• இயேசு கிறிஸ்து யார்?(39)

    சிட்சிக்கும் தேவன்

    jesus39

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பா நமக்கு நம்ம தேவனின் கடிந்து கொள்ளுதல் மற்றும் வியாதி படுக்கைகள் பற்றி அழகாக சொல்லி கொடுத்தாங்க. ஆனா நமக்கு நம்ம மனதில எழும்புற காரியம், ஏன் கண்டிப்பா வியாதி படுக்கைகள் மூலம்தான் எங்களை, எங்களை பற்றியே புரிய வைக்கணுமான்னு நம்ம மனதில கேள்விகள் எழும்பலாம்?

    நம்ம மனதுக்கும் தெரியும் குட்டிகளா, நம்ம இயேசப்பா வார்த்தைகளையோ, கடிந்து கொள்ளுதலையோ அசட்டை பண்ணிட்டு ஓடும் போதுதான் இந்த வியாதி படுக்கைகளை சந்திக்க வேண்டியது வந்திருக்கும். ஏன்னா பல நேரங்களில் நம்ம எண்ணம், கண்டிப்பா இதை செய்துதான் ஆகணுமா……..நம்மளை பற்றி மற்றவங்க என்ன நினைப்பாங்க………. அவங்க மேல நிறைய மரியாதை வைச்சிருக்கேன், ஆனா இந்த விசயத்தை நம்ம இயேசப்பா சொன்னங்கன்னு எப்படி சொல்ல முடியும்? அடுத்து நம்மளை என்ன நினைப்பாங்க அவங்க?…….இயேசப்பா நான் செய்ய வேண்டியது பெரிதா இருக்கும்னு நான் நினைத்தேன், ஆனா நீங்க போயும், போயும் ஒரு சின்ன காரியத்தை செய்ய சொல்லுறீங்க……..அப்பா, ஒரு நிமிஷம்தான் நான் அவங்க அரட்டை அடிக்கிறதை கேட்டுட்டு இருந்தேன், அதற்காக இப்படியா….ன்னு.

    நம்மளுக்கு பல நேரங்களில் என்ன எண்ணம்னா, மற்றவங்களை கொலை செய்கிறவங்களுக்கு, கொள்ளை அடிக்கிறவங்களுக்கு, ஒரு உயிர் இறந்து போறதுக்கு காரணமா இருக்கிறவங்களுக்கு ……..விபச்சாரம், வழிப்பறி, விக்கிரக ஆராதனை …….இந்த மாதிரி விசயத்தில ஈடுபடுகிறவங்களுக்கு மட்டும்தான் நம்ம தேவன் நரகத்தில ஒரு இடத்தை ஆயத்தமாகி வைச்சிருக்காங்கன்னு. சாரி குட்டிகளா, இந்த மாதிரி எண்ணங்கள் இனிமேலும் வேணாம். ஏன்னா, நம்ம இயேசப்பா பார்வையில் எது பெரிய தப்பு, எது சின்ன தப்புன்னு நம்மளால் கண்டுபிடிக்க முடியாது?

    உங்களால் புரிந்து கொள்ள முடியலையா? நம்மளுக்கு பைபிள் வாசிக்கும் போது நம்மளை முதலில் ரொம்பவே கவர்ந்தவர் மோசேன்னு சொன்னா சரி வருமா. ஏன்னா, எகிப்தில் அப்ப இருந்த பார்வோனுக்கு விரோதமா 10 அடையாளங்களை செய்தது மட்டுமில்ல, இஸ்ரவேல் மக்களுக்கு முன்னாலயும் எத்தனையோ நம்ம தேவன் நிகழ்த்தின அற்புதங்களை முன் நின்று செய்தவர். இந்த மாதிரி அதிசயம், ஆச்சர்யம்ன்னா நமக்கு ரொம்பவே பிடிக்கும், அப்படிதான குட்டிகளா. ஆனா உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா குட்டிகளா. எகிப்து நாட்டுல கிட்டத்தட்ட நம்ம மோசே இளவரசன் ஸ்தானத்தில் இருந்தவர், எகிப்தை விட்டு ஏன் வெளியேறினார்ன்னு சொல்ல முடியுமா?

    ஒரு எகிப்தியனுக்கும், எபிரேயனுக்கும் நடந்த சண்டையில எகிப்தியனை கொன்றவர் நம்ம மோசேதான். அதற்காகதான் அவர் எகிப்தை விட்டு முதலில் வெளியேற வேண்டிய நிலைமை வந்தது. ஆனா அப்படிப்பட்ட மோசேயைதான் நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகளை கானான் நாட்டுக்கு கூட்டிட்டு போகுற வேலையை ஒப்படைத்தார்(கிட்டதட்ட 40 வருசங்கள் கழித்து). உங்களால் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு கொலைகாரனுக்கு நம்ம தேவன் கொடுத்த வேலை, தன்னுடைய மக்களை மேய்க்கிற வேலை. கொஞ்சம் கூட நாம கற்பனை பண்ணி பார்க்க முடியாத விசயம். ஏன்னா, நம்ம சட்ட திட்டத்தை பொறுத்த வரையில், இந்த தண்டனைக்கு இந்த பாவம் தான் காரணம்ன்னு நாம நினைச்சி சில பேரை நம்ம வாழ்கையில் ஒதுக்கி இன்னமும் வைத்துள்ளோம். ஆனா நம்ம தேவன் அழைத்த அழைப்பை தெரிந்து கொண்டீங்களா?

    உடனே உங்க மனதில, அப்ப நம்ம இயேசப்பாக்கு கொலை பாவமும் பெரிய விஷயம் இல்லை போலன்னு நினைச்சிராதீங்க. ஏன்னா நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொல்ல வந்ததை இன்னும் சொல்லி முடிக்கலை. எந்த மோசே மூலமா தன்னுடைய பிள்ளைகளை ஒரு ஆடுகள் மாதிரி மோசே கையால நடத்தி வந்தாரோ, எதற்காக நடத்தி வந்தாரோ, அந்த கானான் ஊரை நம்ம மோசே பார்த்தாரே தவிர அதுல அவர் காலடி எடுத்து சந்தோசமா இருக்க முடியலை. என்னது உண்மையான்னு உங்க மனது கேள்வி கேட்கலாம். ஒரே ஒரு காரியம்தான் குட்டிகளா, நம்ம மோசே இஸ்ரவேல் மக்களை நடத்தி வந்த அந்த 40 வருசங்களில் அவர் செய்த ஒரே ஒரு தப்பு. பேசுன்னு நம்ம தேவன் கட்டளையிட்ட கன்மலையை பார்த்து, அடித்த ஒரே ஒரு காரியம் மட்டுமே. ஆனா அந்த தப்புக்கு நம்ம  தேவன் கொடுத்த தண்டனை, கானான் நாட்டை பார்க்கிற சந்தோசம் மட்டுமே, கண்டிப்பா அந்த நாட்டுக்குள்ள பிரவேசிக்க மாட்டாய்ன்னு.

    கொலை தப்புக்கு தன் பிள்ளைகளை அழைத்து வருகிற ஒரு உன்னதமான வேலையை கொடுத்தவர், தன் வார்த்தைக்கு மீறி நடந்த காரியத்திற்கு அழைத்த அழைப்பை முடிக்கிறதுக்கு முன்னாடியே எடுத்தும் கொண்டார். உங்களால் புரிந்து கொள்ள முடியுதா குட்டிகளா, நம்ம தேவன் கோபம் வருகிற சந்தர்ப்பங்களை. கொஞ்சம் நமக்கு குழப்பமா கூட இருக்கலாம். ஆனா இதுதான் நம்ம தேவனின் நியாயங்கள். ஈஸியா அதை தப்பு சொல்லிராதீங்க குட்டிகளா. ஏன்னா, நம்ம தேவனின் நியாய தீர்ப்புகளின் அர்த்தம் நம்மளால் காண முடியாட்டியும், அது கண்டிப்பா பாரபட்சமானதுன்னு  சொல்ல முடியாது. ஏன்னா நம்ம தேவன், தன்னுடைய நீதியால் தான் மகிமைப்படுகிறார்.

    நம்ம குழப்பங்களுக்கு நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?

    நம்ம தேவனின் பார்வையில. சின்ன தப்பு, பெரிய தப்புங்கிற காரியம், அதன் தன்மையை பொறுத்து பிரிக்கப்படலை. அது நாம நம்ம தேவனின் பேச்சுக்கு எந்த வகையில கீழ்படியுறோம் என்பதை பொறுத்துதான் தீர்மானிக்க படுகிறது. நம்ம தேவனின் இந்த நியாயத் தீர்ப்பு, நமக்கு வித்தியாசமா தெரிந்தாலும், அவர் வார்த்தையை மகிமைப்படுத்துற தேவன். ஏன்னா, நம்ம இயேசப்பாவே அவர் வாயில் இருந்து வெளிவந்த வார்த்தை என்பதால் நம்ம தேவன் வார்த்தைக்கு ரொம்பவே மதிப்பு கொடுக்கிறவர்.

    அதுனால நம்ம தப்புகள் அவர் வார்த்தைக்கு நாம கீழ்படியுறோமா இல்லை கீழ்படியலையா என்பதை பொறுத்து தான் அமையும். அதுனால, மரண தண்டனைக்கு நியமிக்க பட்ட பயங்கர கொலை குற்றவாளியா இருந்தாலும், அவனில் நம்ம இயேசப்பா மூலமா நம்ம தேவன், மாற்றங்களை ஏற்படுத்தும் போது, அவனுடைய கீழ்படிதல் மட்டுமே அவனை, அவன் வாழ்கையை மாற்றக் கூடியது. ஏன்னா, நாமளும் எத்தனையோ சாட்சிகளை இது மாதிரி படித்திருக்கிறோமே குட்டிகளா.

    இனிமே, நாமளும் மற்றவங்க புறதோற்றத்தை பார்த்து மட்டும் அவங்களை எடை போட கூடாதுன்னு நம்ம இயேசப்பா நமக்கு சொல்ல ஆசைப்படுறாங்க. ஏன்னா

    நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்க மாட்டது.

    கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்க மாட்டாது.

    மத்தேயு 7 : 18

    அதுனால, இனிமே மற்றவங்களை நீங்க நம்புறதுக்கு முன்னாடி, அவங்க நம்ம இயேசப்பாக்குள்ள எப்படிப்பட்ட கனிகளை கொடுக்கிறாங்க என்பதை முதலில் கவனிங்க. ஏன்னா, வெறும் தேவ வார்த்தையாலும், அற்புதங்களாலும், அதிசயங்களாலும் நம்மளால் தேவ பிள்ளைகளை கண்டுபிடிக்க முடியாது. ஏன், நம்ம இயேசப்பா கூட சொல்லி இருக்காங்களே, தன் வார்த்தையின் படி நடக்கிறவங்களுக்குத்தான் பரலோக ராஜ்யமே தவிர, வெறும் வார்த்தையால் வீடு கட்ட ஆசைபடுறவங்க, பரலோகத்தை பற்றி நினைத்து கூட பார்க்க வேண்டாம்னு எச்சரிக்கையாகவே சொல்லி இருப்பாங்க.

    இப்ப சொல்லுங்க குட்டிகளா, இனிமே நாம உலகத்தில கடந்து போகும் போது யாரை நம்பலாம், யாரை நம்ப கூடாதுன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். அது மட்டுமில்ல, நம்ம தேவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து, அதன் படி வாழ்வதன் மூலமாதான் பரலோகத்தை அடைய முடியும் என்பதை பற்றியும் புரிந்து வைச்சிருப்பீங்க. சரியா?   

    இந்த ரகசியங்கள் நம்மளை மாதிரி உள்ள சின்ன குழந்தைகளுக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம் என்பதால்தான் நம்ம இயேசப்பா நம்ம வாழ்கையில் சரி எது? தவறு எது?ன்னு பல நேரங்களில் நம்ம கூட இடைப்பட்டு சொல்லுறாங்க. அப்பயும் நாம செவி கொடுக்காம, அப்பா,நீங்க அவரை பற்றி என்ன நினைச்சீங்க? அவர் எந்த அளவுக்கு ஒரு ஜென்டில்மேன் தெரியுமா? அவர்கிட்ட பேசுறதை போய் வேண்டாம்னு சொல்லுறீங்களா?ன்னு நம்ம இயேசப்பாவை நாம கடிந்து கொள்ளுறதுதான் மிச்சம். அடுத்து அந்த ஜென்டில்மேனை பற்றி நமக்கு உண்மையில் புரியுற நேரம், நம்ம இயேசப்பா சமூகத்தில கூட நம்மளால் நிற்க முடியாது குட்டிகளா.

    இப்ப புரியுதா, நம்ம இயேசப்பா நம்மை எதற்காக கடிந்து கொள்ளுறாங்க? ஏன் கடிந்து கொள்ளுறாங்க?ன்னு. உண்மையை புரிந்து கொண்டா நாம இனிமே அவர் நம்மளை கடிந்து கொள்ளும் போது சோர்ந்து போக மாட்டோம், உண்மையில் ரொம்பவே சந்தோசப்படுவோம்.

    என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.

    தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

    நீதிமொழிகள் 3 : 11, 12

    இந்த வசனங்கள் உங்களுக்கு எல்லா அர்த்தத்தையும் சொல்லி கொடுத்திருக்கும்னு நாங்க முழுமையா நம்புறோம். இனிமே நம்ம இயேசப்பா கடிந்து கொள்ளும் போது கலங்க மாட்டீங்கன்னு இன்னும் அதிகமாகவே நம்புறோம். அது மட்டுமில்ல, அந்த நேரங்களில் உடனே நம்ம தேவ சமுகத்தில் உட்கார்ந்து, நம்ம தேவன் ஏன் கடிந்து கொண்டார்னு காரணத்தை கேட்டு, அவருடைய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுவீங்க என்பதையும் நம்புறோம்.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × eight = 40

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>