-
இயேசு கிறிஸ்து யார்?(41)
கர்த்தரின் சமூகத்தில் சில நிமிஷங்கள்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நாம இந்த உலகத்தில எப்படி வாழணும்னு மட்டுமில்ல, நாம வாழுறதுக்காக எல்லாமே முன்னமே செய்த தேவனை நோக்கி உதவிகள் கேட்கிறது மட்டும் என்னைக்குமே நமக்கு பாகற்காய் கசப்புதான் குட்டிகளா. ஏன்னா அவர் வார்த்தையின் அர்த்தத்தை இன்னும் நம்மால தெரிந்து கொள்ள முடிய வில்லை. அது மட்டுமில்ல அதை நான் ஏன் தெரிந்து கொள்ளணும்னு எண்ணங்கள் வேற.
சப்போஸ் நம்ம தேவன் தன்னுடைய வார்த்தைகளை கற்றுக் கொடுக்க நினைக்கிற நேரத்தில, இந்த பொண்ணு/பையன் என்னுடைய வார்த்தைகளை பற்றி தெரிந்து கொள்ள நான் எத்தனை சந்தரப்பங்கள் கொடுத்தாலும், நான் இப்பவே ஏன் தெரிந்து கொள்ளணும். இன்னும் நான் வாழுறதுக்கு வாழ்க்கை எவ்வளவு இருக்கு? அதை விட்டுட்டு, எப்ப பார்த்தாலும் ஒரு துறவி மாதிரி பைபிள்ளும் கையுமா அலைய முடியாது. அது மட்டுமில்ல, அப்படி அலையுற காலம் இதுவான்னு.….யோசித்திட்டு இருக்கா. அப்ப நானும் ஏன் இவனுக்குரிய/ இவளுக்குரிய கிருபையின் காலங்களை நீட்டிக்கணும்? அவங்க விருப்பப்படுற மாதிரியே இந்த உலகத்தில வாழ்ந்துட்டு, அவங்களுக்கு சாத்தான் சொந்தமாகி வைச்சிருக்கிற நரகத்திற்கே செல்லட்டுமேன்னு அவர் தன்னுடைய கிருபையை நம்மை விட்டு எடுத்து கொண்டா நாம என்ன ஆவோம்? இல்லை அவர் நம்மளை பற்றி இது தேறாத கூட்டம், எதற்காக வீணா கொத்தி எரு போடுற வேலை பார்க்கணும்னு நினைச்சாலும் என்ன ஆவோம்?
சாரி குட்டிகளா, உங்க மனதில நீங்க நினைக்கலாம், இந்த அளவுக்கு கூட என்னை படைத்த தேவன் நினைச்சி பார்ப்பாரா?ன்னு. அவரை மட்டும் உங்களால் அப்படி கற்பனை பண்ணி பார்க்க முடியாதப்ப, அவர் படைத்த நாம மட்டும் ஏன் இந்த அளவுக்கு கல்லான இருதயத்தை வைச்சிட்டு இருக்கோம்? இந்த உலகத்தில நாம வாழுற ஒவ்வொரு நொடியும் எந்த அளவுக்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை குறித்து தீடீர்னு உணர்வுகள் தோணும் போது மட்டும் கவிதைகள் எழுதி வைச்சா போதுமா குட்டிகளா. உனக்குன்னு அவர் கொடுத்த ஒவ்வொரு நொடியும் இனிமையானதுன்னு பாட்டுகள் பாடி அதை புத்தகத்தில தூங்க வைக்கிறதுக்காகவா உனக்கு தான் எந்த அளவுக்கு அன்பானவர்ன்னு என்கிற எண்ணத்தை அவர் கொடுத்தார்?
நம்ம தேவன் அன்பானவர் குட்டிகளா. ஆனா அவரை குறித்த எண்ணங்களை நாம எப்ப, எப்பவோ வந்துட்டு போகுற மழை மேகம் மாதிரி யோசிக்கிறதை நிப்பாட்டுவோம்? அவர் நமக்கு ஜீவன் குட்டிகளா. அந்த ஜீவனை பற்றிய எண்ணங்களை கூட ஏதாவது எங்களுக்கு ஆபத்து ஏற்படுற சமயத்தில மட்டும்தான்….ஓ…..எனக்குள்ளும் ஒரு அருமையான உயிர் இருந்துச்சோ…..அச்சோ ஆண்டவரே, எனக்கு நடக்க முடியலை, என் மேல உங்களுக்கு பிரியமே இல்லை…….இந்த பாருங்க, எனக்கு எந்த பொருளையும் சரியா கூட பார்க்க முடியலை…….அப்பா, என்னுடைய கையை என்னால ஒழுங்கா உயர்த்த கூட முடியலை…….முழங்கால் வலி உயிர் போகுது, இன்னும் எத்தனை நாள் இந்த வலியை தாங்க வேண்டியது இருக்கும், அதைனாச்சும் சொல்லுவீங்களா?……………இப்படி எத்தனை விதமான குற்றசாட்டுகள். ஒரு வலின்னு நாம நம்முடைய உடம்பில உணரும் போது மட்டுமே, என்னை படைத்த தேவனை நான் தேடுவேன்? அதுவும் அவரை திட்டுறதுக்காக தேடுவேன்னு சொல்லுறது எந்த விதத்தில நியாயம்ன்னு அவர் நம்மகிட்ட கேட்க ஆசைபடுறார்.
அவர் கேட்ட நம்மகிட்ட கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லுவோம் குட்டிகளா? இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்க என்கிற பதிலா? அப்ப இது எத்தனையாவது ஒரு தடவை. இந்த உலகத்தில இருக்கிற மக்கள்கிட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சாரி கேட்கணும்னு வழி வகுத்த நமக்கு, நேசிக்கிற தேவன் கிட்ட சாரி……சாரி…..ன்னு ஒரு நாள்லேயே எத்தனை சாரிகள். அதுவும் உணர்ந்து கொண்டா மட்டுமே. இல்லைனா அது கூட இல்லை…..ஆமா, நீங்க யாரு? எப்ப பார்த்தாலும் என்னை பார்த்துட்டு இருக்கீங்களே?ன்னு கேள்விகள் வேணா அவரை பார்த்து கேட்போம், சரியா குட்டிகளா.
இன்னைக்கி முதலில் இருந்தே திட்ட ஆரம்பிச்சிட்டீங்களேன்னு நீங்க உங்க மனதில நினைக்க ஆரம்பிக்கலாம். ஆனா இதுதான் உண்மை. இன்னும் என்னை படைத்த தேவனையே வாரத்தில ஒரு நாள், வருசத்தில ஒரு நாள், இல்லை என் வாழ்நாட்கள்ல ஏதாவது ஒரு நாள்தான் நினைப்பேன்னு நம்ம வாழ்க்கை போறது உண்மையா? பொய்யா?ன்னு கேட்க நம்ம இயேசப்பா ஆசைபடுறார். அவரை பற்றி நினைக்கவே நொடி கணக்கில நாம எடுக்கும் போது அவர் வார்த்தைகளை குறித்து மட்டும் எந்த அளவுக்கு முக்கியமானதா யோசிப்போம்???
நாம என்ன நினைத்தாலும் அவர் வார்த்தைகள் மட்டுமே நமக்கு வழி, நமக்கு சத்தியம், நமக்கு ஜீவன். அதை புரிந்து கொள்ளனும்னு நாம உண்மையில் நினைச்சா, என்னை படைத்த தேவன் எப்படிப்பட்டவர்ன்னு தெரிந்து கொள்ள ஆசைபட்டா, அட்லீஸ்ட் இன்னைக்காவது அவர் சமூகத்தில போய் உங்க விருப்பத்தை சொல்லி பாருங்க. அதுல கண்டிப்பா நம்ம மாம்ச எண்ணங்கள் வேண்டாம். அது கண்டிப்பா அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தை நாம தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு முற்றிலும் குழப்பத்தை தரக் கூடியது. அதுனால முழுக்க முழுக்க நம்மளை அவர் சந்நிதானத்தில் தாழ்த்தி அவருடைய உறவை நாடி, அவர் வார்த்தைகளை தெரிந்து கொள்ளலாமே?
அடுத்து நம்ம தேவனை நொடி கணக்கில் யோசிக்க போறோமா? இல்லை எல்லா நொடியும் என் தேவனை யோசிக்காம இருக்க முடியாதுன்னு சொல்ல போறோமா?
இயேசு கிறிஸ்து யார்?(40) இயேசு கிறிஸ்து யார்?(42)
இயேசு கிறிஸ்து யார்?(41)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives