• இயேசு கிறிஸ்து யார்?(24)

    எங்கே சுதந்திரம்?

    jesus24

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க அவருடைய அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.

    உங்க வேத வாசிப்பு எப்படி போயிட்டிருக்கு குட்டிகளா? நம்ம குற்ற மனசாட்சியோட நாம ஓடுறதை காட்டிலும், அவர்கிட்ட சாரி சொல்லிட்டு அவர் மார்பில சாய்ந்து இளைப்பாறுதல் அடையுற அந்த சந்தோசத்தை(நம்ம சந்தோசத்தை) தான் நம்ம தேவன் எதிர்பார்க்கிறார். இத்தனை விசயங்களையும் உங்களுக்கு நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்த போது, உங்களுக்கு ரொம்பவே மன ஆறுதலை கொடுத்திருக்கும்னு நாங்க நம்புறோம் குட்டிகளா. நம்முடைய பாவங்கள் எப்படிப்பட்ட செவரென்றிருந்தாலும், அதை வெண்மையாக்க நம்ம இயேசப்பாவால்தான் முடியும். அவருடைய இரத்ததினால, அவர் நம்மளை நேசிக்கிற நேசத்தினால்தான் முடியும். அது மட்டுமில்ல குட்டிகளா, இந்த உலகத்தில உள்ள யார்கிட்டயாவது நாம சாரி கேட்டா என்ன நடக்கும்னு உங்களால் சொல்ல முடியுமா? அவங்க அடுத்து நம்மளை எந்த நேரத்தில, எப்ப நாம தப்பு பண்ணிருவோமான்னு ஒரு பதட்டதலயோ/ தேவையில்லாத கோபங்களோட பார்க்கும் போது, நாம செய்த தப்புகளின் வேதனை நம்மளை இன்னும் மோசமா குத்தும் குட்டிகளா.

    உண்மைதான்னு நீங்க சொல்ல ஆசைபடுறது எங்களுக்கு புரியுது. அந்த மாதிரி ஒரு குற்ற மனசாட்சியோட இன்னும் வேதனைப்படுகிறதை காட்டிலும், நம்ம இயேசப்பா மார்பில சாய்ந்து இளைப்பாறுதல் அடையுறது எத்தனையோ உத்தமம். ஏன் நம்ம இயேசப்பா நம்மளை தப்பு பண்ணிருவோமான்னு கோபத்தில பார்க்க மாட்டாங்களா?னு கேள்வி கேட்க நினைக்கிறீங்க, சரியா?

    யூதாஸ்காரியோத்தை பற்றி நம்ம இயேசப்பா நமக்கு ஏற்கனவே சொல்லியிருக்காங்க குட்டிகளா. அவன் தன்னுடைய கடைசி நிமிசத்தில, நம்ம இயேசப்பாவை காட்டி கொடுக்கிற நேரம் கூட, சிநேகிதனேன்னுதான சொன்னாங்க. அவனுடைய இருப்பிடம் நம்ம இயேசப்பாக்கு தெரிந்த விஷயம்தான். நரகம். ஏன்னா கேட்டின் மகன் கெட்டு போனானேயன்றி நீங்க கொடுத்த ஒரு பிள்ளைகளை கூட நான் இழக்கலைன்னு பிதாப்பாகிட்ட சொல்லியிருப்பாங்க. நம்ம தேவனுக்கு எல்லா விசயங்களும் ஏன் நம்ம மனதில நினைக்க போறோம்னு கூட தெரியும். ஆனா தன்னுடைய சீசர்களில் ஒருத்தன் நரகத்திற்காக எழுதப்பட்ட போது, நம்ம இயேசப்பா மனம் ரொம்பவே உடைந்திருக்கும், அப்படிதான. ஆனாலும், அவன் கூட நம்ம இயேசப்பா இருந்த கடைசி நிமிஷம் கூட அவன் மேல கோபப்பட்டதாகவோ இல்லை சபிச்சதாகாவோ எழுதப்படலை.

    அதனால கண்டிப்பா நீங்க கவலைப்பட அவசியம் இல்லை. என்னை இயேசப்பா தப்பா யோசித்திருவாங்களோன்னோ இல்லை ஏன் இப்படி தப்பு செய்திட்டியேன்னு கோபமா பார்பாங்களோன்னு கூட பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நீங்க எந்த பயமும் இல்லாம, எந்த ஒரு குற்ற மனசாட்சியும் இல்லாம, அவர் மார்பில சாய்ந்து கொள்ளலாம் குட்டிகளா. இப்பதான் உங்க முகத்தில சந்தோசம் தெரியுது, தேங்க்ஸ்.

    இந்த நிமிஷம் வரைக்கும், நம்ம இயேசப்பா நம்மகிட்ட நாம அவர்கிட்ட எப்படி வரணும்னு சொல்லி கொடுத்தாங்க. ஆனா அப்படி நம்ம இயேசப்பாகிட்ட வருகிறதுக்கு ஏதாவது சிறப்பான குணங்கள் நம்மகிட்ட இருக்கணுமான்னு நீங்க யோசிக்கலாம். நம்ம இயேசப்பா நம்மளை அவர்கிட்ட வரும் போது எந்த ஒரு கிப்ட்டோ, இல்லை விலையுயர்ந்த பொருட்களையோ நாம அவருக்கு கொடுக்கணும்னு எதிர்பார்க்கலை குட்டிகளா. ஏன்னா நாம அவருடைய செல்ல பிள்ளைகள். இந்த உலகத்தில இருக்கிற நாம்தான், நம்மளுக்கு மற்றவங்க என்ன தருவாங்க, நாம மற்றவங்களுக்கு என்ன தரணும்னு, தேவையில்லாத கணக்குகளோட ஓட வேண்டியதிருக்கும். ஆனா நம்ம இயேசப்பா, இந்த உலகத்தையே படைத்த தேவனுடைய ஒரே குமாரன் நம்மகிட்ட எதிர்பார்கிறது ஒரே ஒரே காரியம்தான். நாம எப்படி இருக்கிறோமோ அப்படியே அவர்கிட்ட வந்தா போதும்னு தான் அவர் நினைக்கிறார். ஏன் எதிர்பார்க்கிறார்னு கூட சொல்லலாம்.

    சப்போஸ் நீங்க நினைக்கலாம், நீங்க நம்ம இயேசப்பாவை ஒரு சூப்பர் ஸ்டாரா, எங்க மனதில பதிய வைக்கிறதுக்குதான், இந்த மாதிரி எல்லாம் சொல்லுறீங்க. நான் பிறந்ததில இருந்து ஒரு கிறிஸ்தவன் தான். பைபிளை எனக்கு தெரிந்த வரைக்கும் இது வரைக்கும், முழுமையா நிறைய முறை  வாசித்திருக்கேன். ஆனா இது வரைக்கும் நீங்க சொல்லுற மாதிரியோ இல்லை நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொல்ல நினைக்கிற மாதிரியோ உணர்ந்தது இல்லை.

    ஏன் இஸ்ரவேல் மக்களை தன்னுடைய சொந்த ஜனமா பிரித்தெடுத்து, கானான் நாட்டிற்கு கூட்டிட்டு போன நேரம் கூட, மோசே மூலமா 1௦ கட்டளைகளையும், நிறைய நியாய பிரமாணங்களை கொடுத்தவர் தான நம்ம தேவன். அவங்க அதற்கு கீழ்படிந்தாங்க இல்லை கீழ்படியலை, அதெல்லாம் இரண்டாவது காரியம். ஆனா நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகள் செய்ய வேண்டிய விஷயங்கள்தான கொடுத்தாங்க. அது மட்டுமில்ல நம்ம இயேசப்பா கூட இந்த உலகத்தில இருந்த போது, என் வார்த்தையின் படி நடக்கிறவன்தான், கன்மலையின் மேல் வீட்டு கட்டினவன். ஆனா அப்படி என் பேச்சுக்கு கீழ்படியாதவன் தரையின் மேல வீடு கட்டினதுக்கு சமானம். வெள்ளம் வந்தா விழுந்து போயிருவோம்னு நிறைய எச்சரிக்கை செய்திருப்பாங்க.

    அப்ப அன்பாகவே இருக்கிற நம்ம பிதப்பாவா இருந்தாலும், நமக்காக சிலுவையில இரத்தம் சிந்தின இயேசப்பாவா இருந்தாலும், இப்படித்தான் இருக்கணும்னு 1௦௦௦ கண்டிஷன்ஸ் போடுறது உண்மைதான. இப்படி இருக்கும் போது, எங்களால் எப்படி சுதந்திரமா இருக்க முடியும்? அவர் வார்த்தையின்படி செவி கொடுக்கலன்னா அவருடைய கோபத்தை வாங்க வேண்டியதா போயிருமே, அப்ப இது கூட எங்க கைல விலங்கு போடுற மாதிரிதான். அப்ப எங்க சுதந்திரம் எங்க? எங்களுடைய மகிழ்ச்சியும் எங்கே ன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?

    இந்த வழியில போகாத? அங்க போகாத………இப்படி இரு, அப்படி நடன்னு 1௦௦௦ கண்டிஷன்ஸ் போட்டுட்டு, நான் உன் மேல அன்பா இருக்கேன்னு சொன்னா அதற்கு எப்படி கீழ்படிய முடியும்? எங்க வீட்டுல இருக்கிறவங்கலையே அதனாலதான் கண்டுக்காம போயிட்டிருக்கோம், நம்ம இயேசப்பாவை அப்ப எந்த வகையில நான் கணக்கெடுக்க?ன்னு நீங்க யோசிக்கிறது புரியுது.

    பொல்லாத சோம்பேறியே, உன் நடக்கைகளை திருத்தி கொள், எறும்பானது அற்பமான ஜந்துவாய் இருந்தும், கோடை காலத்திற்கு தேவையான தன்னுடைய இரையை சேர்த்து வைக்கிறது. ஆனா இன்னும் கொஞ்சம் கை முடக்கி கொண்டு தூங்கட்டும்னு எத்தனை நாள் தூங்கிட்டிருப்போம்னு நம்ம இயேசப்பா நம்மளை கோபமாகவே கேட்குறாங்க குட்டிஸ். ரொம்பவே நீங்க வேதனைப்படுறது எங்களுக்கும் புரியுது. ஆனா நம்ம இயேசப்பா உங்ககிட்ட பேச வருகிறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க குட்டிகளா.

    நம்ம இயேசப்பா இந்த அளவு என் பேச்சை கேளுங்கன்னு சொல்லுறது, இந்த உலகத்தில என் பிள்ளைகளை பார்த்தீங்களா, என்ன ஒரு அழகு, என்ன ஒரு நல்ல நடத்தை, என்ன ஒரு அன்புன்னு மற்றவங்ககிட்ட பெருமை பேசுறதுக்காகவா, இதையெல்லாம் செய்ய சொல்லுறாங்க குட்டிகளா?. நாம என்றும் நித்திய பரலோகத்தில சந்தோசமா அவர் பக்கத்தில இருக்கணும்னு சொல்லிதான எல்லாம் சொல்லியிருக்காங்க. அது மட்டுமா இந்த உலகத்தில நாம நினைச்சிட்டு இருக்கிற பொல்லாத சந்தோசங்கள் எப்படி கடைசியில ஒரு மன குழப்பத்தில கொண்டு போய் சேர்க்கிறதோ, அதே மாதிரிதான் நீங்க கட்டுகள், என் கையில போடப்பட்டிருக்கிற விலங்குன்னு நம்ம இயேசப்பா சொன்ன வார்த்தைகளை சொல்லுறீங்களோ, அது உண்மையில் உங்களை முழுக்க முழுக்க சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிறதுன்னும் ஒரு நாள்  தெரிந்து கொள்ளுவீங்க குட்டிஸ்.

    அதனால தேவையில்லாத நம்ம உலக கற்பனைகளை தூர எறிந்திட்டு, நம்ம இயேசப்பா நம்மகிட்ட தன்னுடைய வார்த்தைகளை பற்றி என்ன சொல்லுறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமே? ப்ளீஸ்……..

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    six − = 3

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>