-
இயேசு கிறிஸ்து யார்?(3)
ஆளுகை செய்கிறார்
பிதாப்பா, தான் உருவாக்கின தன்னுடைய எல்லா படைப்புகளையும் எப்படி ஆளுகை செய்கிறார் என்று அவரே யோபுகிட்ட 38, 39, 40, 41 அதிகாரங்களில் அழகாக சொல்லியிருப்பாங்க.
5. பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
6. அதை வஸ்திரத்தினால் மூடுவது போல ஆழத்தினால் மூடினீர்;
சங்கீதம் 104
அது மட்டுமில்ல குட்டிகளா, யோபு 38ம் அதிகாரத்தில் 4 முதல் 7ம் வசனங்கள் வரை வாசித்து பார்த்தீங்கன்னா, பூமிக்கு நம்ம பிதாப்பா அளவு குறிச்சு நூல் போட்டு கோடிக்கல்லை வைத்த போது விடியற்காலத்து நட்சத்திரங்கள் பாடினதும், தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரச்சதும் உங்களுக்கு தெரியும். குட்டிகளா, உங்களுடைய புது வீட்டுக்கோ இல்லாட்டி உங்க நண்பர்கள் தங்களுடைய புது வீட்டுக்கோ அளவு குறிச்சு, நூல் போட்டு முதல் கல்லை குடும்பமா வைச்சப்ப எப்படி துள்ளி குதிச்சிருப்பீங்க/ குதிச்சிருப்பாங்க. அம்மாவும், அப்பாவும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாங்க. ஒரு புது வீடு கட்டும் போதே நமக்கு இவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் போது நம்ம பிதாப்பா இந்த பூமியை உருவாக்கின போது எந்த அளவு சந்தோஷம் அடைந்திருப்பார். அதை உருவாக்கின அவருடைய ஞானத்தை என்ன சொல்லறது….!!!!!
கடல் அலையுடைய கோபம் உனக்கு தெரியுமா? சுனாமி பத்தி உனக்கும் தெரிந்திருக்கும். நம்ம தமிழ் நாட்டில ஒரு தடவை கடல் தன் எல்லையை மறந்து போனதுக்கே ஏராளமான மக்கள் காணாம போயிட்டாங்க. ஆனா அந்த கடலுக்கு எல்லையை குறிச்சு தாழ்ப்பாள்களையும், கதவுகளையும் போட்டு மிஞ்சி வராம கட்டளை போட்ட நம்ம பிதாப்பா (யோபு 38 : 8 – 11 ) எவ்வளவு பெரியவரா இருப்பார்!!!!!!!
நமக்கு ரொம்பவே உபயோகமா இருக்கிற தண்ணீரை பற்றி நாம நிறைய படிச்சிருப்போம். ஆனா அந்த நதிகளையும், நீரூற்றுகளையும் நம்ம பிதாப்பா எப்படி உருவாக்கினாங்கன்னு தெரிந்து கொள்ள ஆசைபட்டதுண்டா குட்டிகளா?
13. தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்.
6. பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7. அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
8. அவைகள் மலைகளில் ஏறி, பள்ளதாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது
9. அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை ஏற்படுத்தினீர்.
10. அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
சங்கீதம் 104
என்ன குட்டிகளா, நம்ம பிதாப்பா நமக்காக உண்டாக்கின எல்லா தண்ணீர் நிலைகளை பற்றியும் தெரிந்து கொள்ளும் போது என்ன தோணுது? கண்டிப்பா ரொம்ப ஆச்சர்யப்பட்டிருப்பீங்க. நம்ம தேவன் நம்மை காக்க எத்தனை காரியங்களை அழகாக பார்க்க வேண்டியது இருக்கு. இனி உங்களுக்கு தண்ணீர் குடிக்கும் போதும் சரி, தண்ணீரை பற்றி ஞாபகம் வரும் போதும் சரி, நம்ம தேவன் எப்படி அவைகளை நித்தமும் ஆளுகை செய்கிறார் என்பது உங்க நினைவில் இருக்கும்னு நம்புறோம்…………..
7. அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
சங்கீதம் 135
மழை, மேகம் அதோட வருகிற இடி, மின்னலை நீயும் பார்த்திருப்ப. ஆனா அவை முழுவதுக்கும் கட்டளை கொடுக்கும் அவருடைய பராக்கிரமத்தை ( யோபு 38 : 25 – 30, 33 – 35) உன்னால புரிஞ்சிக்க முடியுதா??????
13. உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
14. பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
25. பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
27. ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
சங்கீதம் 104
39. நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
40. சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவர்கள் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
41. காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்து கொடுக்கிறவர் யார்?
யோபு 38
என்ன குட்டிஸ், நம்ம பிதாப்பா தான் படைத்த ஜீவன்களுக்கு எப்படி பிழைப்பூட்டுகிறார் என்பதை யோபுக்கு சொல்லும் போது என்ன தோணுது? நம்ம தேவனின் வல்லமையை நினைக்கும் போது சந்தோசமா இருக்குதா!!!!!!!!
15. நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.
16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
சங்கீதம் 139
என்ன குட்டிஸ், ரொம்ப அமைதியாட்டீங்க. இது மட்டுமில்ல குட்டிகளா, நட்சத்திரங்களைப் பேரிட்டு அழைக்கிறதில இருந்து(சங்கீதம் 147 : 4), பூமிக்கு வெளிச்சம் கொடுத்து(யோபு 38 : 18, 19), துன்மார்க்கரை தாழ்த்தி( யோபு 40 : 10 – 14), எளியவர்களை உயர்த்துகிற காரியங்கள் வரைக்கும் நம்ம தேவன்தான் ஆளுகை செய்கிறார். ஏன்னா இந்த உலகத்தில நடக்கிற சின்ன காரியத்தில் இருந்து பெரிய காரியங்கள் வரைக்கும் உள்ள அனைத்தையும் கட்டி மேய்க்கிறவர் அவர்தான். அதனாலதான் தாவீது கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் (சங்கீதம் 23 : 1) என்று சங்கீதத்தில் பாடி வைச்சிருக்கார்
இப்ப சொல்லுங்க, யாராவது பிதாப்பாவை குறித்து கேள்விகள் கேட்டா டான்…டான்னு பதில் சொல்லுவீங்களா?
இயேசு கிறிஸ்து யார்?(2) இயேசு கிறிஸ்து யார்?(4)
இயேசு கிறிஸ்து யார்?(3)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives