-
இயேசு கிறிஸ்து யார்?(40)
தேவனின் வார்த்தைகள்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நம்மளை கடிந்து கொள்ளுறாங்க, நம்மளை எப்ப வியாதி படுக்கைகள் வழியா கூட்டிட்டு போறாங்க என்பதை பத்தி தெரிந்து கொண்டப்ப ரொம்பவே சந்தோசபட்டிருப்பீங்க. ஆனா எந்த விஷயத்தில நாம நம்மளை சந்தோசப்படுத்தினாலும் ஒரு காரியம் மட்டும் எப்பவும் நம்மளுக்கு மறந்து போக கூடாதுன்னு நம்ம இயேசப்பா சொல்ல ஆசைபடுறாங்க.
இந்த பூமி நமக்கு நம்ம தேவனோட பரலோகத்தில நாம வாழறதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணி பார்க்க அவரே அனுமதிக்கிற சோதனை கூடம் என்பது மட்டுமில்ல, காலங்கள் ரொம்பவே குறுகியவை என்பதையும் தெரிந்து கொள்ளனும்னு நினைக்கிறாங்க.
நம்ம தேவன் நம்மகிட்ட நாம இந்த உலகத்தில உருவாகிறதுக்கு முன்னாடியே ஆசைப்பட்டது, இப்பயும் ஆசைபடுறது அவர் வார்த்தைக்கு செவி கொடுத்து, அதன் படி வாழுறது மட்டுமே. சப்போஸ் அவருடைய வார்த்தைகள் படி வாழுறது, நாம கஷ்டம்னு நினைத்தாலும், நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்கிற அவர் பலத்துக்கு முன்னாடி அது ஒண்ணுமே கிடையாது.
நம்ம தேவன் நாம எப்படி வாழணும்னு, எப்படி இருக்கணும்னு ஏதாவது சொல்லி கொடுத்திருக்காங்களான்னு கேட்டா அழகாக சொல்லுவீங்க. நம்ம தேவன் நமக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் தான் முழுமையும் அடங்கியிருக்குன்னு…. ஆனா அதன் படி செய்ய மட்டும் ஏனோ நம்மளுக்குள் ரொம்பவே தயக்கம் குட்டிகளா. ஏன்னா பொய் சொல்ல கூடாது, களவு செய்ய கூடாது, மற்றவங்க பொருள் எதையும் இச்சிக்க கூடாதுன்னு நம்ம பிதாப்பா சொல்லி இருக்காங்களே. இது எவ்வளவு பெரிய கஷ்டம்.
சரி நம்ம பிதாப்பானாச்சும் இந்த மூணு காரியங்கள் மட்டும்தான் கஷ்டம்ன்னு நாங்க நினைக்கிற அளவுக்கு கொடுத்திருக்காங்கன்னு சந்தோசப்பட்டுட்டு இருக்கிறதுக்குள்ள, நம்ம இயேசப்பா நம்ம பிதாப்பா கொடுத்த இரண்டு கட்டளைகளை(கொலை செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக) குறித்து தெளிவான விளக்கங்களை மத்தேயு புத்தகத்தில(5 : 21 – 30) சொல்லிட்டாங்க. அது இன்னமும் பயத்தை உண்டாக்குது…..அப்படின்னு நீங்க புலம்ப ஆரப்பிச்சது நம்ம இயேசப்பாக்கு நல்லாவே தெரியும் குட்டிகளா.
இப்படி நம்ம பிதாப்பா கொடுத்த 5ம் கட்டளையில் இருந்து பத்தாம் கட்டளை வரைக்கும் எல்லாமே ரொம்பவே sensitive ஆன விசயங்களைதான் சொல்லி இருக்காங்கன்னு புரிஞ்சுக்க முடிந்தது. முதல் கட்டளை ரொம்பவே அழகான காரியம், என்னையன்றி வேறே தேவர்கள் வேண்டாம்னு சொன்னதுக்கு, நானா நினைத்த காரியம். நான் என்னுடைய இயேசப்பாவைத்தான முழுமையா தொழுது கொள்ளுறேன். என் பெயரில் அவர் நாமம் இருக்கிறது ஒன்றே அதற்கு சாட்சின்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா என் தேவன் எனக்கு கற்றுக் கொடுத்த காரியம், உண்மையில் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது.
இந்த உலகத்திலயும் அதில் உள்ளவைகளிலும் அன்பு கூராதீங்கள்ன்னு அவர் சொல்லி கொடுத்த பிறகுதான் புரிஞ்சிக்கிட்டேன். நான் என்னுடைய தேவனை விட இந்த உலக காரியங்களில் எந்த விசயத்தில அதிகமா அன்பு கூர்ந்தாலும், சப்போஸ் என்னுடைய சாப்பாடா இருக்கலாம் இல்லை என்னுடைய டிரஸ் விசயத்தில நான் காண்பிக்கிற பைத்தியகாரத்தனமா இருக்கலாம் இல்லை என் தேவ அன்புக்கு இடம் கொடுக்க முடியாம, நான் அவர் விருப்பத்துக்கு விரோதமா செய்கிற எந்த பாவங்களா இருக்கலாம். இது கூட நான் என் தேவனை தூக்கி எறிஞ்சிட்டு, அவருக்கு பதிலா எனக்குள் உண்டாக்கி இருக்கிற வேற தேவர்கள் மற்றும் விக்கிரங்கள்ன்னு புரிந்து கொண்டேன்.
அது மட்டுமில்ல பைபிள் வாசித்த சமயத்தில், இஸ்ரவேல் மக்களும், யூத ஜனங்களும் நம்ம தேவனுடைய அன்பை மறந்திட்டு, வேற விக்கிரங்களை வணங்கி அதை உயர்த்தி கொண்டாடினப்ப மனதில தோணுச்சு. சே…..இந்த இஸ்ரவேல் மக்கள் ஏன் எப்படி ரொம்பவே மனசாட்சி இல்லாத மனுசங்களா இருக்காங்க…….ஒருத்தரால இந்த அளவுக்கு ஈஸியா நம்ம தேவனை மறந்திட்டு அந்நிய விக்கிரங்களை தொழ முடியுமான்னு. பல நாட்களில் அந்த பகுதிகளை வாசித்தப்ப, அவங்களை திட்டனது கூட உண்டு. ஆனா எனக்குள் இருக்கிற அந்நிய விக்கிரங்களும், தேவர்களும் பற்றி தெரிந்து கொண்டப்ப, அவங்க மேல குறை என்ன, ஒரு வார்த்தை கூட இப்ப சொல்லுறதில்லை.
இந்த மாதிரி என் தேவன் கொடுத்த பத்து கட்டளைகளில் ஒண்ணை கூட நான் பின்பற்றாதப்ப நான் எப்படி சொல்ல முடியும், நான் யார் தெரியுமா…..இயேசப்பா பிள்ளை…..எனக்கு அவர் எத்தனை தரிசனங்கள் கொடுத்திருக்காங்க தெரியுமா…..எனக்கு பைபிள்ல மனப்பாடமா எத்தனை வசனங்கள் தெரியும்னு தெரியுமா?ன்னு வீணா பெருமை அடிக்கிறதலா என்ன நன்மைகள் வரப்போகுது?
நாம வாழுறது ஒரே ஒரு வாழ்க்கை குட்டிகளா. இதுல நாம என்ன செய்கிறோமோ, அதை பொறுத்துதான் நமக்கான பலன்கள் பரலோகத்தில இல்லை நரகத்திலன்னு நம்ம தேவன் ஏற்கனவே நியமனம் பண்ணிட்டார். அது பற்றி கூட புரிஞ்சுக்காம ஏன் என்னை பார்த்து அவங்க அப்படி பேசினாங்க……….என்னை எங்க அம்மா கண்டுக்கவே மாட்டாங்க……இன்னைக்கி வருகிற டிவி சீரியல்ல அடுத்து என்ன நடக்கும்…….தம்பி கூட இன்னைக்கி எப்படி சண்டையை ஆரம்பிக்க….ன்னு ஆயிரம் தேவையில்லாத கேள்விகள் நமக்கு தேவையா குட்டிகளா.
நாம எப்படி இருக்கணும், என்ன செய்யணும்னு நமக்கு இந்த பைபிள் மூலமா சொல்லி கொடுத்தவரால, அதை எப்படி செய்து முடிக்கணும்னு சொல்லி கொடுக்க முடியுமே? அப்ப ஏன் இந்த தேவையில்லாத அவிசுவாசம்? அவர் சந்நிதானத்தில் இனிமேலாவது உட்கார்ந்து அவர் முகத்தை தேடலாமா?
இயேசு கிறிஸ்து யார்?(39) இயேசு கிறிஸ்து யார்?(41)
இயேசு கிறிஸ்து யார்?(40)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives