• இயேசு கிறிஸ்து யார்?(45)

    பலவான்

    armour

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பா நமக்குள்ள எப்படிப்பட்ட இருதயத்தை பெற்றிருக்கிறோம் என்பதை அழகாக சொன்னாங்க. அது மட்டுமில்ல, நமக்குள்ள காணப்படுகிற இருதயத்திலயும் வகைகள் உண்டுன்னு நமக்கு, நாம புரிந்து கொள்ளற வண்ணம் சொன்னாங்கன்னு சொன்னா, சரி வருமா குட்டிகளா. so நமக்குள்ள எப்ப பார்த்தாலும் லப்…டப்ன்னு ஒலியை கொடுத்திட்டு இருக்கிற நம்ம இருதயம் எப்படிப்பட்ட இருதயம்ன்னு நீங்க எல்லாரும் கண்டுப்பிடிச்சிருப்பீங்கன்னு நம்புறோம்.

    நம்ம இருதயம் எப்படிப்பட்டதுன்னு சொல்லி கொடுத்த நம்ம தேவன், அதில அவர் போடுகிற தேவ வார்த்தைகளை எப்படி சாத்தான் திருட வருகிறான்னு என்பதையும் சொல்லி கொடுக்க ஆசைபடுறாங்க.

    உங்களால ஒரு விஷயம் சொல்ல முடியுமா? திருடங்க ஒரு வீட்டை கன்னம் இட்டு திருட வரும் போது, எத்தனை விதமான முன் எச்சரிக்கைகளோட வருவாங்கன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா? அந்த அளவுக்கு தெரியாதுன்னு சொன்னதுக்காக நன்றிகள் குட்டிகளா. உண்மையில் எல்லா வீடுகளிலும் ஒரே விதமான யுக்தியை அவங்களால் பயன்படுத்த முடியாதுன்னு என்பது எங்களுடைய எண்ணம். ஒரே மாதிரி திருட அவங்க நினைத்தாலும், வீட்டின் அமைப்பை பொறுத்து, வீட்டுல இருக்கிற ஆட்களின் வலிமையை பொறுத்து, யுக்திகள் மாறுபடலாம்ன்னு  எங்களுக்கு தோணுது. என்னடா இவங்க, திருடர்களையும் பற்றியும், அவங்க திருடுகிற முறையை பற்றியும் அதிகமாவே யோசிக்கிறாங்களேன்னு உங்களுக்கு தோணுதா?

    திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.

    மத்தேயு 24 : 43

    வாவ்…..நம்ம இயேசப்பா கூட திருடர்களையும், அவங்க கன்னமிடுகிற வேலையையும் அழகாக சொல்லி இருக்காங்களே? ஆனா நாம இங்க முழுமையா கவனிக்க வேண்டியது, நம்ம இயேசப்பா தன்னுடைய இரண்டாவது வருகையை பற்றி சொன்னது குட்டிகளா. அதாவது, அந்த நாள் நம்ம தேவனுக்கே அன்றி(ஏன் நம்ம இயேசப்பாக்கு கூட தெரியாது, அவ்வளவு ரகசியமா நம்ம தேவன் வைச்சிருக்கிறார், அதுனால இவங்க சொன்னாங்க, அவங்க சொன்னாங்க, இன்னைக்கே உலகம் அழிய போறது, நான் எனக்கான பொருளை மூட்டை கட்ட போறேன்னு சொல்லி கிளம்பிராதீங்க. நம்ம தேவன், அவருடைய பிள்ளைகளாகிய நாம அவரிடத்தில திரும்பனுன்னு சொல்லித்தான் தாமதிக்கிறார்) வேற ஒருத்தருக்கும் தெரியாது. அந்த நாள் திருடன் வரும் நாள் மாதிரி இருப்பதால விழித்திருந்து, ஆயத்தத்தோட இருந்தா மட்டுமே, அவரோட செல்ல முடியும்ன்னு நம்ம இயேசப்பா தெளிவா சொல்லி இருப்பாங்க. இல்லைனா, நம்ம பேரும் சோம்பேறிகள் கூட்டத்தில இருந்தா, அவர் வரும் போதும் நாம தூங்க வேண்டியது தான். அவருடைய பிள்ளைகள் அவரோட, மறு ரூபமாக்க பட்டு, பரலோகத்தில மகிழும் போது, நாம நம்மவர்களை இல்லைன்னு தெரிந்து கதற மட்டும்தான் முடியும் குட்டிகளா.

    நம்ம இயேசப்பாவுடைய இரண்டாவது வருகையை பற்றி நம்ம இயேசப்பா சொன்னதும், உங்களுக்கு அதை குறித்த நிறைய கேள்விகள் இருந்திருக்கும். அதை குறித்து கேட்கவும் ஆசைபடுவீங்க, சரியா குட்டிகளா. உங்களுடைய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நம்ம இயேசப்பா பதில் சொல்லுவதை நாம தெரிந்து கொள்ளலாமா?

    நம்ம இயேசப்பா தான் மீண்டும் வருவேன்னு சொன்னது, அவரோட இருந்த அவருடைய சீஷர்கள்கிட்ட. அது மட்டுமில்ல அந்த வார்த்தையை மீண்டும் மெய்ப்பிக்க தான் அன்பாய் இருந்த யோவான்கிட்ட திரும்பியும் சொல்லி இருப்பாங்க. இப்படி நம்ம இயேசப்பா தான் வருகிற காரியத்தை சொல்லியே கிட்டத்தட்ட 2000 வருஷங்களுக்கும் மேல ஆச்சே. ஆனா இன்னும் வரலையேன்னு நீங்க யோசிக்கலாம். சரியா குட்டிகளா. நம்ம தேவன் வார்த்தைகளின் தேவன். அதுனால அவர் சொன்ன வார்த்தையில் கண்டிப்பா மாற்றம் இருக்காது. அவர் தாமதம் பண்ணுறது, அவர் நேசிக்கிற நமக்காக மட்டுமே. அந்த தோட்டக்காரன் நிலைமைதான். பிதாப்பா, இன்னும் ஒரு வருஷம் ஆகட்டுமே, என்னுடைய பையன்/பொண்ணு (உங்க பேரை fill பண்ணிக்கோங்க) …………………இந்த வருசத்தில உங்களை ஏற்றுக் கொள்ளுவா. அதுனால இன்னும் கொஞ்சம் உங்க கிருபை வேண்டும்ன்னு நமக்காக பரிந்து பேசுகிறார் நம்ம இயேசப்பா. அதுனால என்றும் அதை குறித்து குழப்பம் மனதில எடுத்துக் கொள்ளாதீங்க, ப்ளீஸ்………..

    சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா தன்னுடைய இரண்டாவது வருகையை குறித்து சொன்ன தேவ வார்த்தையை நமக்கு இங்க ஏன் திருடனை பற்றி சொன்னப்ப பயன்படுத்தினாங்க என்பதுதான உங்க கேள்வி. நம்ம தேவனுடைய வார்த்தைகள் இரண்டு புறமும் கருக்குள்ள பட்டயம். அதை சரியா புரிந்து கொள்ள தவறினா நமக்கு ஏற்படும் நஷ்டங்கள் அதிகம். அதுனால நம்ம இயேசப்பா சொல்லி கொடுக்கிற வார்த்தையின் அர்த்தத்தை தெளிவா கவனிங்க. இந்த இடத்தில நம்ம தேவன் திருடன்னு சொன்னது சாத்தானை குறித்து. சப்போஸ் அவன் நம்ம இருதயத்தில இருக்கிற தேவ வார்த்தைகளை நான் இன்னைக்கி கரெக்ட்டா நைட் 12மணிக்கு வந்து உன் வீட்டுல(நம்ம இருதயம் கூட வீடுதான் குட்டிகளா, அது நம்ம தேவன் வாழுவதற்காக அவர் அமைத்த வீடு) இருக்கிற வார்த்தையாகிய பொக்கிஷங்களை திருட வர்றேன்னு சொல்லிட்டா நாமதான் உஷார் ஆயிருவோமே குட்டிகளா. ஆனா அதை குறித்து என்றும் நாம தெரிந்து கொள்ளாம இருக்கிறதனாலதான் எல்லா பிரச்சனையும்.

    உடனே உங்களுக்கு தோணலாம். இப்படி சாத்தான் நீங்க கொடுக்கிற பொக்கிஷமாகிய வார்த்தையை எங்ககிட்ட இருந்து கதற கதற திருடிட்டு போறான், உங்களுக்கு இதை குறித்து கவலை இல்லையான்னு நம்ம குற்றசாட்டை ஏன் நம்ம இயேசப்பா மேல போடுறீங்க. இது நம்ம தப்பு குட்டிகளா. இதில ஏன் நம்ம தேவனை கோபித்து கொள்ளுறீங்க. நம்ம தேவன் நம்மகிட்ட அன்று ஏதாவது ஒரு நேரத்தில சொல்லி இருப்பாங்க குட்டிகளா. நாம ஏதாவது கொஞ்சம் கூட ஜாக்கிரதையா இல்லாம அலட்சியமா இருக்கிற நேரம், நம்ம இயேசப்பா பரிசுத்த ஆவியானவர் மூலமா நமக்கு எச்சரிக்கை தருவார். குட்டிமா, திருடன் திருட வருகிறான், எச்சரிக்கைன்னு……உண்மையிலேயே நம்ம தேவன் நமக்கு வெளிபடுத்துவாங்களான்னு நீங்க ஆச்சர்யமா பார்க்கிறது புரியுது குட்டிகளா. உண்மையில் நம்ம தேவன் எச்சரிக்கை அனுப்புவாங்க பரிசுத்த ஆவியானவர் மூலமா. அந்த நேரங்கள் உங்களுக்கு கண்டிப்பா தோணி இருக்கும், பைபிள் எடுத்து வாசிக்கலாமா…..(காலையில பைபிள் வாசித்திருப்பீங்க, ஆனாலும் தீடீர்னு ஒரு உணர்வு. வசனங்கள் தெரிந்து கொள்ளனும் என்கிற எண்ணத்தில இல்லை, ஏதோ ஒரு குழப்பமான உணர்வு உண்டான மாதிரியும், பைபிள் எடுத்து வாசின்னு நம்ம மனது நம்மகிட்ட சொல்லுற மாதிரியும்), நைட் நல்லா துங்கிட்டு இருப்பீங்க தீடீர்னு எழுந்து prayer பண்ண தோணும்(நல்ல தூக்கத்தில இருந்த நமக்கு அந்த நிமிஷம் தான் தூக்கம் போய் எழும்ப தோணும், அது மட்டுமில்ல நாம தூங்க நினைச்சாலும், prayer பண்ண நம்ம மனது அதிகமாகவே நம்மளை அரிக்கிரதால, போனா போகட்டும்ன்னு நாலு கால் பாய்ச்சல்ல ஒரு சின்ன prayer பண்ணிட்டு நாமளும் தூங்கி இருப்போம். கண்டிப்பா உங்க வாழ்கையில இதை கடந்துருப்பீங்க குட்டிகளா. சில சமயம் நாம செவி கொடுக்காத நேரங்களில், சில ஆபத்துகளை கூட சந்தித்த அனுபவங்கள் இருக்கும். இது வரை நீங்க உணர்ந்து கொள்ளாம இருந்தாலும், இனி கொஞ்சம் விழிப்பாகவே இருங்க குட்டிகளா.

    ரொம்பவே ஆச்சர்யத்தோட பரவசத்தையும் அடைந்திருக்கிற நமக்கு நம்ம இயேசப்பா இந்த வசனம்(மத்தேயு  24 : 43) மூலமா சொல்ல ஆசைப்பட்ட காரியம் இதுதான் குட்டிகளா. கொஞ்சம் இல்லை ரொம்பவே ஜாக்கிரதை தேவை.      

    அது மட்டுமில்ல குட்டிகளா, இன்னொரு வசனமும் நம்ம இயேசப்பா சொல்ல ஆசைபடுறாங்க.

    ஆயுதந்தரித்த பலவான் தன் அரண்மனையைக் காக்கிற போது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும்.

    அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக் கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளை பங்கிடுவான்.

    லூக்கா 11 : 21, 22

    குட்டிகளா, இது எந்த நேரம் நம்ம இயேசப்பா சொன்ன வசனம்னு உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். நம்ம இயேசப்பா தன்னுடைய பிள்ளைகளை காயப்படுத்தி வேதனைகளை கொடுத்திட்டு இருந்த பொல்லாத ஆவிகளை கடிந்து துரத்தின நேரம், அங்க இருந்த மக்கள் நம்ம இயேசப்பாவையே பொல்லாத ஆவிகளுக்கு நீ தான் தலைவன். அதுனால் தான் ஆவிகளை ஈஸியா துரத்துறன்னு குற்ற சாட்டு சொன்னப்பதான் நம்ம இயேசப்பா அங்க இருந்தவங்களை பார்த்து, இந்த உவமையை(வசனத்தை) சொன்னாங்க. இங்க ஆயுதந்தரித்த பலவான்ன்னு நம்ம இயேசப்பா சொல்லுறது, சாத்தானைதான். அவன் நம்மளையும் இப்படித்தான் அவன் பிடிக்குள் வைத்து ரொம்பவே பாதுகாத்து வருகிறான். ஜாக்கிரதைன்னா ஜாக்கிரதை, அப்படி ஒரு கவனம் குட்டிகளா. ஏன்னா, அவனை விட பலவான் ஒருத்தர் உண்டு மட்டுமில்ல, குட்டிகளை பறி கொடுத்த நிலையில இருக்கிற விலங்குகள் எந்த அளவுக்கு தன்னுடைய எதிரியை பந்தாடும்னு அவனுக்கு நல்லாவே தெரியும். அதுனால நம்மளை இழந்த போன(நம்ம தப்பால) நம்ம இயேசப்பா கூட எந்த அளவுக்கு கொதித்த நிலமையில இருப்பாங்க என்பது அவனுக்கு தெரியும். அதுனால தான் ரொம்பவே விழிப்பா இருப்பான்.

    ஆனா நம்ம இயேசப்பாக்கு நம்ம தேவன்கிட்ட இருந்து நம்ம விடுதலைக்கான உத்தரவு வந்ததும், அவனை மேற்கொள்ளுவார். அப்ப என்ன செய்ய முடியும் குட்டிகளா, நம்மளை நம்ம இயேசப்பா கையில பத்திரமா ஒப்படைச்சிட்டு அவன் ஓட வேண்டியதுதான்.

    நம்ம இயேசப்பா, நம்மளுக்காக அந்த சாத்தானையும் அவன் ஆவிகளையும் எதிர்த்து யுத்தம் செய்திட்டு இருக்கிற விசயத்தை தெரிந்து கொள்ள முடியாம, அவரையே பிசாசுகளின் தலைவன்ன்னு சொன்னப்ப உங்களுக்கு என்ன தோணுது குட்டிகளா. கோபம் வருதா. குட். நம்ம இயேசப்பாவும் அதுனால்தான் கோபப்பட்டாங்க. நமக்காக தன்னுடைய எல்லா மகிமைகளையும் இழந்து, ஒரு மனுஷனா எல்லா பாடுகளையும் பட தயாரா வந்த நம்ம இயேசப்பாவையும் புரிந்து கொள்ள முடியலை. அது மட்டுமில்ல அவரை நமக்காக அனுப்பி வைத்த நம்ம தேவனுடைய அன்பையும் அவங்களால புரிஞ்சுக்க முடியலை. அது மட்டுமா, தன்னுடைய பிள்ளைகளை அழிவின் நரகத்தில இருந்து தூக்கி எடுப்பதற்காக, சாத்தானின் கட்டுகளையும், ஆவிகளையும் விரட்டிட்டு இருந்த பரிசுத்த ஆவியானவரின் யுத்தத்தை புரிந்து கொள்ளாம அவங்க சொன்னப்ப, மனுஷன் தேவ ஆவிக்கு விரோதமா பேசப்படும் எந்த தூஷணமும் மன்னிக்க பட மாட்டாதுன்னு கோபமாகவே சொன்னாங்க. அதுனால குட்டிஸ், என்றும் மறந்து போகாதீங்க!!! பரிசுத்த ஆவிப்பா விஷயத்துக்கு உட்பட்ட எந்த காரியமா இருந்தாலும், தயவு செய்து இனிமே தலையிடாதீங்க. சப்போஸ் உங்களால அதை புரிந்து கொள்ள முடியாட்டி, அமைதியா இருப்பது பெஸ்ட். அதை விட்டுட்டு எனக்குதான் எல்லாம் தெரியும்ன்னு, உங்க வாயாலேயே உங்க குழியை வெட்டி கொள்ளாதீங்க.

    உங்களுக்கு இந்த விசயத்தில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. ஏன்னா, நம்மளை சாத்தான் கன்னமிட்டு திருட வருகிற நேரத்தை தெரியாத காரணத்தினால் நாம ரொம்பவே ஜாக்கிரதையை இருக்கணும்னு மத்தேயு வசனத்தின் மூலமா சொல்லி கொடுத்த நம்ம இயேசப்பா, இதுலயும் ஏதோ சொல்லி கொடுக்க வர்றாங்கன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா அது என்னதுன்னு தெரிந்து கொள்ள ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. ஏன்னா, நம்ம தேவனின் வார்த்தைகள் இருபுறமும் கருக்குள்ள பட்டயம். ஒரு அர்த்தத்தை எங்க இயேசப்பா சொல்லி கொடுத்துட்டாங்க. இதன் மூலமா எங்க இயேசப்பா எங்ககிட்ட சொல்லி கொடுக்க நினைக்கிற காரியம் என்னன்னு நீங்க யோசித்திட்டு இருக்கீங்க, சரியா குட்டிகளா.

    நமக்கு லூக்கா வசனங்களின் மூலமா நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்குறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?

    லூக்கா வசனத்தில சொல்லப்பட்ட மாதிரி நாம கூட ஒரு ஆயுதந்தரித்த பலவான்தான். ஏன்னா நமக்கு என்ன ஆயுதங்கள் வேணும்னு நம்ம தேவன் தெரிந்து கொண்டதால் நமக்கு நிறையவே ஆயதங்களை கொடுத்திருக்காங்க. அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசைபட்டா, எபேசியர் 6 : 10 – 18 வரை உள்ள வசனங்களை வாசித்து தெரிந்து கொள்ளுங்க. இத்தனை ஆயுதங்களையும், நம்ம தேவன் நமக்கு கொடுத்து, நம்மளை அரண்மனையை காக்கிற வேலையை கொடுத்திருக்காங்க. அரண்மனைன்னா ரொம்பவே விஷேசமா நினைக்க வேண்டாம் குட்டிகளா. அது நம்ம இருதயம் தான். அதுனால்தான் நாம நம்ம இருதயத்தில் இருக்கிற அவருடைய வார்த்தைகளை பாதுகாத்துட்டு இருக்கோம். ஏன்னா, இதுல ஒண்ணு கொள்ளை போனாலும், நம்ம வாழ்க்கையையே தடம் புரட்ட கூடியது.

    ஆனா நம்மிலும் பலவான் வந்து தாக்கும் போது, நாம நம்ம ஆயுதங்களையும் அவன்கிட்ட பறி கொடுத்து, நம்மில் இருக்கிற தேவ வார்த்தைகளையும் இழந்து போக வேண்டியதா மாறிடும். நம்ம தேவ வார்த்தைகள் நமக்குள் இல்லைனா நமக்கு எங்க வாழ்க்கை குட்டிகளா. தேவ வார்த்தைகளை பறி கொடுத்த வாழ்க்கை எப்படி இருக்கும்னு நம்மால் யோசித்து பார்க்க முடியாது. இன்னைக்கி நான் ஏன் பைபிள் கண்டிப்பா படிக்கணும்னு அம்மா/அப்பா கூட சண்டை போடுற நமக்கு, தேவன் ஏற்கனவே விதைத்த வார்த்தைகள் களவு போகும் போது தான் அந்த வலி புரியும். நம்மளை பற்றியே நம்மளால் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்ப நிலைமை வந்தா எப்படி இருக்கும் குட்டிகளா. எப்பயும் டீச்சர் பதில் கேட்கறதுக்கு முன்னாடியே, கணக்கில பதில் சொல்லுற எனக்கு, எத்தனை தடவை போட்டு பார்த்தாலும், அந்த கணக்கின் பதில் டீச்சர் கேட்டும் சொல்லாட்டினா எப்படி இருக்கும் குட்டிகளா. எல்லாருக்கும் அந்த கணக்கு புரியாம இருந்தா நமக்கு சந்தோசம், அப்பாடா, நான் எனக்கு மட்டும்தான் கணக்கு தெரியலைன்னு நினைச்சிட்டு இருந்தேன். நல்ல வேளை , யாருக்கும் தெரியலை. ஆனா எல்லாருக்கும் தெரிந்து, நமக்கு மட்டும் தெரியாட்டினா என்ன ஆவோம் குட்டிகளா.

    எப்பவும் வகுப்பில முதல் மார்க் வாங்குற நான், தீடீர்னு கடைசி ரேங்க். உள்ளம் உடைந்து போயிரும் குட்டிகளா. இப்ப புரியுதா, நம்ம பொக்கிஷங்கள் கொள்ளை போகும் போது என்ன நடக்கும்னு. அப்ப, நீங்க சொல்ல வர்றது………யெஸ், நீங்க யோசித்ததுதான், தேவ வார்த்தைகள் தான் நமக்குள் அந்த தாலந்தை பாதுகாத்ததுன்னு சொன்னாதான் சரி வரும்னு நம்ம இயேசப்பா ஆசைபடுறாங்க.        . 

    நமக்குள் இத்தனை துன்பத்தையும் கொடுக்க காரணமா இருந்த சாத்தான் மேல உங்களுக்கு ரொம்பவே கோபம் வருதுன்னு எங்களுக்கும் புரியுது குட்டிகளா. ஆனா அதற்கு முன்னாடி நம்ம இயேசப்பா நம்மகிட்ட ஒண்ணு சொல்ல ஆசைபடுறாங்க.

    உங்களை விட அதிக பலவான்னு சாத்தானைதான் நீங்க நினைச்சிருப்பீங்க. சரியா குட்டிகளா. ஆனா உங்க யூகம் தவறு. அப்ப யாரு எங்க இருதயத்தில இருக்கிற பொக்கிஷங்களை திருட வருகிறது? சாத்தான் சொன்னது கொஞ்சம் சரிதான். ஆனா அவன் பலவான் என்பதா நீங்க நினைச்சிட்டு இருக்கிறதுதான் தவறு குட்டிகளா. அவன் நம்மகிட்ட இருந்து திருட கொண்டு வருகிற ஆயுதம்தான் அவனுடைய ட்ரிக். புரியலையா குட்டிகளா, அவன் தன் பலத்தினால் நம்மளை கொள்ளையடிக்க முடியாது குட்டிகளா. அவன் தான் திருடுகிற யுக்தியினால்தான் நம்மளை தோற்கடிக்கிறான். இன்னும் உங்களுக்கு புரிந்து கொள்ள கஷ்டமா நினைச்சா, சாத்தான் நம்மளை தோற்கடிக்க, கொள்ளையடிக்க கொண்டு வருகிற ஆயுதம் நம்ம பலவீனங்கள்தான் குட்டிகளா.

    கொஞ்சம் கூட நீங்க நம்பாம பார்க்கிறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. நம்மளை கொள்ளை அடிக்க சாத்தான் உண்மையில் use பண்ணுறது நம்ம பலவீனங்களைதான். இது எப்படி சாத்தியமாகும்னு கொஞ்சம் யோசிக்கலாமா? 

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 − two =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>