• இயேசு கிறிஸ்து யார்?(12)

    களியாட்டுகள்

    jesus12

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.

    நம்ம இயேசப்பா நம்மகிட்ட அடுத்த கேள்வியை பத்தி என்ன சொல்லுறாங்கன்னு கேட்கலாமா?

    நீங்க பைபிள்ல நல்லா தெரிந்து வைச்சிருக்கிற பகுதி, அது மட்டுமில்ல நம்ம இயேசப்பா பற்றி படம் பார்த்தும் இந்த கேள்வியை நல்லாவே தெரிந்து வைச்சிருப்பீங்கன்னு நாங்க நம்புறோம். ஆனா அதை பத்தி நம்ம இயேசப்பா நம்மகிட்ட பேசுறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்க ஆசைபடுறாங்க. பதில் சொல்லுவீங்களா குட்டிஸ்?

    உங்க முன்னாடி சாத்தான் வந்து உனக்கு இயேசப்பாவை பிடிக்குமா? இல்லை என்னை பிடிக்குமா?ன்னு கேட்டா நீங்க தைரியமா சொல்லுவீங்க. அப்பாலே போ சாத்தானே. எனக்கு என்றும் அவரை தான் பிடிக்கும்னு. அடுத்த கேள்வியை சாத்தான் கேட்கிறான். உனக்கு நீ பார்க்கிற கார்ட்டூன் சேனல்ல இது பிடிக்குமா? இல்லை அது பிடிக்குமா?ன்னு(சாரி குட்டிஸ், நம்ம இயேசப்பா உங்களுடைய கார்ட்டூன் பற்றி கூட சொல்ல விருப்பப்படலை) கேட்டா என்ன சொல்லுவீங்க?

    எனக்கு அந்த ஸ்டோரி ஏன் பிடிக்கும்னா……. கதை சொல்லுவீங்களா குட்டிஸ்? அதுவும் சாத்தான்கிட்டயா. உங்களுக்கே புரியுதா குட்டிகளா. நீங்க இது வரை செய்து வந்த தப்பு என்னன்னு.

    நம்ம இயேசப்பாவை பற்றி சப்போஸ் உன்னுடைய கிளாஸ் மேட் கேட்டா எத்தனை நொடிகள் அவரை பத்தி சொல்ல முடியும். அது வந்து என்னன்னா…..இயேசப்பா பெத்தலகேமில் பிறந்தாங்க. அடுத்து பெரியவரா ஆன பிறகு நிறைய அதிசயங்கள் செய்தார்ன்னு எங்க அம்மா/அப்பா சொன்னாங்க. என்னன்னு சப்போஸ் அந்த பையன் கேட்டா நடக்க முடியாதவங்களை நடக்க வைச்சாராம். கண் தெரியாதவங்களை பார்க்க வைச்சாராம். இப்படி  நிறைய அற்புதங்கள்……நீ பைபிள் வாசித்திருக்கியான்னு கேட்டா எங்க அதற்கு நேரம் இருக்க போகுது, நைட் அம்மா/அப்பா திட்டுவாங்கன்னு ஒரு அதிகாரமோ இல்லை பத்து வசனங்கள் மட்டும்.

    அடுத்த நாள் எங்க அம்மா அந்த வசனத்தை திருப்பி கேட்காம இருந்தா யார் படிக்க போறா?ன்னு சிறு முறுமுறுப்பு வந்திருக்கா குட்டிகளா. ஆனா உன்னுடைய நண்பன் உன்னை கஷ்டபடுத்த கூடாதுன்னு நினைச்சி, ஏன் இந்த மாதிரி மூட் அவுட் ஆகுற. நீ அந்த கார்ட்டூன் சேனல்ல வரும் அந்த நிகழ்ச்சியை பார்த்திருக்கியா?ன்னு கேட்டா மட்டும் உங்க முகம் எல்லாம் ஏன் குட்டிகளா, அத்தனை மகிழ்ச்சி. அதுவும் அவன் உங்ககிட்ட தான் அதை பார்க்கலைன்னு சொல்லிட்டா, மதியம் சாப்பாடை கூட மறந்து அரை மணி நேரமோ இல்லை ஒரு மணி நேரமோ கதையை முடிக்கிற வரைக்கும் அவனையும் சாப்பிட விடாம, நீங்களும் சாப்பிடாம, ஏன் அவ்வளவு தூரம் விருப்பமா குட்டிகளா.

    உங்களை மட்டும் என்ன சொல்ல குட்டிகளா, நீங்க அழுது அடம் பிடிக்கும் போது பரவாயில்லைன்னு, நம்ம அம்மா/அப்பாவும் உங்களை டிவி பார்க்க விடுறாங்களே. சின்ன வயதில நீங்க பிடிக்கிற அடத்தை அவங்க இன்னும் இன்னும் ஊக்கப்படுத்தி உங்களுடைய வேதனைகளை நீங்க சுமக்கறதுக்கு அவங்களே காரணமா ஆயிறாங்க. என்ன குட்டிகளா, கொஞ்சம் கோபமாகவே பார்க்கிற மாதிரி தோணுதே? சாரி குட்டிஸ், உங்க அம்மா/ அப்பா ஏற்கனவே உங்களை திட்டிட்டு சொல்லறது, நாங்க பரிதாபப்பட்டு சொல்லுறோம். அதுதான் வித்தியாசம்ன்னு எங்ககிட்ட கேட்க ஆசைபடுறீங்க, சரியா.

    சாரி குட்டிஸ், நீங்க ஏற்றுக் கொள்ள எளிமையா நினைச்சாலும், கஷ்டமா நினைச்சாலும் இதுதான் உண்மை. டிவி பார்க்கிற காரியமா இருந்தாலும், இல்லை நம்ம தேவனுக்கு பிடிக்காத எந்த காரியமா இருந்தாலும், அதை வேண்டாம்னு சொன்னா நீங்க வருத்தப்படுவீங்கன்னு உங்க அம்மா/அப்பா அனுமதிச்சா “ஏற்கனவே பாரத்தினால் சோர்ந்து போயிருக்கிற கிறிஸ்தியான் மேல இன்னும் பாரத்தை தூக்கி வைக்கிற மாதிரி”. ஆனா அந்த கிறிஸ்தியானுக்கு சிலுவை பக்கம் வந்த பிறகு பாரத்தில இருந்து விடுதலை கிடைச்சது. ஆனா தேவ பிள்ளைகளாகிய நமக்கு, அதாவது எனக்காக என் இயேசப்பா எல்லா வலிகளையும் ஏற்றுக் கொண்டாங்க. தன்னுடைய ரத்தத்தினால் என்னை அவரை போல மாற்றுவாங்கன்னு தெரிந்த பிறகும் துணிந்து செய்கிற தப்புக்கு என்ன செய்ய குட்டிகளா?

    என்னுடைய பிள்ளைகளை என்னால விட முடியாதுன்னு உங்களை இரண்டு கொடுத்து கதற, கதற நம்ம இயேசப்பா இழுத்துட்டு போகட்டுமா இல்லை இப்ப விட்டா எப்ப என் பையன்/பொண்ணு இதை எல்லாம் சந்தோசமா என்ஜாய் பண்ண முடியும்ன்னு உங்களை கை கழுவிட்டு நீங்க நரகத்திற்கு போகறதை வேதனையோட நம்ம இயேசப்பா பார்த்து கொண்டு நிற்கட்டுமா?

    என்ன குட்டிகளா, ரொம்பவே அமைதியாயிட்டீங்க? சினிமா, கார்ட்டூன், வீடியோ கேம்ஸ் இதை எல்லாம் பார்க்கிறது தப்பா? வீட்டுல எங்க அம்மா/அப்பாதான் எங்களை கொடுமைபடுத்துறாங்கன்னா நீங்களுமா?ன்னு கேள்வி கேட்க நினைக்கிறீங்க. சரியா குட்டிகளா. நம்ம பைபிள்ல இருந்து உங்களுக்கு சொல்லணும்னா கலாத்தியர் 5ம் அதிகாரத்தில் வரும் மாம்சத்தின் கிரியைகளில் கடைசியா சொல்லப்பட்டிருக்க களியாட்டுகள். அதாவது உங்களுக்கு களிப்பை(சந்தோசத்தை) தருகிற ஆட்டங்கள். அப்ப என்ன என்ன அதுல வரும்னு நீங்களே பட்டியல் இட்டு கொள்ளுங்க. உங்களுக்குள்ள இருக்கிற காரியங்கள் உங்களுத்தான் தெரியும். அதுனால நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க. ஒரே ஒரு காரியத்தை உங்களுக்கு நம்ம இயேசப்பா சொல்ல ஆசைப்படுறாங்க. ஆட்டங்கள் வேற களியாட்டங்கள் வேற. நீங்க உங்க ஸ்கூல்ல உங்க நண்பர்களோட விளையாடுற விளையாட்டுகள் வேற. அதே சமயம் நேரம் போகறதே தெரியாம வீடியோ கேம்ஸ்லயும், கார்ட்ஸ்லயும் இன்னும் எத்தனை உண்டுன்னு உங்களுக்கும் தெரியும் குட்டிகளா. இனிமேலும் நீங்க தொடர ஆசைபடுறீங்களா.

    நம்ம இயேசப்பா நாம பார்க்கிற சினிமால இருந்து நீங்க வாவ்…என்ன அழகாக கிராபிக்ஸ் பண்ணிருக்கான்னு பாராட்டுற கார்ட்டூன் வரைக்கும் எல்லாவற்றையுமே களியாட்டுகள் என்கிற பிரிவுல இப்படியா சேர்ப்பாங்க. ரொம்ப கஷ்டமா இருக்குதா குட்டிகளா. சரி உங்ககிட்ட ஒரு விசயத்தை நம்ம இயேசப்பா தெளிவா தெரிந்து கொள்ள ஆசைபடுறாங்க. இந்த டிவி, சினிமா, வீடியோ கேம்ஸ் அடுத்து இன்னும் என்ன என்ன நீங்க பொழுது போக்குன்னு நம்ம தேவனுக்கு பிடிக்காத காரியங்கள் வைச்சிருக்கீங்களோ, அதை எல்லாம் பார்க்கும் போதோ, ரொம்பவே பொறாமையா, போட்டியோட உங்க நண்பர்களோட விளையாடும் போதோ உங்களுக்கு எந்த வகையில சந்தோசம் கிடைக்குது குட்டிகளா. அதை வார்த்தையில சொல்ல முடியாது. ஆனா ரொம்ப சந்தோசமா இருக்கும்ன்னு சொல்ல ஆசைபடுறீங்க.

    உங்ககிட்ட ஒரே ஒரு விஷயம் சொல்ல ஆசைபடுறோம் குட்டிகளா. நீங்க நம்ம தேவனுக்கு ரொம்பவே பயந்த பிள்ளைகளா வேதம் வாசிப்பதிலும் , ஜெபம் பண்றதிலயும் இருந்தாலும் இந்த தேவையில்லாத டிவி காரியங்களை பார்க்கும் போது என்ன தோணுது? சப்போஸ் உங்க பேரு அலெக்ஸ்ன்னு வைத்து கொள்ளுங்க. நாளைக்கு உங்களுக்கு சர்ச்ல பைபிள் quiz. ஓரளவுக்கு எல்லா பகுதிகளையும் கவர் பண்ணிட்டீங்க. அப்பதான் நீங்க எப்பவும் உங்க டிவில விரும்பி பார்க்கிற சீரியல்லோ, கார்ட்டூன் நிகழ்ச்சியோ வருது. பைபிள்ளை மூடி வைச்சிட்டு உங்க சோபால, அல்லது சேர்ல சாய்ந்து உட்கார்ந்து ரொம்பவே சீரியஸ்ஸா பார்க்க ஆரம்பிச்சாச்சு. நீங்க பார்த்திட்டிருந்த படம் ரொம்பவே இண்டரஸ்டிங்கா வந்ததும் சேர் நுனிக்கே வந்து பார்க்க ஆரம்பிக்கிறீங்க. தொடரும்னு ஒரு சஸ்பென்ஸ்ல நாடகம் முடிஞ்சிருச்சு.சே…ன்னு ஒரு கோபத்தோட டிவியை ஆப் பண்ணிட்டு திரும்பவும் பைபிள் எடுத்து குறிப்புகள் எடுக்க ஆரம்பிக்கிறீங்க. சரியா……ஆமா…அதுல என்ன?

    உங்களுக்கு ஒண்ணு தெரியுமா, இப்படி டிவி பார்த்து பைபிள் படிச்ச பிறகும் கூட நாங்க நிறைய மார்க் வாங்கியிருக்கோம். அது மட்டுமில்ல first கூட சில டைம்ஸ் வந்திருக்கு. சப்போஸ் எங்க இயேசப்பாக்கு நாங்க டிவி பார்க்கிறது பிடிக்காம இருந்தா அவர் எங்களுக்கு மார்க் குறைச்சிருப்பாரேன்னு……..உங்க கேள்வி நியாயமான கேள்வி.

    நாம மட்டுமில்ல குட்டிகளா, சில பெரியவங்க….தேவ ஊழியர்கள் கூட நம்ம தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியங்கள் தன் வாழ்கையில் இருந்தாலும், அதை திருத்த முயற்சி எடுக்காம இன்னும், இன்னும்னு ஓட்டம் ஓடிட்டே இருப்பாங்க, திடீர்னு அந்த ஓட்டம் முடிந்து கீழ விழும் போதுதான் அவங்களுக்கே தெரியும். தன்னுடைய வாழ்கையில நிறைய தப்புகள் இருந்தும் தெரியாமயே ஓடிட்டுடோமேன்னு. அவங்க வாழ்கையில மரணம் வரதுக்கு முன்னாடி இந்த ஞானதோயம் வந்தா சரி. சப்போஸ் இறந்த பிறகுதான் அவங்க தன்னுடைய ஓட்டத்தை நிப்பாட்டினா. என்ன செய்ய முடியும் குட்டிகளா. என்றுமே தீக்கள் நடுவிலயும், பூச்சிகள் நடுவிலயும் வாழ வேண்டியதா போயிருமே.

    நம்ம இயேசப்பா சொல்லறது நிஜம் குட்டிகளா. உங்களுடைய வாழ்கையில சில தவறுகள் இருந்தும் அவர் உங்களை உயர்த்தியிருந்தாருன்னா அது அவர் உங்க மேல வைச்சிருக்கிற அன்பு. அவர் உங்க மேல காண்பிக்கிற கிருபை. ஆனா எல்லாவற்றுக்கும் காலங்கள் உண்டு. கிருபைக்கு கூட. அதையும் மீறி என்னால என்னை மாற்ற முடியாது. இப்படியேதான் இருப்பேன்னு தொடர்ந்து ஓடினா சின்ன அடிகள் கொடுத்து உங்களை தன் பக்கம் இழுக்க பார்ப்பாரு. அப்பவும் அந்த நொடி மட்டும் சாரிப்பா சொல்லிட்டு, இல்லை எதுவும் சொல்லாம மீண்டும் ஓட ஆரம்பிச்சா கொஞ்சம் கூடுதலா அடிகள் கிடைக்கும். ஏன்னா தன்னுடைய பிள்ளைகள் என்றுமே சாத்தானுடைய நரகத்தில வேதனைபட நம்ம இயேசப்பா விரும்புகிறவர் கிடையாது.

    அவர் பார்த்து பார்த்து செய்த ஒரு அழகான படைப்பு நீங்க, குட்டிகளா. அது மட்டுமில்ல இந்த உலகத்திலேயே நம்ம தேவன் மற்ற எந்த படைப்புகளிலும் இவ்வளவு தூரம் அன்பு வைச்சதா பைபிள்ல கூட சொல்லப்படலை. அப்ப தன்னை விட உங்களை அதிகமாகவே நினைக்கிற, நேசிக்கிற உங்களை சபிக்கப்பட்ட சாத்தான் இருக்கிற இடத்துக்கு அனுப்ப நினைப்பாங்களா? அதனால முடிந்த அளவு நமக்காக போராடுவாங்க. அடுத்தும் இல்லை, மாட்டேன்னு நம்ம இயேசப்பாகிட்ட டாட்டா சொல்லிட்டு, கொஞ்சம் விலகி போயிருங்க இயேசப்பான்னு சொன்னா அவரால மட்டும் என்ன பண்ண முடியும்?

    இப்படி எங்களுக்காக எங்க இயேசப்பா இவ்வளவு தூரம் வேதனைபடுறாங்களா? எங்களை திருத்த முயற்சி எடுக்கிறாங்களா? நாங்க டிவில அவருக்கு பிடிக்காததை பார்க்கும் போது எங்க இயேசப்பாவை வருத்தப்படுத்துறோமா?ன்னு நிறைய கேள்விகள் கேட்க ஆசைபடுறீங்க குட்டிகளா. குட். இதுல சில பேரு நாங்க டிவி பார்க்கும் போதே சொல்ல வேண்டியதுதான, இப்படி எங்களுக்காக வருத்தப்பட்டு சோபாவில் மூலையில உட்கார்ந்து எங்களுக்காக அழுகிறதை விட எங்க முன்னாடி வந்து குட்டிமா, டிவி பார்க்காத……சாத்தான் உன்னை வஞ்சிக்கிறான்னு ஓபன்னா எங்க இயேசப்பா எங்ககிட்ட சொல்லறதுக்கு என்ன…. அவர் பிள்ளைகள் தான நாங்க. சொல்லக்கூடாதா…….ன்னு நீங்க வருத்தப்படுறது புரியுது குட்டிகளா.

    உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைபடுறோம் குட்டிஸ். நீங்க தப்பு செய்யும் போது ஏய்  என்ன பண்ணிட்டிருக்க……….எத்தனை தடவை உன்கிட்ட சொல்லறது…..இனிமே இதை செய்வியா……கையை காண்பி……இரண்டு கையில கொடுத்தாதான் சரிப்படும்…..ன்னு உங்களை எப்பவும் கையில கம்பு வைச்சுகிட்டே மிரட்டுற ஒரு டீச்சர் கிடையாது……அவர் உங்களை அப்படியே நேசிக்கிற ஒரு உண்மையுள்ள தகப்பன், உங்க உண்மையான நண்பன்……அதுனால உங்க முன்னாடி தன் கைகளை விரிச்சி வேண்டாம் குட்டி…..ன்னு உன்னை பார்த்து கதறி உன்னை அணைக்க துடிக்கிற ஒரு அம்மாவின் அன்பு.

    என்ன குட்டிகளா….ஒண்ணும் சொல்ல மாட்டீங்களா……இன்னொரு காரியத்தையும் உங்களுக்கு ஞாபகப்படுத்த நினைக்கிறோம். நீங்க டிவில ஆர்வமா உங்களுக்கு பிடித்ததை பார்த்திட்டிருந்தாலும், உங்க மனதில உங்களுக்கு பிடிச்சதை பார்க்கிறோம்னு சந்தோசம் தோணினாலும், அதையும் மீறி ஒரு மாதிரி உங்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவு வேதனையை அந்த நேரம் உங்க மனதில தோணுதா? ஆமான்னு உங்க உதடு சொல்ல ஆசைபடுது.

    கண்டிப்பா தேவ பிள்ளைகளா இருக்கிற நீங்க எல்லாரும் ஏதோ ஒரு தடவையோ இரண்டு தடவையோ இல்லை பல முறைகள் இதை நீங்க உணர்ந்திருக்கலாம். இது வேற எதுவும் கிடையாது குட்டிகளா……உங்களுடைய தவறுகள்  அதாவது டிவி காரியம் மட்டுமில்ல…..அம்மா/அப்பாகிட்ட பொய் சொல்லிட்டு உங்க நண்பர்கள் கூட ஊர் சுற்றும் போதும் நீங்க அனுபவிக்கிற உணர்வு……….இது மாதிரி நிறைய காரியங்கள். அது நம்ம இயேசப்பா நம்ம தவறுகளை பார்த்து கண்ணீர் வடிச்சு…….உங்க தப்புக்காக நம்ம இயேசப்பா சிலுவை ஆணிகளின் வேதனையை சுமக்கிற நேரங்கள் குட்டிகளா. அந்த வலி உங்க இதயத்தில் உணர்கிறதுக்கு காரணம் உங்க இதயத்தில் உங்க இயேசப்பா இருக்கிறதுதான்னு நாங்க சொல்லாமேயே நீங்க தெரிந்து வைச்சிருப்பீங்க. அந்த வலி கூட உங்களுக்கு கொஞ்சம் நேரம்தான் தோணும். அடுத்து நீங்க அதை மறந்துருவீங்க…….அதற்கான காரணமும் சொல்ல ஆசைபடுறோம். தப்பு….அதாவது பாவத்தின் வலிமை……(சாத்தானின் வல்லமை) உங்க இயேசப்பாவின் வேதனையை உங்களுக்கு மறக்க வைச்சிரும். அவன் பேரே மாய்மாலன்தானே…….

    குட்டிகளா…..இத்தனை விசயங்கள் நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்த பிறகும், நமக்கு தேவையா இந்த களியாட்டுகள்??????????????

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + two = 6

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>