• இயேசு கிறிஸ்து யார்?(42)

    இன்றே தீர்மானிப்போமா!!!

    near

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    கர்த்தரின் சமூகத்தில அவரை தேடி, அவரை பற்றி தெரிந்து கொள்ள அமர்ந்த அனுபவங்கள் எப்படி இருந்துச்சு குட்டிகளா? நம்ம இயேசப்பாவை பற்றி ஏதாவது தெரிந்து கொண்டீங்களா? அவருடைய அன்பு, அவருடைய அரவணைப்பு, அவருடைய வார்த்தைகள், அவருடைய எச்சரிக்கைகள், அவருடைய ஆலோசனைகள்…….இதுல ஏதாவது ஒன்றை நம்ம தேவன் சந்நிதானத்தில் உங்களால் தெரிந்து கொள்ள முடிந்ததா?

    நீங்க அவருடைய சந்நிதானத்தில் ஆவலா அமர்ந்ததுகே நம்ம தேவன் ரொம்பவே சந்தோசம் அடைந்தார் குட்டிகளா. அதுனால என்றும் அவர் சமூகத்தில உட்கார்ந்து அவர் வார்த்தைகளை பெற்றுக் கொள்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமை தேவை. அந்த பலத்தை நம்ம தேவன் நமக்கு தருவார். நீங்க சொன்னதில ஒன்று கூட என் இயேசப்பா எனக்கு தரலை, அதுனால என் கூட அவருக்கு பேச விருப்பம் இல்லை போலன்னு மட்டும் தயவு செய்து முடிவு பண்ணிராதீங்க. ஏன்னா இந்த நிமிஷம் வரை அவரை தேடாம இருந்து தப்பு பண்ணினோம். இப்ப அவசரப்பட்டு அவர் வார்த்தைக்கு காத்திருக்காம இன்னொரு தப்பு செய்ய வேண்டாமே?

    அப்ப என்னுடைய இயேசப்பா என்னோட பேசுற சத்தத்தை கேட்கிற வரைக்கும் என்ன செய்ய?ன்னு நீங்க கேட்டா அவர் நமக்கு பைபிள்ல கொடுத்திருக்கிற வார்த்தைகளை தியானிக்கலாமே!!!! தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஜீவன், நமக்கு வழி, நமக்கு சத்தியம்ன்னு தெரிந்து கொண்ட நாம, வெறும் அவர் வார்த்தைகளை உயர்த்தி பேசுறதோட சரி. உண்மையில் அவர் வேதாகமத்தில கொடுத்திருக்கிற வார்த்தைகளை படிக்க நேரம் எடுத்தது உண்டா குட்டிகளா. நம்ம பைபிள்ல 2 ஏற்பாடுகள் இருக்கு. பழைய ஏற்பாடுல 39 புத்தகங்களும், புதிய ஏற்பாடுல 27 புத்தகங்களும் இருக்குன்னு மனப்பாடமா சொல்ல தெரிந்த நமக்கு அதை தினமும் வாசிக்கிற பழக்கம் உண்டா? சப்போஸ் நாம படித்திட்டு இருக்கிற பாடபுத்தகம் போர்ன்னு சொல்லும் போது, அதை தூக்கி வைச்சிட்டு டிவில ஏதாவது நல்ல நிகழ்ச்சிகள் வருதா(இயேசப்பா சேனல்லா இருந்தாலும்)ன்னு மாறி மாறி பார்க்க தெரிந்த நமக்கு அவருடைய வார்த்தைகள் அடங்கிய பைபிள் வாசிக்க இருக்கேன்னு மட்டும் ஏன் யோசனை வர மாட்டிக்குது.

    அதை நாங்க எத்தனை தடவை வாசித்திட்டோம் தெரியுமா? இன்னும் எத்தனை தடவைதான் அதை வாசிக்க?ன்னு நீங்க கேள்வி கேட்கிறது எங்களுக்கு புரியுது குட்டிகளா. எந்தெந்த நாள்ல நம்ம தேவன் நம்ம இயேசப்பா மூலமா இந்த உலகம் முழுமையும் உருவாக்கினாங்கன்னு நீங்க வேணா எங்ககிட்ட கேள்வி கேட்டு பாருங்க. எவ்வளவு டான்…டான்னு பதில் சொல்லுவோம் தெரியுமா?

    அந்த அளவுக்கு நம்ம தேவன் இந்த உலகத்தை உருவாக்கின காரியத்தை அழகாக தெரிந்து வைத்திருப்பதற்காக நன்றிகள் குட்டிகளா. ஆனா உங்களால சொல்ல முடியுமா? இதே அளவுக்கு எனக்கு பைபிள்ல இருக்கிற எல்லா பகுதிகளும் எனக்கு தெரியும்னு. ஆதியாகாமம் முதல் அதிகாரத்தில நீங்க நம்ம தேவனை பற்றி தெரிந்து கொள்ள காண்பிச்ச அதே அக்கறை கடைசி அதிகாரம் வரைக்கும் இருந்துச்சுன்னு சொல்ல முடியுமா?

    நாம பெரும்பாலும் பைபிள் வாசிக்கிற நேரங்கள், காலையில் ஸ்கூல் கிளம்புற அவசர நேரமா இருக்கும்(அம்மா/அப்பா கண்டிப்பினால்) இல்லை நைட் தூங்குறதுக்கு பத்து நிமிசங்கள் முன்ன இருக்கும். அந்த நேரத்தில நான் உண்மையா பைபிள் வாசிக்கிறேன்ன்னு நம்மில் எத்தனை பேரு சொல்ல முடியும்? நீங்க சொல்லுற மாதிரியெல்லாம் கிடையாது. உண்மையில் நாங்க முழு மனதோடத்தான் பைபிள் வாசிக்கிறோம். அப்படி வாசித்தா, நல்ல விஷயம் தான் குட்டிகளா. ஆனா அப்படி நீங்க பைபிள் வாசிக்கும் போது, என்னைக்காவது கண் சொருகின நேரங்கள் உண்டா? உங்களை குறை சொல்ல நம்ம இயேசப்பா இதை சொல்லலை குட்டிகளா. நம்ம தேவன் நமக்கு கையில் கொடுத்திருக்கிற பொக்கிஷமாகிய பைபிள்ளின் உண்மையான மதிப்பு தெரியாம நாம தினமும் வாசிக்கிறோம். அதற்கான இடத்தில வைக்க தெரியாம எங்கயாவது தூக்கி வைச்சிட்டு, திரும்பவும் வாசிக்கிற நேரம்தான் தேடுறோம்.

    ஆனா நம்ம பைபிள்ளின் உண்மையான மதிப்பு நாம தெரிந்து கொண்டா, அதை நம்ம கையில் இருந்து கூட கீழே வைக்க மனசு வராது. அவ்வளவு தூரம் முக்கியமான காரியமான்னு நீங்க யோசிக்கிறது புரியுது குட்டிகளா. கீழே வைக்கவே மனசு வாராட்டி, அதை ஏனோதானோன்னு வாசிக்கிற பழக்கமும் நம்மகிட்ட இருந்து போயிரும். இது மூலாம நம்ம இயேசப்பா ஒரு காரியத்தை எச்சரிக்கையாகவே சொல்ல ஆசைபடுறாங்க. நம்ம தேவன் வார்த்தைகள் அடங்கிய பைபிள்ளை வாசிக்கும் போது, தயவு செய்து அசதியா படிச்சிராதீங்க. சப்போஸ் நீங்க தூக்கம் வருதுன்னு நினைச்சாலோ இல்லை பைபிள்ளை படிக்க உங்களுக்கு மனதில எண்ணங்கள் இல்லைன்னாலோ சிறிது நேரம் கழித்து படிங்க. உங்க தூக்க கலக்கம் இல்லைன்னு நீங்க உணரும் போது, இல்லை இந்த நேரத்தில படிக்கலாம்னு நினைக்கும் போது படிங்க. அதுக்காக இன்னைக்கி பைபிள் படிக்க மூடு இல்லைன்னு சொல்லிட்டு அந்த ஒரு நாளையோ, அந்த ஒரு பொழுதையோ ஸ்கிப் பண்ணிறாதீங்க. ஏன்னா அவர் வார்த்தைகள் ஏனோ தானோ படிக்கிற நேரங்கள் கூட உங்க வாழ்கையில நீங்க நிறைய சமாதானத்தை பெற்றுருப்பீங்க. அதே முழுமையா கவனமா வாசித்தா இன்னும் எத்தனை இன்பம் உங்க வாழ்கையில் பெற முடியும் குட்டிகளா.

    நீங்க சர்ச்சில ஆராதனை கலந்து கொள்ளும் போதும் சரி, தேவ வார்த்தைகளை உங்க போதகர் விளக்கி காண்பிக்கும் போதும் சரி, நீங்க எத்தனை தடவை முழு மனதோட கேட்டிருக்கீங்கன்னு சொல்ல முடியுமா? சில நாள் கேட்டிருக்கோம், சில நாள் இல்லைன்னு உண்மையை சொன்னதுக்காக நன்றிகள் குட்டிகளா.

    அம்மாவோட இல்லை அப்பாவோட அற்புத கூட்டங்களில் கலந்து கொண்டது உண்டா? அதில நம்ம தேவன் செய்த அற்புதங்களை கண்ணார பார்த்தது உண்டா? ஆமான்னு நீங்க பதில் சொல்ல ஆசைபடுறது புரியுது. அந்த முடியாத, உடல் பலவீனமுள்ள நபருக்கு எப்படி வியாதி குணமாச்சுனு யோசித்து பார்த்தது உண்டா? அவங்களுக்கு உடம்பு சரியாயிருச்சுன்னா சந்தோசபட வேண்டிய விஷயம், இதுல யோசித்து பார்க்கிறதுக்கு என்ன இருக்கு? யோசித்து பார்க்கிறதுக்கு உண்மையில் ஒண்ணும் இல்லையா குட்டிகளா? டாக்டர்ஸ் கூட கைவிட்ட எத்தனையோ நபர்கள் நம்ம கண் முன்னாடி நம்ம இயேசப்பாவால அற்புதங்களை பெற்றுக் கொண்டு சந்தோசமா போயிட்டிருக்கிற நேரம் என் தேவனால் எல்லாம் கூடும்னு மனதில தோணாதா? இப்படிப்பட்ட அற்புதம் செய்கிற நபரை நான் இன்னும் முழுமையா தெரிந்து கொள்ளாம இருக்கேன்னு உங்க மனதில என்னைக்காவது வேதனை பட்டதுண்டா?        

    இன்னைக்கி நீங்க நம்ம இயேசப்பாவை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுங்கன்னு சொல்ல வரீங்களா இல்லை பைபிள்ளை தினமும் ஒழுங்கா வாசிங்கன்னு சொல்ல வரீங்களான்னு கேட்க நீங்க ஆசைப்படலாம். இந்த ரெண்டு காரியத்துக்கும் ஒரே பதில்தான் குட்டிகளா, நீங்க பைபிள் வார்த்தைகளை முழுமையா தெரிந்து கொள்ள ஆசைபடும் போது, நம்ம இயேசப்பாவை பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைபடுகிறோம்னு அர்த்தம். அதுனால இதுல எதை தெரிந்து கொள்ளணும்னு நீங்களே தீர்மானிங்க. அது மட்டுமில்ல நம்ம தேவனை தெரிந்து கொள்ளனும்னு எண்ணத்தில அவர் சந்நிதானத்தில் நாம உட்காருகிற ஒவ்வொரு நொடியும் நமக்கு எப்படி இருக்குன்னு நீங்கதான் சொல்லணும்? ஆனா நம்மளை நேசிக்கிற நம்ம தேவனுக்கு அது வார்த்தையில் விவரிக்க முடியாத சந்தோசத்தை தரக் கூடியது. 

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 × four =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>