-
இயேசு கிறிஸ்து யார்?(30)
நல்ல மேய்ப்பன்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பாவை நாம தப்பு செய்து தூக்கி எறிஞ்சிட்டு, உங்களை விட அந்த சாத்தானைத்தான் பிடிச்சிருக்குன்னு அவனுடைய வழிகளில் நடக்கிற நம்மளை அவர் கண்ணீரோட பின் தொடர்கிறார் குட்டிகளா. ஆனா நம்ம மனதில இன்னும் நிறையவே கேள்விகள் உண்டு, சரியா.
உண்மையில் இது எல்லாம் சாத்தியமா. எனக்குள்ள என் இயேசப்பா வாசம் பண்ணுகிறது சாத்தியமான காரியம். ஏன்னா நம்ம தேவன் எங்களை படைக்கும் போதே, சரீரம், ஆத்துமா, ஆவின்னு மூன்று விதாம படைத்திருங்காங்க. அதுனால நாங்க விருப்பப்பட்டு அவரை எங்க கிட்ட வந்து தங்க சொன்னாலும் சரி, இல்லை இயேசப்பா நீங்க உங்க பாட்டுக்கு உங்க வேலையை பாருங்க, நான் என் வேலையை பார்க்கிறேன்னு அவரை நான் அழைக்காம இருந்தாலும் சரி, எனக்குள் பரிசுத்த ஆவி இருக்கிறதால என்னில் அவருடைய சத்தத்தை நான் கேட்க முடியும். இல்லைன்னா சாத்தான் தன் விருப்பத்திற்கு ஏற்ப என்னை பந்தாட முடியும், அப்படிதான.
அப்படி இருக்கும் போது, என்னுடைய தப்புகள் அவரை அங்க இருக்க முடியாம துரத்தவோ இல்லை தூக்கி எறியவோ முடியுமா? அது மட்டுமில்ல நம்ம இயேசப்பாவை தன்னுள் பெற்றிருக்கிற பிள்ளைகளுக்கு மட்டும் இப்படி நடக்குமா இல்லை எல்லா பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி நடக்குமா?ன்னு உங்க மனது கேள்வி கேட்குது. குட் குட்டிகளா.
நம்முடைய மனதில நம்ம தேவனை பற்றிய காரியங்களை தெரிந்து கொள்ளுவதற்காக நீங்க கேள்விகள் எழுப்புவது தப்பில்லையே. ஆனா எந்த பதில் என்னுடைய இயேசப்பா சொன்னாலும், அவர் பதிலா சொல்லுற நேரத்தில மட்டும் என் காதை பொத்தி கொண்டு, திரும்பியும் கேள்வி அவரை நோக்கி கேட்டுட்டே இருப்பேன். இல்லைன்னா எல்லாரும் என்னை குறித்து தப்பா நினைச்சிருவாங்களே. இந்த மனுஷன் அவனுடைய இயேசப்பாவை பற்றி நினைக்கிறேனா இல்லை ஏனோ தானோ தன் வாழ்கையை ஓடிட்டு இருக்கேனா?ன்னு மற்றவங்க நம்மளை பற்றி தப்பா நினைச்சிர கூடாதே, அதுக்காகதான் இந்த கேள்விகளா?
நம்ம இயேசப்பாவை ஏன் குட்டிகளா கஷ்டப்படுத்துறீங்க. நீங்க கேள்விகள் கேட்டு உங்களுடைய விசுவாசத்தில இன்னும் வளர்ச்சி அடையறதில நம்ம தேவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா நான் கேள்வி மட்டும்தான் கேட்பேன். ஆனா அவர் என்னுடைய சந்தேகத்தை கொஞ்சம் கூட தப்பா நினைக்காம பதில் சொல்லும் போது மட்டும் காதை அடைத்துக் கொள்ளுவேன் என்பது என்ன காரியம்னு நம்மகிட்ட கேட்க ஆரம்பிக்கிறாங்க.
நம்ம இயேசப்பா நம்மகிட்ட ஏற்கனவே சொன்னாங்க. என்னுடைய சந்நிதானத்தில் நித்தமும் விழித்திருந்து எனக்கு செவி கொடுக்கிற மனுஷன் பாக்கியவான்னு சொல்லி இருப்பாங்க. அது மட்டுமில்ல அவரை தேடுகிறவர்களால் மட்டுமே அவரை கண்டடைய முடியும்னு, தேடாம ஏதோ சாப்பிட்டேனா…..இருக்கிற பொருளை இன்னும் சம்பாதித்தேனா(தேவனுக்கு பிரயமில்லாத வழியில்) ……. தூங்கினேனா …… எழுந்தேனா……இப்படின்னு வாழுறது என்ன வாழ்க்கை குட்டிகளா. நாம தேடுற பொருளால் நமக்கு நிம்மதியோ இல்லை சந்தோசமோ கிடைச்சிரும்னு ஏன் இன்னும் தேவையில்லாத கற்பனைகள். இதுல நாம செய்கிற தப்புக்கு அவரை துணைக்கு அழைக்கிறது. என் இயேசப்பா என்ன சொல்லி இருக்காங்க, மற்றவங்களை காயப்படுத்த கூடாது, எல்லார் மேலயும் அன்பா இருக்கிறாங்க. நான் வாழுற வாழ்கையிலையோ இல்லை என்னை சுத்தி நடக்கிற யாரயும் நான் கஷ்டப்படுத்தாம தான் வாழ்ந்திட்டு இருக்கேன். ,மற்றவங்களுக்கு உதவி செய்கிறோமா இல்லையோ அட்லீஸ்ட் உபத்திரம் பண்ண கூடாதுன்னு என்பதுதான் என்னுடைய பாலிசி.
உங்களுடைய புலம்பல்களும், அங்கலாய்ப்புகளும் முடிந்ததா குட்டிகளா. நம்ம இயேசப்பா நம்மகிட்ட பேசுறதை இப்பனாச்சும் கொஞ்சம் காது கொடுத்து கேட்போமா? நம்ம இயேசப்பாவை தேடாம, அவர் வழிகளில் நடக்காம கூட நம்மளால் ஒரு நல்ல வாழ்கையை, அதுவும் நம்ம தேவனுக்கு உகந்த வாழ்கையை வாழ முடியும்னு உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தது குட்டிகளா? நம்ம இயேசப்பா சொன்ன மாதிரி உங்களுக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவரா? நிச்சயம் அப்படி கிடையாதுன்னு உங்களுக்கே நல்லா தெரியும் குட்டிகளா.
என்னைக்கி நாம நம்மளுடைய எண்ணங்களால் நம்ம இயேசப்பாக்கு அடி பணிந்து வாழுறதை விட நாம நம்ம விருப்பபடி வாழுவோம், அதுவும் நாம சின்ன சின்ன வயசில இருந்து, நம்ம இயேசப்பாவால உண்டான தாக்கத்தை விட பிடிக்காம நான் என்னுடைய இயேசப்பா சொன்ன வார்த்தைகளின் படி வாழ முடியா விட்டாலும், அவருடைய பிள்ளையாதான் இந்த உலகத்தில வாழ ஆசைபடுறேன்னு தனி பாதை நமக்குன்னு கண்டுபிடித்தோமோ அன்னைக்கே நாம நம்ம இயேசப்பா கதறதை கூட பொருட்படுத்தாம அவரை தூக்கி வெளியே எறிந்தவங்க.
இன்னொரு தடவை அப்படி சொல்லாதீங்க. நாங்க ஏற்கனவே உங்ககிட்ட சொன்னோமே, என்னை மாதிரி இயேசப்பா பிள்ளைகள் மட்டும்தான் அவரை தூக்கி எரியுறோமா இல்லை எல்லாரும் இந்த வேலையைதான் செய்யுறோமான்னு கேட்டதுக்கு எங்க இயேசப்பா இன்னும் பதில் சொல்லவே இல்லை. தேவனை அறிந்த பிள்ளைகள் தேவனை தூக்கி எறியுறது உண்மை குட்டிகளா. ஆனா தேவனை பற்றி அறியாத பிள்ளைகள் இந்த தப்புகள் செய்யறதில்லைன்னு நீங்க யோசிக்க வேண்டாம். ஏன்னா நம்ம மேல நம்ம தேவன் இந்த அளவு கிருபை பாராட்டுகிறாரோ அதே அளவுக்கு அவரை பற்றி தெரியாத பிள்ளைகளுக்கும் கிருபை பாராட்டுகிறார். அவங்க எல்லா செல்வத்திலும் ரொம்பவே உயர்ந்திருக்கிறது நீங்க கண்ணார கண்ட காரியம். அப்படி இருந்தும் அவங்க, நம்ம இயேசப்பாவை பற்றி தெரிந்து கொள்ள அவர் இன்னும் வாய்ப்புகளை கொடுக்கிறார் குட்டிகளா.
அற்புத கூட்டங்கள், சர்ச்ல நடக்கிற கூட்டங்கள், விடுமுறை வேதாகம பள்ளிகள், இன்னும் சொல்லப் போனா நம்ம இயேசப்பாவை பற்றி வீட்டுக்குள்ளயே வந்து சொல்லுற இயேசப்பா சேனல்கள்…….ஏதோ ஒரு தூரம் போகிறவங்க கையில கொடுக்கப்படுகிற காகிதத் துண்டுகள்….இப்படி எத்தனையோ காரியங்கள். உங்களால் நினைச்சி பார்க்க முடியுதா குட்டிகளா. நம்ம இயேசப்பா தன்னை பற்றி தன் பிள்ளைகள் அறிந்து கொள்ளனும்னு அவர் எடுக்கிற முயற்சிகள். ரொம்பவே பிரம்மிப்பா இருக்கும்.
ஆனா கையில இயேசப்பா குறித்த காரியங்கள் காகிதத்தில வெளிப்படுத்த பட்டாலும், இல்லை வீட்டுல இருக்கிற அம்மாமார்களுக்கு டிவில சேனல் மாற்றுர நேரம் தேவன் வார்த்தைகள் முந்தி கொண்டு, அவங்களை தொட நினைத்தாலும், இல்லை மாட்டேன்…..இதை எல்லாம் யார் கேட்பா…..இதை எல்லாம் யார் பொறுமையா உட்கார்ந்து படிப்பான்னு இன்னும் ஓடிட்டேதான் இருக்காங்க குட்டிகளா. அதாவது நம்மளை குறித்து நம்ம இயேசப்பா சொன்னாங்களே, நாம நமக்குன்னு தனி பாதை உருவாக்கி அவரை கதற கதற நம்ம இருதயத்தில இருந்து தூக்கி வீசி எறியுற மாதிரிதான் அவங்களும், அவங்க இருதயத்தில இடம் பெற நினைக்கிற அவரை ஒரு கரப்பான் பூச்சியை அடித்து தூக்கி போடுற மாதிரி அந்த சேனல்லை உடனே மாத்துறாங்க………………இல்லை கையில அவரை கிடைக்கிற tracts என்கிற பொக்கிஷத்தை நல்லா சுருட்டி தூக்கி எரிஞ்சுறாங்க…….
இப்ப என்ன சொல்ல போறீங்க குட்டிகளா……நம்ம இயேசப்பா அவருடைய ஆடுகளா இருந்து திரும்பவும் உலகத்தின் வழிகளில் வாழ நினைக்கிற நம்மளை மட்டுமில்ல அவருடைய வார்த்தைகளை செவி கொடுக்காத ஆடுகளையும் தன்னுடைய மந்தையில சேர்க்கத்தான் பிரயாசபடுகிறார். எனக்கு எத்தனை ஆடுகள் இருக்கு பாரும்னு மற்றவங்ககிட்ட பெருமை பாராட்ட இல்லை குட்டிகளா, தன்னுடைய ஆடுகளுக்கு தன்னுடைய சமூகம் தவிர வேற எந்த இடமும் பாதுகாப்பானது கிடையாதுன்னு ஒரு மேய்ப்பனா இருக்கிற அவருக்கு தெரிந்ததால் தான் நம்ம எல்லாரையும் அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல ஆசைபடுகிறார். ஏன்னா சத்துருவானவன் எப்ப , யாரை விழுங்கலாம்ன்னு கெர்ச்சிக்கிற சிங்கம் போல எல்லா இடமும் சுத்திட்டு இருக்கிறதால தன்னுடைய ஆடுகளை காப்பாற்ற வேண்டியது ஒரு மேய்ப்பனாகிய அவருடைய கடமை ஆச்சே குட்டிகளா. இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும், அவருடைய பாதையில இருந்து விலகி போன நாமளா இருந்தாலும் சரி, இல்லை அவரை தெரிந்து கொள்ளவே முடியாத தூரத்தில வசிக்கிற ஆத்துமாவா இருந்தாலும் சரி, நாம எல்லாரும் அவருடைய பிள்ளைகள் தான். அவருடைய ஆடுகள்தான். ஏன்னா நாம எப்படிப்பட்டவர்களா இருந்தாலும், நம்மை தன்னுடைய கண்மணி போல பாதுகாக்கிற அவர் நல்ல மேய்ப்பன். ஆடுகளுக்காக தன்னுடைய உயிரையும் கொடுத்த, இப்பவும் கொடுத்திட்டு இருக்கிற அவர் உண்மையான மேய்ப்பன்.
இயேசு கிறிஸ்து யார்?(29) இயேசு கிறிஸ்து யார்?(31)
இயேசு கிறிஸ்து யார்?(30)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives