• வலிமையான ஜெபம்

    Your Kindness title

    வலிமையான ஜெபம் – 1

    நாம ஆராதிக்கிற நம்ம இயேசப்பா எப்படிப்பட்டவர்ன்னு தெரிந்து கொள்ளாம வெறுமனே ஜெபம் என்பதை பத்தி தெரிந்து கொள்ள வேண்டாம்னு எங்களுக்கு தோணுது. நீங்களும் அதைத்தான் யோசிப்பீங்க. நீங்க நம்ம இயேசப்பாவை நல்லா தெரிந்து வைச்சிருந்தாலும் இன்னும் நல்லா தெரிந்து கொள்ளலாமே.
    நம்ம இயேசப்பா பற்றி நாம தெரிந்து கொள்ளணும்னு நாம ஆசைபட்டா புதிய ஏற்பாடுல இருந்து இல்லை குட்டிகளா, பழைய ஏற்பாடுல ஆதியாகமம் முதல் அதிகாரத்தில இருந்துதான் நீங்க ஆரம்பிக்கணும். உண்மையாகவான்னு நீங்க ஆச்சர்யப்படுறீங்களா?

    redmr

    Your Kindness title

    வலிமையான ஜெபம் – 2

    நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின விதமும்(ஆதியாகமம் 1,2 ம் அதிகாரங்கள்), நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின நேரம் நம்ம இயேசப்பா எந்த அளவு சந்தோசப்பட்டாங்க(நீதிமொழிகள் 8 : 22 – 31) என்பதையும் நீங்க நல்லா தெரிந்து வைச்சிருப்பீங்க குட்டிகளா. உங்ககிட்ட ஒரு சின்ன கேள்வி கேட்கலாமா ?
    நம்ம பிதாப்பா தான் உலகத்தை உருவாக்கின விதத்தை குறித்து ஒரு தேவ மனிதர்கிட்ட ரொம்பவே விளக்கமா பைபிள்ல ஒரு புத்தகத்தில் சொல்லியிருக்காங்க. நம்ம பைபிள்ல அது எந்த புத்தகம்னு சொல்ல முடியுமா குட்டிகளா? அந்த தேவ மனிதர் யார்னு சொல்ல முடியுமா?

    redmr

    Your Kindness title

    வலிமையான ஜெபம் – 3

    உங்களுடைய ஜெப வாழ்க்கை நம்ம தேவனுக்குள்ள எப்படி இருக்கு குட்டிகளா? இப்ப நம்ம தேவனுக்கு நன்றிகள் ஜெபத்தில சொல்லறது உங்களுக்கு எந்த அளவு பிடிச்சிருக்கு குட்டிகளா?
    சில பேரு உங்களுக்குள்ள எனக்கு என்னுடைய இயேசப்பா என்ன செய்து கொடுத்திருக்காங்க? நான் ஏன் அவருக்கு நன்றிகள் சொல்லணும்?ன்னு உங்க மனதில கேள்விகள் கேட்கலாம் குட்டிகளா. உங்க கேள்விகள் ரொம்பவே நியாயமானதா உங்களுக்கு தோணலாம்.
    உங்க கேள்விக்கான காரணம், உங்களுடைய வாழ்கையில நீங்க நினைத்த அளவுக்கு உங்ககிட்ட மாற்றம் வராம இருந்திருக்கும். இல்லை உங்களுக்கு வேணும்ன்னு நினைக்கிற சில விசயங்கள் இன்னும் உங்களுக்கு கிடைக்காம சில ஏமாற்றங்களை நீங்க சந்திச்சிருக்கலாம்.

    redmr

    One thought on “வலிமையான ஜெபம்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    7 × = forty nine

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>