-
இயேசு கிறிஸ்து யார்?(35)
என் தேவனுக்காக மரிக்கவும் தயார்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா நமக்காக பாக்கியவான்கள் பற்றி சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க. ஆனா நம்ம மன வேதனை என்னன்னா, நம்ம இயேசப்பா இது வரைக்கும் சொன்ன ஒரு பாக்கியவான்கள் வரிசையில கூட நாம இடம் பெறலை என்பதுதான். ஆனா நமக்காக யாவையும் செய்து முடிக்கிற நம்ம தேவனால் எல்லாம் கூடும் குட்டிகளா. அதுனால மனம் தளர்ந்து போக வேண்டிய அவசியம் தேவையே இல்லை.
சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா மற்ற பாக்கியவான்கள் பற்றியும் என்ன சொல்லுறாங்கன்னு தெரிந்து கொள்ளுவோமா?
இரக்கமுள்ளவர்கள் – இரக்க குணமுள்ளவர்கள்.
இரக்க குணமுள்ளவர்கள்ன்னு சொன்னதும் நம்ம மனதில blue cross அமைப்பை செர்ந்தவங்களை பற்றிதான் நமக்கு ஞாபகம் வரும். ஏன்னா, உயிருள்ள மனிதனை கூட, ஒரு விஷயமாகவே எடுத்துக்காம இந்த உலகம் ஓடிட்டு இருக்கும் போது, இந்த உலகத்தில இருக்கிற மிருகங்கள்கிட்ட ஒருத்தர் அன்பு செலுத்தினா கண்டிப்பா, அவங்க அன்பானவங்களாதான் இருப்பாங்க என்பது நம்ம எண்ணம். ஆனா இருதயத்தை சோதித்து அறிகிறவருக்கு மட்டுமே இந்த உலகத்தில உள்ள எல்லா மனிதர்களின் உள் ரகசியங்கள் தெரியும். அது ஊருக்கான வேஷமா இல்லை உண்மையான இருதய அன்பா?
அதுனால நம்ம தேவனின் இருதய விருப்பங்களை உண்மையில் தெரிந்து கொண்டு, அதன் படி மற்றவங்க மேல இரக்கம் பாராட்டுறவங்கதான் இரக்கம் குணமுள்ளவர்கள். அவங்க இரக்கமா மற்றவங்களுக்கு தர்றது, அவங்க அன்பு, பொருள், உடைமை, இப்படி எது தேவன் செய்ய சொல்லுகிறாரோ அதை முழு மனதோட(இங்க நாம கவனிக்க வேண்டியது, ஏனோ, தானோவென்று இல்லை) செய்திட்டு, அவர் அன்பை நேசிக்கிறவங்க. இவ்வளவு இரக்க குணமுள்ளவர்களுக்கு என்னுடைய தேவன் கண்டிப்பா பரலோகத்தில இரக்கம் பாராட்டுவார், அவர்கள் இரக்கத்திற்கு தக்க விதமாய்.
எங்களை பற்றி நாங்க சொல்ல ஆசைபடுறோம். வீட்டுல என் தம்பி/தங்கச்சி யாராவது எனக்கு பிரியமானதை என்ன? என் பொருள் எதை எடுத்துக் கொண்டாலும் அன்னிக்கி எனக்கும், அவர்களுக்கும் வருகிற சண்டை ரொம்பவே பெரியது. அப்படி இருக்கும் போது, நான் என்னுடைய எல்லா விசயங்களையும், என் தேவனின் விருப்பபடி விட்டு கொடுக்கிற வாழ்க்கை எப்ப வரப் போகுதோ?
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் – தேவன் விலகி வைத்த அசுத்தங்களால் தன்னை தீட்டுப்படுத்தாம, அவர் வார்த்தை படி வாழ்கிற சுத்தவான்கள்
என்ன குட்டிகளா, இருதயத்தில சுத்தம் உள்ளவர்கள்ன்னு சொன்னதும், நம்ம இயேசப்பா தன்னுடைய சீசர்களுக்கு சொன்ன அறிவுரைதான் ஞாபகம் வருதா? ஒருவன் வாய்க்குள்ள போறது அவனை தீட்டுப்படுத்தாது. வாயில் இருந்து வரும் அதாவது உள்ளத்தில் இருந்து புறப்படுகிறவைகள் தான் அவனை தீட்டுப்படுத்தும்ன்னு சொன்னாங்க. அதற்கான அர்த்தமும் நம்ம இயேசப்பா தன்னுடைய சீசர்களுக்கு சொல்லி கொடுத்தாங்க.
மனுஷனுக்குள் இருந்து புறப்படுகிறவைகள், அவன் இருதயத்தில இருந்து புறப்படுகிற பொல்லாத சிந்தனைகள், விபச்சாரங்கள், வேசித்தனங்கள், கொலைபாதங்கள், களவுகள், பொருளாசைகள், துஷ்டத்தனங்கள், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு. நம்ம இயேசப்பா குறிப்பிடப்பட்டிருக்கிற எந்த ஓர் அசுத்தமும், நம் இருதயத்தில இருக்க கூடாதுன்னா, அது அப்ப இந்த பூமியில பிறந்த ஒரு சிறு குழந்தையால தான் முடியும்னு நாம முணுமுணுக்கிறது நம்ம இயேசப்பாக்கும் புரியும் குட்டிகளா. அந்த சிறு குழந்தைகள் நம்ம தேவனை பரலோகத்தில இருக்கும் போது மட்டுமில்ல இந்த பூமிலயும் நம்ம தேவனை தரிசிப்பார்கள்(பார்ப்பார்கள்)ன்னா சொன்ன நம்மளால் நம்ப முடியும். ஆனா ஒரு மனிதன் அல்லது மனுஷி இந்த ஒரு பாக்கியத்தை பெற முடியுமான்னு கேட்டா கண்டிப்பா கத்தியே சொல்லுவோம். சாரி இயேசப்பா, அந்த அளவுக்கு, ஒரு சிறு குழந்தை அளவுக்கு இருதயம் சுத்தமா எந்த ஒரு மனிதானாலும் தன்னை பார்த்துக் கொள்ள முடியாது. நாம நம்ம எண்ணங்களை நம்ம இயேசப்பாகிட்ட சொல்லிட்டோம். நம்ம இயேசப்பா இதைக் குறித்து சொல்லுறதை கேட்போமா?
நம்ம இயேசப்பா தனக்கு அந்தரங்கமாய் இருந்த சீசன் நிக்கொதேமு என்பர்கிட்ட ஒரு மனிதன் மறுபடியும் ஆவியில் பிறக்கிறதை பற்றி சொன்னாங்க. அதாவது ஒரு மனிதன் நம்ம இயேசப்பா இங்க குறிப்பட பட்டிருக்கிற இருதயத்தின் அனைத்து அசுத்தமும் கொண்டிருந்தாலும், அவன் நம்ம இயேசப்பாவை ஏற்றுக் கொள்ளும் போது, அவனை நம்ம இயேசப்பா பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் தரும் போது, அவன் புது ரூபமாக்க படுகிறதால், திரும்பவும் பிறந்த குழந்தைக்கு சமானம். அவங்க இந்த உலகத்திலயும், பரலோகத்திலும், நம்ம தேவன் கொடுத்த பரிசுத்த ஆவியானவரை, அவர் பலத்தினால் காத்துக் கொண்டதால நம்ம தேவனை என்றும் பரலோகத்தில பார்ப்பாங்க சொன்னதை இப்ப நம்ப முடியுமா?
இந்த காரியத்தை குறித்து நாங்க ஒண்ணும் சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க என்னுடைய இயேசப்பா எனக்கு பாராட்டுற கிருபையால நடக்கிற காரியம். என்னையும் என் இயேசப்பா ஆவியில பிறக்க வைக்கணும்ன்னு சொல்லி அவர்கிட்ட இன்னும் முழுமையா கெஞ்சுவேன்.
சமாதானம் பண்ணுகிறவர்கள் – எல்லா காரியங்களிலும் சமாதானத்தை தேடுகிறவர்கள்
குட்டிகளா, நமக்கும் சமாதானத்துக்கும் நிறையவே தூரம்னு சொன்னாலும், நம்ம தேவன் சமாதானத்தின் தேவன். அவர் இந்த பூமியை விட்டு போகும் போது, அவர் சமாதானத்தை நமக்கு தந்து போயிருக்கிறார். இந்த உலகம் கொடுக்கிற சமாதானம் கிடையாது. நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்திருக்கிற சமாதானம். அது என்ன ரெண்டு பிரிவுகள்ன்னு நாம யோசிக்கலாம்.
இந்த உலகம் கொடுக்கிற சமாதானம் என்பது சப்போஸ் ஏதாவது காரியம் நமக்கு வேதனையோ, சோர்வையோ கொடுத்திருந்தா இந்த உலகம் தேடுற மாதிரிதான் நாமும், டிவில நம்ம இயேசப்பாக்கு பிடிக்காத பாடல்கள் மூலமாகவோ இல்லை காமெடி என்கிற காரியம் மூலமாகவோ நம்ம மனதை திருப்ப நினைப்போம். அது அந்த நேரத்திற்கு சந்தோசமா இல்லை நிம்மதியா தெரிந்தாலும் திரும்பவும் நம்ம வாழ்கையில புயல் வீசும் போது, அதே சமாதானத்தை தேடுற மனிதர்களா மாறியிருவோம். ஆனா நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த சமாதானம் அப்படி கிடையாது குட்டிகளா, அது ஒரு நிமிசத்திற்கோ இல்லை கொஞ்சம் நேரத்திற்கோ மட்டும் நிம்மதி தந்துட்டு, திரும்பவும் நம்மளை தேட வைக்கிறது கிடையாது. அது நம்ம இயேசப்பா நமக்குள்ள இருக்கிறதால என்றும் நிலைத்திருக்கிற காரியம். அதுனால எந்த புயலும், வெள்ளமும் வந்தாலும் அசராம இருக்கிற கன்மலை போல. எந்த காரியங்களாலும் நாம சோர்ந்து போக மாட்டோம்.
இப்ப சொல்லுங்க குட்டிகளா, நமக்கு தேவை இந்த உலகம் கொடுக்கிற சமாதானமா இல்லை நம்ம இயேசப்பாகிட்ட வாங்கணும் ஆசைபடுகிற சமாதானமா ? எல்லா காரியங்களிலும் சமாதானத்தை காண்கிறவர்கள் தங்களுக்குள் மட்டுமில்ல மற்றவங்களுக்கும் அந்த சமாதானத்தை கண்டிப்பா கொடுக்கிறவர்களா இருப்பாங்க. அப்படிப்பட்டவங்களை தன்னுடைய பிள்ளைகள்ன்னு நம்ம தேவன் சொல்லி கொள்ளுகிறதில ரொம்பவே பிரியப்படுவார்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் – நம்ம இயேசப்பாவின் வார்த்தைகளின் படி வாழ்வதால் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள்
நம்ம இயேசப்பா வார்த்தையின் படி வாழ்வதால் நாம நம்ம வாழ்கையில பிரச்சனைகள் சந்திக்க வேண்டியது வருமா?ன்னு கேள்வி கேட்டா எல்லாரும் சொல்லுவாங்க. கண்டிப்பா நான் நிறைய முறை அனுபவித்திருக்கேன்னு நாம நம்ம வாழ்க்கையில ஏற்பட்ட சாட்சிகள் சொல்லலாம். ஆனா அந்த சமயத்தில இந்த உலகத்திற்காக பயந்து கொண்டு நம்ம இயேசப்பாவை விட்டோமா இல்லை விடலையா என்பதுதான் இந்த கேள்விக்கான பதில். நாம தேவ பிள்ளைகள் என்பதால, கண்டிப்பா அவர் வார்த்தைகள் படி வாழும் போது சாத்தான் கொண்டு வருகிற தந்திரங்கள் அதிகம். ஆனா அந்த சமயத்தில அவனுக்கு பயந்து கொண்டு நம்ம தேவ வார்த்தைகளை, நம்ம இயேசப்பாவை தாராளமாகவே விட்டு கொடுத்திருப்போம். ஆனா அந்த தந்திரத்திலும் நம்ம இயேசப்பாவை மகிமைபடுத்தி வாழுற அவர் பிள்ளைகள் இன்னும் உலகத்தில உண்டு. அவர் வார்த்தையின் படி வாழும் போது எந்த இடைஞ்சல் வந்தாலும், நம்ம இயேசப்பாவை விட்டு கொடுக்க பிடிக்காம அந்த வேதனையை சுமந்த தன் பிள்ளைகளை நம்ம இயேசப்பா தன்னுடைய பரலோகத்தில இரு கரங்களையும் விரிச்சி எந்த அளவுக்கு சந்தோசமா வரவேற்பார்ன்னு நீங்களும் அதை பத்திதான யோசித்து கொண்டு இருக்கீங்க.
நான் இந்த உலகத்திற்கு பயந்தவன்/பயந்தவள்ன்னு சொல்லுறதுதான் சரி வரும். ஏன்னா நிறைய காரியங்களில் மற்றவங்களுக்காக பயந்து கொண்டு என் இயேசப்பாவை மறந்த நாட்கள் அதிகம். அதை விட அவரை விட்டு தூரம் போன நாட்களும் அதிகம். ஆனாலும் நானும் இந்த லிஸ்ட்ல இடம் பெற விரும்புறேன். என்னுடைய இயேசப்பா எனக்காக உதவி செய்வாங்களா?
என்னிமித்தம்(இயேசு கிறிஸ்துவின் நிமித்தம்) நிந்திக்கப்பட்டால், துன்பபட்டால் – தேவ வார்த்தைகளை கொண்டு செல்லும் போது அதனால் துன்பப்படும் அவர் ஊழியக்காரர்கள்
இதை இப்பவும் நாம நிறைய செய்திதாள்களிலும், டிவி நியூஸ்லயும் கேட்கிற காரியம். தேவனுடைய வார்த்தைகளை கொண்டு செல்லுற பணி ஒண்ணும் ஈஸியான வேலை கிடையாது. அதுல நிறைய துன்பங்களும், கஷ்டங்களும் உண்டு ஒரு உண்மையான ஊழியனுக்கு. இல்லை ஏன் அப்படி கஷ்டப்படணும், யாராவது நம்மளை அப்படி கஷ்டபடுத்த நினைச்சா அவங்க சொற்படி ஊழியம் செய்ய ஆரம்பிச்சிருவோம். இந்த வார்த்தையை பற்றி பேசாத…..இந்த ஊர்ல இந்த இடத்தில சொல்ல கூடாதுன்னா அந்த வார்த்தைக்கு கீழ்படிந்தா ஏன் துன்பம் வரப்போகுது. பாருங்க…நம்ம இயேசப்பா ஊழியத்தையும் செய்து கொள்ளலாம், அதே நேரத்தில யார்கிட்டயும் அடி வாங்காம நம்மளையும் காத்துக் கொள்ளலாம். இதற்குத்தான நம்ம இயேசப்பா நம்மளை படைக்கும் போது, ஆறு அறிவு கொடுத்திருக்காங்க. அந்த சமயத்தில புத்திசாலியா இருந்து யோசிக்கணும்ன்னு……உங்க மனது யோசித்தா……பொல்லாத ஊழியக்காரனே…….நீ யார் சித்தப்படி இந்த உலகத்தில் அழைக்கப்பட்டிருகிறாய். உலக மக்கள் சித்தத்தை நிறைவேற்றவா இல்லை உன்னை அழைத்த என் சித்தத்தை நிறைவேற்றவா?
ஒருவன் சுவிசேஷக பணியை தேவன் அழைத்தால் ஒழிய எடுக்க கூடாது. அப்படி அழைத்த பிறகு பின் வாங்க கூடாது. அவர் சொல்லுகிற வார்த்தைகள் எதுவோ அதற்கு கொஞ்சம் கூட இரண்டாம் பட்சம் காட்டாம அதை சொல்ல வேண்டிய இடத்தில சொல்ல வேண்டியது முக்கியமான கடமை. அதுனால என்ன பிரச்சனை வந்தாலும் கண்டிப்பா பின் வாங்க கூடாது. அது உயிரையே விடுகிற அளவுக்கு பிரச்சனை வந்தாலும். அப்படிப்பட்ட ஊழியர்களுக்கு நம்ம இயேசப்பா பரலோகத்தில சேர்த்து வைச்சிருக்கிற பலன் ரொம்பவே அதிகம்.
சரி குட்டிகளா, நம்ம இயேசப்பா தான் அழைத்திருக்கிற நிறைவான பாத்திரங்களை பற்றி சொல்லி கொடுத்திட்டாங்க. என்ன சொல்ல போறீங்க? இது வரை குறைவான பாத்திரம்ன்னு என்னை சொல்லி சொல்லியே என்னுடைய இயேசப்பாவை விட்டு விலகிட்டேன். ஆனா இனிமே என்னால முடியாது. இந்த நிறைவான பாத்திரங்களை பற்றி சொல்லி கொடுத்து என்னுடைய வாஞ்சை எதுன்னு தெளிவா காண்ப்பிச்சிட்டாங்க. இனிமே விலகவா அவரை ஜெபத்தில கூட என்னால் விட்டு கொடுக்க கூட முடியாது. இந்த நொடியில இருந்தே கெஞ்ச போறேன். இந்த உலகம்…..இந்த உலகம்….ன்னு உலகத்தை பார்த்து நான் வாழ்ந்தது போதும். இனி நான் வாழ்ந்தா அது உங்களுக்காக….உங்க நாமம் மகிமை பட வாழணும்ன்னு உரிமையா அவர்கிட்ட எனக்குன்னு உள்ள சித்தத்தை வாங்க போறேன். அது என்னவா இருந்தாலும் பரவாயில்லை. என் தேவனுக்காக மரிக்கவும் தயார்.
Psalm of a Student இயேசு கிறிஸ்து யார்?(36)
இயேசு கிறிஸ்து யார்?(35)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives