-
இயேசு கிறிஸ்து யார்?(49)
தேவனுக்கே மகிமை உண்டவாதாக
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவன் நமக்கு விதை விதைக்கிறதை பற்றியும், அவர் விதை விதைக்கிற இருதயங்கள் எந்த வகையில் இருக்கும் என்பதும், அதுல தேவ வார்த்தைகள் வரும் போது, அதை எந்த பலவீனங்கள் தடுத்து, வெளியே தள்ளும் என்பதையும் நல்லாவே சொல்லிக் கொடுத்தாங்க. நம்ம தேவ சமூகத்தில நாம ஏற்கனவே உட்கார்ந்து கதற ஆரம்பிச்சாச்சு, தேவரீர் நீர் ஆசீர்வதித்தால் ஒழிய உம்மை போக விடேன்ன்னு அவர் பாதங்களை பிடிக்கவும் செய்தாச்சு. இனி நம்ம வாழ்கையில் என்றும் தேவ பிரசன்னம் நம்மளோட வரும் குட்டிகளா. ஏன்னா, நம்ம தேவன் நம்மை ரொம்பவே நேசிக்கிறவர். அவர் பிள்ளைகளாகிய நாம எவ்வளவு தூரம்தான் இந்த நிமிஷம் வரை அவரை மறந்திட்டு, ஓடியிருந்தாலும், இப்ப, இந்த நொடி அப்பா, சாரி, உங்க சந்நிதானத்திற்கு வந்திருக்கேன். இனிமே உங்களை விட முடியாதுன்னு சொல்லி பாருங்க(சும்மா இல்லை குட்டிகளா, முழு இருதயத்தோட). நீங்க உங்க கண்கள் காண உங்களில் மாற்றங்களை காணும் போது, நம்ம தேவனை மகிமைப்படுத்தாம இருக்க முடியாது.
தேவன் நமக்குள்ள விதை விதைக்கிறதை தெரிந்து கொண்டோம். அவருடைய கோபத்தை பற்றியும் தெரிந்து கொண்டோம். அவருடைய மலை பிரசங்கங்களையும் தெரிந்து கொண்டோம். நம்ம இயேசப்பா இந்த உலகத்தில் வந்து செய்த ஒவ்வொரு காரியமும், சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முழுக்க முழுக்க தேவ சித்தத்துக்கு உட்பட்டதுன்னு உங்களுக்கும் நல்லாவே தெரியும். அது மட்டுமில்ல, சப்போஸ் அதுல ஏதாவது தெரிந்து கொள்ள வேணும்னு யோசித்தா, நம்ம இயேசப்பாவுடைய அன்பான சீசன் யோவான் எழுதின புத்தகத்தை வாசித்து பாருங்க. புரிந்து கொள்ள கஷ்டமா இருந்தா, நம்ம தேவனுடைய உதவியை நாடுங்க. அவர் சமூகத்தில வைத்து வாசிக்கிறது சாலச் சிறந்தது.
என்றும் நீங்க உங்க வாழ்கையில் மறக்க கூடாத விஷயம், தினமும் பைபிள் வாசிக்கிறதும், அவரோட பேசுற நேரங்களை(ஜெபம்) தினமும் கடைபிடிக்கிறதும் மட்டுமே. அதுதான் நம்ம வாழ்க்கை என்றும் சந்தோசமா இருக்கிறதுக்கு ஆதாரம். இன்னொரு விஷயம் நம்ம இயேசப்பா ஏற்கனவே சொல்லி கொடுத்திருக்காங்க. பைபிள் வாசிப்பு மற்றும் ஜெபம், வெறும் கடமைக்காக செய்திராதீங்க. அது இன்னும் மோசம். நம்ம தேவனின் அன்பை நித்தமும் தேடுங்க. அவரோட உங்க நேரங்களை செலவழிங்க. சந்தோசமும், சமாதானமும் என்றும் உங்க வாழ்கையில் காணுவீங்க. இதன் மூலமா நம்ம இயேசப்பா உங்களிடத்தில் பேசின ஒவ்வொரு வார்த்தையும் கண்டிப்பா உங்களில் மாற்றத்தை கொண்டு வரும்னு நம்ம தேவனாகிய கர்த்தருக்குள் முழுமையா நம்புறோம். நமது தேவனுக்கும் அவருடைய ஓரே குமாரனாகிய நம்முடைய நாதர் இயேசுகிறிஸ்துவிற்கும் பரிசுத்த ஆவியானவர்க்கும் என்றென்றும் சதா காலங்களிலும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக! ஆமென்.
இயேசு கிறிஸ்து யார்?(48) பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 1
இயேசு கிறிஸ்து யார்?(49)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives