-
இயேசு கிறிஸ்து யார்?(32)
நம் தேவனுக்கும் கோபம் வரும்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நாம எந்த நிலைமையில இருக்கிறோம்னு நம்ம இயேசப்பா ஆதாம், ஏவாள் மூலமா சொல்லி கொடுத்த காரியம் ரொம்பவே நமக்கு அதிர்ச்சியை கொடுத்ததுன்னு சொன்னா, சரியா இருக்குமா? ஏன்னா பல நேரங்களில் நாம கூட மற்றவங்களோட சேர்ந்து கொண்டு, எதற்காக அந்த நன்மை, தீமை மரத்தை அங்க வைக்கனும், அடுத்து ஆதாம், ஏவாள் அதை சாப்பிடணும், தேவன் சாபம் கொடுக்கணும், அடுத்து அவங்களை ஏதேன் தோட்டத்தில இருந்து வெளியேத்தணும்? இது நீண்ட காலமாகவே நம்ம மனதில எழும்பின காரியம். ஆனா அப்பதான் நம்ம தேவன்தான் தேவையில்லாம தப்பை செய்திட்டாருன்னு வாய் கூசாம திட்டவும் செய்தோம். ஆனா ஆதாமும், ஏவாளும் தன்னுடைய சாபத்தை சுமக்கிறதுக்கு முன்னாடி, நம்ம தேவன் அவர்களுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் கொடுத்தாங்கன்னு தெரிந்து கொண்டப்ப என்ன தோணுச்சு குட்டிகளா?
நம்ம தேவன் பக்கம் நிற்க உங்களுக்கு ஆசையா இல்லை அவரால துரத்தி விடப்பட்ட ஆதாம், ஏவாள் புலம்பிட்டு போன மாதிரி நாங்க செய்தது என்ன அவ்வளவு பெரிய தப்பா? சின்ன தப்புதானே, அதற்காக எவ்வளவு பெரிய தண்டனையா?ன்னு சொல்லுற அவங்க பக்கம் நிற்க ஆசையா?
சப்போஸ் நீங்க இன்னமும் ஆதாம், ஏவாள் பக்கம் நிற்கிறதா இருந்தா ஒரு விசயத்தை சொல்ல நம்ம இயேசப்பா ஆசைபடுறாங்க. கண்டிப்பா தன்னுடைய பிள்ளைகள் தன்னை பற்றி பெருமையா நினைக்கணும் என்பதற்காக இதை சொல்லலை. நம்ம தேவனுடைய வார்த்தைகள் சத்தியம். ஆனா அந்த சத்தியமாகிய உண்மையை இன்னும் புரிந்து கொள்ளாம சாத்தானின் வலையில் நாம கிடக்கிறதை அவர் விரும்பலை.
ஆதாம் செய்தது சின்ன தப்புத்தான? அதற்கு எவ்வளவு பெரிய தண்டனையா? ன்னு நாமளும் ஆதாம் மாதிரியே யோசிக்கலாம். ஏன்னா நாம கூட அப்படித்தானே குட்டிகளா. நான் இத்துநூண்டு சின்ன தப்பு தான் பண்ணினேன். ஆனா அன்னைக்கி ன்னு பார்த்து எங்க அம்மாக்கு எங்க இருந்துதான் கோபம் வந்ததோ, முதுகை பிய்ச்சி எடுத்துட்டாங்க. சப்போஸ் மனதில கூட அன்னைக்கி அம்மாவை அவங்க கண் முன்னாடி திட்டிருக்கலாம்.
ஆனா நம்ம தேவன் அப்படி கிடையாது குட்டிகளா. நம்ம அம்மா/அப்பா இருக்கிற மூடை பொறுத்து நமக்கு தண்டனைகள் சின்னதா இல்லை ரொம்ப பெரிதா கிடைக்கும். ஆனா நம்ம தேவன் நம்மளை மாதிரி உணர்ச்சிவசப் பட்டு முடிவுகள் எடுக்கிறவர் கிடையாது. அவர் வலது புறமும், இடது புறமும் விலகாம நடு நிலையில நின்னு தன்னுடைய பிள்ளைகளுக்கு நியாயம் செய்கிற தேவன். அதுனால இனிமே ஆதாம், ஏவாளையோ இல்லை நம்மளையோ நம்ம தேவன் கோபத்தின் உச்சியில் கஷ்டப்படுத்துறார்ன்னு யோசிக்காதீங்க.
நம்ம தேவன் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அவங்க செய்த தப்பை ஒத்துக் கொள்ள நிறைய சந்தரப்பங்கள் கொடுத்தாங்க ன்னு நம்ம இயேசப்பா ஏற்கனவே சொல்லிருக்காங்க. ஆனா அவர் கொடுத்த ஒரு சந்தர்ப்பத்திலும், தன்னை பற்றி யோசிக்காம உலகத்தை பற்றியே அவங்க நினைத்ததால, நம்ம தேவனுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டியதா போச்சு.
நேற்று நம்ம இயேசப்பா ஆதாம், ஏவாள் எப்படி நம்ம தேவன் அவர்களை கூப்பிட பிறகும், செய்த தப்பை மறைச்சாங்கன்னு அழகாக சொல்லி கொடுத்தாங்க. ஏன் நீங்க கூட கோபப்பட்டீங்களே? தேவன் கேட்டப்ப னாச்சும் வாயை திறந்து சொல்ல வேண்டியதுதானன்னு. ஆனா அவங்க தன்னுடைய தப்பை ஒத்துக்கலை குட்டிகளா. அடுத்தும் நம்ம தேவன் விடலை குட்டிகளா. அவங்க செய்த தப்பை சப்போஸ் ஒத்துக் கொண்டு, தன் கிட்ட சாரி கேட்டா, அதற்கு ஏற்றார்போல் தண்டனை கொடுத்திட்டு, திரும்பவும் தன்னுடைய பிள்ளைகளா நடத்துணும்னுதான் அவர் ஆசைப்பட்டார். ஆனா, ஆதாம், ஏவாளுடைய நேரம் பாருங்க, அப்ப கூட சாத்தானின் வஞ்சத்தில தான் மாட்டிக் கொண்டோம்ன்னு புரிந்து கொள்ள முடியாம நம்ம தேவனிடம் உண்மையை சொல்ல விரும்பலை.
சரி குட்டிகளா, ஆதாம் நம்ம தேவன்கிட்ட, நான் சாத்தானின் சத்தத்தை இந்த தோட்டத்தில கேட்டு, இந்த உலகத்திற்கும் நான் பயந்து வாழ வேண்டிய அவசியத்தை தெரிந்து கொண்டதால, நான் நல்லவன்தான் என்பதை நிரூபிச்சிட்டேன் பார்த்தீங்களா?ன்னு கேட்டப்ப நம்ம தேவன் ரொம்பவே உடைந்து போனாங்கன்னு நம்ம இயேசப்பா நம்மகிட்ட ஏற்கனவே சொன்னாங்க.
ஆனாலும் நம்ம தேவன் அவங்க மேல பரிதாபப்பட்டு, “சரி, இந்த உலகத்திற்கு நீ பயப்படணும்னு அதாவது நீ டிரஸ் இல்லாம இருக்கன்னு உனக்கு யார் சொன்னா?”ன்னு தன்னுடைய கேள்வியை கேட்டாங்க. அப்ப கூட நம்ம தேவன் கேட்ட கேள்விக்கு அவங்க அசையலை குட்டிகளா. அட்லீஸ்ட் அப்பனாச்சும் சாரி தேவனே, நாங்க நீங்க வேண்டாம்னு சொன்ன பழத்தை சாப்பிட்டோம். அதுதான் எங்களுக்கு நாங்க டிரஸ் போடலை என்கிற காரியத்தை சொல்லி கொடுத்ததுன்னு தன்னுடைய தப்பை ஒத்துக்கலை குட்டிகளா.
நாம கூட அப்படிதான குட்டிகளா. நம்ம தப்பை நேரடியா இல்லை மறைமுகமா அவர் கண்டிக்கும் போது, ஒண்ணும் சொல்லாம அப்பதான் மண்ணை புதுசா பார்க்கிற மாதிரி, அதையே பார்த்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்போம். நான் தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்கபான்னு அப்ப கூட வாயில இருந்து வார்தைகளை விட மாட்டோம்.
சரி அடுத்து என்ன தான் ஆச்சு? அடுத்துதான் நம்ம தேவன் ஆதாம், ஏவாள் செய்த தப்பை நேரடியாகவே கேட்டாங்க. நான் சாப்பிட கூடாதுன்னு சொன்ன பழத்தை சாப்பிட்டாயான்னு. அந்த கேள்வியை கேட்கும் போது நம்ம தேவன் தனக்குள் எந்த அளவுக்கு நொறுங்கி போய் கேட்டிருப்பார்னு உங்களால் புரிஞ்சுக்க முடியுமா?
முதலில் நம்ம தேவன் வேண்டாம்னு சொன்ன பழத்தை பற்றி, வலுசர்ப்பம் பேசினப்பவே அது எதுக்கு எனக்கு? என்னுடைய தேவனுக்கு அது பிடிக்காதுன்னு அப்பவே விலகி போக முடியலை.
நம்ம நண்பர்கள் நம்ம தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியத்தை பற்றி, பேசும் போதே, அது என்னுடைய தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியம் ன்னு நாமளும் விலகி போகலையே. வாவ்…..என்ன அழகா டிவில நடிக்கிற ஆட்களை பற்றி சொல்லுறா…..ஒருத்தன் சிகரெட் பிடித்தா இந்த அளவுக்கும் சந்தோசம் காண முடியுமா? தன்னையே மறக்க முடியுமா?ன்னு அப்பயெல்லாம் ரொம்பவே கூர்மையா நம்ம காதை திறந்து வைச்சிட்டு, தப்பு செய்த பின்னால, நம்ம நண்பர்களையோ இல்லை நம்ம தேவன் அந்த நேரத்தில காப்பாற்ற வரலைன்னு அவர் குறை சொல்லுறதலையோ எந்த பிரயோஜனமும் கிடையாது குட்டிகளா. நமக்குள்ள இருக்கிற பரிசுத்த ஆவிப்பா ஏற்கனவே நம்ம தேவ வார்த்தைகள் மூலமா சொல்லி கொடுத்துருப்பாங்களே, பாவிகளின் வழிகளில் நில்லாதே………………………. உள்ள இருந்து கூப்பிடும் போது காதை பொத்தி வைச்சிட்டு அடுத்து புலம்புறதால என்ன மாற போகுது குட்டிகளா????????? அப்ப சாத்தான் ஏவாள்கிட்ட அந்த பழத்தை சொன்னப்ப, ஏவாள் செவி கொடுத்த அந்த நொடியே நம்ம தேவன் தனக்குள் நொறுங்க ஆரம்பிச்சிட்டார்.
சரி, அது போகட்டும். அடுத்து அந்த பழத்தை பார்த்ததும், ஏவாள்கிட்ட ஒரு இச்சை வர ஆரம்பிச்சிதே, அப்பனாச்சும் இது என் தேவனுக்கு பிடிக்காத பழம் ஆச்சே, நான் ஏன் இதை இப்படி பார்க்கிறேன்ன்னு அப்ப கூட தோணலை குட்டிகளா. இது நம்ம தேவன் உடையும் போது ஏற்பட்ட இரண்டாவது பாம்ன்னு சொன்னா சரியா இருக்குமா குட்டிகளா?
நம்ம மனதில கூட நம்ம தேவன் நமக்கு விலகி வைச்ச காரியங்களை பற்றி யோசித்து, இன்னைக்கி படம் பார்க்கலாமா இல்லை இன்னைக்கி நண்பர்கள் கூட ஊர் சுத்தலாமான்னு ஒரு முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி ஒரு வலி நம்ம இருதயத்தில உணர்வோம். அது நம்ம தேவன் நம்மளால் படுற பாம்மின் வேதனை
சரி பழத்தை பாத்தாச்சு, அதை சாப்பிடவும் செய்தாச்சு, நம்ம தேவன் என்னை பார்த்திட்டு இருக்கிறார்ன்னு உணர்வு கூட தோணாம. ஆனா மற்ற தேவ பிள்ளைகளையும் போய், தேவ பிள்ளையா இருக்கிற நீ ஏன் கெடுக்கிற குட்டி? நான் அந்த சினிமாவை பார்த்தேன், என்ன அழகா இருந்துச்சு தெரியுமா? இன்னிக்கி நீயும் என் கூட வான்னு ஏன் அழைக்கிற? ஆதாமை அழைச்சி ஏவாள் நம்ம தேவன் இருதயத்தை குத்தினது போதாதுன்னு நாமளும் ஏன் நம்ம நண்பர்களுடைய வாழ்கையை வீணாக்கணும். நான் எப்படியும் அப்பா பேச்சை கேட்காம சாபம் வாங்க போறேன்…..என்னோட துணைக்கு என் நண்பன் வந்தா சேர்ந்து கஷ்டப்படலாம் பாருங்க, அதற்காக…….ன்னு உங்க மனதில எண்ணங்கள் தோணினா தயவு செய்து உங்க மனதை மாற்றிகோங்கோ குட்டிகளா.
பழத்தை பார்த்து சாப்பிட்டு, ஆதாமுக்கும் கொடுத்து, ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டு களவாணிதனம் பண்ணியாச்சு. அட்லீஸ்ட் இப்பனாச்சும் உங்க மனதில இருக்கிற அவர் வேதனைபடுறது உங்களுக்கு புரியலையா குட்டிகளா. எத்தனை தூரம் தான் அவர் நம்முடைய தப்புகளுக்காக சிலுவை வேதனை பட. நாங்க நினைக்கிறோம். நம்ம தேவன் ஆதாமும், ஏவாளும் சேர்ந்து செய்த அந்த பாவத்தின் வேளை, அதாவது செய்த நேரங்கள் மூன்று மணி வேளைகளா இருந்திருக்குமா? ஏன்னா நம்ம இயேசப்பா ஆணியில் அடிக்கபட்டு சிலுவையில வேதனை அனுபவிச்ச நேரங்கள் மூன்று மணி வேளைகள் தான. அப்ப அந்த கணக்குகாக தான் நம்ம இயேசப்பா வேதனை சுமந்தாங்களா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நம்ம தேவன் நேரடியாகவே ஆதாம், ஏவாளை கேள்வி கேட்டப்பனாச்சும் உண்மையை ஒத்து கொண்டாங்களா குட்டிகளா? இல்லையே. இவன் தான் திருடினான். நான் சும்மாதான் நின்னேன்ன்னு மாதிரியே ஒருத்தங்க, மற்றவங்களை குறை சொல்லிட்டு தப்ப நினைச்சாங்க. so, அப்ப கூட நம்ம தேவன் நினைத்த சாரிபா என்கிற பதிலை சொல்லலை குட்டிகளா. நாமளும் அப்படித்தான். செய்த தப்பை மறைக்க மற்றவங்க மேல குறை சொல்லிட்டு, தப்பிக்கிறதில ph.d பட்டம் ஏற்கனவே நாம வாங்கியாச்சோ???
இப்பதான் குட்டிகளா, நம்ம தேவனுக்கு கோபமே வந்தது. எத்தனை சந்தர்ப்பங்கள் அவங்களுக்கு நம்ம தேவன் கொடுத்தாங்க? இப்ப சொல்லுவாங்க……இந்த தடவைனாச்சும் சொல்லுவாங்க……பட் எல்லாமே ஏமாற்றம் மட்டும்தான். இதற்கு மேலயும் நம்ம தேவன் கோபப்பட்டிருக்க கூடாதுன்னு நாம வழக்காடினா சாரி குட்டிகளா, நம்ம கேஸ் தோத்து போகும்ன்னு நமக்கே புரியலையா குட்டிகளா.
நாம எந்த நிலமையில இருந்திட்டிருக்கிறோம்ன்னு நம்ம இயேசப்பா நேற்றே கேள்வி கேட்டுட்டாங்க. இப்ப நமக்கு நம்ம இயேசப்பா புரிய வைக்க நினைக்கிறது, நம்ம தேவனுக்கும் கோபம் வரும், அதுனால பார்த்து நடந்துகோங்க குட்டிகளான்னு எச்சரிக்க. அதுனால இனியும் தாமதம் பண்ணாம, எந்த நிலையில இருக்கிறோம்னு புரிஞ்சுகிட்டு அவர் கிட்ட மன்னிப்பு கேட்கறது தான் சால சிறந்தது.
இல்லை ஆதாம், ஏவாளுக்கு கிடைச்ச சாபத்தை பத்தியும் தெரிஞ்சுகிட்டு, ஏன் அதைத்தான் கொடுக்கணும் என்கிற அர்த்தத்தையும் புரிந்து கொண்டா சாரி கேட்க ஈஸியா இருக்கும்னு யோசித்தா, சொல்ல நம்ம இயேசப்பா இப்பவும் தயார். ஆனா அவர் கோபத்தை சந்திக்க நீங்க ரெடியா இருக்கீங்களா???????
இயேசு கிறிஸ்து யார்?(31) இயேசு கிறிஸ்து யார்?(33)
இயேசு கிறிஸ்து யார்?(32)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives