• இயேசு கிறிஸ்து யார்?(38)

    இனிமேலாவது யோசிப்போமா?

    jesus38

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவனின் கடிந்து கொள்ளுதலை பற்றி தெரிந்து கொண்டப்ப என்ன தோணுச்சு குட்டிகளா. தேங்க்ஸ் lord, இது வரைக்கும் நான் என்னுடைய இயேசப்பா என்னை திட்டிட்டே இருக்கிறாங்களே…..ன்னு எத்தனையோ முறை அவர்கிட்ட சண்டை கூட போட்டுருக்கேன். ஆனா இப்பதான் புரியுது. அது என்னுடைய இயேசப்பா என் மேல வைச்ச அன்பினால்….சப்போஸ் அப்படி என் இயேசப்பா என்னை கடிந்து கொள்ளாமயோ இல்லை என்னுடைய தப்புகளை சுட்டி கட்டாமயோ இருந்தா, இந்த உலகத்தில எனக்குன்னு என்னுடைய இயேசப்பா நியமனம் பண்ணின காலங்கள் முடிய போகுதுன்னு அர்த்தம் போல……அப்பாடி, நான் தப்பிச்சேன். என் வாழ்கையில என் இயேசப்பா பரிசுத்தத்தை எதிர்பார்க்கிறார்ன்னு தெரியும். ஆனா அதை பற்றி தெரிந்து கொள்ளுவதற்கு முன்னாடியே, போய் சேர்ந்திருவேனோன்னு பயந்திட்டேன். என்னுடைய தேவன் என்னை கடிந்து கொள்ளுகிரதிற்காக இப்ப அவருக்கு தேங்க்ஸ் சொல்ல ஆசைபடுறேன். நன்றிகள் குட்டிகளா.

    உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, நம்ம இயேசப்பாக்கு நம்மளை கஷ்டபடுத்தியோ இல்லை தண்டனைகள் கொடுத்தோ தன்னை பத்தி புரிய வைக்கணும்னு ஒரு காலும் நினைத்ததில்லை. அப்ப ஏன்…..ன்னு உங்க மனதில கேட்கலாம். குட்டிகளா, அது நமது பலவீனம். நாம முதல்ல இருந்தே அப்படியே வளர்ந்துட்டோம். நம்ம இயேசப்பா ரெண்டு வார்த்தை திட்டினாத்தான், ஒரு அடி கொடுத்தாத்தான் …..ஆ, வலிக்குதே, யார் என்னை எழுப்பி விட்டது, நீங்கதானப்பா, அது கொஞ்சம் தூக்கமா இருந்துச்சா, அதுதான் அசந்து தூங்கிட்டேன். சரி இயேசப்பா சொல்லுங்க, ஏதாவது முக்கியமான விசயமா…..ன்னு கேட்கிற மாதிரி உள்ள நிலைமையில் இருந்தா நம்ம இயேசப்பாவால மட்டும் என்ன செய்ய முடியும்.

    இப்ப உங்க மனதில இன்னொரு கேள்வி எழும்பலாம். அப்ப எங்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி ஒரு டீச்சிங்கான்னு நீங்க கேட்டா ஆமா குட்டிகளா….எப்பயும் ஒரு தட்டு தட்டி, ஒரு வார்த்தை திட்டி அம்மாமார்கள் எழுப்பினாதான் எழும்புவோம் , இல்லைன்னா தூங்குறதில என்ன பிரச்சனை வந்துரப் போகுதுன்னு நினைக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரிதான் நம்ம இயேசப்பா கற்றுக் கொடுப்பாங்க. இல்லாட்டினா நாமதான் யோசிக்கிறதே இல்லையே. நான் யார், எப்படிப்பட்ட கடமை என் இயேசப்பா கொடுத்திருக்காங்க. என்னை விழுங்க சாத்தான் எந்த அளவுக்கு மூர்க்கமா சுத்திட்டு இருக்கான் என்பதை எல்லாம் மறந்திட்டு, கஷ்ட நேரம் வந்தா மட்டும் நான் என்னுடைய இயேசப்பாவை நினைப்பேன். இல்லைன்னா நான் நினைக்கிறதுக்கு இந்த உலகத்தில எத்தனை பிரச்சனை இருக்கு தெரியுமா?

    காலையில எழுந்ததில இருந்து நைட் தூங்குற வரைக்கும் எத்தனையோ பிரச்சனைகள் நமக்கு இருக்கு. தம்பி, தங்கச்சி கூட சண்டை போடுறதில இருந்து, அவங்களை சாக்கா வைச்சு, அம்மா/அப்பாகிட்ட திட்டு வாங்குற வரைக்கும் எத்தனையோ கஷ்டங்கள் இருக்கு.

    அது மட்டுமா ஸ்கூல்ல எத்தனையோ நாம தீர்த்து வைக்க வேண்டிய காரியங்கள். அவங்க வீட்டுல என்ன நடந்தது….இவங்க வீட்டுல என்ன நடந்தது….எல்லார் வீட்டுலயும் அம்மா/அப்பா ஒரே மாதிரிதான் திட்டுறாங்கன்னு தேவையில்லாம வாழ்கையில ஒரு சலிப்பு வேற இந்த வயதில…..ஏன் குட்டிகளா, நமக்கு ஸ்கூல்ல யார் என்ன பண்ணுறாங்க….இது டீச்சர்க்கு தெரியுமா….தெரியாதான்னு யோசிக்கிறதுதான் நம்மளை மாதிரி உள்ள தேவ பிள்ளைகளுக்கு அழகா? சப்போஸ் உன்னுடைய நண்பர்கள் தப்பான வழியில போனா அதை தடுத்து நிப்பாட்டுறதுக்கு உனக்கு முழு உரிமை கொடுத்திருக்காரே நம்ம இயேசப்பா. அதை விட்டுட்டு இந்த தேவையில்லாத புறணி தேவையா…..உன் நண்பர்கள் தப்பான வழியில தான் போகிறாங்கன்னு உன் கண் முன்னால நீ பார்த்தா தைரியமா அவங்ககிட்ட சொல்லு….அதுனால அவங்களுக்கு ஏற்படப்போற இழப்புகளை…..அவங்களுக்காக ஜெபம் பண்ண வேண்டியது நம்ம தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளை. அதை விட்டுட்டு உன் நண்பர்ககளோட சேர்ந்து கொண்டு, நீயும் பரியாசக்காரர் உட்காரும் இடத்தில உட்காராதே……அது உன் தேவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காத காரியம்.

    உண்மையில் நம்ம தேவன் கவலைபடுற காரியம். மற்ற பிள்ளைகளை காட்டிலும், தேவ பிள்ளைகள்தான் இந்த பரியாசக்காரர் கூட்டத்தில அதிகமா இருக்கிறாங்க என்பது தான்.

    ஸ்கூல்ல தான் இப்படி நினைச்சா, நம்ம தேவனை தொழுது கொள்ளுகிற சர்ச்ல கூடவா குட்டிகளா, நீ என் friend……அவனை பத்தி பேசாதே…..அவ ரொம்ப மோசம்…..ஏன் குட்டிகளா, மற்ற இடங்களில் நம்ம தேவனை வேதனைப்படுத்துறது போதாதுன்னு அவர் ரொம்பவே ஆசைபட்டு உலாவுற அவர் வீடாகிய ஆலயத்தில வந்துமா இப்படிபட்ட கஷ்டங்களை கொடுக்கணும்.

    இத்தனை பிஸியான காரியங்களை வைத்து கொண்டு நம்மளால் ஒரு நாள்லயே சாரி ஒரு மாதத்திலேயே நம்ம இயேசப்பாவை பற்றி நினைக்கிறதுக்கு டைம் கிடைக்க மாட்டிக்குது. இதுல, எப்படி ஒரு நிமிசத்திற்கு ஒரு முறை அவரை பற்றி நினைக்க. கொஞ்சம் கஷ்டம்தான், அப்படிதான குட்டிகளா. ஆனா, அந்த ஒரு மாதம் முடியுறதுக்கு முன்னாடி சப்போஸ் ஒரு காய்ச்சலோ இல்லை ரொம்பவே மோசமான தலை வலியோ இல்லை வயிறு வலியோ…..இது மாதிரி ஏதாவது வந்து, வீட்டுல உட்கார வேண்டிய நிலைமை வந்தா மட்டுமே அந்த நிமிஷம் மட்டும், அச்சோ, நமக்கு இயேசப்பான்னு ஒருத்தரை பத்தி தெரியுமே…..அவர்கிட்ட நம்ம உடம்பு பிரச்சனை பத்தி சொன்னா உடனே சரி பண்ணிருவார் என்கிற எண்ணம் அப்பதான வரும். உடல் சரி ஆனதும், அடுத்த நாள் அவரை மறந்திருவோம். சப்போஸ் அம்மா/அப்பாக்காக பயந்துட்டு, அந்த சண்டே மட்டும் ஸ்தோத்திர காணிக்கை வைக்க வேண்டியது.

    அதற்கடுத்து, ஏன் என்னுடைய இயேசப்பா இந்த வியாதியை அனுமதிச்சாங்க…..ஏதாவது காரியத்தில நான் என்னுடைய இயேசப்பா பேச்சை மீறிட்டேனா……இல்லை என் தேவன் என்கிட்டே எந்த விசயத்தில மாற்றத்தை எதிர்பார்கிறாங்க…..ன்னு ஒண்ணும் யோசிக்கிறதே கிடையாது. மீண்டும் அந்த தூங்கின நிலைமைதான்.

    அடுத்து என்ன குட்டிகளா, மாதத்திற்கு ஒரு முறை வந்த உடம்பு பிரச்சனை, வாரத்திற்கு ஒரு முறை…..அப்பவும் புரிய முடியலைனா தினமும் ஏதாவது ஒரு வகையில மன குழப்பம்….இல்லாட்டினா தேவையில்லாத பய உணர்வு. அதுவும் இல்லைனா…..ஒரு பிரச்சனையும் இல்லாம 10 நாள், 15 நாள்ன்னு வியாதியின் படுக்கை. அப்பனாச்சும் தன் பிள்ளைகள் தான் சொல்ல வந்ததை புரிஞ்சுகுவாங்களான்னு தான் நம்ம இயேசப்பா நினைக்கிறாங்க. ஆனா புரிந்து கொண்டோமா குட்டிகளா?

    உண்மையில் நாம புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நம்மளை கஷ்டப்படுத்திதான், நம்ம இயேசப்பா நமக்கு விசயங்களை புரிய வைக்கணும்ன்னு நினைக்கிறதில்லை குட்டிகளா. நாம்தான் அவரை அந்த நிலைமைக்கு ஆளாக்குகிறோம். உடம்பு கஷ்டப்படும் போது மட்டும் என்னுடைய இயேசப்பாவை நான் தேடிக்குவேன்ன்னு நாம மனதில நினைச்சா, தினமும் உடல் கஷ்டத்தை சந்திக்க நேரிடும். இது நமக்கு தேவையா??? மற்றவங்க முன்னிலையில் நம்மளை நம்ம இயேசப்பா எல்லா வகையிலும் சிறக்க வைக்கணும்ன்னு தான் நினைக்கிறாங்க. ஆனா நம்ம பிடிவாதம், மற்றவங்க நம்மளை பார்த்து, என்னது இன்னைக்கும் உனக்கு உடம்பு சரியில்லையா, ஏண்டா நேற்றுதான் சொன்ன….வயிறு சரியில்லைன்னு….இன்னைக்கி காய்ச்சல்ன்னு தீடீர்னு சொல்லுற…….என்ன குட்டிகளா, கேட்கும் போதே கஷ்டமா இருக்குதே…..ஆனா அந்த நிலையை கடந்து போன பிறகும் கூட இன்னும் நாம நம்ம இயேசப்பாவை புரிந்து கொள்ளலையே!!!!!!

    இனியும் நமக்கு தேவையா……இந்த தேவையில்லாத வியாதி படுக்கைகள்?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    5 + = eleven

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>