• இயேசு கிறிஸ்து யார்?(28)

     வேத வாசிப்பு

    jesus28

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    எப்படி இருக்கீங்க குட்டிகளா? நம்ம இயேசப்பாவின் நாமத்தினால் இன்றைக்கு நாம சந்திக்கிறது நமக்கு அதிக சந்தோசத்தையும், நம்மளை நேசிக்கிற இயேசப்பாக்கும் அதிக சந்தோசத்தையும் தந்திருக்கும்னு நம்புறோம். நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த அவரே வழி, அவரே சத்தியம், அவரே ஜீவன், நமக்கு என்ன கற்றுக் கொடுத்தது? நம்மளை நேசிக்கிற நம்ம இயேசப்பாவை நாம பிரியப்படுத்துனும்னா அது நம்ம விசுவாசத்தினால் மட்டுமே முடியும்ன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். ஆனா அந்த விசுவாசத்தை கொடுக்கிறது  கூட நம்ம இயேசப்பாங்கிற இரகசியம் உங்களுக்கு தெரியுமா குட்டிகளா.

    என்னதுன்னு ரொம்பவே ஆச்சர்யமா பார்க்குறீங்க? யெஸ் குட்டிகளா, இதுதான் முழுக்க முழுக்க உண்மை. நமக்கு எல்லாவற்றையும் பார்த்து கொள்ளுகிறவர் நம்ம தேவன்தான். நாம சாப்பிடுகிற சாப்பாட்டில இருந்து, குடிக்கிற தண்ணீர், விடுற மூச்சு வரைக்கும் அவர்தான் நமக்கு பார்த்துக் கொள்ளுகிறார். அப்படி இருக்கும் போது அவர் மேல நாம வைக்க வேண்டிய அன்பையுமா அவரே பார்த்து கொள்ளனுன்ம்னு நீங்க யோசிக்கலாம். ஆமா குட்டிகளா, ஓடுகிறவனாலும் இல்லை, பிரயாசப்படுகிறவனாலும் இல்லை, நமக்காக இரக்கம் பாராட்டுகிற அவரால் தான் எல்லாம் கூடும்.

    நமக்குள்ள இருக்க வேண்டிய விசுவாசத்தை பற்றி நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போமா?

    விசுவாசம் என்றால் நம்புகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயம் என்று நம்ம இயேசப்பா எபிரெயர் 11 ம் அதிகாரத்தில் 1ம் வசனத்தில சொல்லிருக்காங்க. இந்த வசனத்தின் அர்த்தம் உங்களுக்கு புரிந்ததா குட்டிகளா? நமக்கு அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தை அவர் சொல்லி கொடுத்தாதான் புரிந்து கொள்ள முடியும்னு சொல்லுறது எங்களுக்கும் புரியுது.

    நம்ம பிதாப்பா இந்த உலகத்தை தன்னுடைய வார்த்தையால்(நம்ம இயேசப்பா) படைத்தாங்க என்பது தான் நம்ம வேதாகமத்தில முதல் புத்தகத்தில ஆரம்பிக்கிற சத்தியம். இதை நம்ம மனது எந்த அளவு நம்புதுன்னு சொல்ல முடியுமா? ஆமாம்ன்னு நீங்க பதில் சொன்னீங்கன்னா நம்ம தேவனுக்குள்ள ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். ஏன்னா இன்னும், அறிவியல் அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் மனிதன் குரங்கில இருந்து, அதுனுடைய பரிணாம வளர்ச்சியால் உருவானவன் என்கிற காரியத்தை தான சொல்லி கொடுத்துட்டு இருக்கிறாங்க. இதுல என்ன கொடுமைன்னா இதுல ஆராய்ச்சி பண்ணுற நிறைய பேரு, நம்ம தேவனுடைய கிருபையால அவருடைய பிள்ளைகளா இருக்கிறவங்க. இந்த மாதிரி வேதாகமத்தில இருக்கிற முதல் வசனத்திலயே நாம இந்த உலக ஞானத்தை சார்ந்திருக்கும் போது எப்படி நான் என் தேவன் மேல விசுவாசமா இருக்கிறேன்னு சொல்ல முடியும்?

    இந்த உலக ஞானம் என்பது என்ன குட்டிகளா, அடிக்கடி மாறிட்டே இருக்கிறது. அதுனால முடிவுகள் எல்லாம் இயற்பியலில் சொல்லுற மாதிரி probablity  என்கிற கோட்பாடை கொண்ட காரியம். பாதி காரியம் மெய்ப்பிக்க பட்டாலும், இன்னும் நிருப்பிக்க படாம வெறும் பேப்பர்ல தூங்குற விஷயம் அதிகம். அந்த விஞ்ஞான ரீதியா வருகிற ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு பக்கம் கூட விடாம வாசிக்க தெரிந்த நம்மளால் நம்ம பைபிளில் இருக்கிற ஒரு வசனத்தை நம்ப, அதை படிக்க ஏன் இந்த அசதி? சோம்பேறித்தனம்? சொல்ல முடியுமா நம்மளால்? ம்கூம் குட்டிகளா, எந்த புத்தகத்தில பக்கத்துக்கு பக்கம் ரொம்பவே அழகான போட்டோஸ் போட்டு இருக்கிறதோ, அந்த புத்தகத்தை பத்து நிமிசத்தில 50 பக்கமா இருந்தாலும், படிக்க தெரிந்த நமக்கு நம்ம பைபிளை தூக்கணும்னு நினைச்சாலே வருமே ஒரு முக சுழிப்பு. பாவம், நம்ம இயேசப்பா எத்தனை தடவை நாம முகம் சுழிச்சதை கணக்கில எடுத்தாரோ?

    ஏன் குட்டிகளா, ரொம்பவே பதட்டப்படுறீங்க? நீங்க சொல்லறது உண்மையா? நாங்க பைபிள் வாசிக்கும் போது சில நாள் தூங்கிட்டே கூட வாசித்திருக்கோம். சில நாள் ரொம்ப மோசம், வேற ஏதோ ஒரு எண்ணம் மனதில ஓடிட்டு இருக்கும். அதுல நாங்க பைபிள் வாசித்த நாட்கள் கூட உண்டு. இதை எல்லாம் நம்ம இயேசப்பா கணக்கில எடுத்திருப்பாரோ? நானாச்சும் பரவாயில்லை, என்னுடைய நண்பர்கள் பைபிள் வாசிக்கணும்னு அவங்க வீட்டுல கட்டாயம் இருக்கிறதால, பைபிள்ல காமிக்ஸ் புத்தகம் வைச்சும் படிக்கிறதுண்டு. இதை எல்லாம் நம்ம இயேசப்பா பார்த்திட்டு இருப்பாரே, ஏதாவது தண்டனை கொடுத்திருவாரோ? உங்களுக்குள்ள பயங்கள் கூட உண்டா குட்டிகளா. உங்களை நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படியே விரும்புகிற ஒரே அப்பாவா இருந்தாலும், கடைசியில அவருக்கு கிடைச்சதும் ஹிட்லர் வேஷம்தானா???

    என்ன குட்டிகளா, தலை குனியுறீங்க? நம்ம இயேசப்பாவை கஷ்டப்படுத்திட்டோம்னு தலை குனியுறோமா இல்லை நாங்க என்றும் குனிந்த தலை நிமிரவே மாட்டோம்னு தலை குனிஞ்சு காண்பிக்கிறோமா? நாம என்ன செய்ய குட்டிகளா, நம்ம முற் பிதாவான ஆதாம் மூலமாகவும், ஏவாள் மூலமாகவும் வந்த பழக்கம். எப்படி தீடீர்னு மாற்ற முடியும்? அன்னைக்கி நம்ம பிதாப்பா சொன்ன காரியத்தை விட அந்த நன்மை, தீமை மரத்தின் பழம் நல்லா இருக்குமா, இருக்காதான்னு யோசித்து பார்த்தவங்கதான அவங்க. அவங்க பிள்ளைகளாகிய நாம மட்டும், எப்படி அவர் பேச்சை கேட்போம். நமக்கு எத்தனை பிசியான வேலை இருக்கு? காலையில வீட்டுல அம்மா ஒழுங்காதான் எனக்கு சாப்பாடு போடுறாங்களா இல்லை வீணா தூங்கி எழுந்திட்டு ஏனோ, தானோவென்று சமையல் செய்து என்னையும் சாப்பிட வைச்சு ஸ்கூல் அனுப்புறாங்களான்னு வேற யார் யோசிப்பா? நான்தான் யோசிக்கணும். ஏன்னா இந்த குடும்பத்தை பற்றி யோசிக்க என்னை விட்டா யார் உண்டு?

    அச்சோ, அந்த ஸ்கூல் காரியம் இருக்கே, அதுதான் உண்மையில் தலை வலி. டீச்சர்ஸ் சரியாதான் கிளாஸ் நடத்துறாங்களா இல்லை சும்மா வந்து உட்கார்ந்து ob அடிக்கிறாங்களா, நான் தான் எல்லாவற்றையும் பார்க்கணும். இல்லாட்டினா எங்க டீச்சர்க்கு தேவையில்லாம ஸ்கூல் சம்பளம் கொடுத்திருமே? அது மட்டுமா டீச்சர் சரியாதான் எக்ஸாம் பேப்பர் திருத்துறாங்களா இல்லை பிடிச்ச பசங்களுக்கு மட்டும் நிறைய மார்க் போடுறாங்களா? ன்னு நான்தான பார்க்கணும். இப்படி நிறைய வேலைகள். ஸ்கூல்ல சைக்கிள் நிப்பாட்டி வைக்கிற இடத்தில இருந்து, வீட்டை அம்மா சுத்தமா வைக்கிறது வரைக்கும், தம்பி, தங்கச்சியை ஒழுங்கா பார்த்துக்கிற வரைக்கும் உள்ள எல்லா பொறுப்புகளும் என் தலையில. இந்த சின்ன வயதில இருந்து இத்தனை சுமைகள் எனக்கு தேவையா?ன்னு புலம்புறீங்க. குட்.

    எங்களை கிண்டல் பண்ணுறதுக்காக்தான இப்படி சொன்னீங்க?ன்னு பாதி பேரு கோபப்பட ஆரம்பிச்சாச்சு. குட்டிகளா, இந்த உலகத்தில நமக்குன்னு கொடுக்க பட்டிருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை. இதுல என்னை சுத்தி உள்ளவங்க எல்லாம் தன்னுடைய வேலையை சரியா பார்க்குறாங்களா இல்லை சும்மாதான் உட்கார்ந்திருக்காங்களான்னு ரொம்பவே மேற்பார்வை. ஏன் குட்டிகளா, நமக்கு இந்த தேவையில்லாத வேலை? நாம மற்றவங்களை இப்படி ஆராய்ச்சி பண்றதுனாலோ என்னவோ நம்மளையும் மற்றவங்க நாம சரியா இருக்கோமான்னு எப்ப பார்த்தாலும் செக் பண்றாங்க. இனிமேலும் இந்த வேதனை நமக்கு தேவையா குட்டிகளா. இது வரைக்கும் அடுத்தவங்களை நேரடியா கை நீட்டி குறை சொல்லலை என்றாலும், நம்ம மனதில எப்ப பார்த்தாலும் மற்றவங்களை நோக்கி கை நீட்டியே தான வைச்சிருக்கிறோம். இப்ப, இந்த டேர்ன் நமக்கு. நாம நமக்குள்ள எப்படி இருக்கிறோம். அப்படின்னு கொஞ்சம் யோசித்து பார்க்கலாமே?

    இனி மற்றவங்க, மற்றவங்கன்னு யோசிக்கிறதை விட்டுட்டு, நாம யார், நமக்குள்ள எத்தனை குப்பை குவிந்து கிடக்குன்னு கொஞ்சம் பார்க்கலாமே? ஏன் எப்படி சொல்லுறீங்க? நான் ஒண்ணும் சுயநலம் பிடித்தவன்/பிடித்தவள் கிடையாது. எல்லாரையும் பற்றி யோசிக்கணும்தான நம்ம இயேசப்பாவே சொல்லி கொடுத்திருக்காங்க. இப்படி சுயநலமா இருக்க சொல்லலை. நீங்க சொல்லுறது சரிதான் குட்டிகளா. ஆனா இப்படி மற்றவங்க குறைகளை ஆராய்ச்சி பண்ண சொல்லலை நம்ம இயேசப்பா . அவர் சொன்னது மற்றவங்களுக்கு நாம செய்ய வேண்டியது அன்பை கொடுக்க வேண்டியது. இப்படி குறை மனதில சொல்லி அலையுறது கிடையாது. ஏன்னா நம்ம இயேசப்பா சொல்லி இருக்காங்க, ஒருத்தர் மற்றவருக்கு அன்பு என்கிற காரியத்தை தவிர வேற எந்த வகையிலும் கடன் பட கூடாதுன்னு சொல்லி இருப்பாங்க. இப்ப புரியுதா?

    ஆமா, நீங்க முதலில் நாங்க பைபிள் வாசிக்கிற விசயத்தை தான சொல்லிட்டு இருந்தீங்க. ஆனா மற்றவங்களை குறை சொல்லுறோம்னு எங்களை குறை சொல்ல ஆரம்பிச்சிடீங்க. நீங்க சொன்னதை தான் நாங்களும் சொல்ல போறோம். இந்த குறை சொல்லுற பழக்கம் கூட எங்க ஆதாம், ஏவாள் மூலமாதான் வந்துச்சு. அன்னைக்கி ஆதாம், ஏவாள் ரெண்டு பேரும் சேர்ந்து தப்பு பண்ணிட்டு, ஒருத்தர், மற்றவங்களை தான குறை சொன்னாங்க. இப்ப தீடீர்னு எங்க கிட்ட வந்து இதை மாற்றிக்கோங்கன்னு சொன்னா எப்படி மாத்துறது? குட்டிகளா, நீங்க சொல்லறது முழுக்க முழுக்க உண்மை. ஆனா இந்த மாதிரி உலகத்தில என்ன நடக்குதுன்னு நாம யோசிக்க எடுக்கிற இத்தனை மணி நேரங்களை நம்ம பைபிள் வாசிக்கிறதில செலுத்தினா எத்தனை இன்பமா இருக்கும்ன்னு உங்களால் புரிந்து கொள்ள முடியுமா?

    ஆனா நாங்க பைபிள் வாசிக்கிறதுக்கும், எங்களுக்குள் நம்ம இயேசப்பா விசுவாசத்தை கொண்டு வருகிரதுக்கும் என்ன சம்பந்தம் வந்திர போகுது?ன்னு நீங்க யோசிக்கலாம். முதலில் நம்முடைய தேவையில்லாத பிஸி வேலைகளை எல்லாம் தூக்கி வைச்சுட்டு, பைபிள்ளை கவனமா வாசிங்க. அடுத்து நம்ம இயேசப்பா நமக்கு சொல்லி கொடுப்பார், வாழ்கையின் இரகசியங்களை. 

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    5 + = thirteen

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>