• இயேசு கிறிஸ்து யார்?(23)

    குற்ற மனசாட்சி

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    தேவனின் நாமத்தை தேட வேண்டிய நாமளே அவரை மறந்திட்டு ஓடிட்டு இருக்கிறது அவருக்கு எந்த அளவுக்கு சிலுவை வேதனையை கொடுக்குதுன்னு நம்ம இயேசப்பா சொன்னப்ப உங்களுக்கு கண்டிப்பா வேதனையா இருந்திருக்கும் குட்டிகளா. இந்த நொடி வரைக்கும் நம்ம இயேசப்பாக்கு சிலுவை வேதனை கொடுத்திருந்தாலும், அட்லீஸ்ட் இந்த நொடினாச்சும் அவர் முகத்தை தேட மாட்டோமான்னு அவர் இப்பவும் ஆசையா எதிர்பார்க்கிறார். தேடுவோமா குட்டிகளா??????????

    இந்த உலகத்திற்கும், நம்ம இயேசப்பாக்கும் இடையில எதை தேர்ந்தெடுக்கிறதுன்னு தெரியாம நாம குழம்பி போயிருக்கிறது அவருக்கும் புரியும் குட்டிகளா. உங்க மனதில நீங்க கேட்கலாம். என்னுடைய இயேசப்பா என்னுடைய மனம் திரும்புதலுக்காக இந்த அளவு காத்திருக்கிறாரே, எனக்காக இப்பவும் சிலுவை வேதனையை சுமக்கிறாரே, இந்த மாதிரி எனக்காக எல்லாவற்றையும் செய்கிறவர் என் முன்னாடி வந்து, என் இருதயத்தை அப்படியே மாற்றி அமைச்சிர மாட்டாரா? எங்களுக்கு எத்தனை வேதனைன்னு தெரிந்தவர் தான அவர். இந்த உலகத்தின் போக்கிற்கு கீழ்படியவும் முடியாம, என் இயேசப்பா வார்த்தைக்கு செவி கொடுக்கவும் முடியாம, தினமும் நரக வேதனையை அனுபவிக்கிறோமே, எங்க வேதனையில இருந்து கை தூக்கி விட மாட்டாரா???

    உங்க வேதனை நம்மளை படைத்த நம்ம தேவனுக்கு தெரியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க?? எங்க வேதனையை தெரிந்தவரா இருந்தா எங்களுக்கு உதவி செய்ய ஓடி வந்திருப்பாரே? ஆனா நான் இன்னும் என்னுடைய வேதனையிலதான் அமிழ்ந்து கிடக்கேன். காப்பாற்ற அவர் வரலையே?? என்னை நேசிக்கிறவரா இருந்திருந்தா எனக்கு ஏன் இத்தனை கஷ்டங்கள் வரப்போகுது?

    சாரி குட்டிஸ், நம்ம வேதனையை தெரிந்த தேவன்னு அவரை பற்றி தெரிந்திருந்தும் ஏன் இத்தனை குற்றச்சாட்டுகள்? அவர் உங்களுக்கு சரியான நேரத்தில உதவி செய்ய வரலைன்னு இத்தனை கோபமா? இல்லை இந்த உலகம் உங்களை தள்ளிருச்சுன்னு வெறுப்பா? எது  உண்மைன்னு நம்ம இயேசப்பாக்கு சொல்ல முடியுமா? உண்மையில் நம்ம இயேசப்பா வார்த்தைகளை கடைபிடிக்காம முடியாத நம்ம  குற்ற மனச்சாட்சி தான் நம்மளை இந்த வெறுப்பிற்கும், நம்ம தேவன் மேலேயே வெறுப்பையும் நமக்கு தந்திருக்கும்னு அவர் சொன்னா நாம இல்லைன்னு மறுதலிக்க முடியுமா? அவர் சகலத்தையும் தெரிந்த தேவன் ஆச்சே.

    யெஸ், நம்ம இயேசப்பா சொன்னது உண்மைதான். எங்க தேவன் எங்ககிட்ட பேசுறது எங்களுக்கும் புரியுது. எங்க தேவன் எங்களுக்குள்ள கொடுத்த அந்த அழகான ஆத்துமா தன்னுடைய தேவனை தான் நாடுதுன்னு எங்களுக்கும் புரியுது. அது மட்டுமில்ல எங்களுக்குள் இருக்கிற தேவ ஆவியானவர் நாங்க நம்ம இயேசப்பா பேச்சுக்கு கீழ்படியாத நேரம் கடிந்து கொள்ளும் போது, எங்களுக்கு மன வேதனையை தருது. ஆனா சாத்தானின் தந்திரங்களில் நாங்க பிடிக்கப்பட்டிருக்கிறோம்னு தெரிந்திருந்தும் எங்களால் அதில இருந்து வெளியே வர முடியலை மட்டுமில்ல எங்களால் இயேசப்பா பேச்சுக்கு கீழ்படியாத காரணத்தினால்தான் இதெல்லாம் நடந்ததுன்னு குற்ற மனசாட்சி வேற வேதனைப்படுத்தது. நிர்பந்தமான மனுஷன் நான், யார் என்னை விடுவிக்க கூடும்னு புலம்ப மட்டுதான் இப்ப கூட முடியுது. இதை கண்டிப்பா வார்த்தைகளால் சொல்ல முடியாத பாரம்.

    சரி குட்டிகளா, இந்த வேதனை எப்படி வந்ததுன்னு உங்க மூளையை கசக்கி புழிந்து காரணத்தை கண்டுபிடிச்ச உங்களால் அதில் இருந்து வெளியே வரதுக்கு காரணம் கண்டுப்பிடிக்க வேண்டியதுதான. எங்க இயேசப்பாதான் எங்க எல்லா பிரச்சனைக்கும் தீர்வு சொல்ல முடியும், அது மட்டுமில்ல என்னுடைய எல்லா பிரச்சனைகளில் இருந்து விடுதலை கொடுக்க முடியும்னு தெரியும். ஆனா நான் என்னுடைய இயேசப்பாவை ஓமிட் பண்ணிதால்தான் இந்த எல்லா பிரச்சனைகளும் வந்தது. இப்ப நான் எந்த முகத்தை வைச்சிட்டு என்னுடைய இயேசப்பாகிட்ட பேச முடியும்? உங்களுக்கு இதெல்லாம் புரியாது? உங்களால் இயேசப்பாகிட்ட பேசுங்க, அவர்கிட்ட இருந்து விலகி போகாதீங்க….அது அவருக்கு சிலுவை வேதனையை கொடுக்கும்னு மட்டும்தான் சொல்ல முடியும்? ஆனா நாங்க எங்க இயேசப்பாகிட்ட பேச முடியாம, இந்த உலகத்தில வாழணுமான்னு கேள்வியோட இருக்கிறதை நீங்க எப்படி புரிந்து கொள்ள முடியும்?

    இந்த உலகத்தில வாழுற ஒரு உண்மையான மனிதன் தன் இயேசப்பாவை விட்டு கொடுக்கவும் முடியாம, இந்த உலகத்தில இருக்கிற மக்களின் எதிர்பார்ப்புகளை திருப்தி படுத்தவும் முடியாம இரட்டை வாழ்கை வாழுறதை எப்படி தடுக்க முடியும்??

    உங்களால் பதில் சொல்ல முடியலை, அப்படித்தானன்னு நீங்க எங்ககிட்ட கேள்வி கேட்க நினைக்கிறீங்க? சரியா குட்டிகளா. உங்களுடைய எல்லா கேள்விகளுக்காவும் நன்றிகள் குட்டிகளா. ஆனா நம்முடைய எல்லா புலம்பலுக்கும் நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு பார்ப்போமா??

    நாம நம்ம தேவனுடைய எல்லா அறிவுரைகளையும் கேட்காம ஓடினது உண்மைதான். அதுனால நம்ம வாழ்கையில நிறைய வேதனைகளை அனுபவிச்சதும் உண்மை. இன்னும் சாத்தானின் வலையில விழுந்து கிடப்பதும் உண்மை. ஆனா இன்னும் எத்தனை நாள் நான் என்னுடைய இயேசப்பா மனதை கஷ்டப்படுத்திட்டேன் …..அவரை வேதனைப்படுத்திட்டேன்…..ன்னு சொல்லி ஓடிட்டு இருப்பீங்க. நம்ம இயேசப்பாவை ஏமாற்றுகிறதுக்காக இதை சொல்லுறீங்களா? இல்லை எனக்கு இன்னும் சாத்தானின் வலையில விழுந்து கிடப்பதுதான் சந்தோசம்ன்னு நம்ம இயேசப்பாகிட்ட சொல்லுறதுக்காகதான் இப்படி புலம்புறீங்களா???

    நம்ம இயேசப்பா நம்மளை கோபமா கேட்டது உங்களுக்கு நல்ல வேதனையை தந்திருக்கும்னு எங்களுக்கு புரியுது. ஆனா என்னுடைய இயேசப்பாவை நான் கஷ்டப்படுத்திட்டேன்னு ஒவ்வொரு நொடியும் அவரை நிராகரிச்சிட்டு குற்ற மனசாட்சியோட சாத்தானை பின்பற்றுகிறதை காட்டிலும் “இயேசப்பா உங்களை காயப்படுத்திட்டேன், உங்களுடைய எல்லா வார்த்தைகளையும் மீறி சாத்தானின் பேச்சுக்கு கீழ்படிந்து அவன் சொன்ன வார்த்தைகளுக்கெல்லாம் ஆட்டம் போட்டது உண்மைதான். ஆனா இதற்கும் மேல குற்ற மனசாட்சியோட என்னால வாழ முடியாது. அப்படி நான் வாழுறதை காட்டிலும், உங்க கிட்ட சாரி கேட்கறது எவ்வளவோ நல்லதுன்னு மனதில தோணுது. நான் இப்ப உங்ககிட்ட கேட்கிற சாரி, சப்போஸ் கோடி கணக்கை தாண்டி போயிருந்தாலும், தயவு செய்து என்னை மன்னிச்சிருங்கப்பா, ஏன்னா நீங்க இல்லாம, உங்க அன்பை ருசிக்காம, என்னால மூச்சு கூட விட முடியலை. நான் திரும்பியும், உங்க பேச்சை மீறாம இருக்க உங்க பலத்தை தாங்க. அது மட்டுமில்ல உங்க கண்மணிக்குள் என்னை வைத்து பார்த்துக்கோங்க. ப்ளீஸ்…..”. என்ன குட்டிகளா, நம்ம இயேசப்பாகிட்ட பேச வேண்டிய வார்த்தைகளை கேட்டவுடன் ரொம்பவே ஆச்சர்யமா இருக்குதா??

    உண்மைதான் குட்டிகளா. நம்மளால் நம்ம இயேசப்பாவை விட்டு தனித்து வாழ முடியாதுன்னு நமக்கு தெரியும். ஆனா அதை காலம் தாழ்த்தி…….. தாழ்த்தி…..சாரி சொல்லாம இருந்து, நம்ம மனதை கஷ்டபடுத்தி வாழுறதை காட்டிலும், உரிமையா அவர்கிட்ட சாரி சொல்லிட்டு, ஏற்கனவே செய்த தப்புக்கு சாத்தான் நமக்கு நியமித்திருந்த தண்டனை எதுவா இருந்தாலும், அவர் மார்பில சாய்ந்து, வேதனையை பொறுத்து கொள்ளறது எவ்வளவோ better குட்டிகளா. அதற்கு நமக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள் வேண்டியதில்லை. உங்க கண்களில் இருந்து வரும் உண்மையான வேதனையோட உள்ள கண்ணீரில், உங்க இருதயத்தில இருக்கிற எல்லா வார்த்தைகளையும் அவர் சந்நிதானத்தில் ஊற்றிட்டு, அவர்கிட்ட ஒரே வார்த்தை மட்டும் தெளிவா சாரி சொல்லிருங்க. அடுத்து அவர் உங்ககிட்ட பேசுற வார்த்தைக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியது இருக்கும். ஆனா அந்த காத்திருப்பை உண்மையா சவாலா மேற்கொண்டு காத்திருங்க. அடுத்து நம்மகிட்ட அவர் பேசுறதை நம்மலாயும் தெளிவா கேட்க முடியும்.

    அதற்கடுத்து என்ன குட்டிகளா, உங்களில் நீங்க இழந்து போன எல்லா சந்தோசங்கள் திரும்பியும் தேடி வந்துரும். அடுத்து நம்ம இயேசப்பாவின் அன்பில மூழ்கி திளைக்க வேண்டியதுதான். நம்ம இயேசப்பா உங்களோட இருக்கும் போது, உங்களுக்கு வர வேண்டாத ஒரே எண்ணம், திரும்பியும் விழுந்து போயிருவேனோ?ன்னு. அவர் உங்களோட இருக்கும் போது, கண்டிப்பா விழுந்து போகுற நிலைமை வாராது. ஆனா சப்போஸ் நம்ம உலக ஆசைகளால் விழுந்து போனாலும், உடனே அவர் முகத்தை தேட மட்டும் மறந்து போக கூடாதுன்னு நம்மளுக்கு எச்சரிகையாகவே நம்ம இயேசப்பா சொல்லுறாங்க. ஏன்னா, அந்த அளவுக்கு நம்ம இயேசப்பா நம்மளை நேசிக்கிறாங்க. நம்ம குற்ற மனசாட்சியோட நாம வாழுறதை அவர் விரும்பலை. தப்பு செய்தாலும் உடனே அவர்கிட்ட சாரி கேட்டுட்டு, அவர் மார்பில சாய்ந்து கண்ணீர் வடித்திரணும்னு அவர் விரும்புகிறார். ஏன்னா, அவர் உண்மையிலயே நம்மளை நேசிக்கிற அன்பான தகப்பன். யாருக்காவும் நம்மளை விட்டு கொடுக்க முடியாத பிரியமான நண்பன்.

    இன்னொரு காரியத்தை நம்ம இயேசப்பா நமக்கு நினைவூட்ட நினைக்கிறாங்க. இந்த உலகத்தில நமக்கு கிருபையின் காலங்கள் எவ்வளவு நாட்கள்ன்னு கண்டிப்பா தெரியாது. so, விழிப்போடவும் இருக்கவும் நமக்கு அறிவுறுத்துறாங்க. அதுனால என்றும் விழுந்து போகாம இருக்க அவர் பலத்தை முழுமையா வாங்கி கொள்ள அவர் ஆசைபடுகிறார். அது மட்டுமில்ல, இந்த உலகம் நமக்கு தருகிற கஷ்டங்களில் இருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி, அவர் மார்பு மட்டும்தான். எப்பவும் போய் தஞ்சம் அடைந்து கொள்ளலாம்.

    அதனால இனிமேலும் நம்மளை வேதனைபடுத்திட்டு இருக்கிற தேவையில்லாத குற்ற மனசாட்சிகளை தூர எறிஞ்சிட்டு, நம்ம இயேசப்பாகிட்ட இப்பனாச்சும் சாரி சொல்லி, அவர் முகத்தை தேடலாமா? அவர் அன்பை ருசிக்கலாமா??             

     

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    five + = 13

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>