• இயேசு கிறிஸ்து யார்?(15)

    உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொள்

    jesus15

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.

    நம்ம இயேசப்பாவை சாத்தான் தன்னுடைய கால்ல விழ வைக்க ரொம்பவே பிரயாசம் எடுத்த நிகழ்ச்சியை பற்றி அவர் நமக்கு சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க. எந்த காரியத்தை காண்பிச்சி, நம்ம இயேசப்பாவை அவன் தலை குனிய வைக்க நினைச்சான் என்பது உங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும் குட்டிகளா.

    அவன் நம்ம இயேசப்பாகிட்ட தன்னை பணிந்து கொள்னு சொன்ன காரியம் ரொம்பவே கோபத்தை கொடுத்திருந்தாலும், நம்ம இயேசப்பாவை அவன் சிலுவையில பாடுகள் படாத வண்ணம் காக்க நினைச்ச விஷயம் உங்களுக்கு கண்டிப்பா ஆச்சர்யத்தை கொடுத்திருக்கும் குட்டிகளா.

    ஆனா அதை நல்ல எண்ணத்தில் அவன் சொல்லலைன்னு இதன் மூலமா நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொல்ல ஆசைபடுறாங்க. நம்ம இயேசப்பா தன்னுடைய உயிரை நமக்காக சிலுவையில கொடுக்கணும் என்பது பிதாப்பா தீர்மானம். அதை மாற்றி அமைக்க யாராலும் கூடாது. அப்ப ஏன் அந்த சாத்தான் அதை செய்ய நினைச்சான் குட்டிகளா, எங்களுக்கு சொல்ல முடியுமா?

    நம்ம பிதாப்பா என்ன சொன்னாலும், எதை செய்தாலும் அதை மாற்றி செய்யணும், அதை நடக்க விடாம தடுக்கணும் என்பதுதான அவன் எண்ணம். அன்னைக்கி ஆதாம், ஏவாளை ஏதேன் தோட்டத்தில சந்தோசமா இருக்க வைச்ச அவருடைய சந்தோசத்தை முழுமையா சாத்தான் கெடுத்தான். என்னுடைய பிதாப்பா அழகாக பார்த்து பார்த்து செய்த உலகத்தை அவரே வெறுத்து மழையால் அழிக்கிற வண்ணம் எல்லாரையும், கெட்டவர்களா மாற்றினான்.

    அடுத்து அவர் வான வில் மூலமா அவர் தன்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்திட்டார் தெரிந்ததும், தன்னுடைய அப்பா(நோவா) மூலமாகவே, அவருடைய பையனுக்கு(காம்) சாபம் கொடுக்க வைத்தான். ஒருத்தர் கூட நம்ம பிதாப்பாவை பற்றி தெரியாம இருக்க வைச்சான். ஆனா அப்படியிருந்தும் நம்ம பிதாப்பா அழைத்த ஆபிரகாமின் வாழ்க்கையில் கூட  என்றும் அவர் குடும்பத்திலும் அவங்க சண்டை போட்டுக்குற மாதிரி ஈசாக்குக்கு விரோதமா இஸ்மவேலை எழும்ப பண்ணினான். அது மட்டுமா, இப்படி எத்தனையோ வகைகளில் நம்ம பிதாப்பா தன்னுடைய பிள்ளைகள்கிட்ட பாசம் காண்பிக்க முடியாத வண்ணம் ஒவ்வொரு முறையும் பிரச்சனையையும், அவருக்கு வேதனையையும் கொடுக்க தெரிந்தவன்தானே இந்த சாத்தான்.

    இப்ப மட்டும் எப்படி அவருடைய பிள்ளைகளாகிய நாங்க அவர் கூட என்றும் சந்தோசமா, அவர் பக்கத்தில இருக்க விரும்புவான். எங்களை காப்பாற்றுகிறதுக்காக இந்த உலகத்திற்கு வந்த என்னுடைய இயேசப்பாவை கூட ஏரோது ராஜா மூலமா கொலை செய்ய பார்த்தவன்தானே. சப்போஸ் என்னுடைய பிதாப்பா மட்டும், யோசேப்பு கனவில சொல்லி எகிப்துக்கு போக சொல்லாம இருந்தா என்ன ஆகியிருக்கும். எங்க இயேசப்பா எங்களுக்காக தன்னுடைய பையனையே கொடுக்க முன் வந்திருந்தும், அதற்காக என்னுடைய இயேசப்பா தன்னையே கொடுக்க முன் வந்தும், நாங்க நல்லா இருக்கத்தான் அவனுக்கு பிடிக்குமா? அதுனால தான் என்னுடைய இயேசப்பாவை இப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கான். ஆனா என்னை அப்படியே விரும்புற என்னுடைய பிதாப்பா நேசத்தையும், என் இயேசப்பாவையும் எத்தனையோ தூரம் மறந்திட்டு, என்னை நரகத்தில அழிக்க நினைக்கிற அவன்கிட்டதான இது வரைக்கும் நான் அடிமையா இருந்தேன். அந்த சாத்தானை நான் திட்டி என்ன ஆக போகுது எனக்கு?   

    இது வரைக்கும் நீங்க சாத்தானை பற்றி தெரிந்து வைத்திருப்பதற்காக ரொம்ப தேங்க்ஸ் குட்டிகளா. ஆனா நமக்கு இன்னும் நமது இயேசப்பாவின் காக்கும் கரங்கள் உண்டு. அதுனால நான் தப்பு பண்ணிட்டேனே…..தப்பு பண்ணிட்டேனே…ன்னு புலம்புறதை விட நம்மளை நேசிக்கிற நம்ம இயேசப்பாவை இனிமேலாவது அப்பான்னு உரிமையோட கூப்பிடலாமே. அதற்காகதான் நம்ம அம்மா கருவில நாம இருந்த அந்த நாள்ல இருந்து காத்திருக்காரே குட்டிகளா. நம்மளை பார்த்ததும் எவ்வளவு சந்தோசப்படுவாங்க நம்ம இயேசப்பா.

    சாத்தானை இந்த அளவுக்கு நீங்க தெரிந்து வைச்சிருக்கிறதினால, நம்ம இயேசப்பா நமக்காக உயிர் கொடுத்து நம்மளை காப்பாற்ற  நினைக்கிற அந்த காரியத்தை தடுத்து நிறுத்தத்தான் அவன் நம்ம இயேசப்பாகிட்ட நானே உலகத்தை தந்திர்றேன்னு சொல்லி இருப்பான்னு நம்ம இயேசப்பா சொல்லுவதற்கு முன்னாடியே நீங்க உங்க மனதில புரிந்திருப்பீங்க குட்டிகளா.

    நம்மளுடைய வாழ்க்கையிலும் அப்படித்தான குட்டிகளா. நாம எந்த  ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிச்சாலும், அதை தடுத்து நிறுத்துறது மட்டுமில்லை. அதை விட வேறே நல்ல காரியத்தை காண்பிக்கிறேன்னு சொல்லி எத்தனை தடவை நம்மளை ஒரு மோசமான வழியில அவன் நடத்தினதை நீங்களும் பார்த்திருப்பீங்களே. நம்ம வாழ்கையில இப்படிப்பட்ட எத்தனை காரியங்கள் நடந்திருக்கும்? ஆனா அப்ப, இயேசப்பா நீங்க சொன்னீங்கன்னு தான் ஆரம்பிச்சேன், ஆனா தேவையில்லாம ஏன் நீங்க  அனுமதிக்காத விசயத்தில விழுந்து போனேன். சொல்லுங்கப்பா, எப்படி விழுந்து போனேன்?

    இதை நாம நம்ம பலவீனங்கள்னு நினைச்சி, இனி அடுத்த தடவை இந்த மாதிரி வராம இயேசப்பா என்ன சொல்லுராங்களோ, அது படிதான் செய்யணும்னு ஆயிரக்கணக்கில் திட்டங்கள் போடுவோம். ஆனா அடுத்த முறையும் தவறு வந்துட்டா திரும்பவும் நமக்குள்ள புலம்ப ஆரம்பிச்சிருவோம். அப்படிதானே குட்டிகளா.

    இது சாத்தானின் சதி திட்டம்னு நம்மளால் புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு அவன் மாறி மாறி நம்மளை குழப்பறதுனால, ரொம்பவே பலவீனமாகி நாமளும், எலியா மாதிரி போதும் ஆண்டவரே, நான் ஒண்ணும் சரியானவன்/சரியானவள் கிடையாது. என்னை எடுத்துக்கோங்கன்னு புலம்ப வைப்பான். இல்லை உங்களுக்காக தானப்பா எல்லாத்தையும் செய்தேன். ஆனா நீங்க எனக்கு ஒண்ணும் உதவி செய்ய வரலையே. இனி நான் உங்க மேல அன்பு வைச்சி என்ன ஆக போகுது? அவ்வளவுதான். அப்படின்னு அவர்கிட்ட நம்மளை முற்றிலும் விலக வைச்சிருவான் குட்டிகளா.

    இப்ப புரியுதா குட்டிகளா, சாத்தான் நம்மளை அவர்கிட்ட சேர முடியாத வண்ணம், தன்னுடைய வழிகளை எப்படி மாற்றி மாற்றி ஒரு பைத்தியமா ஆக்க பார்க்குறான்னு.

    அப்ப இதற்கு முடிவில்லையான்னு உங்க மனது கதறுவது நம்ம இயேசப்பாக்கு புரியும் குட்டிகளா.

    சாத்தானுடைய வழிகளை விட்டு நாம தூர வருகிறதும், நம்ம இயேசப்பா வசனங்களை விட்டு நீங்காம இருக்கிறதும் மட்டும்தான் சாத்தான் நம்மளை வஞ்சிக்க முடியாம காத்து கொள்ளுகிற காரியம்.

    இது வரை நம்ம இயேசப்பா சாத்தானின் இரண்டு கேள்விகள் மூலமா வந்த அவன் வஞ்சகத்தை தேவ வார்த்தைகளால் மட்டுமே முறியடிக்க முடியும்னு நமக்கு சொல்லி கொடுத்தாங்க. ஆனா இதுல, வசனங்கள் கூட செவி கொடுக்கணும் என்கிற வார்த்தையையும் சேர்த்திட்டாங்களேன்னு தோணுதா?    

    யெஸ் குட்டிகளா, உங்களுக்கு நம்ம இயேசப்பாகிட்ட prayer பண்ணற பழக்கம் உண்டா. ஏன் எப்படி கேட்குறீங்கன்னு நீங்க நினைக்கலாம் குட்டிகளா. காலையில அவசரத்திலயோ இல்லை நைட் தூக்கத்திலயோ கடமைக்காக செய்றதுக்கு பேர் prayer கிடையாது. உங்களை கஷ்டப்படுத்துறதுக்காக இதை சொல்லலை. உண்மையில நமக்கு நம்ம இயேசப்பாகிட்ட நாம prayer பண்றதால ஏற்படுற அசைவுகள் புரியலை. என்னது அசைவுகளா…..சாத்தானின் தந்திரங்களை மட்டுமில்ல குட்டிகளா, அவனது ராஜ்யத்தையே(அவனா உருவாக்கின உலகத்தை). ஆனா இப்படிப்பட்ட அற்புதத்தை உங்களுடைய பார்மாலிட்டி prayerலா உண்டாக்க முடியாது. அப்ப நாங்களும் ஊழியர்கள் செய்கிற மாதிரி உபவாசம் பண்ணி, அந்நிய பாஷை பேசினா தான் இது நடக்குமான்னு கேட்க ஆசைபடுறீங்க, சரியா?

    இதற்காக நீங்க இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டியதில்லை. எப்படி நம்ம இயேசப்பா பைபிள் படிக்கிற காரியத்தில(ஆழமான வாசிப்பு, நுனி புல் மேயுறது கிடையாது), உண்மையா இருக்க சொல்லி கொடுத்தாங்களோ அதை மாதிரிதான் இதலயும் உண்மையை மட்டும் நம்ம இயேசப்பா எதிர்பார்க்கிறாங்க. உங்களுக்கு புரிந்திருக்கும்னு நம்புறோம். நம்ம  இயேசப்பாகிட்ட ஜெபம் பண்ணறது என்பது, உங்க மனம் திறந்து பேசுறது. மனம் திறந்துன்னா…..உங்களுக்கு தெரியும். உங்க இருதயத்தின் ஆழங்களை தெரிந்த தேவன் கிட்ட உங்களால் எதையும் மறைக்க முடியாதது மட்டுமில்ல, உங்களை பற்றி அப்படியே சொல்லுறது. முதல்ல ஒரு நண்பன் மாதிரி உங்களை பற்றிய காரியங்களை அவர்கிட்ட ஜெப நேரத்தில் சொல்லி பாருங்க.

    அடுத்து அவர் உங்களுக்கு சொல்லி கொடுப்பார், உங்க வாழ்க்கை காரியங்களை நீங்க எப்படி செய்யணுமுன்னு. அதற்கு நீங்க கவனமா செவி கொடுத்தா போதும் குட்டிகளா. ஒழுங்கான வேத வாசிப்பும், நம்ம இயேசப்பாகிட்ட பேசுற பேச்சிலும், அவர் வார்த்தைக்கு செவி கொடுக்கிறதிலயும் சோம்பேறித்தனம் இல்லாம இருந்தா சாத்தானின் வழிகளில் இருந்து தூரம் போக வேண்டிய விசயங்களுக்கு தேவையான பலத்தை அவரே நமக்கு தருவார் குட்டிகளா. ஏன்னா நம்மளால் நம்ம பலத்தை வைச்சி அவனுடைய வழிகளில் இருந்து விலகி வர முடியாதுன்னு நம்ம இயேசப்பாக்கு நல்லாவே தெரியும். சாத்தானின் தந்திரங்களை நம்ம இயேசப்பா எப்படி விரட்டி அடிச்சாரோ, அதை மாதிரி நாமும் அவர் சேனை வீரர்களா இருந்து அவன் ராஜ்யத்தை உடைத்து எறியலாம்.

    இப்ப நாம நம்ம இயேசப்பா அவனுடைய மூன்றாவது கேள்விக்கு சொன்ன பதிலை தெரிந்து கொள்ளுவோமா?

    அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக”ன்னு நம்ம இயேசப்பா தன்னை மிரட்டின சாத்தான்கிட்ட சொன்னாங்க.

    அப்பாலே போ சாத்தானே, அதாவது சாத்தான் வழிகளில் இருந்து தூர வரணும் மட்டுமில்ல முதலில் அவனை எதிர்த்து நிற்கணும் என்கிற எண்ணம் நம்ம தேவனை ருசி பார்த்திட்டா தானா வந்துரும் குட்டிகளா. அதற்கு(நம்ம தேவனை ருசிக்க) ஜெபமும், வேத வாசிப்பும் மட்டும்தான் முக்கியமான தேவை.

    உன் தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாகன்னா “யாருடைய வார்த்தைக்கு நீங்க செவி கொடுக்குறீங்களோ, யாருக்கு உங்க வாழ்கையில முதல் இடத்தை தந்திருக்கீங்களோ, அவரைத்தான் நீங்க பணிந்து கொள்ளுறீங்க, ஆராதனை செய்யுறீங்கன்னு அர்த்தம். அது உங்களுக்கு உங்க வேத வாசிப்பும், ஜெபமும் கற்றுக் கொடுக்கும் குட்டிகளா. அதுனால நம்ம இயேசப்பாவுடைய சமூகத்தில இன்றைக்கே உட்கார்ந்து கற்றுக் கொள்வோமா?

    இப்ப கேள்வி பகுதிக்கு போகலாமா?

    சாத்தானின் எப்படிப்பட்ட தந்திரமா இருந்தாலும், நம்ம தேவனை கூப்பிடறதையும், அவர் நமக்கு கொடுத்த வார்த்தைகளையும் என்றும் மறந்திர கூடாதுன்னு நம்ம இயேசப்பா நமக்கு அழகாவே சொல்லி கொடுத்திருக்காங்க, அப்படிதான குட்டிகளா. அப்ப நம்ம இயேசப்பா ஏன் சிலுவையில பாடுகள் அனுபவிக்கும் போது, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்ன்னு சத்தமிட்டு கூப்பிட்டாங்கன்னு எங்களுக்கு சொல்ல முடியுமா குட்டிஸ்?(சாத்தானின் எந்த தந்திரமா இருந்தாலும் அவனுக்கு எதிர்த்து நிற்கணும்னு நம்ம இயேசப்பாக்கு தெரியுமே, அப்ப நம்ம இயேசப்பா சிலுவை பாடுகளை பார்த்து பயந்துட்டாங்களோன்னு தோணுதா!!!!!!!!!)

    கேள்விக்கான பதிலை leave a reply மூலமா அனுப்பி வைங்க. பதிலை தயவு செய்து விளக்கமா எங்களுக்கு எழுதி அனுப்புங்க.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × five = 45

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>