• இயேசு கிறிஸ்து யார்?(29)

    அவர்(இயேசு கிறிஸ்து) நொறுங்கினார்

    jesus29

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    இன்னைக்கி முதலில் ஆரம்பிக்கும் போதே, எங்க இயேசப்பா ரொம்ப அன்பானவங்க, எங்க மேல இரக்கமும், கிருபையும் பாராட்டுகிறவர், அதுக்கு மேல நாங்க தப்புகளும், வேதனைகளும் அடையும் போது, எங்களை விட பல்லாயிர மடங்கு வேதனையை சிலுவையில இப்பவும், எங்களுக்காக ஏற்றுக் கொள்ளுகிறவர்ன்னு சொன்னீங்க? ஆனா எங்க இயேசப்பா எங்களை அவர் வார்த்தை மூலமா பேசிட்டிருக்கிற இந்த நொடி வரைக்கும் திட்டிட்டு தான இருக்காங்க, இதுல எங்க அன்பு இருக்கு, சில டைம்ல உங்களுக்கு தெரியுமா? எங்களை சோம்பேறி, ஏன் கவனம் இல்லை, அஜாக்கிரதைன்னு திட்டி இருக்காங்க. எங்க மனது எவ்வளவு கஷ்டபடுது தெரியுமா? வீட்லதான் அம்மா/ அப்பாவும் எதற்கெடுத்தாலும் இதை செய்யாதே, அதை தொடாதே, உனக்கென்ன தெரியும்ன்னு வார்த்தைக்கு வார்த்தை எங்களை மதிக்காம, இல்லை என்றாவது நாங்க செய்த தப்பை மனதில வைச்சிட்டு டைம் கிடைக்கும் போதெல்லாம் குத்தி காண்பிக்கறாங்க……………ன்னு உங்க மனதில இருக்கிற கேள்விகளை கொட்டி தீர்த்திட்டீங்களா? தேங்க்ஸ் குட்டிகளா.

    இதற்கு பின்னாலயும் எதுவும் கிண்டலோ, நக்கலோ உண்டா?ன்னு நீங்க எங்களை கேட்கிறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. உங்களுடைய மன வேதனையை அறிந்து கொண்ட தேவன் நம்ம தேவன் என்கிற விசயத்தை தான் இப்பயும் நம்ம இயேசப்பா உங்ககிட்ட சொல்ல ஆசைப்படுறாங்க. இல்லை, இனிமேலும் தயவு செய்து பொய் சொல்லாதீங்க. எங்களை அறிந்து கொண்ட தேவன்னா, இப்படி எல்லா டைம்யும் எங்களை திட்ட வழி தேட மாட்டார் அவர். பரலோகத்தில இருந்து இறங்கி வந்து, என் தோளை தொட்டு, என் கண்ணீரை துடைச்சி, அவர் மார்பில சாய்த்து கொள்ளுவார். அது எங்க நடக்க போகுது? நாங்க வாழ் நாளெல்லாம் இந்த மாதிரி திட்டு வாங்கி இறந்து போகணும்னு அவர் எழுதி வைச்சிட்டார், இதை யார் மாற்ற முடியும்?

    சாரி குட்டிகளா, நீங்க உங்க வேதனையில மனம் அங்கலாய்த்து புலம்புறதை நம்ம இயேசப்பா பார்த்து கொண்டேதான் இருக்கிறார். பார்க்கிறதை தவிர அவர்  எனக்கு என்ன செய்ய போறாங்க? இந்த உலகத்தில இயேசப்பா பிள்ளையா வாழவும் முடியாம, நான் என்னுடைய பலவீனமான மாம்ச இச்சைகளையும் தீர்த்து கொள்ளவும் முடியாம, ஒரு வேதனையான வாழ்க்கை வாழுறதை அவர் என்னைக்கி புரிஞ்சுக்க போறாரோ? ஆனா அவர் புரிந்து கொள்ளரதுக்குள் என் வாழ்க்கை இந்த பூமியில முடிந்து போயிரும். ஆனா அதற்கடுத்து ஒரு பெரிய வேதனை இருக்கு தெரியுமா? நரகம், நம்ம இயேசப்பா தான் சொல்லி இருக்காங்களே, தீக்கள், புழுக்கள் மத்தியில வாழ்க்கை. வாழ்க்கை சொல்லுறதை விட தண்டனை. அதுவும் நான் அனுபவிக்கனும்னு அவர் விரும்புறார் போல? இந்த அவருடைய விருப்பத்தைனாச்சும் நான் நிறைவேற்றி வைக்கிறேன்.

    என்ன குட்டிகளா, சொல்லி முடிச்சாச்சா? இல்லை இன்னும் சொல்ல வேண்டிய விசயங்கள் இருக்கா? நம்ம இயேசப்பாவை பற்றி நீங்க என்னதான் தெரிந்து வைச்சிருக்கீங்க? நீங்க சொல்லறதை பார்த்தா, அந்த சாத்தானை விட நம்ம இயேசப்பாவைத்தான் ரொம்பவே கொடுமைபடுத்துற பாத்திரமா புரிந்து வைச்சிருக்கீங்கலோன்னு தோணுது. உண்மையில் அப்படித்தான் நினைக்கிறீங்களா? இல்லைன்னு உங்க உதடு சொன்னாலும், நீங்க இது வரை கடந்து வந்த துயரத்தின் பாதை, உங்களை அப்படி தான் சொல்ல வைக்குது குட்டிகளா. இப்பவும் நாங்க சொல்ல ஆசைபடுறோம், நம்ம தப்புகளை கண்டிக்க, நம்ம பின்னால எப்பவும் கம்போட சுத்துற ஒரு கண்டிப்பானவராகவே நீங்க நம்ம இயேசப்பாவே கற்பனை பண்ணுறீங்க. அதுதான் நமக்கு என்றைக்குமே வேதனை. நம்ம இயேசப்பா அப்படிப்பட்டவர் கிடையாது குட்டிகளா. நாம தப்புகளை செய்திட்டு, அவர் சந்நிதானத்தை விட்டு ஓடும் போது, நம்மளை தாங்க நம்ம பின்னாலேயே ஓடி வருகிற ஒரு உண்மையான தகப்பன்.

    ப்ளீஸ், இதற்கும் மேல இப்படி சொல்ல வேண்டாம். ஏன்னா நாங்க தப்பு செய்யும் போது, எங்களை விட்டு விலகி போகிறவர்தான அவர். அவர் எங்களுடைய தப்புக்காக எங்க மேல கோபப்பட்டு விலகி போகிறார். இந்த உலகத்தில இருக்கிறவங்களும் அப்படித்தான், நம்ம இயேசப்பாவும் அப்படிப்பட்டவர்தான். நம்ம இயேசப்பா வார்த்தைகளை உங்களுக்கு நாங்களே காண்பிக்கிறோம். உபாகமம் 23ம் அதிகாரத்தில் 14ம் வசனத்தில நம்ம தேவன் நம்மளை பார்த்து சொல்லி இருக்கிறார். அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. இப்ப என்ன சொல்லுறீங்க? எங்க தேவன் எங்களுடைய தப்பான காரியத்தை கண்டு, விலகி போகாத படி நாங்க சுத்தமானவங்களா இருக்கணுமாம். ஆனாலும் நாங்க சோதனைகளில் விழுந்து போகும் போது, அவர் எங்களை விட்டு விலகி போகிறார் என்பது உண்மைதான. நீங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை குட்டிகளா. ஆனா இன்னொரு காரியத்தை நீங்க இதுல மறந்து போயிட்டீங்களா இல்லை மறுக்கிறீங்களா?

    நாங்க எங்க மறுக்கிறோம்? நம்ம தேவனை பற்றி நம்ம இயேசப்பா சொல்லி கொடுக்கும் போதே, அவர் ஒளியானவர், அன்பானவர், பெரியவர்ன்னு வரும் போது, அவர் பாவத்தை பாராத சுத்த கண்ணன்னு சொல்லி இருப்பாங்களே. நமக்கு புரியுற விதத்தில நம்ம இயேசப்பா நமக்கு சொல்ல ஆசைப்படுறாங்க. நம்ம தேவன் பரிசுத்தமானவர், அதாவது ஒரு துளி கூட அசுத்தமோ, மாசோ இல்லாத அளவுக்கு ரொம்பவே சுத்தமானவர். ஆனா அப்படிப்பட்ட தேவன் நம்ம இருதயத்தில வாசம் பண்ணுறது உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். ஆனா நாம தப்புகளில் நுழையும் போது இல்லை தப்புகளை துணிகரமா செய்யும் போது, அந்த பாவத்தின் இருளை தாங்க முடியாம அவர் விலகி போக வேண்டியதா போயிரும்.

    இப்ப நீங்களே நம்ம தேவன் நம்மளை விட்டு விலகி போறதை ஒத்து கொள்ளுறீங்க, குட்ன்னு எங்களை பாராட்டினதிற்காக தேங்க்ஸ் குட்டிகளா. ஆனா இன்னும் இயேசப்பா நம்மகிட்ட சொல்ல வந்த காரியத்தை சொல்லி முடிக்கலை. என்னதுன்னு பொறுமையில்லாம கேட்கிற நம்மகிட்ட, ஒரு அழகான காரியத்தை சொல்ல ஆசைபடுறாங்க. நம்ம தேவன் இந்த உலகத்தில நிறைய உயிரினங்களை படைத்திருக்காங்க. ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு மாதிரி. அதை தான் நம்ம அறிவியல் அறிஞர்கள் இன்னும் ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காங்க. சில விசயங்களை நாங்க தெரிந்து கொண்டோம்னு அவங்க பெருமை பாராட்டினாலும், அவங்களுக்கு தெரியாம, நம்ம இயேசப்பா அவங்க அறிவுக்கு மறைத்து வைத்திருக்கிற காரியங்கள் ஏராளம். ஏன் இப்ப நம்ம இயேசப்பா இந்த காரியத்தை சொல்லிட்டு இருக்காங்கன்னு நீங்க யோசிக்கலாம்? உங்க கேள்விக்கான பதில், எல்லா உயிரினங்களும் எல்லா சூழ்நிலைகளிலும் வாழ முடியாது. ஏன், அழகாக இருக்கிற மீனா இருந்தாலும், நம்ம கையிலேயே ரொம்ப நேரம் வைச்சுக்க முடியாது. ஏன்னா, மூச்சு விட முடியாம, நம்ம கையில் செத்து போயிரும், நமக்கு அருமையான கலர்புல் மீன். இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும். நம்ம தேவனும் அப்படிதான் குட்டிகளா. அவரால பாவம் இருக்கிற இடத்தில வாழ முடியாது. நம்மளுடைய பாவ இருள் நம்ம தேவனை வெளியே பிடிச்சி தள்ளிரும். அதாவது நம்ம தப்புகளின் வல்லமை நம்ம வலிமை வாய்ந்த தேவனையே நம்ம இருதயத்தில இருந்து தூக்கி எரிஞ்சிரும்.

    என்ன குட்டிகளா, அதிர்ச்சியாயிட்டீங்க. இது தான் உண்மை. நம்ம தேவன் ஏதோ விருப்பப்பட்டோ, இல்லை நம்ம மேல சினுங்கிக்கிட்டோ, நம்மளை விட்டு விலகி போறதில்லை என்கிற விசயத்தை முதலில் நல்லா தெரிஞ்சுகோங்க. அப்ப உண்மையில் எங்களை விட்டு விலகி போறது, எங்களுடைய தப்புகளின் வல்லமையை தாங்கி கொள்ளாம முடியாமதான. அச்சோ, இது தெரியாமதான் நான் என்னுடைய இயேசப்பாவை இந்த நாள் வரைக்கும் திட்டிட்டு இருந்தேன். சாரி இயேசப்பா, நான் உங்களை ரொம்பவே வேதனைப்படும் படி திட்டிட்டேன். என்னால்தான் நீங்க, நான்தான் உங்களை தூக்கி எரிஞ்சிட்டேனா…..சாரிபா, ப்ளீஸ்பா என்னை மன்னிச்சிருங்க….என் மேல தப்பை வைச்சிட்டு நான் இந்த நாள் வரைக்கும் உங்களை தப்பு சொல்லிட்டு இருந்துட்டுனே……….

    இன்னும் ஒரு விசயத்தை நீங்க தெரிந்து கொள்ளனும்னு நம்ம இயேசப்பா ஆசைப்படுறாங்க. அது என்னதுன்னா நம்ம தப்புகள் செய்யும் போது நம்ம பின்னால கம்பை தூக்கி கொண்டு விரட்டுற ஒரு கண்டிப்பானவரா கற்பனை செய்து வைச்சிருக்கோமே, அதை பற்றி நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா? நாம தப்புகள் செய்யும் போது, அந்த பாவத்தின் இருளால் நம்மில் இருந்து வெளியே தூக்கி எறியப்படுற நம்ம இயேசப்பா, கையில் கம்போட இல்லை குட்டிகளா, கண்ல கண்ணீரோட நம்ம பின்னாலயே ஓடி வருகிறார். உங்களால் யோசித்து பார்க்க முடியுதா குட்டிகளா.

    ஒரு சின்ன குழந்தையை அவங்க அம்மா நீ வேண்டாம்னு விளையாட்டுக்கு சொன்னாலும் அது அழுதுகிட்டே அவங்க அம்மா எங்கெல்லாம் போறாங்களோ, அங்கெல்லாம் பின்னாடியே போகும். இது நீங்க பார்த்த காரியம். அந்த குழந்தை தன்னுடைய அம்மா, சிரிச்சிட்டு அதை கையில தூக்கி, ஒரு முத்தம் கொடுக்கிற வரைக்கும், அதுனுடைய அழுகையும் நிற்காது, அம்மா பின்னாடி ஓடுறதும் நிற்காது.

    இப்ப என்ன சொல்லுறீங்க குட்டிகளா, நம்ம இயேசப்பா நம்ம பின்னால துரத்துற காரியத்தை. இனி தயவு செய்து மற்றவங்க சொன்னாங்க, நானே நினைத்தேன்னு நம்ம இயேசப்பா என்னை தூக்கி எறிஞ்சிட்டாங்க, என்னை அவருக்கு பிடிக்கலைன்னு விளையாட்டா கூட சொல்லாதீங்க, ப்ளீஸ். நம்ம இயேசப்பா தன்னுடைய மன வருத்தத்தை  உங்களுக்கு சொல்லி கொடுத்தார். தயவு செய்து கனவில கூட இதை மறந்து போயிராதீங்க.

    நம்ம இயேசப்பா மன வருத்தத்தை பற்றி கேட்டு தெரிந்து கொண்டதே நமக்கு  மன பாரத்தை தந்திருக்கும். இதுல நம்ம இயேசப்பா நம்மளை ஏன் கடிந்து கொள்ளுறாங்க என்கிற விஷயம் ரொம்பவே வேதனையை கொடுக்கிற காரியம். சொல்லப்போனா நம்மளை அப்படியே நொறுக்குற காரியம். அதுனால அதை குறித்து நம்ம இயேசப்பா சொல்லுறதை அடுத்த முறை தெரிந்து கொள்ளலாமா?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    seven − 5 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>