• இயேசு கிறிஸ்து யார்?(18)

    நமது ஆத்துமா

    jesus18

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பாவின் மலை பிரசங்கம் ரொம்பவே உங்க மனதை கவர்ந்த காரியம். மத்தேயு புத்தகத்தில மொத்தம் மூன்று அதிகாரங்கள் முழுக்க முழுக்க நம்ம இயேசப்பாவின் மலை பிரசங்கம் இடம் பெற்றிருக்கு குட்டிகளா. நீங்க அதை ரொம்பவே விரும்பி படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறோம், அப்படிதானே. நமது தேவன் நாம இந்த உலகத்தில எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓட எதிர்பார்க்கிறாங்கன்னு அழகாக, ரொம்பவே தெளிவா நம்ம இயேசப்பா மூலமா சொல்லி கொடுத்திருப்பாங்க. நமது தேவனின் வார்த்தைகள் நமக்கு ஜீவன்னு உங்களுக்கு நாங்க சொல்லுறதுக்கு முன்னாடியே உங்களுக்கு தெரியும். ஏன்னா நம்ம இயேசப்பா சாத்தானை எதிர்த்து நின்ன போது, மனிதன் அப்பத்தினால் மாத்திரமில்ல, தேவனுடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்னு சொன்னாங்க. அப்ப நம்ம சாப்பாடை விட நம்ம பிதாப்பா நம்மகிட்ட அவர் ஒரே பேறான குமாரன் இயேசப்பா மூலமா சொன்ன வார்த்தைகள் எந்த அளவு முக்கியம் நிறைந்ததா இருக்கும்னு நீங்களும் கண்டுபிடிச்சிருப்பீங்க.     

    அதுவும் மலை பிரசங்கத்தில பாக்கியவான்கள் என்கிற பிரிவுல நம்ம இயேசப்பா சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு மனப்பாடம்னு நம்புறோம். ஏன்னா நம்ம இயேசப்பா சொன்ன வார்த்தைகள், நம்ம சின்ன வயதில படித்த rhymes மாதிரி இருந்தா ஞாபகம் வைச்சுக்க கஷ்டமாகவா இருக்கும். மத்தேயு 5ம் அதிகாரத்தில் 3ம் வசனத்தில ஆரம்பித்து 11ம் வசனங்கள் வரை எப்படிப்பட்டவர்கள் பாக்கியவான்கள்னு அழகாக சொல்லி கொடுத்திருக்காங்க. நீங்க தெளிவா தெரிந்து கொள்ள ஆசைப்பட்டா இன்னொரு முறை எடுத்து வாசித்து கொள்ளுங்க.

    ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்.

    அதென்ன குட்டிகளா, ஆவியில் எளிமை???? வாசிக்க ஈஸியா இருந்தாலும் அர்த்தம் தெரிந்து கொள்ள நீங்க கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கலாம். உண்மையில் அப்படியொண்ணும் கிடையாது, எங்களுக்கு இதன் அர்த்தம் எவ்வளவு அழகா தெரியும், உங்களுக்கு தெரியுமா?ன்னு நீங்க சொன்னீங்கன்னா ரொம்பவே சந்தோசப்படுகிறோம் குட்டிகளா. தெரியாத உங்க நண்பர்களுக்காக நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்கிறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?

    ஆவின்னா முதலில் ஒன்றை நாம தெரிந்து கொள்ளனும்னு நம்ம இயேசப்பா ஆசைப்படுறாங்க. அது நாம படித்த அறிவியல் படம் மாதிரி கஷ்டம் கிடையாது குட்டிகளா. அறிவியல் பாடத்தில் இந்த உலகத்தில இருக்கிற எல்லா பொருள்களையும் மூன்றா பிரிச்சிருப்பாங்க. திட, திரவ, வாயு நிலைன்னு. அதை கஷ்டபட்டு கண்டுபிடிச்சி, மார்க் வாங்குறதுக்குள்ள நாம படுகிறோமே ஒரு பாடு. ஆனா அதை பற்றி ஒரு அளவுக்கு நாம புரிந்து கொள்ளறதுக்குள்ள இன்னும் புதுசா, புதுசா கண்டுபிடிச்சா நாம என்ன செய்ய முடியும் குட்டிகளா. அறிவியல் பாடத்தில வாயு சொல்லுறாங்களே அந்த வாயுவை பத்திதான் சப்போஸ் நம்ம இயேசப்பா சொல்லி இருப்பாங்களோன்னு உங்களில் சில பேரு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க. சாரி குட்டிகளா, நம்ம அறிவியல் பாடத்திற்கும் இந்த ஆவிக்கும் சம்பந்தம் கிடையாது. இது நம்மை பற்றி உள்ள காரியம். இந்த உலகத்தில உள்ள பொருட்களை பற்றி உள்ள விஷயம் கிடையாது.

    நாம வணங்குற தேவனுக்கு மூன்று விதமான பண்புகள் உண்டு. அவரை நாம அன்பான நம்ம பரம தகப்பனா அதாவது நம்ம பிதாப்பாவா அவரை துதிக்கிறோம். அடுத்து அவரை அவருடைய குமாரனாகிய நம்ம இயேசப்பாவா வணங்குகிறோம். அடுத்து நம்மளை என்றும் தேற்றும் தேற்றவாளானாகிய நம்ம பரிசுத்த ஆவியானவரா தொழுது கொள்ளுகிறோம். என்னது குட்டிகளா, அப்ப நாமளும் மூன்று தெய்வமாதான் வணங்குகிறோமான்னு நீங்க எங்ககிட்ட கேள்வி கேட்க நினைக்கலாம்.

    உங்க கேள்விக்கான பதில் நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னா, ஆதியில தேவ ஆவியானவர் ஜலத்தின்(தண்ணீரின்) மேல் அசைவாடி கொண்டிருந்தார். அது மட்டுமில்ல நம்ம தேவன் தன்னுடைய வார்த்தையின்(இயேசப்பா) மூலமா இந்த உலகத்தை படைத்தாங்க. அப்ப நம்ம தேவனுக்கு பிதாவா, அவருடைய குமாரனா(வார்த்தையா), ஆவியானவரா(தேவ ஆவியா) மூன்று விதமான குணங்கள் அவருக்குள்ள இருக்குது. அதுவும் ஆதியில நம்ம தேவன் இந்த உலகத்தை உருவாக்கிறதுக்கு முன்னாடியே அவர் அப்படி மூன்று விதமான பண்புகளோட இருந்தார்ன்னு நீங்க தெரிந்து  கொள்ளலாம் குட்டிகளா. உண்மையில் நாம ஆராதிக்கிற தேவன் ஒருத்தர் தான் குட்டிகளா. நம்மளை மீட்டெடுக்க அவர் மனுஷனா(வார்த்தை) இந்த உலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டார். அடுத்து நம்ம இயேசப்பா பரமேறி நம்ம தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்த பிறகு நம்மளை தேற்ற இப்பவும் பரிசுத்த ஆவியானவரா நம்ம கூட இடைப்பட நம்ம தேவன்தான் அவரையும் அனுப்பியிருக்கிறார் குட்டிகளா. அதுனால மூன்று பேரும் ஒருத்தர் தான் குட்டிகளா. ஒருத்தரில் இருந்து வெளிப்படுத்தப்பட்டவங்கதான். காலம் நிறைவேறிய பின்பு நம்ம தேவன் ஒரே நாமம் கொண்டவரா நம்மளை ஆளுகை செய்வார்.

    இந்த மாதிரி மூன்று விதமான பண்புகளோட நம்ம தேவன் இருக்கிறார்ன்னு இப்ப நீங்க புரிந்து வைச்சிருப்பீங்க. இப்ப நம்மளை பற்றி நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா குட்டிகளா.  நம்ம தேவன் ஆதாமை உருவாக்க ஆசைப்பட்ட போது அவரை தனது சாயலின் படியும், தனது ரூபத்தின் படியும் உருவாக்கினார்(ஆதியாகமம் 1 : 26). சாயல்ன்னா நீங்க ஈஸியா கண்டுப்பிடிச்சிருவீங்க குட்டிகளா. ஏன்னா ஒவ்வொரு நாளும் நாம கண்ணாடி முன்னாடி நின்னு நம்ம முகத்தை பார்க்கிறோமே…..அதுனால சாயல்ன்னா நம்ம தேவன் தன்னுடைய சாயல் எப்படி இருந்ததோ அதை மாதிரியே நம்மளை உருவாக்கியிருக்காங்க. ரூபம்…….இதுலதான் குட்டிகளா, ரகசியம் நிறைந்திருக்கு. நம்ம தேவன் எப்படி ஆவி(பரிசுத்தாவி), ஆத்துமா(பிதாப்பா), சரீரம்(இயேசப்பா) என்கிற மூன்று குணநலன்களோட இருக்கிறாரோ அதே மாதிரி உள்ள ரூபத்தின் படி நம்மளையும் படைத்தாங்க.

    நம்ம கண்ணால பார்க்க முடிந்த நம்ம உடலை நம்ம தேவன் சரீரம்னு அழைக்கிறாங்க. இதற்குள்ள நம்ம தேவன் நம்ம ஆத்துமாவை படைத்திருக்காங்க குட்டிகளா. அதை நம்ம கண்ணால பார்க்க முடியாட்டியும், நம்மளுக்கு பெரியவங்க அறிவுரை சொல்லும் போது, மற்றவங்க என்ன சொல்லுறாங்கன்னு கேட்டுட்டு இருக்காத, உன் மனது என்ன சொல்லுதோ அதுதான் கரெக்டா இருக்கும்ன்னு சொல்லியிருக்காங்க, சரிதான குட்டிகளா. அவங்களால் அதை ஆத்துமான்னு விளக்கம் கொடுக்க முடியாட்டியும் நீங்க பல நேரங்களில் ஏதோ ஒரு தவறான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்றப்ப உங்களுக்குள்ள ஒரு சத்தம் கேட்கறதை தெளிவா கேட்க முடியும். இந்த ஆத்துமா எந்த அளவுக்கு நம்ம தேவனோட உறவாடுதோ அதை பொறுத்து, அந்த ஆத்துமா உங்க கிட்ட பேசுற ரகசியங்கள் நல்லதாகவோ இல்லை கெட்டதாகவோ இருக்கும் குட்டிகளா. ஆனா இதன் மூலமா நம்ம தேவன் நமக்கு சொல்லி கொடுக்கிற காரியம் ஒன்றுதான் குட்டிகளா. அந்த ஆத்துமா நம்ம செவி கொடுத்தலால் மட்டுமே வளர முடியும். செவி கொடுக்கிறது யாருக்குன்னு பொறுத்துதான் அது பரலோகத்திற்காகவா இல்லை நரகத்திற்காகவான்னு முடிவு பண்ணப்படும். நம்ம இயேசப்பா ஒரு வார்த்தை அழகாக சொல்லி இருப்பாங்க குட்டிகளா. ஒரு மனிதன் இந்த உலகத்தையே ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன்னுடைய ஆத்துமாவை(ஜீவனை) நஷ்டபடுத்திட்டா என்ன பிரயோஜனம்ன்னு சொல்லி இருப்பாங்க.     

    உண்மைதான் குட்டிகளா, இந்த உலகத்தை ஜெயிக்க போறேன்னு கிளம்பின அலெக்ஸாண்டர் கடைசியில மரண தருவாயில, தன்னுடைய இரு கரங்களில் ஒன்று கொண்டு போக முடியாமத்தான் கல்லறையில புதைக்கப்பட்டார். அப்ப இந்த உலகத்தை பார்த்து நாமளும் ஓடுறோமே நாம மட்டும் என்ன குட்டிகளா…..நம்ம கையில மட்டும் என்ன கொண்டு போக போறோம்? உன்னுடைய வகுப்பில ஏதாவது ஒரு பையன் ஒரு அழகான பென்சில் பாக்ஸ் கொண்டு வந்திட்டா உடனே நம்ம வீட்டிலும் அன்னைக்கி நைட்டே வாங்கிரணும்……..வீட்டுக்கு பக்கத்தில உள்ளவங்க ஒரு புது பொருள் வாங்கிட்டா அன்னைக்கி பொழுது முடியுறதுக்குள்ள அதை விட ஜாஸ்தி விலையில நம்ம வீட்டுக்கும் ஒரு புது பொருள் வந்தாகணும்……….தன்னோட வேலை பார்க்கிறவன் ஒரு புது வீடு வாங்க ஹவுஸ் லோன் வாங்கினா நான் அதை விட அதிக ரூபாயில புது வீடு வாங்க போறேன்னு சொல்லி ஹவுஸ் லோன் வாங்க ரெடியாகணுமா……..

    ஏன் குட்டிகளா, இந்த ஓட்டம் நமக்கு? இது நல்லதுக்கா. இல்லையே, என்றும் திருப்தி காண முடியாத வாழ்க்கை தேவையா? எப்ப பார்த்தாலும் மற்றவங்களை பார்த்தே ஓடுறோமே…..என்னைக்கி நமக்காக வாழ போறோம், நம்ம இயேசப்பா சமூகத்தில அவர் முகத்தை பார்க்க ஆசைப்பட போறோம். இன்னும் உலகத்தை பார்த்தே ஓடிட்டே இருக்க போறோமா? உங்களுக்குள்ள அழகாக நம்ம தேவன் படைத்து வைச்சிருக்கிற அந்த ஆத்துமா தன்னுடைய தேவனை பார்க்க ஆசைபடுற அதன் ஆசையை நிராகரிச்சிட்டு ஓடறோம்…..ஓடுகிறோம்…..ஆனா முடிவு மட்டும் என்றைக்கும் கிடைக்க போறதில்லை குட்டிகளா. நாம நம்ம ஆத்துமாவை கஷ்டப்படுத்திட்டு இருப்போம், ஓடுவோம்….கஷ்டப்படுத்துவோம்……ஒரு நாள் அந்த ஆத்துமா தன்னுடைய தேவனை என்றும் பார்க்கவே முடியாத அளவுக்கு நரகத்தில வேகும் போது எப்படி நம்மளால் ஓட முடியும் குட்டிகளா.

    இப்பனாச்சும் நமக்குள்ள இருக்கிற நம்ம தேவன் அழகாக உருவாக்கியிருக்கிற அந்த ஆத்துமாவின் வாஞ்சையை கேட்டறிவோமா?

    ஆத்துமமே, என் முழு உள்ளமே, -உன்

    ஆண்டவரை தொழு தேத்து; – இந்நாள் வரை

    அன்பு வைத் தாதரித்த – உன்

    ஆண்டவரைத் தொழுதேத்து.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + five = 13

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>