• இயேசு கிறிஸ்து யார்?(14)

    தேவனின் தீர்மானம்

    jesus14

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.

    நம்ம இயேசப்பாகிட்ட சாத்தான் அவனே அவனுடைய மகிமைக்காக உருவாக்கின உலகத்தையும்( அவனுக்கு செவி கொடுத்து கீழ்படியுறவங்க மூலமா அவன் உருவாக்கின உலகம்), அதன் மகிமையையும்(அவனை பின்பற்றுகிறவர்கள் அவனுக்கு கொடுக்கிற மகிமை) காண்பிச்சி இந்த பார்த்தியா நீயும், உன் அப்பாவும் அழகா செய்த உலகம்….நீ உன்னுடைய பிள்ளைகளை எந்த அளவு நேசிக்கிறன்னு எனக்கு தெரியும்…..ஆனா அவங்க நான் அவங்களை வேதனைப்படுத்துறேன்னு கூட தெரிந்து கொள்ளாம என் பின்னாலேயே கண்ணை மூடிட்டு வர்றாங்க. அது மட்டுமில்ல உன்னால இந்த உலகத்தில கொடுக்க முடியாத சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்து உன்னை விட அவங்களை நல்லாவே பார்த்து கொள்றேன். ஆனா உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு. இதை விட நீ உன் பிள்ளைகளை நல்லா வைத்து கொள்ள ஆசைபட்டா நான் அவங்களை உனக்கு தருகிறேன். ஆனா ஒரே ஓர் கண்டிஷன்….நீ என் கால்ல விழுந்து  பணிந்திட்டு உன் பிள்ளைகளை கூட்டிட்டு போகலாம். என்ன சொல்லுற….

    என்ன குட்டிகளா, ரொம்பவே ஆச்சர்யமா பார்க்குறீங்க. சாத்தான் சொன்ன கேள்வியின் அர்த்தம் இதுதான். அப்ப எங்களை பிணை கைதிகளா பிடிச்சி வைச்சு தான் எங்க இயேசப்பாவை மண்டியிட சொன்னானா. கண்டிப்பா உங்க மனது கஷ்டபட்டிருக்கும். நம்ம இயேசப்பாக்கு நம்ம மேல விருப்பமோ இல்லை சில நேரத்தில  நாம கூட அவரை பார்த்து அடிக்கடி கேட்கிறோமே, ” உங்களுக்குதான் என் மேல பாசமே கிடையாதே, அப்படியிருந்தா என்னை இப்படி நோயில வேதனைப்பட விட்டிருப்பீங்களா…….எங்க அம்மா என்னை அடிக்கும் போது ஒண்ணும் சொல்லாம இருந்திருப்பீங்களா…..எத்தனை நாள் உங்ககிட்ட கேட்கிறேன் ஒரு புது சைக்கிள், அதை வாங்கி தராம இப்படி ஏமாற்றுவீங்களா….இப்படி ஏகப்பட்ட complaints. அப்ப கூட நம்ம இயேசப்பா ஒண்ணும் பேசாம இருந்தா, பதிலும் சொல்ல மாட்டீங்களா, என் மேல உங்களுக்கு பாசமே இல்லைன்னு நாம எத்தனை தடவை நம்ம இயேசப்பாவை குறைகள் சொல்லியிருக்கோம்.

    ஆனா நமக்காக நம்ம இயேசப்பா இந்த உலகத்தில வந்தப்ப, நம்மளை பிணைக்கைதிகளா காண்ப்பிச்சு தான், அவரை மண்டியிட வைக்க சாத்தான் நினைத்தான். உண்மையிலேயே நம்ம இயேசப்பாக்கு நம்ம மேல அன்பில்லாம இருந்தா அவன் அவர்கிட்ட இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்டிருக்க மாட்டானே குட்டிகளா. இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும். நம்ம இயேசப்பாவை எந்த வகையில வேதனைப்படுத்தி பார்த்து அதன் மூலமா சந்தோசப்பட அவன் நினைச்சான்னு.

    நம்ம இயேசப்பாவையே இந்த வகையில வேதனைப்படுத்தினவன் நம்மளை மட்டும் சும்மா விடுவானா குட்டிகளா. ஆனா அவன் நம்மளை அவனுடைய உலகத்தில இழுத்துட்டு போய், அவன் என்ன செய்தாலும் வாவ்…..உங்களுக்கு என்ன ஞானம் இருக்கு….என்ன அழகாக எல்லாவற்றையும் அற்புதமா செய்யுறீங்க…..இது வரை அவர் பிள்ளையா இருந்த நாட்களை விட உங்க கூட இருக்கிறதில ரொம்பவே சந்தோசப்படுறேன். நீங்க என்ன சொன்னாலும் செய்ய இப்ப கூட ரெடியா இருக்கேன்….ன்னு அவன் அடிமையா நாம வாழ்ந்திட்டிருக்கிறது நமக்கு இன்னும் புரியலையே குட்டிகளா.

    என்ன குட்டிகளா, ரொம்பவே ஆச்சர்யமா பார்க்குறீங்க. இல்லை…நீங்க சொல்லறது பொய். நாங்க எங்கே சாத்தான்கிட்ட அப்படி இருக்கோம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எங்களுக்கு அவனே கண்டாலே பிடிக்காது தெரியுமா? அப்படி இருக்கும் போது எங்களை எப்படி நீங்க அவனுடைய அடிமையா வாழ்ந்திட்டிருக்கோம்னு சொல்லலாம். நாங்க என்றும் எங்க இயேசப்பாவுடைய பிள்ளைகள். அவருக்காக சர்ச் போகறதையோ, தினம் பைபிள் வாசிக்கிறதோ, prayer பண்ணுறதையோ நாங்க கைவிட்டதில்லை. இந்த மாதிரி எங்க இயேசப்பா எங்ககிட்ட விரும்புகிறதை நாங்க செய்யும் போது, அவருடைய பிள்ளைகள்தான…எங்களை போய் அவனுடைய அடிமையா…எங்க இயேசப்பாவை பத்தி குறை சொல்லிட்டு இருக்கிற பிள்ளைகளா….நீங்க எப்படி சொல்லலாம். உங்களுடைய கோபத்திற்காக நன்றிகள் குட்டிகளா.

    ஆனா இன்னும் நாம நம்ம வாழ்கையில நம்ம தேவனுக்கு விரோதமான களியாட்டுகளில் இருக்கிறோமே குட்டிகளா. அது மட்டுமில்ல இன்னும் நம்ம மனது வெகு சீக்கிரத்தில கிடைக்கிற சந்தோசத்துக்காக மட்டுமே ஏங்குறது உங்களுக்கு புரியலையா குட்டிகளா. அப்படி இருக்கும் போது நாம எப்படி என் மனது என் இயேசப்பாவை மட்டும்தான் தேடுதுன்னு பொய் சொல்ல முடியும். அது யார்கிட்ட குட்டிகளா……நம்ம இயேசப்பாகிட்டயேவா…..சாரி குட்டிஸ், நம்ம மனதும், அதிலுள்ள எல்லா கவனமும் முழுக்க முழுக்க இந்த உலகத்தையும், அதிலுள்ள எல்லா விசயங்களிளாலும் நிரப்ப பட்டிருக்கும் போது நாம எப்படி குட்டிகளா, நம்ம இயேசப்பாகிட்ட சொல்ல முடியும், நீரே என் கதின்னு. அது இன்னும் அல்லவா அவரை நாம் வேதனைபடுத்தற காரியம் குட்டிகளா.

    என்ன குட்டிகளா, அமைதியாயிட்டீங்க. என் இயேசப்பாவை நான் முழு மனதோட விரும்புறேன்னுதான இது வரைக்கும் நினைச்சிருந்தேன். ஆனா இப்பதான் எனக்கு புரியுது. நானும் என்னுடைய இயேசப்பாவின் வேதனைக்கு காரணமா ஆயிட்டேன். என்னால இதில இருந்து வெளியேற முடியுமா? என்னை நேசிக்கிற என்னுடைய இயேசப்பாவை நானும் முழு மனதோட விரும்ப முடியுமா? உங்க மனதில நிறையவே கேள்விகள் ஓடும். அதற்கு நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு கேட்கலாமா?

    நம்ம இயேசப்பாவை வேதனைபடுத்த மட்டும் அவன் அந்த கேள்வியை கேட்கலை குட்டிகளா. நம்ம இயேசப்பா இந்த உலகத்திற்கு ஒரு மனிதனா வந்து, நம்ம பிதாப்பா சொன்ன எல்லா காரியங்களையும்(கடிந்து கொள்ள நம்ம பிதாப்பா கட்டளை கொடுத்தவங்களை நம்ம இயேசப்பா கடிந்து கொண்டாங்க, தன்னுடைய வார்த்தைகளை யாருக்கு கொடுக்க சொன்னாங்களோ அவங்களுக்கு நம்ம பிதாப்பா வார்த்தைகளை கொடுத்தாங்க, யாருக்கு அற்புதமும், அதிசயமும் நம்ம பிதாப்பா செய்ய சொன்னாங்களோ அவங்களுக்கு அதிசயங்களை செய்தாங்க……தேவ அடையாளத்தை மட்டும் தேடினவங்களுக்கு என்றும் நம்ம இயேசப்பா புதிரா இருந்தாங்க) நிறைவேற்றி அடுத்து 2013 வருசங்கள் கழித்து வாழ்ந்திட்டிருக்கிற நமக்காகவும், நாம செய்த தப்பிதங்களுக்காவும் ஏற்கனவே தண்டனையை அவர் சிலுவையில ஏற்றுக் கொண்டார் குட்டிகளா. இது நமக்காக நம்ம பிதாப்பா எடுத்த தீர்மானம். இந்த பாவம் நிறைந்த உலகத்தில இருந்து, சாத்தானின் பிடியில இருந்து நம்மளை காப்பாற்ற நம்ம தேவன் நியமித்த நியமனம். அதற்கு நம்ம இயேசப்பா தன்னை முழுமையா ஒப்பு கொடுத்தாங்க.

    உங்களால் ஒரு விஷயம் சொல்ல முடியுமா குட்டிகளா? இந்த உலகத்தை ரொம்பவே அழகாக நம்ம பிதாப்பா படைத்தது, அதுல தன்னுடைய ஒரே பையனான நம்ம இயேசப்பாவை ராஜாவா இருத்தி ஆள வைக்கிறதுக்காக. ஆனா இந்த உலகத்திற்கு நம்ம இயேசப்பாவை நம்ம பிதாப்பா அனுப்பினது சாகுறதுக்காக. இதை உங்களால ஏற்றுக் கொள்ள முடியுதா குட்டிகளா. நம்ம பிதாப்பா நம்ம மேல வைச்சிருக்கிற அன்பை உங்களால புரிந்து கொள்ள முடியுதா. நம்ம பிதாப்பா நம்ம மேல எந்த அளவுக்கு அன்பானவர்னு சொல்லணும்னா ஒரே ஒரு வசனம் போதும் குட்டிகளா.

    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    யோவான் 3 : 16

    இந்த அளவுக்கு நம்ம மேல அன்பு வைச்சிருக்கிற என்னுடைய பிதாப்பா, இயேசப்பாவின் சிலுவை மரணம் மூலமாதான் எங்களை தன்னுடைய இடத்திற்கு அழைத்து செல்லனுமா? ஏதாவது ஈஸியான வழியில அந்த சாத்தானை தோற்கடிச்சி எங்களை பரலோகத்திற்கு கூட்டிட்டு போயிருக்கலாமேன்னு உங்க மனது கண்டிப்பா கேள்வி கேட்கும்.

    ஆனா நீங்க நினைவில வைக்க வேண்டியது, நம்ம இயேசப்பாவின் சிலுவை பாடுகள் மூலம் மட்டுமே நம்மளால் பரலோகத்தை அடைய முடியும் என்பது நம்ம பிதாப்பா தீர்மானம். இது நம்ம இயேசப்பாக்கும் தெரியும். தெரிந்துதான் இந்த உலகத்திற்கு, அவரை தள்ளி விட்ட தன்னுடைய பிள்ளைகளாகிய நம்மகிட்ட வந்தார். சப்போஸ் இந்த விஷயம் தெரியாமதான் சாத்தான் நம்ம இயேசப்பாகிட்ட இந்த கேள்வியை கேட்டிருப்பானோ?ன்னு உங்க மனது நினைச்சா, சாரி குட்டிகளா மழையில நனையுற ஆடுக்காக ஓநாய் அழுத கதை உங்களுக்கு தெரியுமே. அதுதான் இங்கேயும்.

    அப்ப சாத்தானுக்கும் தெரியுமா இந்த விஷயம்? அப்ப தெரிந்துதான் நம்ம இயேசப்பாகிட்ட கேட்டானா? சப்போஸ் நம்ம இயேசப்பா சிலுவையில பாடுகள் படக் கூடாதுன்னு நல்ல எண்ணத்தில் கேட்டிருக்கலாம்னு நினைச்சாலும், இல்லை குட்டிகளா, அப்படி கேட்க நினைத்தவன், “சாரி இயேசப்பா, உங்களுக்கு விரோதமாகவும், என்னை படைத்த நம்ம பிதாப்பாக்கு விரோதமாகவும் நான் நிறையவே தப்புகள் பண்ணிட்டேன். உம்முடைய பிள்ளைகளை ரொம்பவே கஷ்டப்படுத்தி, அவர்களையும் என்னுடைய நரகத்திற்கே இழுத்துட்டு போயிட்டேன். நான் செய்தது எல்லாம் தப்புதான். எல்லாம் என்னுடைய பொல்லாத பெருமையால வந்தது. இந்த ஒரு விசை மாத்திரம் மன்னிங்க. உங்க பிள்ளைகளை உங்ககிட்டயே நான் கொடுத்திர்றேன்”னு சொல்லி இருப்பானே குட்டிகளா. அப்படி எதுவும் சொல்லாம என்னை முழுமையா பணிந்து கொள்னுதான சொன்னான். அதுனால அவன் பழி வாங்குற எண்ணம் கொஞ்சம் கூட கம்மியாகலைன்னு உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

    அப்ப எதுக்காக நம்ம இயேசப்பாகிட்ட அப்படி சொன்னான் குட்டிகளா? நம்ம பிதாப்பாவை பழி வாங்கறதுக்காகவும், நம்ம இயேசப்பா இந்த பூமிக்கு வந்த வேலையை முடிக்க விடாம தடுக்கறதுக்காகவும். புரியலையா? ஓட்ட பந்தயத்திற்காக இரண்டு பேரு ரொம்பவே கடினமா பயிற்சி எடுத்துட்டு இருந்தாங்க. அப்ப போட்டியில கலந்து கொள்ற ஒருத்தன், மற்றவனை பார்த்து, நமக்குள்ள எதற்கு போட்டி, நீயே இந்த பதக்கத்தை எடுத்துக்கோன்னு அவன்கிட்ட அந்த பதக்கத்தை கொடுத்தா உங்களுக்கு என்ன நினைக்க தோணும்?

    ரொம்ப நல்லவன்னு நினைப்பீங்களா? இல்லை பைத்தியம்னு நினைப்பீங்களா? ஆனா அந்த ஒருத்தன் சாத்தானா இருந்தா, கண்டிப்பா நீங்களும் சொல்லுவீங்க, கண்டிப்பா பைத்தியமாதான் இருப்பான்னு.

    இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா, ஏன்னா நாமளும் நம்ம தேவனுடைய காரியங்களில் நுழையும் போது அவன் கொடுத்த தொந்தரவை கண்ணார பார்த்தவங்கதானே. அப்ப சாத்தானை நம்ம இயேசப்பா சோதனைக்காரன் மட்டும் சொல்லியிருக்க கூடாது, காரியங்களை தடுத்து நிறுத்த முயற்சி பண்ணுகிறவன்னு பேர் வைச்சிருக்கணும். சரியா குட்டிகளா.

    தேவ காரியங்களில் நுழையும் போது தடுக்கறது மட்டுமில்லை, தேவையில்லாத பக்க வழிகளை(அதாவது தேவன் அனுமதிக்காதது)யும் காண்பிக்கவும் செய்வான் குட்டிகளா. உங்களால் புரிந்து கொள்ள முடியுதா? நம்ம இயேசப்பா இந்த உலகத்தை, அதாவது சாத்தான் ஆதிக்கம் செலுத்துற இந்த உலகத்தை வாங்கணும்னா கண்டிப்பா சிலுவை பாடுகள் மட்டுமே என்பது தேவ நியதி. அதை மாற்றி தேவன் அனுமதிக்காத குறுக்கு வழியை சாத்தான் நம்ம இயேசப்பாகிட்ட காண்பிச்சான்.

    ஆனா நம்ம இயேசப்பா சொன்னாங்க,”அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக”ன்னு. ஆனா ஏன் நம்ம இயேசப்பா இவ்வளவு கோபமா அவனை கடிந்து கொண்டாங்கன்னு அவர்கிட்டேயே அடுத்த முறை கேட்டு தெரிந்து கொள்ளலாமா?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 − two =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>