• இயேசு கிறிஸ்து யார்?(4)

    பிதாப்பாவும், இயேசப்பாவும்

    jesus4

    பிதாப்பா ஒளியா இருக்காங்க (1யோவான் 1 : 5), ரொம்ப அன்பானவங்க (1யோவான் 4 : 8,16), ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, தாவீது இன்னும் நிறைய பேருடைய வாழ்க்கை மூலமா தன்னை நம்புற பிள்ளைகளுக்கு எல்லாமே செய்கிறவர்ன்னு உங்களுக்கும் தெரியும். ஆனா உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு அழகான, அன்பான, ரொம்பவே பெரிய (1யோவான் 4 : 4) நம்ம பிதாப்பாவை யாரும் பார்த்தது கிடையாதாம் ( 1யோவான் 4 : 12 )

    நாங்க சொன்னதை நீங்க நம்பலைன்னு எங்களை ஆச்சர்யமா பார்கிறதில இருந்தே புரியுது குட்டிகளா. நம்ம தேவனே தன்னை யாரும் பார்த்தது கிடையாதுன்னு மோசேக்கு சொல்லியிருக்காங்க. அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்காங்க. கொஞ்சம் விளக்கமா தெரிந்து கொள்ளுவோமா?

    மோசே மூலமா பிதாப்பா தன்னுடைய இஸ்ரவேல் பிள்ளைகளை கானான் நடத்தி கொண்டு போகும் போது அவங்களுக்கு  பத்து கட்டளைகளும், எப்படி அவங்க வாழனும்னு என்பதை குறித்த நியாயப்பிரமாணமும் சொன்னாங்க. இஸ்ரவேல் மக்களை எகிப்துல இருந்து கானான் நடத்தி வந்த பிதாப்பாவுடைய அதிசயங்களையும், அற்புதங்களையும் நீங்க தெரிந்து கொள்ள ஆசைப்பட்டா அம்மாகிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுங்க. ஆறு இலட்சம் இஸ்ரவேல் மக்களை ஒரு அம்மா தன் குட்டி குழந்தையை தூக்கிட்டு வருகிற மாதிரிதான் நம்ம பிதாப்பா நடத்தி வந்தாங்க.

    இதை முதல்ல இருந்து பக்கத்திலேயே பார்த்து வந்த நம்ம மோசேக்கு பிதாப்பாவை பார்க்கணும்னு ஆசை வந்தது. அப்ப பிதாப்பா சொன்னாங்க. “நீ என் முகத்தைக் காணமாட்டாய். ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது” ன்னு. ஆனாலும் தன்னை பார்க்க ஆசைப்பட்ட மோசேக்கு தன்னை காண்பிக்க விருப்பம் கொண்ட நம்ம பிதாப்பா தன் கரத்தால் மோசேயை மறைத்து “என் பின்பக்கத்தைக் காண்பாய். என் முகமோ காணப்படாது” என்றார். இதை குறித்து யாத்திராகமம் புத்தகத்தில் 33 மற்றும் 34 அதிகாரங்களில் எழுதியிருக்கு.

    அது மட்டுமில்ல ஏசாயாவும் நம்ம பிதாப்பாவுடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்ததை பார்த்தார். அதற்கே “நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன். சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே”ன்னு ஏசாயா 6 : 3ல் சொல்லியிருப்பார்.

    எப்படிப்பட்ட ஒரு பரிசுத்தமான தேவன் நமக்கு இருக்கிறார். இப்படிப்பட்ட மகிமையுள்ள நம்ம பிதாப்பாவை குறித்து நம்மளுக்கு முழுமையாய் விளக்கம் கொடுத்தவர் நம்ம இயேசப்பாதான். நம்ம பிதப்பாவின்  வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிற நம்ம இயேசப்பாதான் ( சங்கீதம் 11௦ : 1 ) அவரை குறித்து வெளிப்படுத்தினாங்க.

    யோவான் புத்தகம் மூலமா நம்ம இயேசப்பா, தான் பிதாப்பாகிட்ட என்ன பார்த்தாரோ, எதை கேட்டாரோ அதைதான் சொன்னார் (யோவான் 3 : 32). எதை பிதாப்பா செய்ய சொன்னாங்களோ அதைத்தான் செய்தார்ன்னு தெரிந்து கொள்ளலாம் (யோவான் 6 : 38). சுருக்கமா சொன்னா நம்ம இயேசப்பா, பிதாப்பாவுக்கு கீழ்படிகிற பிள்ளை. அப்ப எங்களை மாதிரி செல்லப்பிள்ளை கிடையாதான்னு நீங்க கேள்வி கேக்குறதும் புரியுது. அதற்கான பதில்:

    நீங்க புதிய ஏற்பாடுல முதல் நான்கு புத்தகங்களை வாசித்து பார்த்தா நம்ம இயேசப்பா நிறைய தடவை பிதாவேன்னு சொல்லிருப்பாங்க. நீங்க கூட அப்படிதானே, அதுவும் அப்பா வீட்ல இருந்தா போதும் அப்பா, அப்பான்னு அப்பா பின்னாடியே சுத்துவீங்கலே?. நீதிமொழிகள் 8 :  23 – 31ல்  நம்ம இயேசப்பாவும் உங்களை மாதிரிதான் தன்னை பிதாப்பாவுடைய செல்லம்னு சொல்லியிருக்காங்க. இந்த உலகத்தை பிதாப்பா உருவாக்குறதுக்கு முன்னாடியே இயேசப்பா தான் பிதாப்பா கூட இருந்ததையும், தன் மூலமா உலகம் உருவானதையும் யோவான் 1 : 2,3ல் சொல்லியிருக்காங்க.

    இன்னும் நம்ம இயேசப்பா எப்படிப்பட்ட மகிமையுடையவர்ன்னு நீங்க தெரிந்து கொள்ள ஆசைப்பட்டா I யோவான் 1 : 1 , 2 வசனங்களில் நம்ம இயேசப்பாக்கு ரொம்பவே பிரியமானவரா இருந்த அவருடைய சீஷர் யோவான் என்ன சொல்லறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?

    1.  ஆதி முதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.

    2.  அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம்.

    நம்ம இயேசப்பா எவ்வளவு மகிமையுள்ளவர்ன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். நம்ம இயேசப்பாக்கு ரொம்பவே பக்கத்தில இருந்து, அவரை தொட்டு, அவர் மார்பில சாய்ந்து, அன்பாயிருந்த சீசன் யோவான் பத்மு தீவில இருக்கும் போது அவருக்கு நம்ம இயேசப்பா தன்னை எப்படி வெளிப்படுத்தினாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?

    12.  அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,

    13.  அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

    14.  அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் வெண்மையிருந்தது; அவருடைய கண்கள் அக்கினி ஜீவாலையைப் போலிருந்தது;

    15.  அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.

    16.  தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

    17.  நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்;

    என்ன குட்டிகளா, அவர் மார்பில சாய்ந்து, அன்பா இருந்த யோவான் என்பவரே நம்ம இயேசப்பாவின் மகிமையை தாங்க முடியாம அவர் பாதத்தில் விழுந்தார்ன்னு தெரிந்து கொண்ட போது என்ன தோணுது? நமக்காக இந்த பூமிக்கு ஒரு சாதாரண ஆளா வந்தாலும் அவர் என்றும் மகிமை நிறைந்தவர்தான்.

    நம்ம பிதாப்பாவுக்கும், இயேசப்பாவுக்கும் இடையே எந்த அளவுக்கு அன்பு இருந்தது என்பதும், நம்ம பிதாப்பா, இயேசப்பாவின் வல்லமையை குறித்தும் இப்ப உங்களுக்கும் புரிஞ்சுருக்கும். இனிமே நாம கேள்வி பகுதிக்கு போகலாமா?

     

     

     

     

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + eight = 9

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>