• இயேசு கிறிஸ்து யார்?(19)

    எதை நாடுகிறோம்

    jesus19

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    உங்க ஆத்துமாவின் வாஞ்சையை நீங்க கேட்டு தெரிந்து கொண்டிருப்பீங்கன்னு நம்புறோம் குட்டிகளா. உங்க ஆத்துமாவின் வாஞ்சை தன்னுடைய தேவனை தேடுதுன்னு சொல்லுச்சா இல்லை இந்த உலகத்தில இன்னும் சேர்த்து வைக்கணும்……..யாரும் நம்ப முடியாத சிகரத்துக்கு போகணும்னு சொல்லுச்சா……அதுவும் இல்லை என்னுடைய வகுப்பில உள்ள எல்லா பசங்களும் எப்பவும் என்னுடைய பெயரைத்தான் சொல்லனும்னு சொல்லுச்சா…..அப்ப இந்த பழக்கம் எப்படித்தான் வந்துச்சு குட்டிகளா…….இது நம்ம சின்ன வயதில இருந்து வந்த பழக்கம். குட்டிமா அம்மாவை பாரு, அப்பாவை பாரு….. தாத்தாவை பாரு…..எதிர் வீட்டு அக்காவை பாரு…..ன்னு சொன்னதும் நாம நம்ம பொக்கை வாய்  திறந்து அப்ப சிரிச்சிருப்போம். ஆனா இந்த ஸ்கூல் போகுற வயதிலயும் எல்லாரும் நம்மளை பார்த்துதான் சிரிக்கணும்…….நம்மளை பார்த்துதான் புகழனும்……நான் எப்பவும், எங்கேயும் நம்பர் ஒண்ணா இருக்கனும்ன்னு ஆசைபடுறது ஏன் குட்டிகளா?

    நம்ம இயேசப்பா எப்பனாச்சும் நமக்கு சொல்லுறாங்களா….குட்டிமா உன் கிளாஸ்ல நீ தான் first வரணும்…..யாரையும் உன் முன்னாடி விட்டுறாத…..எப்பவும் உன் மனதில நான் தான் பெரியவன்/ பெரியவள்ன்னு சொல்லிட்டே இரு…….யார் உன் மனதை புண் படுத்துறதுக்கு முன்னாடி நீ அவங்களை உன் வார்த்தையால காயப்படுத்திருன்னு எங்க சொல்லி கொடுத்திருக்காங்க? அப்ப நாங்க எங்களுடைய இந்த வயதிலேயே ஒரு துறவி மாதிரி வாழணும்னு சொல்லுறீங்களா?ன்னு கேள்வி கேட்க நினைக்கீறீங்க? குட். நம்ம இயேசப்பா நம்மளை இந்த உலகத்தில ஒரு துறவி மாதிரி வாழ சொல்லலையே. அப்ப எப்படிப்பட்ட வாழ்க்கைதான் நாம வாழணும்னு ஆசைப்படுறாங்கன்னு கேட்குறீங்க? சரியா.

    உங்க கேள்விக்கு நம்ம இயேசப்பா என்ன பதில் சொல்லுறாங்கன்னு கேட்கலாமா?

    நாம நம்முடைய எல்லா இந்த உலக ஓட்டத்தையும் நம்ம இயேசப்பா கையில கொடுத்திட்டு, அவர் சொன்ன பாதையில நடக்க ஆசைபடுறாங்க. ஏன்னா நமக்கு தெரிந்த விஷயம்தான். நமது யோசனைகளை என்றும் மோசமே காணும், ஆனா அதை நம்மளை நேசிக்கிற நம்ம பரம தகப்பன்கிட்ட நாம என்ன நினைச்சாலும், என்ன முடிவு பண்ணியிருந்தாலும், இல்லை உங்க எதிர் கால திட்டங்கள் என்னவா இருந்தாலும், உங்க ஆசைகள், உங்க கனவுகள் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி, அதை கொடுத்திட்டு அவர் உங்களுக்கு காண்பிக்கிற பாதைக்காக, உங்க வாழ்கையில நாம பிறக்கிறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணி வைச்சிருக்கிற திட்டத்திற்காக காத்திட்டு இருக்கலாமே.

    அதை விட்டுட்டு அவர் துணை எனக்கு ஏன் வேணும்? என்னாலேயே என்னுடைய கனவுகளை நிறைவேற்றி கொள்ற அளவுக்கு பலம் இருக்கு. கண்டிப்பா சாதிச்சி காண்பிப்பேன்னு ஓட்டம் ஓடி அதுல தப்பு வந்தாலும், இதெல்லாம் வாழ்கையில சகஜம்ன்னு மேல ஒட்டியிருக்கிற மண்ணை துடைச்சிட்டு, திரும்பவும் ஓடுவேன்……ஓடுவேன்…..ன்னு எவ்வளவு நேரம் குட்டிகளா, நாம ஓட முடியும். இப்படி ஓடுறதே ஒரு நிம்மதியான இடத்தில உட்கார்ந்து இளைப்பாறுதல் அடையத்தான. ஆனா நாம முடிவு பண்ணியிருக்கிற திட்டமே சரியா…..தப்பான்னு தெரியமா ஓடிட்டே இருந்தா எப்படி குட்டிகளா, நம்மளால் அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் போய் சேர முடியும்? எப்ப இளைப்பாற தண்ணீர் குடிக்க முடியும்?

    ஒரு நாள் நாம முதுகுல தூக்கிட்டு போன சுமைகள் அழுத்தும் போது, ஐயோ….இவ்வளவு சுமைகள் ஏன் சுமக்குறேன்…..இதுக்கு முடிவு கிடையாதா…..ன்னு புலம்பும் போது நம்மளை யார் குட்டிகளா, மார்பில வந்து சாய்ந்து கொள்ளுவாங்க. என்ன குட்டிகளா…ரொம்பவே யோசிக்கீறீங்க. குட். நல்லா நாம யோசிக்கலாமே. இது வரைக்கும் என்னுடைய வாழ்கையில என்ன பண்ணினேன்? எதற்காக எல்லாத்தையும் பண்ணினேன்? என்னை எல்லாரும் புகழனும்னு ஆசைப்பட்ட காரியங்கள் எத்தனை பண்ணினேன்? அதுனால எனக்கு உண்மையில் சந்தோசம் கிடைச்சதா?ன்னு ஒரு நொடி உட்கார்ந்து யோசிக்கலாமா குட்டிகளா. அட்லீஸ்ட் இப்பனாச்சும் நம்ம இயேசப்பா நமக்காக கொடுத்திருக்கிற நேரங்களை பிரயோஜனப் படுத்தி கொள்ளுவோமா?

    ஏன்னா காலங்களை பிரயோஜனப் படுத்தி கொள்ளுங்கள்னு நம்ம இயேசப்பா சொல்லி இருக்காங்களே. நம்மளை பற்றி யோசிக்க இந்த நொடினாச்சும் எடுத்து கொள்ளலாமா? அப்படி என்னதான் நான் பண்ணிட்டு இருக்கேன், எதை நோக்கித்தான் ஓடிட்டு இருக்கேன்?ன்னு நிதானமா நம்மளை நாமளே ஆராய்ச்சி பண்ணி பார்ப்போமா தேவ ஆவியானவர் உதவியோட?

    என்ன குட்டிகளா, நீங்க உங்களை பற்றி தெரிந்து கொண்ட காரியம் உங்களுக்கே வேதனையா இருக்குதா? யாருக்காக இதை செய்யுறோம், எதற்காக இதை செய்யுறோம்ன்னு உங்களாலும் கண்டுபிடிக்க முடியலை, அப்படித்தானே குட்டிகளா. நம்மளை பற்றி தெரிந்து கொள்ள நம்ம இயேசப்பா கொடுத்த ஒரு சந்தர்ப்பத்துக்காக, அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு உண்மையில் நாம எதற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கோம்? நம்ம உண்மையான இளைப்பாறுதல்னா என்னன்னு நம்ம இயேசப்பாகிட்ட கேட்டு தெரிந்து கொள்ளலாமா?

    பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.

    கொலோசெயர் 3 : 2

    பூமியுள்ளவைகள் அல்லன்னா என்ன குட்டிகளா? நம்ம இயேசப்பா நம்மகிட்ட என்ன சொல்ல ஆசைபடுறாங்க? அப்படி இந்த பூமியில என்னதான் இருக்கு ? அது ஏன் நம்ம இயேசப்பாக்கு பிடிக்காம போச்சு? இந்த உலகம் நம்ம இயேசப்பா படைத்த காரியம் அல்லவா குட்டிகளா? அப்ப நம்ம இயேசப்பா ஏன் இந்த பூமியில இருக்கிற காரியங்கள் உங்களுக்கு வேண்டாம்னு சொல்லுறாங்க?

    இந்த பூமியையும் அதன் கிரியைகளையும் சாத்தான் தன் வசமா எடுத்துக் கொண்டதால நம்ம இயேசப்பா கோபப்பட்டு அப்படி சொல்லி இருப்பாங்களோ? ஆனா இந்த பூமியில ஆபிரகாமை அழைத்து அவருக்கு சகல சம்பூரனங்களையும் கொடுத்தது நம்ம தேவன்தான குட்டிகளா. அப்ப நாம இந்த உலகத்து செளகர்யங்கள் முழுமையா நிறைந்து வாழணும்னுதான அவரும் நம்மளை குறித்து ஆசைபடுறாங்க, அப்படித்தானே. ஆனா ஏன் இந்த உலகத்தில உள்ளவைகளை நாட வேண்டாம்னு நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொல்லுறாங்க?

    சப்போஸ் இந்த செளகர்யங்களை நாம நாடினா அதை நம்மளை வேதனைபடுத்திரும்னு இப்படி சொல்லுறாங்களோ? நம்ம இயேசப்பா நாளை உள்ள காரியங்களுக்காக எப்பவும் கவலைப்பட கூடாதுன்னு சொல்லி கொடுத்திருக்காங்க.. ஏன்னா என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம், என்னத்தை உடுத்துவோம்ன்னு உள்ள எல்லா காரியங்களும் நாளைய நிமிசத்தை சார்ந்து உள்ள காரியங்கள். அதற்காகக் தான் நம்ம இயேசப்பா சொன்னாங்க, அதை உங்க பரம பிதா அறிந்திருக்கிறார், காக்கை குஞ்சுகளுக்கு ஆகாரம் கொடுக்கிறவர் நமக்கு கொடுக்க மாட்டாரா? அந்த நம்பிக்கை ஏன் நம்மகிட்ட இல்லைன்னுதான் நம்ம தேவன் நம்மளை பார்த்து வேதனைபடுகிறார். அப்ப இந்த உலகத்தில நாம எதைத்தான் தேடணும்னு நீங்க பொறுமை இழந்து நம்ம இயேசப்பாகிட்ட கேட்க ஆரம்பிச்சிட்டீங்க. குட்.

    முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

    மத்தேயு 6 : 33  

    அப்ப நான் நம்ம இயேசப்பாவின் ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேட ஆரம்பிச்சிட்டா, அவர் என்னுடைய எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி விடுவாரா? சரி குட்டிகளா, எங்களுக்கு சொல்லுங்க? உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்னன்னு நம்ம இயேசப்பாகிட்ட சொல்ல முடியுமா? இப்படி தீடீர்னு கேட்டா எப்படி சொல்லுறது? பரவாயில்லை இப்போதைக்கி ஞாபகத்தில வைச்சிருக்கிறதை சொல்லுறோம். சொல்லறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புறோம். எங்களுடைய ஆசைகள், கனவுகள் எல்லாமே மற்றவங்களை கஷ்டபடுத்தாத நல்ல விசயங்கள். நம்ம இயேசப்பாதான் எல்லாருக்கும் சொல்லி இருக்காங்களே, நல்ல மனிதனா நடந்துக்கிறது. அதற்குத்தான் எங்களுக்கு எல்லா பலங்களும் வேணும். எங்களுக்கு தேவையான திறமைகள்(தாலந்துகள்), ரொம்ப வேண்டாம் கொஞ்சம் செல்வம்(உதவி கேட்டு வருகிறவங்களுக்கு உதவி செய்ய நம்ம இயேசப்பா சொல்லி இருக்காங்களே), எனக்குன்னு கொஞ்சம் பொழுது போக்குகள்(இயேசப்பா வேண்டாம்னு சொல்லி இருக்காங்க, பட் என்ன செய்ய, இல்லாட்டி வாழ்க்கை போர் அடிச்சிரும்)…..இந்த மாதிரி இயேசப்பா எனக்காக எல்லாம் செய்து கொடுத்திட்டா நானும் இயேசப்பாதான் உண்மையான தேவன்னு சொல்லி அவருடைய ராஜ்யத்தையும், நீதியையும் தேட ஆரம்பிக்கிறேன். ஏன் தேட ஆரம்பிக்கிறேன் சொல்லணும், உண்மையான மனதோட நாடவே செய்யுறேன்ன்னு நீங்க நம்ம இயேசப்பாகிட்ட பேரம் பேச ரெடியா இருக்கீங்களா???????

    அப்ப நம்ம இயேசப்பாகிட்ட அந்த சாத்தான் பேசின பேரத்திற்கும், நாம கேட்குறதுக்கும் என்ன வித்தியாசம்??????????????????????????

    என்ன குட்டிகளா, இந்த கேள்வியை கேட்டதும் ரொம்பவே எங்களை கோபமா பார்க்கிற மாதிரி தோணுது? உங்க கோபத்திற்காக நன்றிகள் குட்டிகளா. ஆனா நாம இப்ப எந்த நிலையில இருக்கிறோம்னு நம்ம இயேசப்பா நம்மளை குறித்து சொன்னா இல்லைன்னு நம்மளால் அவர்கிட்ட வழக்காட முடியுமா? அவர் நம் இதயத்தை அறிந்த தேவன் ஆச்சே?

    அதுனால நம்மளுடைய கோபத்தையும், தேவையில்லாத ஆசைகளையும் ஒரு மூலையில வைச்சிட்டு, அவர் சமூகத்தில அமர்ந்து அவர் நம்மளை குறித்து சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேட்போமா? அவர் நம்மகிட்ட அப்படி என்னதான் விரும்பி கேட்கிறார்ன்னு கேட்டு தெரிந்து கொள்ளலாமா???

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    eight − 8 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>