-
இயேசு கிறிஸ்து யார்?(5)
தேவகுமாரன் மனிதனாய் பிறந்த விந்தை
கிட்டத்தட்ட 2046 வருஷங்களுக்கு முன்னாடி நம்ம இயேசப்பா இஸ்ரவேல் நாட்டில் தாவீது வம்சத்தில பிறந்த யோசேப்பு, மரியாள் என்பவர்களுக்கு, பிதாப்பாவின் சித்தப்படி பரிசுத்த ஆவியால் முதல் பையனா பிறந்தாங்க. யோசேப்பு என்பவர் ஆபிரகாம் மற்றும் தாவீதின் சந்ததி வழியாக வந்தவர். இப்படி ஆபிரகாமுக்கும் இயேசப்பாவுக்கும் இடைப்பட்ட சந்ததியார் மொத்தம் 42 தலைமுறையினர். புதிய ஏற்பாடுல உள்ள முதல் புஸ்தகமாகிய மத்தேயு புத்தகத்தில் முதலாம் அதிகாரம் 1ம் வசனத்தில இருந்து 17ம் வசனங்கள் வரை இந்த குறிப்புகள் இருக்கு.
நீங்க மத்தேயு புத்தகம் வாசிக்க துவங்கிய நாட்களில் என்னடா…..எத்தனை பேர்கள் கொடுத்திருக்காங்க, எப்படி படிக்கிறதுன்னு சில நேரங்களில் யோசித்திருக்கலாம். ஆனா உங்களுக்கு தெரியுமா குட்டிகளா? நம்ம தேவன் நமக்கு கொடுத்த வேதகாமம் ஏதோ ஒரு சாதாரண புத்தகம் கிடையாது. இது இருபுறமும் கருக்குள்ள பட்டயம்(எபிரெயர் 4 : 12). சும்மா வாசித்துதான் பார்ப்போமேன்னு நினைக்கிறவங்களா இருந்தாலும் சரி, குறைகள் ஏதாவது கண்டுப்பிடிக்க ஆராய்ச்சி பண்றவங்களா இருந்தாலும் சரி, அவர்களையும் நம்ம தேவனுடைய பிள்ளைகளா மாற்றுகிற ஒரு அற்புதமான பொக்கிஷம்தான் நம்ம வேதாகமம். நம்ம வேதாகமம் பரிசுத்த ஆவியானவரால தரப்பட்டு, பரிசுத்தவான்களால் எழுதப்பட்ட புத்தகம். அதனால தேவையில்லாத காரியங்களை கண்டிப்பா தன்னுடைய புத்தகத்தில் நம்ம தேவன் அனுமதிக்க மாட்டார்.
நம்ம இயேசப்பாவின் வம்ச வரலாறை கொஞ்சம் சுருக்கமா தெரிந்து கொள்ளலாமா?
ஆபிரகாம்தான் நம்ம இயேசப்பாவின் வம்ச வரலாறில் முதல் இடத்தில வருகிறார். நம்ம ஆபிரகாம் பற்றி உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். நம்ம தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து, 100 வருசங்களா காத்திருந்து பெற்றுக் கொண்ட தன்னுடைய ஒரே குமாரனான ஈசாக்கை பலியிட முன் வந்தவர். அந்த விசுவாசம் நம்ம தேவனை ரொம்பவே பிரியப்படுத்தின காரியம். நமக்கு ஆபிரகாம் செய்ய நினைத்த காரியம் ரொம்பவே கொடூரமான விஷயமா தோணினாலும், நம்ம தேவன் அவருடைய கீழ்படிதலை மட்டும்தான் பார்த்தார். நம்ம தேவன் கொடுத்த வாக்கினால் கிடைச்ச தன்னுடைய பையனை எந்த வகையிலும் திருப்பி எடுத்துக் கொள்ள மாட்டார்ன்னு அவருடைய அன்பில நம்ம ஆபிரகாம் வைச்ச நம்பிக்கை நம்ம தேவனை ரொம்பவே பிரியப்படுத்தினது. கீழ்படியாமையினால் தான் இழந்து போன ஆதாம், ஏவாள் வாழ்கையை பார்த்து வேதனைபட்ட அவருக்கு கண்டிப்பா ஆபிரகாமின் விசுவாசம் ரொம்பவே சந்தோசத்தை தந்துச்சு. அதுனால தன்னுடைய குமாரனின் வம்ச வரலாறில் ஆபிரகாம் பேரை முதல் இடத்தில் நம்ம பிதாப்பா எழுத ஆசைப்பட்டது தப்பா குட்டிகளா.
அடுத்து ஈசாக்கு, உங்களுக்கு அவரை பற்றியும் நல்லாவே தெரிந்திருக்கும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து வாழ்ந்து அதன் மூலம் 100 மடங்கு ஆசீர்வாதம் பெற்றவர். தான் வார்த்தைக்கு கீழ்படிந்த அவருடைய பேரை நம்ம பிதாப்பா எவ்வளவு பெருமையா எழுதியிருப்பாங்க.
யாக்கோபு என்பவரை பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்கும். தன் தகப்பனிடத்தில ஆசீர்வாதங்களை ஏமாற்றி பெற்றுக் கொண்டாலும், தன் கடைசி நாள் முடியுற வரைக்கும் நம்ம தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்தவராதான் வாழ்ந்தார். அப்ப நம்ம பிதாப்பா அவருடைய பெயரையும் எழுத எந்த அளவு ஆசைபட்டிருப்பார்.
யூதா என்ற வார்த்தைக்கே துதி என்பதுதான் அர்த்தமாம். நம்ம தேவன் துதிகளின் மத்தியில் வாசம் பண்ணுகிறவர்ன்னு உங்களுக்கும் தெரியும். அதுனால நம்ம பிதாப்பாவை துதிகளால் கனம் பண்ணின அவருடைய பேரும் இடம்பெற்றிருக்கு.
பாரேஸ், எஸ்ரோம், ஆராம், அம்மினதாப், நகசோன் என்பர்களை பற்றி நம்மளால தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்ள முடியா விட்டாலும் கண்டிப்பா நம்ம தேவனின் வார்த்தைகளை கனம் பண்ணி அவருக்கு கீழ்படிந்து வாழ்ந்தவங்களா இருப்பாங்கன்னு கண்டிப்பா எங்களால் சொல்ல முடியும்.
சல்மோன் யார் தெரியுமா குட்டிகளா? எரிகோ நகரம் இடிந்து விழுந்த போது அதுல தப்பித்த ஒரே ஒரு குடும்பமாகிய ராகாப் என்பவருடைய(நம்ம தேவனின் வல்லமையை நம்பியவர்) விசுவாசத்திற்காக நம்ம பிதாப்பா கொடுத்த வாழ்க்கை துணை என்கிற பரிசுதான் சல்மோன். ராகாப் விசுவாசத்தை நம்ம தேவன் எந்த அளவு கனப்படுத்திருக்கார்னு இப்ப உங்களால் புரிஞ்சுக்க முடியும்.
போவாஸ் உங்களுக்கு ரொம்ப பிடித்தமான பேரு. மோவாபிய பெண்ணா இருந்தாலும் நம்ம தேவனை தன்னுடைய தேவனா ஏற்றுக் கொண்ட ரூத்தின் வம்சத்தில தன்னுடைய பையனான இயேசப்பாவை பிறக்கச் செய்தது நம்ம பிதாப்பாபின் இரக்கத்திற்கு ஒரு அழகான எடுத்துகாட்டுன்னு கண்டிப்பா நீங்களும் நம்புவீங்க.
ஓபேத், ஈசாய் அடுத்து தாவீது. தாவீதை பத்தி உங்களுக்கு நாங்க சொல்ல தேவையில்லை. ஏன்னா நம்ம தேவனால் தன் இருதயத்திற்கு ஏற்றவன்னு பாராட்டு வாங்கியவர். கண்டிப்பா தாவீதின் குமாரன் சொல்லி தன்னுடைய பையனை தன் பிள்ளைகள் கொண்டாடினப்ப நம்ம பிதாப்பா ரொம்பவே சந்தோசம் அடைந்திருப்பார்.
சாலொமோன்(ஞானத்தில் சிறந்தவர், முதன்முதலில் நம்ம தேவனுக்காக ஆலயம் கட்டியவர்), ரெகொபெயாம், அபியா, ஆசா, யோசபாத், யோராம், உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா, மனாசே, ஆமோன், யோசியா, எகொனியா என்பவர்களை பற்றி நீங்க தெரிந்து கொள்ள ஆசைப்பட்டா இராஜாக்கள் மற்றும் நாளாகமம் புத்தகத்தில் வாசித்து தெரிந்து கொள்ளுங்க. இதுல சில பேரு நம்ம தேவனை வேதனைபடுத்திருந்தாலும் நம்ம தேவன் வாக்கை நிறைவேற்ற வல்லவர் என்பதை நீங்க புரிந்து கொள்ளறதுக்காகதான் எல்லா ராஜாக்கள் பேருகளும் கொடுக்கப்பட்டிருக்குன்னு நாங்க நம்புறோம்.
பாபிலோனுக்கு சிறை ப்பட்டுபோன பிறகு உள்ளவங்களை பற்றி தெளிவா நம்மளால் தெரிஞ்சுக்க முடியாட்டியும் கண்டிப்பா, தன் முற்பிதாக்கள் செய்த தப்புக்காக மனம் வருந்தி நம்ம பிதாப்பாவின் இரக்கத்தை ரொம்பவே எதிர்ப்பார்த்திருப்பாங்க. அதனாலத்தான் அவர்களுடைய பேருகளும் நம்ம இயேசப்பாவின் வம்ச வரலாறில் எழுதப்பட்டிருக்கு குட்டிகளா.
அதுனால இனிமே நம்ம பைபிள்ல எந்த பகுதிகளையும் ஸ்கிப் பண்ணாம படிப்பீங்கன்னு நம்புறோம். உங்களுக்கு புரிந்து கொள்ள கஷ்டமா இருந்தா தயவு செய்து உங்க வீட்ல உள்ளவங்ககிட்டயோ இல்லை உங்க சண்டே ஸ்கூல் டீச்சர், உங்க போதகர் ஐயாகிட்ட கேட்டோ தெரிந்து கொள்ளுங்க. ஏன்னா பைபிள்ல இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் நம்ம இயேசப்பா உங்ககிட்ட பேசுறதுக்காக கொடுத்திருக்கிற மொபைல் மாதிரி. அதனால எந்த பகுதியையும் நீக்கிட்டு படிக்காதீங்க.
இப்ப நாம நம்ம இயேசப்பாவின் பிறப்பை பற்றி தெரிந்து கொள்ளலாமா? இந்த பூமியில நம்ம இயேசப்பாக்கு அம்மா, அப்பாவா தேவன் கொடுத்த மரியாளோ, யோசேப்போ ரொம்ப பெரிய ஆட்கள் கிடையாது. தீர்க்கதரிசிகளோ, பெரிய வியாபார குடும்பத்தை சேர்ந்தவங்களோ, இல்லாட்டி அரச குடும்பத்தை சேர்ந்தவங்களோ கிடையாது. யோசேப்பு ஒரு சாதாரண தச்சு வேலை பார்த்தவர். மரியாளும் ஒரு எளிமையான குடும்பத்தில இருந்து வந்தவங்க. பெத்லகேம் ஊர்ல பிறந்தவர் நசரேயன் எனப்படுவார் என்று தீர்க்கதரிசிகள் மூலமா நம்ம பிதாப்பா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறியது. இதோட தொடர்புடைய எல்லா சம்பவங்களையும் லூக்கா புத்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தை வாசித்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இப்ப கேள்வி கேட்கவா.
1. நம்ம இயேசப்பாவை பிதாப்பா ஏன் மரியாளுடைய பையனா ஒரு மனிதனா பிறக்க பண்ணினாங்க? (நம்ம பிதாப்பா இயேசப்பாவை உலகத்துக்கு அனுப்பனும்னு நினைச்சப்ப இயேசப்பாவுக்கு இருந்த அதே மகிமையோட அனுப்பியிருக்கிலாமே? ஏன் உன்னை மாதிரி சின்ன குழந்தையாய் உலகத்துக்கு அனுப்பினாங்க?)
எனக்காக, நமக்காக… அப்படின்னு ஒரே வார்த்தையில பதில் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்… தெளிவான பதிலை உங்க வீட்ல உள்ளவங்கிட்டயும் சண்டே ஸ்கூல் டீச்சர்கிட்டயும் கேட்டு உறுதிபண்ணி எழுதுங்க.
நீங்க உங்க பதிலை leave a reply மூலமா எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
குட்டிகளா, உங்களுடைய முதல் கேள்விக்கு சம்பந்தமான இன்னும் சில குறிப்புகளையும் தெரிந்து கொள்ளுவோமா….
நம்ம இயேசப்பா ஒரு கன்னிகை மூலமா இந்த பூமியில பிறப்பார்னு எந்த தீர்க்கதரிசி புத்தக்கத்தில் எழுதப்பட்டிருக்கு?
ஏசாயா 7 : 14
நம்ம இயேசப்பா பெத்லகேம் என்கிற ஊர்லத்தான் பிறப்பார்னு எந்த தீர்க்கதரிசி புத்தக்கத்தில் எழுதப்பட்டிருக்கு?
மீகா 5 : 2
நம்ம இயேசப்பா குட்டி குழந்தையாய் இருக்கும் போது அவரை கொலை செய்ய தேடிய ஏரோது ராஜாவுக்காக சில நாட்கள் எகிப்து செல்ல வேண்டியதா இருந்தது. அந்த ராஜா இறந்த பிறகுதான் திரும்பியும் இஸ்ரவேல் தேசம் வந்தார். இந்த காரியங்களும் ஏற்கனவே பிதாப்பா முன்பே சொன்ன வார்த்தைகள்தான். இது எந்த தீர்க்கதரிசி புத்தக்கத்தில் எழுதப்பட்டிருக்குன்னு சொல்லுவீங்களா குட்டிஸ்?
ஓசியா 11 : 1
நம்ம இயேசப்பா இந்த பூமிக்கு வருகிறதை குறித்தும் எந்த இடத்தில, எந்த நேரத்தில, எந்த பேர்ல வருகிறார் என்றும் நிறைய தீர்க்கதரிசிகள் எழுதியிருக்காங்க. ஆனா நம்ம இயேசப்பா நாட்களில் வாழ்ந்த, அவரை முதல்ல பிதாப்பாவுடைய பையன்னு மக்களுக்கு சொன்ன தீர்க்கதரிசி யாரு?
யோவான்ஸ்நானன் (யோவான் 1 : 29 – 34)
இயேசு கிறிஸ்து யார்?(4) இயேசு கிறிஸ்து யார்?(6)
இயேசு கிறிஸ்து யார்?(5)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives