• இயேசு கிறிஸ்து யார்?(13)

    இராஜ்யமும் அதன் மகிமையும்

    jesus13

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.

    நம்ம இயேசப்பாகிட்ட சாத்தான் மூன்றாவது கேள்வி என்ன கேட்டான் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம். நம்ம இயேசப்பா அதை குறித்து என்ன சொல்லுறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?

    நம்ம இயேசப்பாவை சாத்தான் ஒரு உயர்ந்த மலையின் மேல கொண்டு போய் இந்த உலகத்தின் உள்ள சகலத்தையும், அதன் மகிமையும் காண்பித்து, நீர் என்னை சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்து கொண்டா உனக்கு இதை தருவேன்னு சொன்னான்.

    நம்ம இயேசப்பாகிட்ட சாத்தான் இதை கேட்டதும் உங்களுக்கு ரொம்பவே கோபம் வந்திருக்கும் குட்டிகளா. எவ்வளவு தைரியம் இருந்தா என் இயேசப்பாவை பார்த்து அவன் கால்ல விழுந்து பணிய சொல்லி இருப்பான். உங்களுக்கு கோபம் வருகிறது சரிதான் குட்டிகளா. ஆனா ஏன் நம்ம இயேசப்பாவை கால்ல பணிய வைக்க நினைத்தான், சொல்ல முடியுமா குட்டிகளா?

    நம்ம பிதாப்பாக்கும், அவனுக்கும் ஏற்கனவே பிரச்சனை வந்தது உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை. அது மட்டுமில்ல நம்ம தேவனுக்கே நிகராவேன்னு தன் இருதயத்தில் சொல்லி கொண்டவன் தான் இந்த சாத்தான் என்பது உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான்.

    சரி அவன் நம்ம பிதாப்பாக்கு இணையாவேன் சொன்னதுக்கும் இப்ப நம்ம இயேசப்பாகிட்ட இப்படி சொல்லுறதுக்கும் என்ன சம்பந்தம் வந்திர போகுது?ன்னுதான நீங்க நினைக்கீறீங்க. சரிதானே! சம்பந்தம் உண்டு குட்டிகளா. நம்ம பிதாப்பாவுடைய சிங்காசனத்தில உட்கார நினைச்ச அவனுடைய தேவையில்லாத ஆசையால, அவனுடைய பெருமையால அவன் நரகத்தில விழுந்து போனான். ஆனா இப்ப நம்ம பிதாப்பாவுடைய பையனே ஒரு மனிதனா வந்திருக்கும் போது அவன் தன் வஞ்சகத்தை தீர்த்து கொள்ள நினைத்தான் குட்டிகளா. நம்ம பிதாப்பாவை தன்னுடைய வல்லமையால எதிர்த்து தலை குனிய வைக்க அப்ப முடியாதால் இப்ப அவருடைய பையனை தன்கிட்ட தலை குனிய வைக்க நினைச்சான். இப்ப புரியுதா குட்டிகளா. சாத்தான் எத்தனை தூரம் தான் தன்னை ஒளியின் தூதனாக காண்பிக்க நினைத்தாலும் அவன் இருதயம் என்றும் பொல்லாத ஒன்றுதான் குட்டிகளா.

    அதனால் தான் நம்ம இயேசப்பா ஒருவனுடைய கனிகளில் இருந்து அவன் எப்படிப்பட்டவன் என்பதை நம்மளால் கண்டு பிடிக்க முடியும்னு சொல்லி இருக்காங்க. அதுனால சாத்தான் உங்களை சுற்றி எந்த வகையிலும் ஏமாற்ற நினைத்தாலும் அவனுடைய கனிகளில் இருந்து உங்களால் கண்டு பிடிக்க முடியும். அது மட்டுமில்ல அவங்கிட்ட இருந்து உங்களால் விலகி இருக்க முடியும்.

    சரி குட்டிகளா, சாத்தானின் தந்திரத்தை பற்றி நம்ம இயேசப்பா என்ன சொல்லறாங்கன்னு கேட்போமா?

    நம்ம பிதாப்பா எப்படிப்பட்ட வல்லமையுடையவர்னு நீங்க தெரிந்து வைச்சிருப்பீங்க. அது மட்டுமில்ல இந்த உலகத்தை நம்ம பிதாப்பா, நம்ம இயேசப்பா மூலமாதான் உருவாக்கினாங்க என்பதும் உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். அப்படி இருக்கும் போது நம்ம இயேசப்பாக்கு எத்தனை வல்லமை உண்டுன்னு நம்மளை விட அவனுக்கு நல்லாவே தெரியும். நம்ம இயேசப்பாவை தலை குனிய வைக்க முடியாதுன்னு அவனுக்கு தெரிந்த விஷயம்தான். அப்ப ஏன் அப்படி சொன்னான், அதுவும் இந்த உலகத்தை நம்ம இயேசப்பாக்கு தர போறதா சொல்லுறானே, என்பதும் உங்களுக்குள்ள எழும்புற கேள்வி, சரிதானே.

    இதன் மூலமா இன்னொரு காரியத்தையும் உங்களுக்கு நாங்க சொல்ல ஆசைபடுறோம். சாத்தான் முன்பே பிடிக்க நினைத்த சிங்காசனம் யாருடையதுன்னா கேட்டா ஈஸியா சொல்லிருவீங்க. அது பிதாப்பாகுரியது. ஆனா நம்ம பிதாப்பா, தன்னுடைய ஒரே பையனான நம்ம இயேசப்பாவைத்தான் அந்த சிங்காசனத்தில் இந்த உலகத்தை ஆளுகிற ராஜாவா அபிஷேகம் பண்ணிட்டாங்க. என்னது அப்படியான்னு ரொம்பவே சந்தோசப்படுரீங்க. சந்தோசம் இருக்காதா…..எங்களை நேசிக்கிற எங்க இயேசப்பாதான் எங்க ராஜான்னா எங்களுக்கு என்றும் சந்தோசம்தான்.

    ரொம்பவே சந்தோசத்தில இருக்கிற நமக்கு, ஒரு கேள்வி வராம இருக்காது. நம்ம இயேசப்பா இந்த உலகத்திற்கே ராஜாவா இருக்கும் போது, அந்த சாத்தானால் எப்படி அவனுக்கு உரிமை இல்லாத உலகத்தை தர முடியும்? சரிதானே! அதுதான் குட்டிகளா, சாத்தானுடைய சதி வேலை.

    நீதிமொழிகள் 8ம் அதிகாரம் 31வது வசனத்தில், அவருடைய பூவுலகத்தில் சந்தோசப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்னு நம்ம இயேசப்பா சொல்லி இருக்காங்க. நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கினப்ப நம்ம இயேசப்பாக்கு இருந்த சந்தோசமும், ஆதாமும், ஏவாளையும் தன் அன்பால் நேசித்த இன்பமும், எப்ப அவங்க சாத்தான் பேச்சுக்கு செவி கொடுத்தாங்களோ அன்றே எல்லாம் முடிவுக்கு வந்திருச்சு குட்டிகளா. அடுத்து எத்தனையோ முறை நம்ம தேவன் தன்னுடைய அன்பை தன்னுடைய பிள்ளைகளுக்கு புரிய வைக்க நினைத்தாலும், புரிந்து கொண்டவங்க அவருடைய நண்பர்களா இருந்தாங்க(நோவா, ஆபிரகாம், யோசேப்பு, மோசே,…….). ஆனா அவர் வார்த்தைக்கு கீழ்படியாதவங்க வேதனைக்கு உள்ளானங்க. இது உங்களுக்கு தெரிந்த விஷயம் குட்டிகளா.

    இந்த உலகத்தில இருக்கிற நாம எல்லாரும் நம்ம இயேசப்பாவால உருவாக்கபட்டவங்க. அப்படி இருக்கும் போது ஏனோ இரண்டோ, மூன்றோ பேர் மட்டும் அவர் பேச்சுக்கு கீழ்படிந்து அவர் பிள்ளையா பக்கத்திலேயே அவர் அன்பை ருசிக்கும் போது, அவருடைய மற்ற பிள்ளைகள் நரக வேதனையில கஷ்டப்பட்டா அவரால எப்படி குட்டிகளா, சந்தோசமா இருக்க முடியும்? தன்னுடைய பிள்ளைகள் தன்னை எற்றுக் கொள்ளாம சாத்தான் பேச்சுக்கு செவி கொடுத்து, நரகத்தை நோக்கி செல்லும் போது, அதை தடுத்து நிறுத்த முடியாம, நரகத்தில அவங்க படுற வேதனையை பார்க்கும் போது அவர் எந்த அளவு வேதனையில துவண்டு கொண்டிருப்பார்.

    இப்படி இந்த உலகத்தையும், அதிலுள்ள நம்மளையும் ஆசை ஆசையா உருவாக்கிட்டு, அந்த சந்தோசத்தை கொஞ்சம் கூட அனுபவிக்காம சாத்தான்கிட்ட நம்ம கீழ்படியாமையால கொடுக்க வேண்டியதா போச்சே குட்டிகளா(சாரி, நாம்தான் அதை அவனுக்கு கொடுத்துட்டோம்). இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும். நம்ம இயேசப்பாகிட்ட சாத்தான் காண்பித்த உலகமும், அதன் மகிமையும் முழுக்க முழுக்க அவனே தனக்காக உருவாக்கி கொண்டது. அதாவது நம்ம பிதாப்பாகிட்ட நேரடியா மோத முடியாதவன் அவரை தோற்கடிக்க தெரிந்து கொண்ட குறுக்கு வழிதான் நாம. அன்னைக்கி அந்த குறுக்கு வழியை பயன்படுத்தி நம்ம பிதாப்பாகிட்ட இருந்து ஆதாம், ஏவாளை பிரிச்சான். இப்பவும் நிறைய பிள்ளைகளை நம்ம தேவன்கிட்ட இருந்து பிரிச்சிட்டு இருக்கிறான்.

    இந்த மாதிரி தானே உருவாக்கி கொண்ட மகிமை நிறைந்த உலகத்தை(நம்மளை நம்ம தேவன்கிட்ட இருந்து பிரிச்சி தேவ பிள்ளைகளின் மகிமையை அவன் ஏற்றுக் கொண்டான்) தான் அவன் நம்ம இயேசப்பாகிட்ட காண்பிச்சி நீ ஆசைப்பட்ட இந்த உலகமும், அதன் மகிமையும் இப்ப எனக்குதான் சொந்தம். என்ன அழகாக நான் என்னுடைய உலகமா ஏற்றுக் கொண்டேன், பார்த்தியா……எப்படி நான் கஷ்டபட்டு கண் விழிச்சி, பல குறுக்கு வழிகளில் இந்த உலகத்தை சம்பாதிச்சிருக்கேன். நீ ஆசைப்பட்ட உலகத்தை நீ உனக்கு வேணும்னு நினைச்சின்னா என்னை சாஷ்டாங்கமாய் விழுந்து என்னை பணிந்து கொண்டா உனக்கு தந்துருவேன்னு பேரம் பேசினான். இப்ப புரியுதா குட்டிகளா. சாத்தானின் தந்திரம். அவன் தந்திரத்தால் சிக்குண்டு பாதி உயிர் போன நிலைமையில் இருந்த நம்மளை காண்பிச்சுதான் நம்ம இயேசப்பாவை தலை குனிய வைக்க நினைத்தான்.

    என்ன ஒரு இக்கட்டான சூழ்நிலை. முதல் கேள்வி, நம்ம இயேசப்பாவின் பலவீன நிலையை காண்பிச்சி கல்லை அப்பங்களா மாற்ற சொன்னான். நம்ம இயேசப்பா அவனை ஈஸியா தேவ வார்த்தைகளால் தோற்க வைச்சாங்க. இரண்டாவது கேள்வி கூட தேவ வார்த்தைகளை திரிச்சி சொன்னப்ப, நம்ம இயேசப்பா அவனுடைய தந்திரத்தை கடிந்து கொண்டாங்க. ஆனா கடைசியில நம்ம இயேசப்பாவை தோற்கடிக்க எடுத்து கொண்ட ஆயுதம் நாம குட்டிகளா. எந்த காரணத்துக்காக இந்த உலகத்துக்கு தன்னை முழுமையா வெறுத்து வந்தாரோ, அந்த உலகத்தை காண்பித்து, நம்மளை காண்பித்து ஏமாற்ற நினைச்சப்ப எந்த அளவுக்கு அவர் துடிச்சி போயிருப்பார் குட்டிகளா. அவருடைய பிள்ளைகளாகிய நம்மளை மீட்க தன்னையே சிலுவையில ஒப்பு கொடுக்கணும்னு நம்ம தேவன் அவருக்கு குறித்த தீர்மானம். அது மட்டுமில்ல, அதை சந்தோசமா செய்கிரதுக்காக நம்ம இயேசப்பா இந்த பூமிக்கு வந்தப்ப, இப்படி குறுக்கு வழியில் ஏன் அவர்கிட்ட பேரம் பேசினான் குட்டிகளா. அடுத்த முறை தெரிந்து கொள்ளலாமா?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × two = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>