• இயேசு கிறிஸ்து யார்?(34)

    பாக்கியவான்கள்

    jesus34

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவன் ஏவாளுக்கு கொடுத்த தண்டனையை பற்றி தெரிந்து கொண்டப்ப என்ன நினைச்சீங்க குட்டிகளா? நம்ம தேவன் தன்னுடைய வேதனையைத்தான் ஏவாளுக்கு புரிய வைச்சிருக்காங்க. ரொம்பவே மோசமா ஒண்ணும் அவங்களை தண்டிக்கலை. சொல்லப் போனா, என் தேவன் ஏவாள் செய்த தப்பால், மனம் நொந்ததை காட்டிலும், ரொம்பவே கம்மியாதான் அனுபவிச்சிருக்காங்க.

    இந்த எண்ணங்கள் உங்க மனதில ஓடினா நம்ம தேவன் நம்மளை எதற்காக கடிந்து கொள்ளுகிறார் என்கிற காரியமும், உங்களுக்கு சந்தோசத்தை மட்டும்தான் கொடுக்கும். புலம்பலையோ இல்லை நிர்விசாரத்தையோ கொடுக்காது.

    உங்களால் புரிந்து கொள்ள கஷ்டமா இருந்தாலும், இதுதான் உண்மை குட்டிகளா. ஏவாள் செய்த தப்பு என்னதுன்னா உங்களால் சரியா வரிசையா சொல்ல முடியும். அதே மாதிரி ஏவாள் செய்த தப்புகளின் ஒவ்வொரு கட்டத்திலும் எந்த அளவுக்கு நம்ம தேவன் வேதனைப் பட்டார் என்பதும் உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா இந்த புரிந்து கொள்ளுதலுக்கும், அதை ஏற்றுக் கொள்ளுதுலுக்கும் உள்ள இடைவெளி மட்டும்தான் குட்டிகளா, ரொம்பவே அதிகம். அது நம்ம இயேசப்பாவை நாம எந்த அளவுக்கு புரிஞ்சு வைச்சிருக்கோம் என்பதை பொறுத்து இடைவெளி சின்னதா இல்லை பெரிதா என்பதை நாம் தான் தீர்மானிக்கிறோம்.

    இன்னும் உங்களுக்கு புரியுற மாதிரி சொன்னா, ஏவாள் செய்த தப்புக்கு நம்ம தேவன் கொடுத்த தண்டனையும், இழப்புகளும் சரியானதுன்னு நாம வழக்காடினாலும், நமக்குன்னு அந்த கடிந்து கொள்ளுதலோ இல்லை தண்டனைகளோ வரும் போது மட்டும், நம்ம தேவனை திட்ட ஆரம்பிச்சிருவோம், சரியா குட்டிகளா.

    உங்க மனது நம்ம இயேசப்பா சொன்ன இந்த காரியத்தை சரின்னு சொல்ல நினைத்தாலும், அதையும் மீறி நமக்குள் இருக்கிற ஒரு பயம் அதை ஒத்துக்க விடாம தடுக்குது என்பது தான சரி குட்டிகளா. ஐயோ, நான் இப்ப என்னுடைய இயேசப்பா நான் செய்கிற தப்புகளுக்கு தண்டனை கொடுத்தா சரின்னு ஒத்து கொண்டா, அடுத்து எப்ப பார்த்தாலும் அடிகள் வாங்க வேண்டியதா ஆகியிருமோன்னு நம்ம மனது சில உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறக்குது.

    நம்ம இயேசப்பா ஒண்ணும் நியாயம் இல்லாம நம்மளை தண்டிக்கிறவர் கிடையாது. அதுவும் அவர் கொடுக்கிற கடிந்து கொள்ளுதலையோ இல்லை தண்டனைகளையோ அனுபவிக்கிற நாம உண்மையில் பாக்கியவான்கள். உண்மையில் நம்ம இயேசப்பா சொல்லுற காரியம் ரொம்பவே ஆச்சர்யமா இருக்குதா குட்டிகளா……

    நம்ம இயேசப்பா நம்ம கூட மலை பிரசங்கத்தில பாக்கியவான்கள் பற்றி ஏற்கனவே சொல்லி கொடுத்துருக்காங்க. அதுவும் நமக்கு ஆவியில் எளிமை என்பதை பற்றி ரொம்பவே அழகாக சொல்லி கொடுத்தாங்க குட்டிகளா, அப்படிதான. அதுல எத்தனை பேர்களை பற்றி நம்ம இயேசப்பா பாக்கியவான்கள்ன்னு சொல்லி இருப்பாங்க.

    ஆவியில் எளிமையுள்ளவர்கள்

    துயரப்படுகிறவர்கள்

    சாந்தகுணமுள்ளவர்கள்

    நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள்

    இரக்கமுள்ளவர்கள்

    இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

    சமாதானம் பண்ணுகிறவர்கள்

    நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள்

    நம்ம இயேசப்பா நிமித்தம் நிந்திக்கப்பட்டால்

    என்ன குட்டிகளா, எத்தனை பேர்களை பற்றி நம்ம இயேசப்பா பாக்கியவான்கள்ன்னு சொன்னதை எண்ணியாச்சா….உங்களோட நாங்களும் கவுன்ட்டிங்கல கலந்து கொள்ளுகிறோம். ஒண்ணு, இரண்டு……மொத்தம் ஒன்பது, சரியா குட்டிகளா. ஆனா நம்ம நேரம், நம்ம இயேசப்பா சொன்ன பாக்கியவான்கள் பட்டியலில் நாம இன்னும் இடம் பெறலை, அப்படிதான. இதுனால ஏன் நாம கவலைப்படணும் குட்டிகளா. அது மட்டுமில்ல நம்ம இயேசப்பா குறைவுள்ள பாத்திரங்களுக்கு கூட ஏன் பரலோகத்தில இடம் கொடுக்காம போனாங்கன்னு நம்ம மனது ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். ஏன்னா, நம்ம இயேசப்பா சொன்ன 9 பாத்திரங்களும் நிறைவான பாத்திரங்கள் ஆச்சே!!!

    ஆவியில் எளிமைசின்ன குழந்தையை மாதிரி தன்னை தாழ்த்திக் கொள்ளும் நிலைமை

    சாரி, நானும் என்னுடைய இயேசப்பா சொன்ன இந்த நிலையை குறித்துதான் என் இயேசப்பாகிட்ட ஜெபம் பண்ணுறேன். ஆனா இன்னும் நான் அடைந்து கொள்ளலை என்பது தான் உண்மை. ஆனா கண்டிப்பா, எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒரு நாள் நானும் அந்த ரகத்தில் சேருவேன், என் இயேசப்பா அன்பினால்

    துயரப்படுகிறவர்கள்எந்த பாவமும், கறைகளோ காணப்படாம இருந்தும் வேதனைகளை அனுபவிக்கிறவர்கள்

    இதற்கு அவருடைய உண்மையான பிள்ளைகளை பற்றிதான் சொல்லணும். அவங்க நம்ம தேவனால், முழுக்க முழுக்க மாற்றப்பட்டு,  அவருடைய பிள்ளையா மனதில இருந்தும், எந்த ஒரு வாழ்க்கை மாற்றமும் இல்லாம வறுமையிலயோ இல்லை சுத்தி அவங்களை அடிமையா நடத்துற ஆட்கள்கிட்ட இருந்தோ இன்னும் விடுதலை கிடைக்காம அந்த துயரத்திலும் என் இயேசப்பா மேல அன்பு காட்டுற ஒரு அழகான கூட்டம். இந்த உலகத்தில அவங்களுக்கு எத்தனை கஷ்டம் இது வரை இருந்திருந்தாலும், இன்னும் சில துயரங்கள் அவங்களுக்காக காத்துக் கொண்டிருந்தாலும், அவங்க எங்க இயேசப்பா பரலோக ராஜ்யத்தில கண்டிப்பா அவர் அரவணைப்பில ஆறுதல் அடைவார்கள்.

    ஆனா, நான் இப்படியா? எனக்கு எல்லா வகையிலும் என்னுடைய இயேசப்பா ஒரு அழகான சூழ்நிலையை கொடுத்திருக்காங்க. ஆனாலும் என்னுடைய மாம்ச பலவீனங்களால் எத்தனையோ தூரம், என்னுடைய இயேசப்பாவை விட்டு விலகி வந்திருக்கேன். நான்தான் அப்பயே சொன்னனேனே…..என் இயேசப்பாவை துயர நேரத்திலும், அன்பு கூருகிறவர்கள் நிறைவான பாத்திரங்கள்……எல்லாம் நிறைவாய் இருக்கும் போதும் என் தேவனை குறை கூறுகிற நான் குறைவான பாத்திரம்…….

    என்னைக்கி நான் இந்த லிஸ்ட்ல(நிறைவான பாத்திரம்) வர போறேனோ?

    சாந்தகுணமுள்ளவர்கள்எந்த ஒரு சூழ்நிலையா இருந்தாலும் முழுமையா தன்னில் அமைதியா இருக்கிறவங்க.

    நமக்கு ஏற்ற சூழ்நிலை வரும் போது ரொம்பவே அமைதியா, அதை விட ரொம்பவே தேவ பிள்ளைகளா இருக்கிறது ஈஸியான காரியம். ஆனா வெள்ளம் வர்ற நேரங்கள் கூட ஒரு மனுசனால சாந்த குணம் உள்ளவனா இருக்க முடியுமா? கண்டிப்பா அந்த நேரங்களில் கூட ஒருத்தர் தன்னுடைய முகத்தில மட்டும் அல்ல தன் இருதயத்திலயும் சாந்தம் காத்துக் கொள்ளறது முடியாத காரியம். ஆனா ஒருத்தரால முடியும். அது என் இயேசப்பாவை நேசிக்கிற பிள்ளைகளுக்கு. அவங்க எந்த அளவுக்கு என்னுடைய இயேசப்பாவை நேசிக்கிறாங்களோ அந்த அளவுக்கு முழு அமைதியோட, அவர் சித்தம் வெளிப்பட காத்திருக்க முடியும். அவங்க நம்ம இயேசப்பாவால, பரலோகத்தில எடுக்கப்பட்டு, அடுத்து என் இயேசப்பா இந்த பூமியை ஆட்சி செய்யும் போது, அவர்களும் என் இயேசப்பாவோடு பூமியை சுதந்திரிப்பார்கள்ன்னா கண்டிப்பா நடக்கும்.

    ஆனா என் கதையே வேற. என்னை சுத்தி சூழ்நிலைகள் நல்லா இருக்கும் போது, என்னுடைய தேவனை நல்லாவே தேடுற என் மனது, யார் என்னை பற்றி குறை சொன்னாலும், உடல் பலவீனங்கள் வந்தாலும், நான் நினைக்கிற காரியங்களில் ஏமாற்றமோ இல்லை தோல்விகள் வந்தாலோ கண்டிப்பா இருதயத்தில மட்டுமில்ல பேருக்கு கூட முகத்தில  அமைதியை காண்பிக்க முடியாது. அப்படியே ஒரு கோபமோ, சீற்றமோ தோணுமே…..எல்லாரும் பயந்து போயிருவாங்க.

    நான் இந்த லிஸ்டல எப்ப சேர போறேனோ?

    நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள்தேவனுடைய நீதியை நடப்பிப்பதை ரொம்பவே(தான் இன்னைக்கி சாப்பிட வேண்டிய சாப்பாடு, தண்ணீரை விட) ஆவலா நாடுகிறவர்கள்

    நம்ம தேவன் நாம எப்படி இருக்கணும்னு மலை பிரசங்கத்தில நல்லாவே கற்றுக் கொடுத்திருப்பாங்க. அதுல மற்றவங்க முன்னாடி நம்ம இயேசப்பா மேல வைச்ச அன்பினால் தாழ்ந்து போகவும் தெரிந்தவங்களைதான நம்ம இயேசப்பா இங்க சொல்லுறாங்க. நம்மளை அடிக்கிறவங்களுக்கு அடுத்த கன்னத்தை காண்பிக்கிற பழக்கம். தேவையில்லாம நம்ம கூட சண்டை போடுறவங்க கூட நேச கரம் நீட்டுற பழக்கம், எனக்கு, எனக்குன்னு எதையும் யோசிக்காம, மற்றவங்க இதை குறித்து என்ன நினைப்பாங்க, அவங்களுக்கு எது நல்லதா இருக்கும்ன்னு நம்ம இயேசப்பா மேல வைச்ச அன்பினால் கொஞ்சம் கூட சுயம் என்கிற பிரச்சனை எழும்பாம, என்னுடைய இயேசப்பா இதுல என்ன செய்ய ஆசைப்படுவார்ன்னு நம்ம இயேசப்பாவை பற்றி மட்டுமே நினைத்து, அவர் சொன்ன வார்த்தையின் படி நடக்கிறவர்கள். இவர்களை பற்றி சொல்லவே இத்தனை நேரம் ஆகுதே…..அப்ப என் இயேசப்பா மேல வைச்ச அன்பினால் அவர் வார்த்தையின் படி செய்கிற இவர்களை பார்க்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் என் இயேசப்பா கொடுத்தா, என் வாழ்நாள் பத்தாது போல……அவங்க கண்டிப்பா பரலோக ராஜ்யத்தில என் தேவன் அன்பினால் திருப்தி அடைவாங்க.

    எனக்குன்னு ஒரு நீதியை வைத்து கொண்டு, என் இஷ்டத்திற்கு வாழுற எனக்கு, எப்ப என்னுடைய இயேசப்பா வார்த்தை படி வாழுகிற ஒரு பாக்கியமுள்ள வாழ்க்கை கிடைக்க போகுது?

    சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா சொன்ன நாலு நிறைவான பாத்திரங்களை பற்றி தெரிந்து கொண்டப்ப என்ன தோணுச்சு குட்டிகளா. நாங்கதான் ஏற்கனவே எந்த நிலையில இருக்கிறோம்னு ஒவ்வொரு பாக்கியவான்கள் பற்றி அவர் சொல்லும் போது அவருக்கு எங்க இருதயத்தை திறந்து காண்ப்பிச்சிட்டோமேன்னு நீங்க சொல்லுறது புரியுது குட்டிகளா. ஆனா நிறைவுள்ள பாத்திரங்களை பற்றி நம்ம இயேசப்பா நமக்கு சொல்லி கொடுத்தது, நம்மளையும் இந்த மாதிரி வாழதான். சப்போஸ் நாம நினைக்கலாம், என்னால முடியாது…….எட்ட முடியாத தூரம்னு……

    ஆனா நமக்காக எல்லாவற்றையும் செய்கிற நம்ம தேவனால் எல்லாம் முடியும். குறைவுள்ள நம்ம மேல இந்த அளவுக்கு கிருபை பாராட்டுகிறவர், நம்மளையும் நிறைவுள்ள பாத்திரமாக மாற்றுவார், நிச்சயமாக.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    4 + = twelve

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>