-
இயேசு கிறிஸ்து யார்?(7)
இயேசு கிறிஸ்து சோதிக்கப்பட்டார்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். இந்த முறை நம்ம இயேசப்பா நம்மோட அவர் பிசாசினால் வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டதை குறித்து பேச ஆசைபடுறாங்க. யோவான்ஸ்நானால் ஞானஸ்நானம் அடைந்த நம்ம இயேசப்பா பரிசுத்தாவியை அடைந்து கொண்டார்(மத்தேயு 3 : 16). பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்கு கொண்டுப்போகப்பட்டார்(மாற்கு புத்தகத்தில மட்டும் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார்ன்னு எழுதபட்டிருக்கு குட்டிகளா).
உங்களுடைய மனதில சப்போஸ் கேள்விகள் எழும்பலாம். பரிசுத்த ஆவியானவர் நம்ம இயேசப்பா மனதை ஏவினதால வனாந்தரம் போயிருக்கலாம். ஆனா நம்ம இயேசப்பாவை பரிசுத்த ஆவியானவர் வனாந்தரத்திற்கு கொண்டு போக முடியுமா? உங்களுடைய கேள்வி நியாயமானதுதான் குட்டிகளா. ஆனா ஒரு விசயத்தை நீங்க ஞாபகம் வைச்சுகோங்க. உங்களுக்கு பரலோக தரிசனங்கள் வந்தது உண்டா குட்டிகளா. இல்லை உங்க நண்பர்கள் சொல்லி அதை பற்றி கேள்விப்பட்ட அனுபவம் உண்டா?
உங்க கனவுகளில் வரும் தரிசனங்கள், சொப்பனங்கள் ஒரு வகை. இன்னொரு வகை என்னன்னா உங்க கனவுகளில் நீங்க தூங்கிட்டு இருக்கிற மாதிரியும், யாரோ உங்களை பறக்க செய்து ஏதோ ஒரு விசயத்தை(உங்க வாழ்கையில் இனி நடக்க போறதையோ இல்லை ஏற்கனவே நடந்த காரியங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த மாதிரியோ இல்லை நரகம் மற்றும் பரலோகத்தின் காட்சிகளை நீங்க தொட்டு பார்க்கிற மாதிரி) உங்களுக்கு காண்பித்த அனுபவங்கள் உண்டா? இவை உன் கண்கள் காணும் தரிசனங்களோ, சொப்பனங்களோ இல்லை குட்டிகளா. இது உங்களை நம்ம பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் படி கூட்டிட்டு போய் காண்பிக்கிற காரியங்கள். அப்படி உங்களுக்கு காண்பிக்கப்படுறது உங்களுக்கு எச்சரிக்கை காரியமாகவோ இல்லை வாக்குத்தத்தமா கூட இருக்கலாம். அதுனால இனிமே தரிசனங்களுக்கும் ஆவியானவர் உங்களை கூட்டிட்டு போய் உங்களுக்கு உணர்த்துற காரியங்களுக்கும் வித்தியாசத்தை புரிஞ்சுக்கோங்க. அது மட்டுமில்ல தேவன் உங்களுக்கு உணர்த்தற காரியத்தின் அர்த்தத்தை அவர்கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்க. சாதாரணமா நினைச்சி அதை ஒமிட் மட்டும் பண்ண வேண்டாம்.
சரி குட்டிகளா, இப்ப நீங்களும் பரிசுத்த ஆவியானவர் நம்மளை தேவ கட்டளைப்படி கொண்டு செல்ல முடியும்னு நம்புறீங்க. குட். ஆனா நம்ம அனுபவங்கள் மட்டுமில்ல, பைபிள்ல நம்ம தேவனுடைய வார்த்தைகளில் இருந்து நீங்க இந்த காரியத்தை தெரிந்து கொண்டா இன்னும் சந்தோசப்படுவீங்க, சரிதானே. இராஜாக்கள் புத்தகத்தில் ரொம்பவே உங்களை கவர்ந்த மனிதன்னா அது எலியா தீர்க்கத்தரிசிதான். சரியா குட்டிகளா. அவர் அப்ப இருந்த இஸ்ரவேல் ராஜாவை மட்டுமில்ல, அப்ப அந்நிய விக்கிரங்களை வணங்கின எல்லா தீர்க்கதரிசிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்தவர். அவரை பற்றி ஏற்கனவே உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும். அதுல சில விசயங்கள் மட்டும் உங்களுடைய ஞாபகத்திற்காக.
எலியா தீர்க்கதரிசியால் தன் நாட்டில ரொம்பவே பிரச்சனை வந்ததா நினைத்து கொண்ட இஸ்ரவேல் ராஜா ஆகாப் அவரை கொலை செய்ய தேடினான். ஆனா நம்ம தேவன் அவரை ஆகாப் கையில கடைசி வரை ஒப்பு கொடுக்கவே இல்லை. எலியா தேவனுடைய வார்த்தையை ஏற்கனவே ஆகாப் ராஜாகிட்ட சொல்லியிருந்தான் “என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்”ன்னு. தேவனுடைய வார்த்தையின் படி தண்ணீரோ, மழையோ இல்லாம போச்சு. கிட்டத்தட்ட மூன்று வருசங்கள் மழை இல்லாத காரணத்தினால் ரொம்பவே கஷ்டப்பட்டது இஸ்ரவேல் நாடு. ஆகாபும், அவனுடைய அரண்மனை விசாரிப்புக்காரன் ஒபதியாவும் புல் தேடி, தேசத்தை சுற்றி அலைந்த போது, ஒபதியாவின் முன் எலியா எதிர்ப்பட்டார். ஒபதியாவிடம் தான் வந்ததை ஆகாபுக்கு தெரிவிக்க எலியா சொன்ன போது,” நான் உம்மை விட்டுப் போனவுடனே ஒரு வேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டு போவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மை காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே;…..” ன்னு சொன்னார். இந்த காரியத்தை யாரோ ஒருத்தர் சொல்லலை குட்டிகளா. சிறு வயதில தேவனுக்கு பயந்து நடக்கிற ஒருத்தர் சொன்னார்(I இராஜாக்கள் 18 : 1 – 15). இப்ப நீங்க புரிந்திருப்பீங்கன்னு நம்புறோம்.
இனிமே நம்ம இயேசப்பாவை பிசாசு எப்படி சோதனை பண்ணினான்னு தெரிந்து கொள்ளலாமா?
நம்ம இயேசப்பா வனாந்தரத்தில் இருக்கும் போது நாற்பது நாள் உபவாசம்(தண்ணீரும், சாப்பாடும்) இருந்தார். அதுனால நம்ம இயேசப்பாக்கு பசி எடுத்தது. உடனே இதற்காகவே காத்திட்டு இருந்த சாத்தான் நம்ம இயேசப்பா முன்னாடி வந்தான். உங்களுக்கு ஏற்கனவே தெரியும் குட்டிகளா. நம்ம பிதாப்பா சித்தம் இல்லாம இந்த உலகத்தில எதுவும் நடக்காது. அப்ப சாத்தான் நம்ம இயேசப்பா முன்னாடி வந்து நின்னது கூட தேவ சித்தத்திற்கு உட்பட்டதுதான். இதை விட ரொம்பவே முக்கியமான காரியம், சாத்தான் இந்த நொடிக்காக தன் வாழ்க்கையில எத்தனை வருடங்கள் காத்திருந்தான் தெரியுமா குட்டிகளா. என்னைக்கி தேவனுக்கு விரோதமா படையெடுத்து தன்னுடைய உயர் பதவியான கேருபீன் பதவியை இழந்து நரகத்துக்கு தள்ளப்பட்டானோ அந்த நாள்ல இருந்து காத்திட்டு இருந்தான் லூசிபர் என்ற சாத்தான்.
சமயம் வாய்த்ததும் ரொம்பவே சந்தோசத்தோட நம்ம தேவனுடைய குமாரனாகிய இயேசப்பாகிட்ட வந்து நின்னான். எத்தனை கோபங்களோட, தந்திரத்தோட, கொல்லணும்னு எண்ணத்தோட நின்றிருப்பான்னு உங்களால யோசிச்சி பார்க்க முடியுதா. நம்ம இயேசப்பா கூட சோதனைக்கு தயாராகத்தான் இருந்தார். ரொம்ப நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய காரியம் உபவாசம் பண்ணின 40 நாட்கள் நடுவில நிற்காம நம்ம இயேசப்பாக்கு பசி வந்த போது தான் வந்து நின்னான். ஏன்னா நம்ம உடலில் பலவீனங்கள் அல்லது மனதில பலவீனங்கள் இருக்கும் போது தான் சோதனைகளால் நம்மளை வெற்றி பெற முடியும்னு அவனுக்கு நல்லாவே தெரியும். அதுனால அதற்காக காத்திருந்து நம்ம இயேசப்பாவை வெற்றி பெற வந்து நின்னான்.
அடுத்து என்ன நடந்ததுன்னு உங்களுக்கும் நல்லா தெரியும் குட்டிகளா. ஆனா அதை குறித்து நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு அடுத்த முறை கேட்டு தெரிந்து கொள்ளலாமா?
இயேசு கிறிஸ்து யார்?(6) இயேசு கிறிஸ்து யார்?(8)
இயேசு கிறிஸ்து யார்?(7)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives