உண்டு குட்டிகளா. நம்ம பிதாப்பாவுடைய சிங்காசனத்தில உட்கார நினைச்ச அவனுடைய தேவையில்லாத ஆசையால, அவனுடைய பெருமையால அவன் நரகத்தில விழுந்து போனான். ஆனா இப்ப நம்ம பிதாப்பாவுடைய பையனே ஒரு மனிதனா வந்திருக்கும் போது அவன் தன் வஞ்சகத்தை தீர்த்து கொள்ள நினைத்தான் குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 14 ( தேவனின் தீர்மானம்)
தேவ காரியங்களில் நுழையும் போது தடுக்கறது மட்டுமில்லை, தேவையில்லாத பக்க வழிகளை(அதாவது தேவன் அனுமதிக்காதது)யும் காண்பிக்கவும் செய்வான் குட்டிகளா. உங்களால் புரிந்து கொள்ள முடியுதா? நம்ம இயேசப்பா இந்த உலகத்தை, அதாவது சாத்தான் ஆதிக்கம் செலுத்துற இந்த உலகத்தை வாங்கணும்னா கண்டிப்பா சிலுவை பாடுகள் மட்டுமே என்பது தேவ நியதி.
இயேசு கிறிஸ்து யார் - 15 ( உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொள்)
நாம எந்த ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிச்சாலும், அதை தடுத்து நிறுத்துறது மட்டுமில்லை. அதை விட வேறே நல்ல காரியத்தை காண்பிக்கிறேன்னு சொல்லி எத்தனை தடவை நம்மளை ஒரு மோசமான வழியில அவன் நடத்தினதை நீங்களும் பார்த்திருப்பீங்களே. நம்ம வாழ்கையில இப்படிப்பட்ட எத்தனை காரியங்கள் நடந்திருக்கும்? ஆனா அப்ப, இயேசப்பா நீங்க சொன்னீங்கன்னு தான் ஆரம்பிச்சேன், ஆனா தேவையில்லாம ஏன் நீங்க அனுமதிக்காத விசயத்தில விழுந்து போனேன். சொல்லுங்கப்பா, எப்படி விழுந்து போனேன்?
இயேசு கிறிஸ்து யார் - 16( தேவ வார்த்தைகள்)
என்னது.... நம்ம பைபிள்ல எந்த எந்த புத்தகத்தில என்ன இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களேன்னு தோணுதா குட்டிகளா. நமது தேவனுடைய வார்த்தைகளை பற்றிதான் நம்ம இயேசப்பா சொல்லி கொடுக்க போறாங்கன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். நம்ம தேவனுடைய வார்த்தைகளை பற்றி எந்த அளவு நாம தெரிந்து வைச்சிருக்கணும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 17( என்னதான் செய்ய போகிறோம்??????)
நம்ம இயேசப்பா வெளிப்படுத்தின விஷேத்தில எனக்கு செவி கொடுங்கள், எனக்கு செவி கொடுங்கள், காதுள்ளவன் கேட்கக்கடவன்னு நிறைய முறை சொல்லியிருப்பாங்க. அது மட்டுமா தீர்க்கத்தரிசிகள் புத்தகங்களில் கூட எல்லா இடங்களிலும் நம்ம தேவன் என் ஜனங்களே எனக்கு செவி கொடுங்கள்ன்னுதான் அடிக்கடி தன்னுடைய பிள்ளைகள் மூலமா தன் ஜனங்களை கடிந்து கொண்டாங்க.
இயேசு கிறிஸ்து யார் - 18( நமது ஆத்துமா)
நம்ம இயேசப்பா சமூகத்தில அவர் முகத்தை பார்க்க ஆசைப்பட போறோம். இன்னும் உலகத்தை பார்த்தே ஓடிட்டே இருக்க போறோமா? உங்களுக்குள்ள அழகாக நம்ம தேவன் படைத்து வைச்சிருக்கிற அந்த ஆத்துமா தன்னுடைய தேவனை பார்க்க ஆசைபடுற அதன் ஆசையை நிராகரிச்சிட்டு ஓடறோம்.....ஓடுகிறோம்.....ஆனா முடிவு மட்டும் என்றைக்கும் கிடைக்க போறதில்லை குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 19( எதை நாடுகிறோம்)
நம்ம இயேசப்பா எப்பனாச்சும் நமக்கு சொல்லுறாங்களா....குட்டிமா உன் கிளாஸ்ல நீ தான் first வரணும்.....யாரையும் உன் முன்னாடி விட்டுறாத.....எப்பவும் உன் மனதில நான் தான் பெரியவன்/ பெரியவள்ன்னு சொல்லிட்டே இரு.......யார் உன் மனதை புண் படுத்துறதுக்கு முன்னாடி நீ அவங்களை உன் வார்த்தையால காயப்படுத்திருன்னு எங்க சொல்லி கொடுத்திருக்காங்க?
இயேசு கிறிஸ்து யார் - 20( மனம் திரும்புவோமா?)
நம்ம தேவன் அழைத்த அழைப்புக்கு ஆபிராம் செவி கொடுக்காம இருந்திருந்தா, தான் வணங்குகிற ஆயிரம் தெய்வங்களில் ஏதாவது ஒரு தெய்வம் தனக்கு குழந்தை கொடுக்கும்னு நம்பி காத்திருந்தா அவர் நிலைமை என்னவாகியிருக்கும் குட்டிகளா? நாம விசுவாசிகளின் தகப்பன் என்கிற பெயரில அவர் பெயரை படிக்க முடியாம போயிருக்கும், அது மட்டுமில்ல பரலோகத்தில ஒரு நல்ல பதவியில நம்ம தேவன் அவரை வைச்சிருக்கிறார்ன்னும் தெரிந்து கொள்ள முடியாம போயிருக்கும்
இயேசு கிறிஸ்து யார் - 21( உண்மையான சந்தோசம்)
நீ உன்னுடைய வகுப்பில முதல் மார்க் வாங்கும் போது, அது உன்னுடைய வகுப்பில எத்தனை பேருக்கு சந்தோசத்தை கொடுக்கும். உன்னால கண்டிப்பா சொல்ல முடியுமா? உன்னுடைய வகுப்பில இருக்கிற எல்லாருக்கும் உன்னுடைய உயர்வு சந்தோசத்தை தரும்னு சொல்ல முடியுமா? சாரி குட்டிகளா, ஏன்னா யாரோ எடுக்க வேண்டிய மேன்மையை நீ பிடுங்கி கொண்டதாகத்தான் அவங்க நினைப்பாங்க. அதுனால முழுமையா சந்தோசபடுறவங்க எண்ணிக்கை ரொம்பவே சொற்பமான அளவாதான் இருக்கும்.
இயேசு கிறிஸ்து யார் - 22( சிலுவையில அறையுறேனா??)
நம்ம தேவனின் மகத்துவத்தை நீங்க தெரிந்து கொள்ள ஏற்கனவே நம்ம வேதாகமத்தை எடுத்து ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினைக்கிறோம். குட் குட்டிகளா, ஒரு விசயத்தை நீங்க நினைவில வைச்சுக்க நம்ம இயேசப்பா வலியுறுத்துறாங்க. அது என்னதுன்னா, நம்ம இயேசப்பாவை தெரிந்து நம்ம பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தது நல்ல காரியம். ஆனா அதை ஒரு ஆராய்ச்சி பண்ணுற நோக்கத்தில் வாசிக்காம, நம்மளை நேசிக்கிற நம்ம இயேசப்பா\வை தெரிந்து கொள்ளனும்னு என்கிற நோக்கத்தில வாசிங்க, ப்ளீஸ்.....
இயேசு கிறிஸ்து யார் - 23( குற்ற மனசாட்சி)
இந்த உலகத்தின் போக்கிற்கு கீழ்படியவும் முடியாம, என் இயேசப்பா வார்த்தைக்கு செவி கொடுக்கவும் முடியாம, தினமும் நரக வேதனையை அனுபவிக்றோமே, எங்க வேதனையில இருந்து கை தூக்கி விட மாட்டாரா???
இயேசு கிறிஸ்து யார் - 24
யூதாஸ்காரியோத்தை பற்றி நம்ம இயேசப்பா நமக்கு ஏற்கனவே சொல்லியிருக்காங்க குட்டிகளா. அவன் தன்னுடைய கடைசி நிமிசத்தில, நம்ம இயேசப்பாவை காட்டி கொடுக்கிற நேரம் கூட, சிநேகிதனேன்னுதான சொன்னாங்க. அவனுடைய இருப்பிடம் நம்ம இயேசப்பாக்கு தெரிந்த விஷயம்தான். நரகம். ஏன்னா கேட்டின் மகன் கெட்டு போனானேயன்றி நீங்க கொடுத்த ஒரு பிள்ளைகளை கூட நான் இழக்கலைன்னு பிதாப்பாகிட்ட சொல்லியிருப்பாங்க
இயேசு கிறிஸ்து யார் - 25( ஆவியில் எளிமை)
நம்ம இயேசப்பா களியாட்டுகள் பற்றி சொல்லும் போது, நம்முடைய தப்புகள் சில நேரம் நமக்குள் ஒரு வலியை கொடுக்கும்னு சொல்லி இருப்பாங்க. அந்த வலிக்கான காரணம், நம்ம தப்புகள் நமக்குள்ள இருக்கிற பரிசுத்த ஆவியானவரை வேதனைப்படுத்துகிற காரணத்தினால்ன்னு சொன்னாங்க, அப்படிதான குட்டிகளா. நம்ம இயேசப்பா நம்ம தப்புகள் மூலமா சிலுவையின் வேதனையை சுமக்கும் போது, அந்த வேதனையை நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் உணரும் போதுதான் உணர்கிறோம்.
இயேசு கிறிஸ்து யார் - 26( பலம் வேண்டும்)
நிக்கொதேமு மனதில நீண்ட நாளா இருந்த தேவனுடைய ராஜ்யத்தை பற்றிய காரியத்தை அவர் நம்ம இயேசப்பாகிட்ட கேட்கறதுக்கு முன்னாடியே ஒரு மனிதன் மறுபடியும் பிறவா விட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காண மாட்டான்னு சொன்னாங்க.
இயேசு கிறிஸ்து யார் - 27( அவரே(இயேசு கிறிஸ்து) வழி, சத்தியம், ஜீவன்)
நம்ம இயேசப்பா கூட தன்னை பற்றி சொன்னப்ப நானே வழி, நானே சத்தியம், நானே ஜீவன்ன்னு சொல்லியிருக்காங்க. நம்ம இயேசப்பாவை பற்றி அவருடைய அன்பான சீசன் யோவான்(I யோவான்) சொல்லும் போது, தேவனிடத்தில இருந்து வந்த வார்த்தைதான் நம்ம இயேசப்பா ன்னு அழகாக சொல்லிருப்பாங்க.
இயேசு கிறிஸ்து யார் - 28( வேத வாசிப்பு)
நம்மளை நேசிக்கிற நம்ம இயேசப்பாவை நாம பிரியப்படுத்துனும்னா அது நம்ம விசுவாசத்தினால் மட்டுமே முடியும்ன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனா அந்த விசுவாசத்தை கொடுக்கிறது கூட நம்ம இயேசப்பாங்கிற இரகசியம் உங்களுக்கு தெரியுமா குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 29( அவர்(இயேசு கிறிஸ்து) நொறுங்கினார்)
வீட்லதான் அம்மா/ அப்பாவும் எதற்கெடுத்தாலும் இதை செய்யாதே, அதை தொடாதே, உனக்கென்ன தெரியும்ன்னு வார்த்தைக்கு வார்த்தை எங்களை மதிக்காம, இல்லை என்றாவது நாங்க செய்த தப்பை மனதில வைச்சிட்டு டைம் கிடைக்கும் போதெல்லாம் குத்தி காண்பிக்கறாங்க...............ன்னு உங்க மனதில இருக்கிற கேள்விகளை கொட்டி தீர்த்திட்டீங்களா? தேங்க்ஸ் குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 30( நல்ல மேய்ப்பன்)
அப்படி இருக்கும் போது, என்னுடைய தப்புகள் அவரை அங்க இருக்க முடியாம துரத்தவோ இல்லை தூக்கி எறியவோ முடியுமா? அது மட்டுமில்ல நம்ம இயேசப்பாவை தன்னுள் பெற்றிருக்கிற பிள்ளைகளுக்கு மட்டும் இப்படி நடக்குமா இல்லை எல்லா பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி நடக்குமா?ன்னு உங்க மனது கேள்வி கேட்குது. குட் குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 31( எந்த நிலையில் இருக்கிறோம்?)
நம்ம வேதாகமத்தில இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு புத்தகமும், நம்ம தேவ ஆவியானவரால அவருடைய பரிசுத்தவான்களுக்கு அருளப்பட்ட பொக்கிஷம். அதுனால இந்த வேதாகமத்தில தேவையில்லாத கற்பனைகள் இருக்குன்னு நாம எதையும் நினைக்கவும் முடியாது. அதே மாதிரி எழுதினவங்க நம்ம தேவனை ஒரு சூப்பர் ஹீரோவா ஆக்க கஷ்டப்பட்டு எழுதின கற்பனை கிடையாது
இயேசு கிறிஸ்து யார் - 32( நம் தேவனுக்கும் கோபம் வரும்)
நம்ம தேவன் பக்கம் நிற்க உங்களுக்கு ஆசையா இல்லை அவரால துரத்தி விடப்பட்ட ஆதாம், ஏவாள் புலம்பிட்டு போன மாதிரி நாங்க செய்தது என்ன அவ்வளவு பெரிய தப்பா? சின்ன தப்புதானே, அதற்காக எவ்வளவு பெரிய தண்டனையா?ன்னு சொல்லுற அவங்க பக்கம் நிற்க ஆசையா?
சப்போஸ் நீங்க இன்னமும் ஆதாம், ஏவாள் பக்கம் நிற்கிறதா இருந்தா ஒரு விசயத்தை சொல்ல நம்ம இயேசப்பா ஆசைபடுறாங்க.
இயேசு கிறிஸ்து யார் - 33( ஏவாளின் மனமாற்றம்)
நம்ம மேல அன்பு மட்டுமே காட்ட தெரிந்த நம்ம தேவனுக்கு கூட கோபத்தை வர வைச்சது, நம்ம ஆதாமும், ஏவாளும் செய்த காரியம். அடுத்து நாமளும்(இப்பவும் நம்ம வாழ்கையில அறிக்கை செய்யப்படாத பாவங்கள் இருக்குதே குட்டிகளா).
கோபம் வந்ததும் நம்ம தேவன் முதலில் சபித்தது யாரை குட்டிகளா? திரும்பவும் வரிந்து கட்டி கொண்டு கேள்வி கேட்க ரெடியா இருக்கீங்கன்னு நினைக்கிறோம் குட்டிகளா.
இயேசு கிறிஸ்து யார் - 34( பாக்கியவான்கள்)
நம்ம இயேசப்பா ஒண்ணும் நியாயம் இல்லாம நம்மளை தண்டிக்கிறவர் கிடையாது. அதுவும் அவர் கொடுக்கிற கடிந்து கொள்ளுதலையோ இல்லை தண்டனைகளையோ அனுபவிக்கிற நாம உண்மையில் பாக்கியவான்கள். உண்மையில் நம்ம இயேசப்பா சொல்லுற காரியம் ரொம்பவே ஆச்சர்யமா இருக்குதா குட்டிகளா……
இயேசு கிறிஸ்து யார் - 35( என் தேவனுக்காக மரிக்கவும் தயார்)
இது வரை குறைவான பாத்திரம்ன்னு என்னை சொல்லி சொல்லியே என்னுடைய இயேசப்பாவை விட்டு விலகிட்டேன். ஆனா இனிமே என்னால முடியாது. இந்த நிறைவான பாத்திரங்களை பற்றி சொல்லி கொடுத்து என்னுடைய வாஞ்சை எதுன்னு தெளிவா காண்ப்பிச்சிட்டாங்க. இனிமே விலகவா அவரை ஜெபத்தில கூட என்னால் விட்டு கொடுக்க கூட முடியாது
இயேசு கிறிஸ்து யார் - 36( வாழ்கையின் இரகசியம்)
, அவர் கடிந்து கொள்ளுதலுக்கு ஆளாகிற நாம ஒரு வகையில பாக்கியவான்கள். ரொம்பவே உங்க முகத்தில் சந்தோசம் தெரியுது குட்டிகளா, தேங்க்ஸ். எங்க இயேசப்பா நாங்க தப்புகளோ இல்லை சில தவறுகளோ செய்யும் போது உண்மையிலேயே கடிந்து கொள்ளுறாங்க…..எங்களால் தாங்கி கொள்ளுகிற அளவுக்கு சில சின்ன தண்டனைகள் கொடுக்கிறாங்க. அப்ப நாங்க எங்க இயேசப்பா கண்களில் தயவு பெற்றவங்களா?
இயேசு கிறிஸ்து யார் - 37( தேவனின் கடிந்து கொள்ளுதல்)
நம்ம இயேசப்பா இந்த நேரத்தில கூட நம்மளை கடிந்து கொள்ள ஆசைப்படுறாங்க. நிறைவான பாத்திரங்களுக்கு மட்டும்தான் நம்ம இயேசப்பா உதவி செய்கிறவரா இருந்தா, அவங்க மேல மட்டும் அவர் அன்பு கூருகிரவரா இருந்தா, நாம யார் குட்டிகளா, அவருக்கு? ஏன் நம்மளையே தாழ்த்துறோம்னு பேருக்கு திரும்பவும் அவரை விட்டு விலகி போறதை மட்டுமே தெரிந்து கொள்ளுறீங்க.
இயேசு கிறிஸ்து யார் - 38( இனி மேலாவது யோசிப்போமா)
நம்ம இயேசப்பாக்கு நம்மளை கஷ்டபடுத்தியோ இல்லை தண்டனைகள் கொடுத்தோ தன்னை பத்தி புரிய வைக்கணும்னு ஒரு காலும் நினைத்ததில்லை. அப்ப ஏன்…..ன்னு உங்க மனதில கேட்கலாம். குட்டிகளா, அது நமது பலவீனம். நாம முதல்ல இருந்தே அப்படியே வளர்ந்துட்டோம்
இயேசு கிறிஸ்து யார் - 39( சிட்சிக்கும் தேவன்)
பல நேரங்களில் நம்ம எண்ணம், கண்டிப்பா இதை செய்துதான் ஆகணுமா........நம்மளை பற்றி மற்றவங்க என்ன நினைப்பாங்க.......... அவங்க மேல நிறைய மரியாதை வைச்சிருக்கேன், ஆனா இந்த விசயத்தை நம்ம இயேசப்பா சொன்னங்கன்னு எப்படி சொல்ல முடியும்? அடுத்து நம்மளை என்ன நினைப்பாங்க அவங்க?.......இயேசப்பா நான் செய்ய வேண்டியது பெரிதா இருக்கும்னு நான் நினைத்தேன், ஆனா நீங்க போயும், போயும் ஒரு சின்ன காரியத்தை செய்ய சொல்லுறீங்க........அப்பா, ஒரு நிமிஷம்தான் நான் அவங்க அரட்டை அடிக்கிறதை கேட்டுட்டு இருந்தேன், அதற்காக இப்படியா....ன்னு.
இயேசு கிறிஸ்து யார் - 40( தேவனின் வார்த்தைகள்)
இந்த பூமி நமக்கு நம்ம தேவனோட பரலோகத்தில நாம வாழறதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணி பார்க்க அவரே அனுமதிக்கிற சோதனை கூடம் என்பது மட்டுமில்ல, காலங்கள் ரொம்பவே குறுகியவை என்பதையும் தெரிந்து கொள்ளனும்னு நினைக்கிறாங்க.
இயேசு கிறிஸ்து யார் - 41( கர்த்தரின் சமூகத்தில் சில நிமிஷங்கள்)
ஏன் இவனுக்குரிய/ இவளுக்குரிய கிருபையின் காலங்களை நீட்டிக்கணும்? அவங்க விருப்பப்படுற மாதிரியே இந்த உலகத்தில வாழ்ந்துட்டு, அவங்களுக்கு சாத்தான் சொந்தமாகி வைச்சிருக்கிற நரகத்திற்கே செல்லட்டுமேன்னு அவர் தன்னுடைய கிருபையை நம்மை விட்டு எடுத்து கொண்டா நாம என்ன ஆவோம்? இல்லை அவர் நம்மளை பற்றி இது தேறாத கூட்டம், எதற்காக வீணா கொத்தி எரு போடுற வேலை பார்க்கணும்னு நினைச்சாலும் என்ன ஆவோம்?
இயேசு கிறிஸ்து யார் - 42( இன்றே தீர்மானிப்போமா!!!)
சப்போஸ் நாம படித்திட்டு இருக்கிற பாடபுத்தகம் போர்ன்னு சொல்லும் போது, அதை தூக்கி வைச்சிட்டு டிவில ஏதாவது நல்ல நிகழ்ச்சிகள் வருதா(இயேசப்பா சேனல்லா இருந்தாலும்)ன்னு மாறி மாறி பார்க்க தெரிந்த நமக்கு அவருடைய வார்த்தைகள் அடங்கிய பைபிள் வாசிக்க இருக்கேன்னு மட்டும் ஏன் யோசனை வர மாட்டிக்குது
இயேசு கிறிஸ்து யார் - 43( கவனம் தேவை)
அசதியா மட்டுமில்ல நம்ம அறிவை புகுத்தி தேவனுடைய வார்த்தைகளின் தெரிந்து கொள்ள என்றும் முயற்சி என்றும் பண்ண கூடாது குட்டிகளா. ஏன்னா அது நமக்கு முழுக்க முழுக்க குழப்பத்தை மட்டுமே தரக் கூடியது. அதாவது நம்ம டீச்சர் உதவி இல்லாம, நம்ம டெஸ்ட் புக் எல்லாத்தையும் இன்னைக்கே நான் மனப்பாடம் செய்ய போறேன்னு நாம எடுக்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு சமானம்தான், நம்ம தேவன் உதவி இல்லாம பைபிள் வாசிக்கிற பழக்கமும்.
இயேசு கிறிஸ்து யார் - 44( விதைக்கிறவர்)
நம்ம தேவனின் வார்த்தைகள் நம்மளை வேதனைபடுத்தி பார்க்க இல்லை என்றும் சமாதானத்தையும், சந்தோசத்தையும் கொடுக்க வல்லது. அதை புரிந்து கொள்ளவே மாட்டோம்னு நினைக்கிற ஆட்களுக்கு வேணா, அது மாறுபாடுகளை கொடுக்கிற விஷயமா இருந்தாலும், அவரை நேசித்து என்றும் அவருடைய அன்பை நம்புற பிள்ளைகளுக்கு அது என்றும் ஜீவ விருட்சங்கள்.
இயேசு கிறிஸ்து யார் - 45( பலவான்)
திருடங்க ஒரு வீட்டை கன்னம் இட்டு திருட வரும் போது, எத்தனை விதமான முன் எச்சரிக்கைகளோட வருவாங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அந்த அளவுக்கு தெரியாதுன்னு சொன்னதுக்காக நன்றிகள் குட்டிகளா. உண்மையில் எல்லா வீடுகளிலும் ஒரே விதமான யுக்தியை அவங்களால் பயன்படுத்த முடியாதுன்னு என்பது எங்களுடைய எண்ணம்.
இயேசு கிறிஸ்து யார் - 46( வழி போன்ற இருதயம்)
முதலில் வழி அருகே விழுந்த விதைகள் மிதியுண்டதுன்னு சொல்லி இருக்காங்க. நம்மால் ஏற்கனவே ரகசியத்தை காக்க முடியாது. இந்த பார்த்தியா, நான் இன்னைக்கி ஒரு சர்ச்ல போற வழியில இந்த வசன அட்டை கொடுத்தாங்க. நல்லா இருக்கு பார்த்தியா? நமக்குதான் மற்றவங்களை ஈஸியா நம்புறது பிடிக்குமே.
இயேசு கிறிஸ்து யார் - 47( கல்லான இருதயம்)
நம்ம தேவன் நமக்கு கொடுத்த வேதாகமத்தில கல் என்கிற விஷயம் ரொம்பவே அழகான காரியம். ஏன்னா ஆதியாகமத்தில் ஆரம்பிச்சு வெளிப்படுத்தின விசேஷம் வரை நம்ம தேவன் அழகான காரியங்களா இந்த கல்லை பற்றி சொல்லி இருப்பாங்க. அதுவும் ரொம்பவே விசேஷமான காரியங்களுக்கு. ஏன் தீடீர்னு கல்லை பற்றி ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சிட்டாங்கன்னு கூட நீங்க யோசிக்கலாம்.
இயேசு கிறிஸ்து யார் - 48( முள் இருதயம்)
நான் நிறைய படிச்சு, நிறைய சம்பாதித்து, சந்தோசமா இருக்கணும், இல்லைனா உங்களுக்குன்னு ஏதாவது குறிப்பிட்ட விருப்பம் இருந்துச்சுனா டாக்டரா....டீச்சரா, என்ஜினியர்......போலீஸ்.....இந்த மாதிரி ஏதாவது சொல்லி, அதை பத்தி சொல்லும் போதே உங்க முகத்தில இருக்கிற சந்தோசத்தை எல்லாராலும் புரிஞ்சுக்க முடியும். ஆனா முள் இருதயம் உள்ளவங்ககிட்ட கேட்டா, அந்த நாள் முடிந்து, அடுத்த நாள் குறித்த நம்பிக்கை இல்லாத காரணத்தினால், நாளைக்கி பிழைச்சி கிடந்தா பார்ப்போம்ன்னு மட்டும்தான் சொல்ல முடியும்.
இயேசு கிறிஸ்து யார் - 49( தேவனுக்கே மகிமை உண்டவாதாக)
நம்ம தேவன் நம்மை ரொம்பவே நேசிக்கிறவர். அவர் பிள்ளைகளாகிய நாம எவ்வளவு தூரம்தான் இந்த நிமிஷம் வரை அவரை மறந்திட்டு, ஓடியிருந்தாலும், இப்ப, இந்த நொடி அப்பா, சாரி, உங்க சந்நிதானத்திற்கு வந்திருக்கேன். இனிமே உங்களை விட முடியாதுன்னு சொல்லி பாருங்க(சும்மா இல்லை குட்டிகளா, முழு இருதயத்தோட).
4 thoughts on “இயேசு கிறிஸ்து யார்?”
Leave a Reply to stickers Cancel reply
இயேசு கிறிஸ்து யார்?
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives
Hello! I’ve been reading your weblog for some time now and finally got the
courage to go ahead and give you a shout out from Porter Texas!
Just wanted to mention keep up the great job!
Actually when someone doesn’t understand afterward its up to other viewers that they will assist, so
here it occurs.
this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend
Hi! I know this is kind of off topic but I was
wondering which blog platform are you using for this website?
I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers
and I’m looking at alternatives for another platform. I would be awesome if you could point
me in the direction of a good platform.
this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend
I just like the helpful information you provide in your articles.
I’ll bookmark your blog and check again here frequently.
I am reasonably sure I’ll be informed lots of new stuff right
here! Good luck for the following!
thanks friend for your blessing. this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend