• இயேசு கிறிஸ்து யார்?(10)

    நமது வேதாகமம்

    jesus10

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.

    அவன் நம்மளை எதிர்க்கும் போது தேவ வார்த்தைகளை எந்த அளவு வல்லமையா பயன்படுத்தணும் என்பதை முதல் கேள்வி மூலமா சொல்லி கொடுத்தாங்க.

    அடுத்து அவனுடைய பலத்தை பற்றி சொல்லி கொடுக்கும் போது விழிப்போட இருந்தா மட்டுமே அவனை எதிர்த்து நிற்க முடியும் என்பதை சொன்னதோட, அவனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கொஞ்சம் கூட இல்லை என்பதையும் அழகாக சொன்னாங்க, அப்படித்தான குட்டிகளா. ஏன்னா “உலகத்திலிருக்கிறவனிலும் நம்மில் இருக்கிற நம்ம தேவன் பெரியவர்”.

    இப்ப இரண்டாவது என்ன கேள்வி கேட்டான் என்பதை பார்க்கலாமா? கேள்வி என்ன என்பதும், நம்ம இயேசப்பா என்ன அவனுக்கு பதில் சொன்னாங்கன்னு என்பதை நீங்க ஏற்கனவே பைபிள் பார்த்து படிச்சி வைச்சிருப்பீங்க, சரியா. அப்ப எங்களுக்கு சொல்லுங்க. ஏன் நம்ம இயேசப்பாவை தேவலாயம் மேல நிப்பாட்டிட்டு “ நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக் குதியும், ஏன்னா உங்க பிதாப்பா தன்னுடைய தேவ தூதர்களுக்கு உம்மை குறித்து கட்டளையிட்டு பாதம் கல்லில் இடறாதபடி அவங்க உம்மை கைகளில் ஏந்திக் கொண்டு போவாங்கன்னு எழுதியிருக்கிறதே”ன்னு சொன்னான். என்ன குட்டிகளா, எவ்வளவு பெரிய கேள்வியை கேட்டிருக்கானேன்னு தோணுதா?

    நீங்க முதல் கேள்வியில இருந்து மூன்று கேள்வி வரை பார்த்தா அவன் நம்ம இயேசப்பாவை “உங்க பிதாப்பாதான் இப்படி பைபிள்ல சொல்லியிருக்காங்க, நீர் என்ன சொல்லுகிறீர்ன்னு அந்த வகையிலதான் சோதனைப்படுத்தி பார்த்தான். அதாவது நம்ம இயேசப்பாகிட்ட எந்த அளவு தேவனுடைய வார்த்தைகளை அவர் தெரிந்து வைச்சிருக்கிறார்ன்னு பைபிள் quiz அவன் நடத்தலை. மாறாக உன்னுடைய தேவ வார்த்தைகள் இப்படி இருக்கே, இதைக் குறித்து நீ என்ன சொல்லுற என்கிற ரீதியில்தான் நம்ம இயேசப்பாவை குழப்ப நினைச்சான்.

    என்ன குட்டிகளா, குழப்பமா பார்க்குறீங்க. நம்ம சர்ச்ல வைக்கிற பைபிள் quizல நீங்க எத்தனை prize வாங்கியிருப்பீங்க? கிட்டத்தட்ட எல்லா போட்டிகளிலும் நீங்கதான் பர்ஸ்ட். சரியா……உங்க வீட்டு அலமாரியில அத்தனை prizeயையும் அடுக்கி வைச்சு போவோர், வருவோர்கிட்ட எல்லாம் இதை பத்தி சொல்லறதுக்கே நம்மளுக்கு நேரம் பத்த மாட்டிக்குது, அப்படிதானே குட்டிகளா. சப்போஸ் யாராவது அதை பத்தி உங்ககிட்ட விசாரிக்காட்டி அன்று நீங்க feel பண்ணுவீங்களே…………… சொல்ல முடியாத துக்கம். இப்ப ஒரு காரியத்தை உங்களுக்கு நம்ம இயேசப்பா எச்சரிக்கையாகவே சொல்லுறாங்க. நீ எத்தனை தடவை உன் prizes பற்றி பெருமை அடிச்சியோ, prizes வாங்கியிருந்தியோ அத்தனை தடவை வாவ்……இத்தனை prizes வாங்கிறிக்கியா, குட்ன்னு உன்னை புகழ் பாட அல்ல. உன்னை டெஸ்ட் பண்ண சாத்தான் கண்டிப்பா வருவான். 

    ரொம்பவே பயமா எங்களை பார்க்குற மாதிரி தோணுது குட்டிகளா. உங்களை பயமுறுத்தவோ இல்லை நீங்க இனிமே பைபிள் quiz டெஸ்ட்ல கலந்துக்க கூடாது என்பதற்காகவோ நம்ம இயேசப்பா இதை சொல்லலை. நம்ம இயேசப்பா ஏற்கனவே நம்மகிட்ட சொல்லியிருக்காங்க. நம்ம தேவனுடைய வார்த்தைகளை கேட்டும் இல்லை அதிகமா நம்மளை மாதிரி டெஸ்ட்ல பர்ஸ்ட் வாங்கியும் அதை குறித்து யோசிக்காம, அவருக்கு செவி கொடுக்காம எப்பவும் போல நம்ம இஷ்டப்படி வாழ்ந்தா வெள்ளத்தில அடிச்சிட்டு போன மண்ணில் வீடு கட்டினவனுடைய நிலைமைதான். வெள்ளம் சின்னதா இருந்தா பிரச்சனை இல்லையே குட்டிகளா. நம்ம வீடுதான(உடைமைகள்) போச்சு. திரும்ப கட்டிக்கலாம். ஆனா சத்துரு பெரிய வெள்ளமா வந்தா என்ன செய்வீங்க. நம்மளையும் சேர்த்து அடிச்சிட்டு போயிருவானே நரகத்துக்கு. அப்ப இயேசப்பா காப்பாத்துங்க……காப்பாத்துங்கன்னு கத்தினா அவரால என்ன செய்ய முடியும். நல்லா இருக்கும் போதே எப்பவும் உன் காதுல வந்து என்னை நோக்கி கூப்பிடு குட்டிமா………என்னோட பேசு…….நான் சொல்லறதை கேளு……..இந்த விஷயம் உனக்கு கஷ்டத்தை கொடுக்கும்………அந்த பையன் மேல கோபத்தை காண்பிக்காத……….தப்பு செய்யாத………..தவறான காரியங்களை கற்று கொள்ளாத……ன்னு ஒரு நாள்ல ஆயிரம் தடவைக்கு மேல நம்ம இயேசப்பா சொல்லும் போது காதை அடைச்சா நீ கஷ்டம்னு சொல்லும் போது அவரால உனக்கு எப்படி உதவி செய்ய முடியும்.

    என்னது என்னுடைய இயேசப்பா எனக்கு உதவி செய்ய முடியாதா….ன்னு ரொம்பவே வேதனையா கேட்குறீங்களே. சாரி குட்டிகளா, நீங்க தேவனுடைய பிள்ளைகளா இருந்தாலும் நம்மளை பற்றி என்றும் அவர்கிட்ட குற்றம் சாட்ட நமக்கு ஒரு எதிரி(சாத்தான்) என்றும் நம்ம பக்கத்திலேயே உண்டு என்பதையும் என்றும் மறக்காதீங்க. அவருடைய சத்தத்துக்கு முதல்ல இருந்தே காதை அடைச்சிட்டு, உங்க வேதனை நேரத்தில கூப்பிட்டா…..என்ன இயேசப்பா ரொம்பவே அவன் வேதனையை பார்த்து கஷ்டப்படுறீங்க, நீங்க அவனை நோக்கி கூப்பிட போது காது கேட்காத செவிடன் மாதிரிதான இருந்தான். இப்ப மட்டும் ஏன் கூப்பிடுறான். ம்கூம்…..நீங்க அவன் கூப்பிடறதுக்கு பதில் சொல்ல கூடாது. இந்த நேரம் என்னுடைய நேரம். இது வரைக்கும் என் பேச்சுக்கு கீழ்படிந்தவன். அதனால அவனுக்கு நான்தான் பிதா…..என் பிள்ளையை என்கிட்ட விட்டுறங்கன்னு சொன்னா நம்ம நிலைமை என்ன ஆகும் குட்டிகளா.

    இந்த மாதிரி கூட ஆகுமான்னு நீங்க மனதில யோசிக்கிறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. நம்ம இயேசப்பா நமக்கு ரொம்பவே அன்பான தகப்பன். அதாவது இந்த உலகத்தில எந்த உறவுகளும் உன்னை குறித்து புரியாம இருந்தாலும் உன் கண்ணீரை துடைத்து உன் மார்பில சாய்த்து ஆறுதல் படுத்துகிற ஒரு உண்மையான தகப்பன். ஆனா அதே நேரத்தில அவர் நியாயமுள்ள நீதிபதியும் கூட. எல்லாவற்றுக்கும் கிருபையின்(மன்னிப்பின்) காலங்கள் உண்டு. அதையும் மீறி நம்ம தப்புகள் உயரும் போது சாரி குட்டிகளா…..அவரால கூட ஒன்றும் செய்ய முடியாது. அதாவது சாத்தான் உங்களை குறித்து உரிமை பாராட்டிடா, உங்களுக்காக அவர் பரிந்து பேசுற அளவுக்கு நம்மகிட்ட எதுவும் இல்லாம போனா, நம்ம இயேசப்பா உங்களுக்காக சிலுவை வேதனை சுமந்தவரா விட்டு கொடுக்க வேண்டியதா போயிடும்.

    அதுனால கவனம் தேவை குட்டிகளா. தேவனுடைய வார்த்தைகளை படிக்கும் போது கவனமா படிங்க. கண்டிப்பா நம்ம இயேசப்பா உங்களோடு பேசுவாங்க தன்னுடைய வார்த்தைகளின் மூலம். நம்ம இயேசப்பா சொல்லறதை கவனமா குறிப்புகள் எடுத்து கொள்ளுங்க. அவர் சொல்லறதை செய்யறதுக்கு அவர்கிட்டேயே பலத்தை கேளுங்க. கன்மலையின்(பாறை) மேல வீட்டை கட்டுங்க. சாத்தான் எப்படிப்பட்ட வெள்ளமா வந்தாலும், நம்ம இயேசப்பா உங்களுக்கு பாறையா இருக்கிறதால அவர் கூட எதிர்த்து நிற்க முடியாம அவன் ஓடி போயிருவான். அடுத்து உங்களுக்கு என்ன கவலை. உங்க வீட்டுல என்றும் நிம்மதியா, நம்ம தேவன் அவனை விரட்டியடிச்ச விசயங்களை மனதார கீதங்களாக பாடி சந்தோசமா வாழுங்க. சரிதான.

    சரி, எங்களுக்கு சொல்லுங்க, இனிமே பைபிள் quiz டெஸ்ட் எழுதுற காரியத்தை பத்தி என்ன செய்ய போறீங்க குட்டிகளா? கண்டிப்பா எழுதணுமான்னு தோணுதா……எனக்கு இருக்கிற prizesயை கணக்கில வைச்சு வெள்ளம் போல சாத்தான் வந்து என்னை தாக்கினா என்ன செய்ய முடியும்? என்கிட்ட இப்போதைக்கு அந்த அளவு பலம் இல்லை. அதுனால முதல்ல என்னுடைய தேவனுடைய வார்த்தைகளை முழுமையா நான் படிக்கணும். என் இயேசப்பா என் கூட பேசுறதை நான் தெளிவா கேட்கணும். அடுத்து அவர் சொல்லும் படி செய்கிற அவருடைய பிள்ளையா நான் மறுரூபம்(மாறணும்) அடையணும். அடுத்து பைபிள் quiz டெஸ்ட் எழுதி நிறைய prizes வாங்கணும். அடுத்து இருக்கிற prizes பார்த்து என்னை தாக்க வருகிற அவன் என் இயேசப்பாகிட்ட அடி வாங்க முடியாம ஓடுறதை பார்த்து என் தேவனுக்கு நான் ஆனந்த கீதங்கள் பாடுவேன். எப்படி எங்க ஐடியா……ன்னு நீங்க எங்ககிட்ட சொல்ல ஆசைபடுறீங்க. குட். ஆனா உங்களுக்கு தெரியுமா? நம்ம இயேசப்பா உங்களை பைபிள் quiz டெஸ்ட் எழுத ரொம்பவே ஆசையா அழைக்கிறாங்க குட்டிகளா. ஆனா அந்த பரபரப்பா நேரத்திலும்(படிக்கிற நேரத்தில) உங்ககிட்ட அவர் கண்டிப்பா பேசுவார். அவர் பேசுற காரியங்களை மார்க் என்கிற விசயத்துக்காக அசட்டை பண்ணிராதீங்க என்பதுதான் அவருடைய வேண்டுதல். சரிதான குட்டிகளா.

    இனிமே பைபிள்ளை திறந்து படிக்கும் போதே நம்ம இயேசப்பா என்கிட்ட என்ன பேசுவாங்கன்னு எதிர்ப்பார்ப்பீங்க போல??????????????? நமது தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டவாதாக.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    one + = 8

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>