• இயேசு கிறிஸ்து யார்?(31)

    எந்த நிலையில் இருக்கிறோம்?

    jesus31

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பா நம்முளுடைய தப்புகளால் எந்த அளவுக்கு வேதனை படுகிறார் என்பதை நீங்களும் இப்ப தெரிந்து வைச்சிருப்பீங்க. அது அவருடைய மந்தையில இருக்கிற நாமளா இருந்தாலும் சரி, இல்லை அவர் யார், அவருக்கு நான் ஏன் செவி கொடுக்கணும்னு சொல்லிட்டு இருக்கிற அவருடைய மந்தையில இல்லாத ஆடுகளா இருந்தாலும் சரி, ரொம்பவே சரி விகிதமாகவே கஷ்டப்படுத்துறோம் என்பது தான் உண்மை.

    நம்ம இயேசப்பா நம்மளுடைய தப்புகளால் தூக்கி எறியப்படுறார் என்பதை முழுமையா தெரிந்து வைச்சிருப்பீங்க. அதுனால இனிமே நான் தப்பு செய்யும் போது அவர்தான் முகத்தை தூக்கி வைச்சிட்டு போகிறார்ன்னு நம்ம மனசாட்சிக்கு விரோதமா பொய் சொல்ல மாட்டோம்னு நம்புறோம்.

    இனிமே நம்ம இயேசப்பா நம்மளை ஏன் கோபப்பட்டு கடிந்து கொள்ளுகிறார்ன்னு தெரிந்து கொள்ளுவோமா?

    சரி குட்டிகளா, எங்களுக்கு முதலில் சொல்லுங்க, நம்ம தேவன் முதலில் எப்ப கோபப்பட்டார்னு சொல்ல முடியுமா? ரொம்பவே நல்லா தெரியுமே, ஆதாமும், ஏவாளும் நன்மை, தீமை மரத்தின் பழத்தை சாப்பிட்டு அவர் கூப்பிட கேட்காம இருந்தாங்களே, அப்பதான் கோபப்பட்டார் . நீங்க சொன்னது முழுக்க முழுக்க சரி குட்டிகளா. அதாவது நன்மை, தீமை மரத்தின் பழத்தை சாப்பிட்டு, தான் டிரஸ் போடவே இல்லை என்பதை தெரிந்து கொண்டதால அத்தி மரத்தின் இலைகளை தைச்சு டிரஸ்ஸா போட்டுக் கொண்டாங்க. அடுத்து, நம்ம தேவன் உலாவுகிற சத்தத்தை கேட்டு அவர் சந்நிதிக்கு விலகி தோட்டத்தில இருந்த மரங்கள் இடையில ஒளிந்து கொண்டாங்க.

    அடுத்தும் நம்ம தேவன் கூப்பிட்ட பிறகு, நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்தில கேட்டு, நான் டிரஸ் போடலை என்பதால பயந்து, ஒளித்துக் கொண்டேன்னு சொன்னாங்க. ஆனா நம்ம தேவன் அவங்க தன்னுடைய பேச்சை மீறின அந்த நொடியே அவர் அவங்க மேல கோபப்பட்டார்ன்னு சொல்ல முடியுமா? சப்போஸ் அப்படி சொன்னா நாம தேவனுடைய வார்த்தைகளை பொய்யாக்கிறோம்னு அர்த்தம்.

    உங்களுக்கு ஏற்கனவே தெரியும் குட்டிகளா, நம்ம வேதாகமத்தில இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு புத்தகமும், நம்ம தேவ ஆவியானவரால அவருடைய பரிசுத்தவான்களுக்கு அருளப்பட்ட பொக்கிஷம். அதுனால இந்த வேதாகமத்தில தேவையில்லாத கற்பனைகள் இருக்குன்னு நாம எதையும் நினைக்கவும் முடியாது. அதே மாதிரி எழுதினவங்க நம்ம தேவனை ஒரு சூப்பர் ஹீரோவா ஆக்க கஷ்டப்பட்டு எழுதின கற்பனை கிடையாது.

    என்றும் நீங்க ஞாபகத்தில வைக்க வேண்டிய காரியம் குட்டிகளா. நம்ம பைபிள்ல இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும், நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்கு எது தேவையோ, அதை மட்டுமே சொல்லி இருப்பாங்க. உங்களுக்கு விளக்கமா சொல்லனும்னா, நம்ம தேவன் எழுதின இந்த வேதாகமத்தில மொத்தம் 66 புத்தகங்கள் இருக்கு குட்டிகளா. இதுல எந்த எழுத்துகள், எந்த கருத்துகள் தன்னுடைய பிள்ளைகளுக்கு தேவையோ அதை மட்டுமே  நம்ம தேவன் கொடுத்திருக்கிறார். மற்றவை வரலாற்று ரீதியா இருந்தாலும், நம்ம தேவன் அதன் மூலம் தன்னுடைய பிள்ளைகளுக்கு உபயோகம் இல்லைன்னு யோசித்திருந்தாலோ இல்லை அது தன்னுடைய பிள்ளைகளுக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே பலமான ஆகாரம்னு நினைச்சிருந்தாலோ கண்டிப்பா அவர் தன்னுடைய பிள்ளைகளுக்கு விலகி வைத்திருப்பார்.

    நம்ம தேவன் ஆதாம், ஏவாள் மேல கோபப்படுரதுக்கு முன்னாடி என்ன காரியங்கள் நடந்ததுன்னு தெளிவா தன்னுடைய வார்த்தைகளில் சொல்லி இருப்பாங்க. நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகளாகிய ஆதாம், ஏவாள் மேல கோபப்படுரதுக்கு முன்னாடி நிறைய சம்பவங்கள் நடந்ததுன்னு நீங்களும் ஒத்துக்குவீங்க. சரியா குட்டிகளா. முதலில் சாத்தான் மூலமா ஏவாள் வஞ்சிக்க பட்டாள். அடுத்து அந்த பழத்தை பார்த்தாங்க. அதனுடைய அழகில இச்சை கொண்டாங்க(நீங்க பார்க்க வேண்டிய முக்கியமான காரியம், இச்சைக்கும், பார்வைக்கும் வித்தியாசம் உண்டு). அடுத்து அந்த பழத்தை சாப்பிட்டாங்க. அதை தன்னுடைய கணவனாகிய ஆதாமுக்கும் கொடுத்தாங்க. அடுத்து இரண்டு பேருடைய கண்களும் திறக்கப்பட்டது(சாரி குட்டிகளா, கண்கள் திறக்கப்பட்டதுன்னா இது வரைக்கும் அவங்க எதையும் பார்க்காமயே இருந்தாங்களான்னு யோசிக்க வேண்டாம். உண்மையில் என்ன நடந்ததுன்னா நம்ம தேவனை என்றும் பக்கத்திலேயே உணர்கிற அந்த ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டு, உலகத்தின் கண்கள் திறக்கப்பட்டது). ரொம்பவே நீங்க வருத்தப்படுரீங்கன்னு புரியுது குட்டிகளா.

    இப்பவும் நம்ம இயேசப்பா நம்ம பக்கத்தில இருந்தாலும்( நம்ம தப்புகளால் அவரை தூக்கி எறியுரதால….இல்லைன்னா உள்ளேயே இருந்திருப்பாங்க), அவரை பார்க்க முடியாம, அப்பா தயவு செய்து என்னுடைய ஆவிக்குரிய கண்களை திறங்க. உங்களை நான் பார்க்கணும். உங்களோட என்றும் உம்முடைய பிள்ளையா வாழணும்னு ஆசைபட்டாலும், அடுத்த நொடியே எனக்கு எங்க அவர் தன்னை காண்பிக்க போறார்ன்னு விரக்தி அடைந்து நம்மளுடைய routine வேலையில நுழைந்திருப்போம் குட்டிகளா. எல்லாவற்றையும் சாத்தான் எவ்வளவு வஞ்சனையா செய்திருக்கான் பார்த்தீங்களா…………

    அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு முதலில் தோணினது, அவங்க டிரஸ் இல்லாம இருந்ததுதான். அவங்க தன்னுடைய தேவனுக்கு விரோதமாய் தப்பு செய்தது அவர்களுக்கு மனதில தோணலை. நாம தப்புகள் செய்யும் போதும் இதுதான் பிரச்சனை குட்டிகளா. நாம சப்போஸ், வீட்டுல அம்மா/அப்பாகிட்ட சொல்லிக்காம நண்பர்கள் சொன்னாங்கன்னு சினிமா போயிருந்திருப்பீங்க. அந்த சமயத்தில நம்ம இயேசப்பாவை கஷ்டப்படுத்திட்டோம்….அம்மா/அப்பாகிட்ட பொய் சொல்லிட்டோம்னு முதலில் தோணாது. அம்மா/அப்பாக்கு தான் சினிமா பார்த்த காரியம் தெரிந்திருமோன்னு அங்கிட்டும், இங்கிட்டும் சுத்தி, தனக்கு தெரிந்தவர்களோ, அம்மா/அப்பாக்கு தெரிந்தவர்களோ இருக்காங்களான்னு முதலில் செக் பண்ணுவோம். சரிதான. நம்ம தேவனை விட்டுட்டு ஓடினது நமக்கு தோணாது. மற்றவங்க முன்னால நாம வெட்கப்பட்டிருவோம்னு உள்ள பயம் தான், உலகத்தின் பார்வை மட்டும்தான் அந்த நொடியில கூட தோணும். இப்ப புரியுதா குட்டிகளா. நன்மை, தீமை மரத்தின் பழத்தை சாப்பிட்ட உடன் அவர்களின் கண்கள், அதாவது உலகத்தின் கண்கள், நான் எப்படிப்பட்டவன்னு உலகம் பார்க்கிறது ன்னுதான் முதலில் தோண வைக்கும்.

    இப்ப ஆதாம், ஏவாள்கிட்ட என்ன தோனுச்சுன்னு உங்களாலுயும் புரிந்து கொள்ள முடியும். அவங்களுக்கு முதலில் தோணினது, தான் டிரஸ் இல்லாம இருந்தது. அதாவது மற்றவங்க பார்க்கும் போது, தன்னை என்ன நினைப்பாங்க என்கிற எண்ணம். அவங்களுக்கு டிரஸ் போடாம படைத்தது நம்ம தேவனுடைய விருப்பம். எப்ப அவங்களுக்கு அதை தரணும்னு அவர் முடிவு பண்ணியிருப்பார்னு நமக்கு தெரியாது குட்டிகளா. ஆனா அவங்களை பார்த்து, பார்த்து ஏதேன் தோட்டத்தில வைத்தவருக்கு சகலமும் தெரியும். அப்ப இந்த தேவையில்லாத எண்ணம் தேவையா குட்டிகளா. நான் என்னுடைய இயேசப்பா பேச்சை மீறி ஓடிட்டு இருக்கேன் என்கிற என்னத்தை விட தேவையில்லாம உலகம் என்னை பற்றி என்ன நினைக்கும், என்ன நினைக்கிறது தேவையில்லாத கவலைகள் தேவையா குட்டிகளா. சாத்தனின் தந்திரமே இதுதான், நம்மளை நம்ம தேவனுக்கு விரோதமாய் வாழ்ந்திட்டு இருக்கிறதை புரிந்து கொள்ள விடாம உலகம் என்னை பற்றி என்ன நினைச்சிட்டிருக்குன்னு யோசிக்க வைத்து குழப்பம் அடைய வைக்கிறதுதான் அவன் வேலை.

    அடுத்து என்ன நடந்தது குட்டிகளா, உடனே அத்தி இலைகளை தைச்சு டிரஸ்ஸா போட்டு கொண்டாங்க. நாம கூட அப்படிதான, தப்புகள் செய்த பிறகு, தன்னை மற்றவங்க தப்பா நினைக்க கூடாதுன்னு நினைச்சி நம்மளை நல்லவங்களா மாற்றி கொள்ற சில விசயங்கள் செய்வோம். உண்மையில அது ரொம்பவே வேடிக்கையானவை மட்டுமே. அதுனால கண்டிப்பா எந்த வகையிலும் தீர்வுகள் ஏற்படாதுன்னு தெரிந்திருந்தாலும், நம்ம மனதுக்கு திருப்தியான காரியங்கள் சில நேரத்தில இப்படியும் செய்யுறோம், சரியா குட்டிகளா.

    அடுத்து என்ன செய்தாங்க குட்டிகளா, நம்ம தேவனுடைய சத்தத்தை கேட்டதும், மரங்களின் நடுவில் ஒளிந்து கொண்டது. நம்ம தேவனுக்கு மறைவா இந்த உலகத்தில எதுவும் கிடையாதுன்னு நமக்கு தெரியும் குட்டிகளா. ஆனா நம்ம தேவன் நம்மளுடைய சத்தம் கேக்கும் போது நாம கூட அப்படிதான செய்கிறோம் குட்டிகளா. நாம தப்புகள் செய்திட்டு, உலகத்திற்கு நான் நல்லவன்தான், நான் செய்த தப்பு அவங்களுக்கு எங்க தெரிய போகுதுன்னு நம்மளை நாமே ஏமாற்றி ஓடினாலும், இருதயங்களை சோதித்து அறிகிறவர் அதை அறியாரோ குட்டிகளா. ஆனாலும், மற்றவங்க மூலமாயோ இல்லை நம்ம தேவனுடைய ஆலயத்திலையோ அவர் வார்த்தைகளை நமக்கு வெளிபடுத்துவார்(இங்க நீங்க கவனிக்க வேண்டியது, தேவன் நம்மளை கோபப்பட்டு பேசலை, தேவன் தன்னுடைய வார்த்தைகளை சொல்லும் போது கூட அதை நம்ம இருதயத்தில நம்ம தப்புகளை உணர்த்துகிற காரியத்தினால). சப்போஸ் அந்த வார்த்தைகள் கேட்டவுடன் ஒண்ணு சர்ச்ல அந்த இடத்தில இருந்து விலகிருவோம் இல்லை சேனல்ல தேவன் சத்தத்தைக் கேட்டவுடன் உடனே சேனல்லை ஆப் அல்லது மாற்றுர வேலை செய்வோம். நாங்க சொல்லுறது உண்மைன்னு நீங்களும் ஒத்து கொள்ளுறீங்க. நம்ம தேவனுடைய வார்த்தைகளை நாம மறுக்க முடியாதுன்னு நமக்கு நல்லாவே தெரியும் குட்டிகளா. நம்ம தேவனுடைய சத்தத்தை கேட்டவுடன் ஒளித்து கொள்ளுதல்ன்னா உங்களுக்கும் இப்ப புரிந்திருக்கும் குட்டிகளா.

    அடுத்து என்ன செய்தாங்க குட்டிகளா, நம்ம தேவன் ஆதாமை கூப்பிட்டு, எங்கே இருக்கிறாய்ன்னு கேட்டாங்க. எங்களுக்கு ஒண்ணு சொல்ல முடியுமா? வலுசர்ப்பம் ஏவாளை வஞ்சித்த அந்த நொடியில இருந்து, ஆதாமும், ஏவாளும் மரங்களுக்குள்ளே ஒளிந்து கொண்ட காரியங்கள் எல்லாம் நம்ம தேவனுக்கு தெரியாதா? எல்லாம் நம்ம தேவனுக்கு தெரிந்திருக்குமேன்னு நீங்களும் ஆச்சர்யமா சொல்லுறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. நம்ம தேவனுக்கு எல்லாம் தெரியும் என்பது உண்மைதான் குட்டிகளா. ஆனா நம்ம தேவன் ஆதாமை கூப்பிட்ட சமயம் என்ன சொல்லி கூப்பிட்டார்? எங்கே இருக்கிறாய்னு கேட்டாங்க.

    முதலில் கூப்பிடும் போதே, ஏன் ஆதாம் நான் சொன்ன பேச்சை மீறினன்னு திட்டிட்டு கூப்பிடலை. இப்ப புரியுதா குட்டிகளா. தன்னுடைய பிள்ளைகள் தப்பு செய்திருந்தாலும், அவர்களை முதலில் கடிந்து கொள்ளலை குட்டிகளா நம்ம தேவன். ஏன்ன்னு சொல்ல முடியுமா? தன்னுடைய பிள்ளைகள் தான் செய்த தப்பை, நான் அவர்களை நோக்கி கூப்பிடும் போதுனாச்சும் மறைக்காம வெளிபடுத்துவாங்கன்னு அவங்க மேல அவர் வைச்சிருந்த முழுமையான நம்பிக்கை. ஆனா அதை, அவர் அவங்க மேல வைச்சிருந்த நம்பிக்கையை அவங்க உதாசீன படுத்தினாங்க.

    தான் செய்த தப்பை நம்ம தேவன்கிட்ட சொல்லியிருந்தா அடுத்து அவர் கொடுத்த தண்டனைக்கு ஆளாகி இருக்க வேண்டிய அவசியம் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் வந்திருக்காதுன்னு நினைக்கிறோம். ஏன்னா பிதாப்பா, என்னை மன்னிச்சிருங்க, நீங்க சொல்லியும் கேட்காம, நாங்க அந்த பழத்தை சாப்பிட்டோம்னு சொல்லியிருந்தா அப்பவே அந்த தப்பை நம்ம தேவன் மன்னிச்சிருப்பார். நாம கூட அப்படிதான குட்டிகளா, நம்ம தேவன் சத்தத்துக்கு ஒளிஞ்ச பிறகும், ஆவலாய் நம்மை தேடி அவரே வந்தாலும்(நீ ஏன் தப்பு பண்ணினன்னு ஒரு வார்த்தையும் கேட்காம நம்மளை பார்க்க ஆசையாய் வந்திருக்காங்க), அப்பனாச்சும் அந்த அன்புக்கு முன்னாடி னாச்சும் தாழ விழுந்து, சாரி இயேசப்பா, நான் நேற்று, இல்லை போன வாரம், இல்லை இன்னைக்கி இந்த தப்பை பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்கன்னு கேட்டிருக்கோமா குட்டிகளா. 

    ஆனா நம்ம தேவன் ரொம்பவே ஆவலா ஆதாம், ஏவாள் அவங்க செய்த தப்பை ஒத்துக் கொண்டு சாரி கேட்பாங்கன்னு கூப்பிட்டா என்ன சொன்னாங்க குட்டிகளா, நான் தேவரீருடைய சத்தத்தை தோட்டத்தில கேட்டு, நான் டிரஸ் இல்லைன்கிற, பயம் வந்ததால ஒளித்துக் கொண்டேன். குட்டிகளா, இதுல உங்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். என்னதுன்னா தேவரீருடைய சத்தம்ன்னு ஆதாம் சொல்லுறது, நம்ம தேவன் சத்தமா இல்லை வேற எதுவும் சத்தமா?ன்னு. உண்மையில நம்ம தேவனுடைய சத்தம்னா கண்டிப்பா அது நம்ம தேவனை நோக்கி தான் அழைத்து செல்லுமே தவிர அவர்கிட்ட இருந்து ஒளிந்து கொள்ள வழி கொடுக்காது குட்டிகளா. நாம நம்ம தேவனை விட்டு ஓட வைக்கிறது நம்ம குற்ற மன சாட்சியா இருந்தாலும், சரியா கண்டுபிடிங்க குட்டிகளா, அது என் தேவனை நோக்கி ஓட வைக்குதா இல்லை அவரை விட்டு விலகி ஓட வைக்குதா……விலகி ஓட வைச்சா கண்டிப்பா அது நம்ம தேவன் சத்தம் இல்லை உலகத்தின் சத்தம் அதாவது சாத்தானின் சத்தம். சரியா கண்டுபிடிக்கலைனா நம்ம வாழ்நாள் முழுவதும் நான் தப்பு செய்திட்டேன்ன்னு ஓடிட்டு இருக்க வேண்டியதுதான் குட்டிகளா. என்றும் விடுதலை கிடையாது.

    அதுனால உங்களுக்கும் இதுல தெளிவு வந்திருக்கும். ஆதாம் குறிப்பிட்டது சாத்தானின் சத்தம் தான். அதுனால நான் பயந்து ஒளித்து கொண்டேன் சொன்னது, உலகத்திற்கு பயந்து நான் என்னை நான் என்னை நல்ல பிள்ளையா காண்பித்து கொண்டேன் என்பது தான் அர்த்தம். நம்ம தேவனுடைய மனது எந்த அளவுக்கு உடைந்து போயிருக்கும்னு உங்களாலயும் புரிந்து கொள்ள முடியும். தன்னுடைய பிள்ளைகள் செய்த தப்புக்கு சாரி சொல்லிட்டு, தன்கிட்ட மீண்டு வருவாங்கன்னு அவர் நினைக்க, சாத்தானை ஒரு தேவனாகவும், தன்னை படைத்த தேவனை அற்பமாகவும் நினைச்சி தன்னுடைய வார்த்தைக்கு கீழ்படியாதது மட்டுமில்ல, அவன் ஆலோசனையின் படி நான் செய்தேன் பார்த்தீங்களா? நான் டிரஸ் போடாததை எவ்வளவு அழகாக மறைச்சிட்டேன்ன்னு சொன்னப்ப நம்ம தேவன் கோபத்திற்கு உச்சிக்கு போய் இரண்டு அறை கொடுத்திருந்தாலும் சரிப்படும்ன்னு நீங்களும் நினைக்கிறீங்களா…………………

    குட்டிகளா, நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகள் தப்புகள் செய்யும் போது கூட, அவங்க செய்கிற தப்புகள் தன் கண் முன்னால் இருந்து தன்னை வேதனைபடுத்தினாலும் கூட எத்தனை சந்தர்ப்பங்கள் அவங்க தான் செய்த தப்பை ஒத்துக் கொள்ள கொடுக்கிறாங்கன்னு இப்ப நீங்களும் புரிந்திருப்பீங்க. இது யாருக்கோ சொல்லலை குட்டிகளா, நம்மளை பார்த்துதான் சொல்லுறாங்க…..நான் உன்னை கடிந்து கொள்ளுகிற தேவனா…..ஏன் என்னை அப்படி நினைச்சன்னு வேதனையில தான் கேட்கிறாங்க. அவருக்கும் கோபம் வரும், ஆனா எந்த சூழ்நிலையில வந்ததுன்னு ஆதாம், ஏவாள் மூலமா நமக்கு சொல்லி கொடுத்திருக்காங்க.

    சொல்லுங்க குட்டிகளா, நாம இப்ப எந்த நிலையில இருக்கிறோம்?

    • சாத்தானின் வஞ்சக பேச்சை கேட்டுட்டு இருக்கோமா?
    •  பழத்தின் இச்சையில் இருக்கிறோமா?
    • பழத்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறோமா?
    • மற்றவங்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறோமா?
    • உலகத்தின் கண்கள் திறக்கப்பட்ட நிலையில இருக்கிறோமா?
    • உலகம் என்னை எப்படிப்பட்டவன் நினைக்கிற டிரஸ் இல்லாத   நிலையை பற்றி யோசிக்கிற நிலையில் இருக்கிறோமா?
    • நான் நல்லவன்/நல்லவள் என்கிற காரியத்தை நியாயப்படுத்துற அத்தி இலைகளை தைச்சி போடுற நிலையில இருக்கிறோமா?
    • தேவ சத்தத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறோமா?
    • அவர் கூப்பிடும் போது நான் என்ன அழகாக இந்த உலகத்தில நல்ல பிள்ளையா வாழ்ந்திட்டு இருக்கேன்னு தேவனை வேதனைபடுத்தி வாழுற நிலையில இருக்கிறோமா?

    சீக்கிரம் அவர்கிட்ட சேரனும் குட்டிகளா. இல்லை வரும் கோபத்திற்கு எப்படி எதிர் நிற்க முடியும்?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 × = eighty one

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>