• இயேசு கிறிஸ்து யார்?(16)

    தேவ வார்த்தைகள்

    jesus16

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பாவை பற்றி சின்ன வயசில இருந்தே தெரிந்து வைச்சிருப்பீங்க. இப்ப நம்ம இயேசப்பா உங்களுக்கு சொல்லி கொடுக்கும் காரியங்கள் மூலமாகவும் கத்துட்டு இருக்கீங்க. நம்ம இயேசப்பாவின் பிறப்பு, அவருடைய ஞானஸ்நானம், சாத்தானால் நம்ம இயேசப்பா வனாந்தரத்தில் சோதிக்கப்பட்டது……இப்படி ஒவ்வொரு காரியத்தின் மூலமாகவும் நம்ம இயேசப்பா நம்ம கூட பேசிட்டு இருக்காங்க.

    நம்ம இயேசப்பா நமக்காக உயிர் கொடுக்கத்தான் இந்த உலகத்துக்கு வந்தாங்க என்பது உங்களுக்கு நல்லாவே தெரிந்த விஷயம். நம்ம இயேசப்பா தன்னுடைய ஞானஸ்நானம் அடுத்து கிட்டத்தட்ட 3 ½ வருசங்கள் ஊழியத்தில இருந்ததா பைபிள் குறிப்புகள் சொல்லுது. எதற்கு நம்ம இயேசப்பாவின் ஞானஸ்நானம் முக்கியமான பங்கு வகித்தது என்பதும், நம்ம இயேசப்பா எதற்காக 30 வருசங்கள் வரைக்கும் தன்னுடைய ஊழியத்தை செய்யாம இருந்தார் என்பதும் நமக்கு நம்ம இயேசப்பா பெத்தாபரா ஞானஸ்நானம் மூலமா அழகாக சொல்லி கொடுத்தாங்க. அது மட்டுமில்ல யோவான்ஸ்நானன் என்பரை நம்ம தேவன் இதற்காகவே முன் குறித்தார் என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

    நம்ம இயேசப்பா தன்னுடைய ஊழியமாகிய 3 ½ வருசங்கள் முழுவதும், அதாவது சிலுவையில அறையப்படுவதற்கு முதல் நாள் வரைக்கும் நம்ம பிதாப்பா வார்த்தைகளை ஒவ்வொரு இடமும் சொன்னாங்க. நிறைய அற்புதங்களும், அதிசயங்களும் செய்தாங்க என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும் குட்டிகளா.

    நம்ம இயேசப்பா செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் குறித்து நம்ம வேதாகமத்தின் முதல் நாலு புத்தகங்களிலும் சொல்லபட்டாலும், யோவான் புத்தகத்தில நம்ம இயேசப்பா சொன்ன வார்த்தைகளுக்கு நிறையவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். மத்தேயு புத்தகத்தில கூட நம்ம இயேசப்பாவுடைய மலை பிரசங்கம் சான்சே கிடையாது குட்டிகளா…..ரொம்பவே நம்ம மனதை கவர்ந்த விஷயம். அது மட்டுமா, மாற்கு புத்தகத்திலும் நமது தேவனுடைய வார்த்தைகளை குறித்து விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கு.

    லூக்கா புத்தகம், உங்களை மாதிரி உள்ள சிறு குழந்தைகள் கூட நம்ம தேவனுடைய வார்த்தைகளை புரிந்து கொள்ற மாதிரி அழகான சிறு சிறு கதைகளா நம்ம இயேசப்பா சொல்லி இருப்பாங்க. கதைகள்னு சொன்னதும் அப்ப கதைதானான்னு யோசித்திராதீங்க. நம்ம இயேசப்பா லூக்கா புத்தகத்தில் சொல்லப்பட்ட உவமைகள் அனைத்தும், உண்மை சம்பவங்கள். அந்த கெட்ட குமாரன், ஐஸ்வரியவான், லாசரு, தாலந்துகள், மன்னிப்பு ……. இப்படி எல்லாமே உண்மையில் நடந்த காரியங்களை உங்களுக்கு புரியுற மாதிரி கதைகளா சொல்லி இருக்காங்க.

    யோவான் புத்தகம் முழுவதும் நம்ம இயேசப்பாவுடைய வார்த்தைகள் மட்டுமே. கொஞ்சம் புரிந்து கொள்ள நம்மளுக்கு கஷ்டமா நாம நினைச்சாலும், அவர் உதவியோட ருசிச்சு பாருங்களேன், ரொம்பவே உங்களுக்கும் பிடிச்சி போகும்.

    என்னது…. நம்ம பைபிள்ல எந்த எந்த புத்தகத்தில என்ன இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களேன்னு தோணுதா குட்டிகளா. நமது தேவனுடைய வார்த்தைகளை பற்றிதான் நம்ம இயேசப்பா சொல்லி கொடுக்க போறாங்கன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். நம்ம தேவனுடைய வார்த்தைகளை பற்றி எந்த அளவு நாம தெரிந்து வைச்சிருக்கணும்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் குட்டிகளா. ஏன்னா இந்த பைபிள்ல முழுமையும் இருக்கிறது நம்ம தேவனுடைய வார்த்தைகள் குட்டிகளா. அதை உண்மையிலேயே நாம தெரிந்து கொள்ளாம நான் இயேசப்பா பிள்ளைன்னு ஓட்டம் ஓடினா சாத்தான் நம்மளை அவன் வலையில விழ வைக்கும் போது, என்ன நடந்தது…..ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியாமயே அவன் வலையிலேயே வாழ்நாள் முழுவதும் விழுந்து கிடக்க வேண்டியதுதான்.

    ஏன், நம்ம இயேசப்பா கூட நமக்கு சொல்லி கொடுத்திருக்காங்களே குட்டிகளா. நம்ம பைபிள் வசனங்களை நாம நல்லாவே தெரிந்திருக்கணும். அது மட்டுமில்ல பைபிள் வாசிப்பு எப்பவும் நுனி புல் மேயுற மாதிரி ஏனோ தானோ படிக்காம ஆழமா வாசிக்கணும்னு. ஆனா உங்களுக்கு நம்ம தேவ வார்த்தைகளின் ரகசியங்களை சொல்லி கொடுக்கிற பொறுப்பு நம்ம பரிசுத்த ஆவியானவருக்கு ஏற்கனவே பிதாப்பா கொடுத்துட்டாங்க. .    

    நம்ம தேவ வார்த்தைகள் எவ்வளவு மதுரமானதுன்னு நீங்க தெரிந்து கொள்ள ஆசைப்பட்டா சங்கீதம் 19ம் அதிகாரத்தை முழுவதும் வாசித்து பார்த்தா தெரிந்து கொள்ளுவீங்க.

    அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.

    சங்கீதம் 19 : 10  

    இவ்வளவு அழகான, அன்பான, எச்சரிக்கை நிறைந்த, வாக்குத்தத்தங்களால் நிரம்பப்பட்ட, ஆசீர்வாதங்களால் நிறைந்திருக்கிற நம்ம தேவனுடைய வார்த்தைகளை நீங்க இன்னும் தெரிந்து கொள்ள ஆசைபடுறீங்கன்னு எங்களுக்கும் புரியுது குட்டிகளா. அதற்கு உங்களுக்கு நம்ம இயேசப்பா சொல்லி கொடுக்கிற காரியம் தினமும் வேத வாசிப்பும், ஜெபமும் ரொம்பவே முக்கியம்.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 − seven =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>