-
இயேசு கிறிஸ்து யார்?(2)
உலகம் உருவாகின விதம்
இயேசப்பாவை குறித்து நாம பேசுறதுக்கு முன்னாடி, உங்க சிறு வயதிலிருந்து நம்ம இயேசப்பாவை பத்தி சொல்லி கொடுத்தது யார் யார்னு சொல்லுவீங்களா. ப்ளீஸ்…..
- தாத்தா
- பாட்டி
- அம்மா
- அப்பா
- சண்டே ஸ்கூல் டீச்சர்
- பிரெண்ட்ஸ்
- போதகர் ஐயா
குட்.. அப்ப இயேசப்பாவை குறித்து உங்களுக்கு நிறைய தெரிந்திருக்குமே. இயேசப்பாவை குறித்து என்ன கேள்வி கேட்டாலும் உடனே பதில் சொல்லிருவீங்கன்னு நினைக்கிறன்… என்னது கேள்வியா? ஐயோ…. அப்படின்னு கண்டிப்பா சொல்ல மாட்டீங்க, ஏன்னா நீங்கதான் நல்ல பிள்ளைகளாச்சே. அப்படித்தானே?
ஒவ்வொரு கேள்வி கேக்குறதுக்கு முன்னாடியும் கேள்வி சம்பந்தமான விளக்கங்களும் தந்திருக்கிறேன். அதுனால நீங்க பதிலை எளிதா கண்டுபிடிச்சிடுவீங்க…
நம்ம இயேசப்பாவை பத்தி தெரிந்து கொள்வதற்கு முன்னாடி நம்ம பிதாப்பா பற்றி தெரிந்து கொள்ளணுமே குட்டிஸ்! அதுனால முதல்ல பிதாப்பா பற்றி பார்ப்போமா!
பிதாப்பா உலகத்தை உருவாக்கினதை குறித்து உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். ஆதியாகமம் 1 மற்றும் 2ம் அதிகாரங்களில் (முதல் அதிகாரம் முழுவதும் மற்றும் இரண்டாம் அதிகாரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வசனம் வரை) உலகம் எப்படி நம்ம பிதாப்பாவால் உருவானதுன்னு தெளிவா சொல்லப் பட்டிருக்கு.
முதல் நாள்ல வெளிச்சத்தை உண்டாக்கினாங்க. வெளிச்சத்தையும் இருட்டையும் பிரிச்சாங்க. வெளிச்சத்துக்கு பகல் என்றும் இருட்டுக்கு இரவு என்றும் பேர் வைச்சாங்க.
இரண்டாவது நாள்ல வானத்தை உருவாக்கினாங்க.
மூன்றாவது நாள்ல கடலை பிரிச்சி வைச்சி, பூமியை உண்டாக்கி நாம பூமில பார்க்குற எல்லா தாவரங்களையும் உண்டாக்கினாங்க.
நாலாவது நாள்ல சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்களை உண்டாக்கினாங்க.
ஐந்தாவது நாள்ல நீர்ல வாழ்ற எல்லா உயிரினங்களையும், வானத்துல பறக்கிற எல்லா பறவைகளையும் உண்டாக்கினாங்க.
ஆறாவது நாள்ல எல்லா காட்டு மிருகங்களையும் நாட்டு மிருகங்களையும் உண்டாக்கினாங்க. மனிதனையும் அதே நாள்லதான் உண்டாக்கினாங்க.
ஏழாவது நாளை நம்ம பிதாப்பா ஓய்வு நாளா ஆசீர்வாதம் பண்ணினது உங்களுக்கும் தெரியும்.
முன்பு வாரத்தின் ஏழாவது நாளான சனிக்கிழமைதான் ஓய்வு நாளா பின்பற்றப்பட்டது. ஆனா சில முக்கியமான வசதிகளுக்காக இப்ப ஒவ்வொரு சண்டேயும் ஓய்வு நாளா பின்பற்றப்படுகிறது. அதுனாலத்தான் நாம ஒவ்வொரு சண்டேயும் நம்ம நேரத்தை தேவனாகிய கர்த்தருக்கென்று செலவழிக்கின்றோம் .
நம்ம பிதாப்பா எப்படி தான் உருவாக்கின உலகத்தை ஆளுகை செய்கிறார்ன்னு அடுத்த முறை தெரிந்து கொள்ளலாமா?
இயேசு கிறிஸ்து யார்?(1) இயேசு கிறிஸ்து யார்?(3)
இயேசு கிறிஸ்து யார்?(2)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives