• இயேசு கிறிஸ்து யார்?(43)

    கவனம் தேவை

    be

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவன் நமக்கு பைபிள் வாசிக்கும் போது என்னென்ன முக்கியம்ன்னு சொன்ன காரியங்கள் நமக்கு நல்லாவே ஞாபகம் இருக்கும்ன்னு நம்புறோம். அசதியா மட்டுமில்ல நம்ம அறிவை புகுத்தி தேவனுடைய வார்த்தைகளின் தெரிந்து கொள்ள என்றும் முயற்சி என்றும் பண்ண கூடாது குட்டிகளா. ஏன்னா அது நமக்கு முழுக்க முழுக்க குழப்பத்தை மட்டுமே தரக் கூடியது. அதாவது நம்ம டீச்சர் உதவி இல்லாம, நம்ம டெஸ்ட் புக் எல்லாத்தையும் இன்னைக்கே நான் மனப்பாடம் செய்ய போறேன்னு நாம எடுக்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு சமானம்தான், நம்ம தேவன் உதவி இல்லாம பைபிள் வாசிக்கிற பழக்கமும்.

    காலையா இருக்கட்டும் இல்லை இரவா இருக்கட்டும், நம்ம தேவன் நமக்கு கொடுத்திருக்கிற வேதாகமத்தின் வார்த்தைகளை நாம எடுத்து வாசிக்கும் போது, அதன் அர்த்தங்களை சொல்லி கொடுக்க நம்ம தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை நமக்கு உதவியா அனுப்புறாங்க. ஏன்னா, நம்ம தேவனுக்கு தெரியும், தன்னுடைய பிள்ளைகள் இதில் செய்கிற சின்ன தப்புகள் கூட அவங்க வாழ்கையை எந்த விதத்தில பாதிக்கும்ன்னு.

    என்னது, நான் பைபிள் வாசிக்கிறதில சின்ன தப்புகள் வந்தாலும், அது என்னுடைய வாழ்கையில் பெரிய பாதிப்புகளை உண்டாக்க முடியுமா? கண்டிப்பா குட்டிகளா. ஏன்னா, நம்ம தேவன் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு ஜீவன் குட்டிகளா. இதை நாம சரியா புரிஞ்சி வைச்சுக்காம இருந்தாலும், நம்மளை வீழ்த்த தயாரா இருக்கிற சாத்தானுக்கு இந்த சத்தியம் தெரியும். அதுனால நம்ம தேவனுடைய வார்த்தைகளை அவர் எந்த விதத்தில நமக்குள் போட நினைத்தாலும், அதை திருட எப்பவும் அவன் ரெடியா இருக்கான்.

    என்னது, எங்ககிட்ட வருகிற நம்ம தேவனுடைய வார்த்தைகளை திருட சாத்தான் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கானா?

    ஆமாம் என்பதுதான் இதற்கான பதில். முதல்ல நம்ம தேவ வார்த்தைகளை, நம்ம இருதயமாகிய நிலத்தில எப்படி அவர்  விதைக்கிறாங்கன்னு தெரிந்து கொள்ள ஆசையா?

    நாங்க பைபிள்ளை ஏனோ தானோவென்று வாசிக்கிற நேரங்களில் கூட, தேவன் எங்க மேல கோபம் கொள்ளாம, அவர் வார்த்தைகளை எங்களுக்கு நிறைய தடவை தந்திருக்காங்க. சில கூட்டங்களில், தேவாலய ஆராதனைகளில் நாங்க விரும்பினாலும் சரி, விரும்பாட்டியும் சரி, அவர் வார்த்தைகளை எங்க செவி வழியா எங்களுக்குள்ள அனுப்புகிறார். நீங்க சொன்ன வார்த்தைகளுக்காக நன்றிகள் குட்டிகளா. இதை நீங்க உங்க வாழ்கையில ரொம்பவே உணர்ந்திருப்பீங்கன்னு நம்புறோம். நாம ஏதாவது கஷ்டங்களில் மாட்டிகிட்டு முழிக்கிற நேரம், சப்போஸ் பஸ்க்காக காத்திட்டு இருக்கிற நேரமா இருக்கலாம். இல்லை நம்ம நண்பர்கள் நம்மகிட்ட ஏதாவது ட்ரீட்ன்னு சொல்லி நம்ம பர்ஸ்க்கு வெடி வைக்க நினைக்கிற நிமிடங்களா இருக்கலாம். இல்லை நம்ம உடல் நிலை காரணமா அன்னைக்கின்னு பார்த்து நம்ம கிளாஸ்ல வைக்கிற டெஸ்ட்க்கு படிக்காம போன விசயங்களா இருக்கலாம். இல்லை கொஞ்சம் கூட நாம எதிர்பார்க்காத நேரம், நம்ம வீட்டுல இருந்த, அம்மாக்கு பிடித்தமான பொருள் கை தவறி உடைஞ்சதால, அம்மா கொடுக்க போற தண்டனைக்கு காத்திட்டு இருக்கிற நேரமா இருக்கலாம் குட்டிகளா. சரியா?

    இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்குள் எத்தனை பெரிய பயங்கள் இருந்தாலும், அதையும் மீறி ஏதோ ஒரு வார்த்தையோ இல்லை நம்ம தேவனுடைய பாடலோ உங்க மனதில கேட்ட அனுபவங்கள் உண்டா குட்டிகளா. கண்டிப்பான்னு உங்களில் பாதி பேரு சொல்ல ஆசைபடுறாங்க. அந்த நேரம் கூட, நம்ம பைபிள்ல இருக்கிற இந்த வசனத்தை நான் என்னைக்கோ படித்த மாதிரி ஞாபகம் இருக்கேன்னு எண்ணமோ இல்லை இந்த பைபிள் வசனம் யாரோ எனக்கு சொன்ன மாதிரி ஞாபகம் வருதேன்னு நீங்க யோசித்தி, அந்த முழு வசனத்தை நீங்க தேடி உங்க மனதில கண்டுபிடிக்கிறதுக்குள்ளயோ இல்லை எப்ப அந்த தேவ வார்த்தைகள் உங்ககிட்ட வந்ததுன்னு தேட்டுட்டு இருந்த அனுபவங்கள் கண்டிப்பா உங்க வாழ்கையில நீங்க கடந்து போயிருப்பீங்க. சரிதான. அது மட்டுமில்ல நீங்க ரொம்பவே பயந்த காரியங்கள் கூட சே……இவ்வளவுதானா, இதுக்கு போயா பயந்தேன்னு சொன்னதுண்டா?  

    யெஸ் குட்டிகளா, இதுதான் நம்ம தேவனுடைய வார்த்தைகளின் மகத்துவம். நாம கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக்காம இருந்தாலும், அந்த வார்த்தைகள் நமக்கு தேவையான நேரத்தில் எந்த வேலையை செய்யணுமோ, அந்த பணியை, நம்ம தேவன் கொடுத்த வேலையை கண்டிப்பா செய்திட்டு நம்ம தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும். ஆனா நம்ம நேரம் குட்டிகளா, அந்த வார்த்தைகளின் மகுத்துவத்தையும், நம்ம தேவனுடைய மகிமையும் அந்த நிமிஷம் கூட புரிஞ்சுக்காம ஏதோ நம்ம வாழ்க்கையிலும் லக் இருக்குன்னு பெருமை அடித்திருப்போம். சரிதான.

    நம்ம தேவன் நம்ம இருதயமாகிய நிலத்தில தன்னுடைய வார்த்தைகளை எப்படி போடுறார்னு தெரிந்து கொண்டது உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கலாம். சொல்ல போனா அதை சாத்தான் எப்படி திருட வருகிறான்னு என்கிற காரியம் உங்களுக்கு நிறையவே ஆச்சர்யத்தை கொடுக்கிற காரியம். அதோட எதுக்காக அதை அவன் திருடணும் என்கிற காரியம் உங்களுக்குள்ள நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிற காரியமும் கூட.

    முதல்ல சாத்தான் நம்ம தேவன் நமக்குள் கொடுத்த வார்த்தைகளை எதுக்காக திருட வர்றான்னு தெரிந்து கொள்ளலாமா?

    நம்ம தேவனின் வார்த்தைகள் நமக்கு ஜீவன் குட்டிகளா. எப்ப பார்த்தாலும் இதையே சொல்லுறாங்களேன்னு நீங்க நினைத்தாலும் இது தான் உண்மை குட்டிகளா. அது நமக்கு பல நேரங்கள் மறந்து போறதுதான் பெரிய துக்கம். ஏன்னா அந்த வார்த்தைகள் நமக்கு ஜீவனை கொடுக்கிறதுன்னு தெரிந்து கொண்டதாலதான் அதை நம்மகிட்ட இருந்து திருட சாத்தான் வருகிறான்.

    உங்களுக்கு ஒரு சின்ன சம்பவம் மூலமா நம்ம இயேசப்பா இதை சொல்ல ஆசைபடுறாங்க. ஒரு சின்ன குழந்தை தன்னுடைய அம்மாகிட்ட, அவங்க தனக்கு வாங்கி தர்றதா இருந்த பொம்மையை பத்தி தினமும் ஒரு நாள்ல நாலு தடவைனாச்சும் ஞாபகப்படுத்துமாம். அம்மாவும், உனக்கு நாளைக்குதான  குட்டிமா பொம்மை வாங்கி தர்றேன்னு சொன்னேன். அதை தினமும் எனக்கு ஞாபகப்படுத்துணுமான்னு கேட்டாங்க. அதற்கு அந்த குழந்தை அம்மா நீங்க அந்த பொம்மையை சொன்ன தேதியில வாங்கி தருவீங்கன்னு எனக்கு தெரியும். ஆனா இந்த ஞாபகப்படுத்துதல், உங்களுக்காக இல்லைமா, என்னை நேசிக்கிற என்னுடைய அம்மா எனக்கு கண்டிப்பா பொம்மை வாங்கி தருவாங்க. அதுனால நீ மட்டும் அதை மறந்து போக கூடாது என்பதற்காகதான் அடிக்கடி சொல்லி பார்த்துக்கிட்டேன்னு சொல்லுச்சு.

    இதுல இருந்து என்ன உங்களுக்கு புரிஞ்சுச்சு குட்டிகளா. இது வீட்டுல நடக்கிற சாதாரண காரியம். உங்ககிட்ட ஒரு விசயத்தை சொல்ல ஆசைபடுறோம். அந்த குழந்தைக்கு அவங்க அம்மா மேல இருந்த நம்பிக்கை ரொம்பவே அதிகம்ன்னு நினைக்கிறோம். எங்களுக்கு அந்த அளவுக்கு இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா, அந்த குழந்தை அந்த பொம்மையை பற்றி  தன்னுடைய அம்மா மேல வைச்சிருந்த நம்பிக்கை எங்களுக்கு இந்த உலகத்தில யார் மேலயும் இல்லை. நாங்க எங்க வீட்டுல உள்ளவங்களை தொல்லை பண்ணுறதே அவங்க எனக்கு வாங்கி தருகிறதா இருந்த பொருளை அவங்க மறந்துற கூடாதுன்னு என்தற்காக மட்டுமே.

    ஆனா இதுல என்ன விசேஷம் இருக்குன்னு நீங்க யோசிக்கலாம். அந்த குழந்தை நாம குட்டிகளா. அந்த குழந்தையுடைய அம்மாதான் நம்ம பரலோக தகப்பன். நம்ம தேவன் நமக்கு என்றும் அவரோட இருக்க வைப்பேன் சொன்ன பரலோக குடியிருப்புதான் அந்த பொம்மை குட்டிகளா. அந்த குழந்தை, எப்பவும் ஞாபகம் வைத்து கொள்ளுகிற காரியம், இந்த பூமியில எனக்கு சொந்தம் எதுவும் இல்லை. என் அம்மா எனக்கு வாங்கி கொடுக்க போற பரலோக குடியிருப்பு மட்டும்தான் என் வாஞ்சை என்பது தான் நம்ம தேவன் நம்மகிட்ட எதிர்பார்க்கிற விசுவாசம்(சிறு குழந்தையின் விசுவாசம்). அந்த குழந்தை தன்னை அடிக்கடி ஞாபகப்படுத்துற விஷயம், தன் அம்மா தன்கிட்ட கொடுத்த வார்த்தைகள்(பைபிள் வசனங்கள்). அதை அந்த குழந்தை கண்டிப்பா ஞாபகம் வைக்க வேண்டிய அவசியம், அந்த நம்பிக்கையை யாராவது தன்கிட்ட திருட நினைப்பாங்கன்னு, அந்த குழந்தைக்கு தெரிந்திருக்கு குட்டிகளா. அது மட்டுமில்ல தான் ஞாபகம் வைத்து கொள்ளலைன்னா அந்த வார்த்தை தனக்கு மறந்து போகும் என்கிற காரியமும் அந்த குழந்தைக்கு தெரியும். ஆனா நாம எப்படி குட்டிகளா.

    என்னுடைய தேவன் எனக்குன்னு கொடுத்த வார்த்தைகளை(பைபிள் வசனம்) அடிக்கடி எடுத்து ஞாபகப்படுத்தி பார்க்கிறேனா? ஏன்னா அந்த நம்பிக்கை நம்மகிட்ட இல்லாட்டி, எதற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கோம்ன்னு மறந்துட்டா, அதை மறக்கடிக்க சாத்தான் இருக்கான்னு அந்த குழந்தைக்கு தெரிந்த விஷயம் நமக்கு தெரியாட்டின்னா, நாமளே சாத்தானை விரும்பி அழைப்போம். வா, வந்து என் இயேசப்பா கொடுத்த வார்த்தைகளை தாராளாமா எடுத்துட்டு போன்னு கூப்பிட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை. உங்களை குறை சொல்ல இதை சொல்லலை குட்டிகளா.

    நம்மளை எந்த நேரம் வீழ்த்தலாம்ன்னு ஆவலா காத்திட்டு இருக்கிற சாத்தானின் சதிகளை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாம, அவன் விரிச்ச வலையிலே சுகமா சாய்ஞ்சுகிட்டு, உங்க பேரு இயேசப்பாவா…..உங்களை பற்றி நான் கண்டிப்பா தெரிந்து கொள்ளணுமா……1000 கேள்விகள் வேற. நம்ம தேவனின் வார்த்தைகள், அவனை முற்றிலும் நம்மகிட்ட நெருங்க விடாதுன்னு தெரிந்து கொண்டதால்தான், அவன் நம்ம தேவன் கொடுத்த பைபிள்ளை கூட முழுமையா வாசிக்க விடலை. அது மட்டுமா, அது மூலமா நமக்கு ஜீவன் வந்துட்டா, அவன் தந்திரங்களை புரிந்து கொண்டு அவனை விட்டு விலகியிருவோம்னு தெரிந்து கொண்டதால்தான் நம்மளை கண் இருந்தும் தெரியாத குருடராய் மாற்றி வைச்சிருக்கிறான், இந்த உலகத்தின் ஆசைகளை காண்பித்து.

    உங்களுக்கு ஒண்ணு தெரியுமா குட்டிகளா, இந்த அளவுக்கு நம்ம தேவ வார்த்தைகள் நம்மளை கொஞ்சம் கூட வர விடாம, பாராட்டி, சீராட்டுறது, என்றும் சந்தோசத்தில வைக்கிறதுக்கா…..இல்லையே, என்றும் அவன் எரிய போற அக்கினி கடலில் நம்மளை எரிய வைக்கிறதுக்கு தான குட்டிகளா. அப்படி நடக்க விடாம நம்ம தேவனுடைய வார்த்தைகளால் மட்டுமே முடியும். அவருடைய வார்த்தையை புரிந்து கொள்ளுரதால, உண்மையான நம்ம தேவனின் அன்பை நாம தெரிந்து கொள்ளுரதால, நம்ம உண்மையான ஓட்டம் என்னன்னு திடம் கிடைக்கிறதால் மட்டுமே அது முடியும் என்பதால்தான், பரலோகத்துக்கு சொந்தமான நம்மளையும் அவன் தந்திரத்தால் இழுக்க பார்க்கிறான்.

    நமக்குள், நமக்கே தெரியாம, நம்ம தேவன் விதைத்த வார்த்தைகளை திருட வருகிறான். இப்ப புரிந்ததா குட்டிகளா, நம்ம தேவ வார்த்தைகளை நம்மகிட்ட இருந்து எதற்காக திருட வருகிறான்னு. நம்மளை வாழ வைக்க இல்லை, நம்மளுக்கு தேவனுக்கும் அதன் மூலமா உருவான உறவை பிரிப்பதற்காக. கவனம் தேவை குட்டிகளா, இல்லைன்னா தேவ உறவை இழக்க நேரிடும்.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × 6 = forty two

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>