• இயேசு கிறிஸ்து யார்?(11)

    தாழக் குதியும்

    jesus11

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நம்ம இயேசப்பா சாத்தானோடு எப்படி எதிர்த்து நிற்கணும் என்பதை நம்மளுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்கிறாங்க.

    சாத்தான் நம்ம இயேசப்பாவை சோதிச்ச போது, முதல் கேள்வி மூலமா நாம நம்ம தேவனுடைய வார்த்தைகளை எந்த அளவு வல்லமையா பயன்படுத்தணும், இல்லைன்னா அவன் நம்ம பலவீனங்களை நம்ம கண்ல காட்டி ஈஸியா நம்ம இயேசப்பா விட்டு நம்மளை விலக்கி கொண்டு போயிருவான்னு சொல்லி கொடுத்தாங்க.

    அடுத்ததுல சாத்தானுடைய வல்லமையை குறித்து நமக்கு எச்சரிக்கை பண்ணி விழிப்போட இருந்தா மட்டுமே அவனை எதிர்த்து நிற்க முடியும். அதோட அவனை குறித்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்லி கொடுத்தாங்க.

    நாம வேதாகமத்தை எந்த அளவு முழுமையா தெரிந்து வைச்சிருக்கணும் என்பது மட்டுமில்ல அதன் படி வாழ நம்ம தேவனுடைய உதவியை கேட்க என்றும் தயங்க கூடாது என்பதையும் சொல்லி கொடுத்தாங்க.

    சரி குட்டிகளா, இப்ப நீங்க நம்ம பைபிள் படிக்கிற முறை ஏதாவது மாற்றத்திற்கு வந்திருக்கா? நீங்க எடுக்கிற முயற்சிகளுக்கு நமது தேவன் தாமே கிருபை பாராட்டுவாராக.

    நம்ம இயேசப்பாகிட்ட இரண்டாவது கேள்வி சாத்தான் என்ன கேட்டான் என்பதையும் அதற்கு நம்ம இயேசப்பா என்ன பதில் சொன்னாங்க எனபதையும் பார்த்துட்டு இருக்கோம். சில பேரு மனதில நினைக்க ஆரம்பிச்சிட்டீங்க, ரெண்டு நாளா இதைத்தான் சொல்லுறாங்க. ஆனா நம்ம இயேசப்பா நம்ம கிட்ட என்ன சொல்ல வர்றாங்கன்னு தெரியலையேன்னு புலம்புறீங்க? சாரி குட்டிஸ், சாத்தான் வல்லமையை பற்றி நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொன்னதும், தேவ வார்த்தைகளை நாம சாப்பிடுகிற சாப்பாடு மாதிரி ஏனோ தானோ கொறிச்சா, வெள்ளங்கள் வரும் போது எதிர்த்து நிற்க பெலன் இருக்காதுன்னு அவர் சொன்னதும் இரண்டாவது கேள்விக்கு சொந்தமானவையே.

    நீங்க குழப்பமா பார்க்கிறது புரியுது குட்டிகளா. சாத்தான் நம்ம இயேசப்பாகிட்ட கேட்ட இரண்டாவது கேள்வி உங்களுக்கு மனப்பாடம். சரிதானே. ஆனா நம்ம இயேசப்பாவை ஆலயத்தில இருந்து குதிக்க சொல்லுறதுக்கு அவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?ன்னு உங்க மனது கேள்வி கேட்குதா? ஆமான்னுதான உங்க மனதும் சொல்லுது.

    நம்ம இயேசப்பா மட்டுமில்ல குட்டிகளா, இந்த கேள்வியை யாராவது நம்மகிட்ட கேட்டாலும் நாமளும் இதைத்தான் கேட்கறவங்ககிட்ட சொல்லியிருப்போம். அப்ப நம்ம தேவனால் அழகாக செதுக்கப்பட்ட கேருபீனா இருந்து விழுந்து போன சாத்தான் ஏன் இந்த கேள்வியை கேட்டான்? யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க, குட்.

    இதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளணும்னா நாம நம்ம வாழ்கையை பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டியது இருக்கு குட்டிகளா. இப்ப உங்களுக்கு திரும்பவும் exams ஆரம்பிக்க போறாங்க. சரிதான……இந்த கேள்விக்கும், எங்களுடைய examsக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?ன்னு நீங்க கேட்கலாம். உங்களுடைய டெஸ்ட்க்காக நீங்க படிக்கும் போது உங்களுடைய முழுமையான பாடத்தையும் படிப்பீங்களா இல்லை எல்லாத்தையுமா கேட்க போறாங்க? இந்த பாடத்தில முதல் மூன்று கேள்வி, நடு பாடத்தில எல்லா கேள்விகளும் வரலாம். ஏன்னா டீச்சர் அடிக்கடி இந்த பாடத்தில இருந்து தான் கேள்வி கேட்டாங்க. கடைசி பாடம் விட்டிருவோம். ஏன்னா டீச்சர் சரியா நோட்ஸ் கூட தரலை. அப்ப கேட்க மாட்டங்கன்னுதான் அர்த்தம். என்ன குட்டிகளா, உங்க வீட்டுல வந்து உங்க பக்கத்திலேயே இருந்து பார்த்த மாதிரி சொல்லுறோமா?

    சாரி குட்டிஸ், நீங்க படிக்கிற விதத்தை குறை சொல்லுகிறதுக்கு இதை சொல்லலை. உங்களுடைய தேர்வில சப்போஸ் நீங்க படித்த பகுதிகளை தாண்டி கேள்வி கேட்டு, அதுனால உங்களுக்கு சுத்தமா மார்க் வராம போச்சுன்னா என்ன சொல்லுவீங்க? ஞாபகப்படுத்தி சொல்ல முடியுமா?

    அம்மா/அப்பாகிட்ட முழுமையான டிராமா. நான் எல்லாத்தையும்தான் படிச்சேன். டீச்சர் என் மேல உள்ள கோபத்தில மார்க்கை கம்மி பண்ணிட்டாங்க……….நான் படிக்கிற நேரம் இதை செய்…அதை செய்ன்னு நீங்க வேலை ஏவிட்டு இருந்ததால மார்க் வாங்க முடியாம போச்சு…..அதுவும் இல்லாட்டினா நமக்குதான் பழி போடுறதுக்குன்னு ஒருத்தர் இருக்காரே, ஏன் இயேசப்பா நீங்க சொன்ன போர்ஷன்ஸ்தான படிச்சேன்னு அவர் மேல பழி போடுறது. இது சரியா குட்டிகளா.

    என்ன அமைதியாயிட்டீங்க. நித்தமும் இது நம்ம வாழ்கையில நடக்கிற காரியம்தான. இதுல என்ன இருக்கு?ன்னு உங்க மனது கேட்குதா. சாரி குட்டிஸ், இதற்கு முன்னாடி உங்க வாழ்க்கை எப்படி மாதிரினாலும் இருந்திருக்கலாம். ஆனா நீங்க அவருடைய பிள்ளை. நம்ம தேவனை என்றும் வேதனைப்படுத்தாதீங்க.

    நம்ம கூட்டத்தில இன்னொரு வகை உண்டு. நான் டெஸ்ட்க்கே ஒரே ஒரு பக்கம்தான் படிப்பேன். மிச்சத்தை என் இயேசப்பா பார்த்துக்குவாங்க. அடுத்த நாள் டெஸ்ட் அன்று காலையில உருக்கமான prayer. அப்பா இந்த முறை நான் எப்பவும் போல ஒரு பக்கம் படிச்சிருக்கேன். ஆனா நான்தான் வகுப்பிலேயே first வரணும். அப்படி வந்தா உங்களுக்கு சர்ச்ல வந்து 500 ரூ போடுறேன். சரியா…….அழகான prayer. அப்படிதான குட்டிகளா. தயவு செய்து நம்ம இயேசப்பா நாமத்தை வீணில வழங்காதீங்க. உங்களுடைய டெஸ்ட் காரியத்தில நீங்க நல்லா படிக்க அவர் உங்களுக்கு எல்லா தாலந்துகளையும்(திறமைகளையும்) கொடுத்திருக்கும் போது நம்ம சோம்பேறி தனத்தால் தப்பு செய்துட்டு நம்ம தேவனின் நாமத்தை அதற்கு பழி சொல்லாதீங்க.

    நீங்க மட்டும் இல்லை குட்டிகளா, பெரியவங்களும் கூட அப்படித்தான். தானே சில காரியங்களை மனசில சரின்னு நினைச்சிட்டு, அதற்கு நம்ம இயேசப்பா கூட இருக்காங்கன்னு தப்பா அவங்களே கற்பனை வேற……கடைசில அந்த காரியத்தில மோசமா தோத்து போகும் போது மட்டும் நம்ம இயேசப்பாவை திட்டுறது. ஏன்…..காரியம் செய்யும் போதே தேவன் கடிஞ்சு சொல்லுவாங்களே…..குட்டிமா இது வேண்டாம் உனக்கு…இதுனால நீ ரொம்பவே கஷ்டப்பட வேண்டியது வரும்னு…..அப்ப செவி கொடுத்து கேட்காம அடுத்து விழுந்து விழுந்து அழுகிறதில என்ன பிரயோஜனம்…..அதுவும் தப்புக்கு இயேசப்பாதான் காரணம்ன்னு குற்றச்சாட்டு வேற.

    அதுவும் தேவனுடைய ஊழியத்தை செய்கிறவங்களுக்கு வருமே, இதை மாதிரி ஒரு பிரச்சனை. அது ரொம்ப மோசமா இருக்கும். உபவாசம் பண்ணி, தேவனுடைய வார்த்தைகளை பார்த்த பிறகுதான் நான் இந்த ஊழியத்தில இந்த பிரிவுல நுழைஞ்சேன். ஆனா எத்தனை பெரிய அடியை என் இயேசப்பா கொடுத்துட்டாங்கன்னு புலம்பல்.

    குட்டிகளா, நம்ம இயேசப்பா உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்ல ஆசைப்படுறாங்க. மற்றவங்களை விட தேவ பிள்ளைகளுக்குத்தான் இந்த மாதிரி தேவ வார்த்தைகளை புரிந்து கொள்ளுறதில தப்புகள் அதிகமா நேரிடலாம். ஏன்னா..தேவ பிள்ளைகளை இந்த உலக காரியங்களில் ஏமாற்ற முடியாதுன்னு சாத்தானுக்கு நல்லாவே தெரியும். அதனால இந்த மாதிரி நமக்கு நம்ம இயேசப்பா கொடுத்த வார்த்தைகளையோ இல்லை அவர் உங்களுக்குன்னு கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்களையோ ட்விஸ்ட்(அர்த்தத்தையே மாற்றி) பண்ணி வேற மாதிரி நமக்கு புரிய வைச்சிருவான். என்ன ஒரு மோசமான எண்ணம் அவனுக்குன்னு உங்களுக்கு கோபம் வருதா? கோபப்படுங்க. ஆனா நம்ம இயேசப்பா சொன்ன காரியங்களை மட்டும் மறந்துராதீங்க.

    நம்ம ஆதாம், ஏவாள்தான் நமக்கு என்றும் சாட்சி. நம்ம தேவன் அவங்களை நன்மை,தீமை மரத்தின் பழத்தை சாப்பிட கூடாதுன்னு எச்சரிக்கை பண்ணியிருந்தாங்க. சாத்தான் என்ன மாதிரி அவங்களை ஏமாற்றினான்னு உங்களுக்கும் தெரியும். முதல்ல உங்க வாயில இருந்துதான் வார்த்தைகளை வாங்குவான். எச்சரிகை குட்டிகளா. தேவன் உங்களுக்கு ஒரு வார்த்தையோ இல்லை தரிசனமோ, உங்க வாழ்கையை குறித்த தீர்க்கத்தரிசனமோ சொல்லியிருந்தாங்கன்னா முதல்ல நம்ம இயேசப்பகிட்ட கேளுங்க. இயேசப்பா இதை குறித்து நான் வெளியில சொல்லுறதுக்கு அனுமதி உண்டான்னு. அனுமதி கிடைச்சா மட்டும் சொல்லுங்க. இல்லைன்னா அதை உங்க மனதிலேயே வைச்சுக்கோங்க. ஏன்னா ஏவாள் தேவன் அவங்கிட்ட சொன்ன காரியத்தை சொன்னதால்தான் தேவ உறவை இழந்து சாபத்தில கஷ்டப்பட வேண்டியதா போச்சு. அதுனால எனக்குதான் எல்லா தெரியும்ன்னு எந்த காரியத்தையும் புலம்பாதீங்க. இல்லைன்னா சாத்தான் உங்களை வஞ்சிக்கும் போது நம்ம இயேசப்பாவால கூட உங்களை காப்பாற்ற முடியாது.

    இப்ப புரிந்து கொண்டீங்களா குட்டிகளா, சாத்தான் எந்த விதத்தில நம்ம இயேசப்பாவை ஏமாற்ற நினைச்சான்னு. தேவ வார்த்தைகளை ட்விஸ்ட் பண்ணி. அதுனாலதான் நீங்க குதிங்க. உங்களை காப்பாற்ற தூதர்களை உங்க பிதா அனுப்புவாருன்னு. இப்ப உங்ககிட்ட கூட இந்த மாதிரி தவறான ஆலோசனைகள் வரலாம்.

    ஜான்சன் நீ நல்லா பாடுற….ஏன் நீ நம்ம இயேசப்பாகாக பாடல்கள் பாடி cd வெளியிட கூடாது. நம்ம தேவனின் நாமம் உன்னால மகிமை படட்டுமேன்னு……….உடனே நம்ம இயேசப்பாக்காகதான ஊழியம் செய்ய போறேன். உண்மையில் என் தேவன் மகிமை படுவாருன்னு புறப்பட்டுராதீங்க. உங்களுக்கு நம்ம தேவன் எச்சரிக்கையாகவே சொல்லுறாங்க குட்டிகளா. நம்ம தேவன் அழைத்தால் ஒழிய நீங்களே எந்த காரியங்களிலும் தலையிட்டு கொள்ளாதீங்க. அது ஊழியமா இருந்தாலும். ஏன்னா சாத்தானுடைய பலமே இதுதான் குட்டிகளா. தேவ காரியங்களில் தான் இந்த மாதிரி பிரச்சனையை கொண்டு வருவான். அப்ப நம்ம தேவனுடைய சந்நிதானத்தில் உட்கார்ந்து அவர்கிட்ட பேசி முடிவெடுக்காம நீங்களே தாட்…..பூட்ன்னு காரியங்களை யோசிக்காம செய்திட்டு அடுத்து நம்ம தேவனை பழி சொல்லாதீங்க, ப்ளீஸ்………….ஏன்னா நம்ம தேவன் தன்னை பரியாசம் செய்ய ஒட்டார்.

    அதை சப்போஸ் நம்ம தேவன் உண்மையில் அனுமதித்த காரியம்ன்னா சந்தோசமா செய்யுங்க இல்லாட்டினா தைரியமா அவனை பார்த்து சொல்லுங்க…….என் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாகன்னு. என்ன குட்டிகளா, கொஞ்சம் பயந்த மாதிரி தோணுது. எவ்வளவு பெரிய காரியம்………என்னுடைய வாழ்கையில நல்ல விசயங்கள் வரும் போது அதை என் தேவன் தான் தருகிறாரா இல்லை சாத்தான் என்னை சோதனைபடுத்த வருகிறானான்னு எப்படி வேறுப்படுத்தி பார்க்க முடியும். நம்ம இயேசப்பா உங்களுக்கு கொடுக்கிற பதில் இதுதான் குட்டிகளா. என்றும் நம்ம தேவனுடைய சமூகத்தில உட்கார்ந்து பைபிள் வாசிக்கிறதையும், அவர் கூட பேசுறதையும்(ஜெபம்) எந்த காரணத்திற்காகவும் விட்டுறாதீங்க. அதுல தவறும் போது தான் சாத்தான் அம்புகளில் அகப்பட நேரிடும். இப்ப புரியுதா குட்டிகளா.

    இப்ப கேள்வி பகுதிக்கு போகலாமா?

    நம்ம இயேசப்பா தன் சீஷர்கள் கூட இந்த பூமியில இருந்தப்பவே, தான் உலகத்தில பாடுகள் படப்போகிறதை பற்றியும், மூன்றாவது நாள் உயிரோட வருவேன் என்பதை பற்றியும் நிறையவே சொன்னாங்க. ஆனா நம்ம இயேசப்பா திரும்பவும் உயிரோடு அவங்க முன்னாடி வந்து நின்ன பிறகுதான் அவர் சொன்ன மறைபொருளை புரிந்து கொண்டாங்க. ஏன் நம்ம இயேசப்பாவுடைய சீசர்களால் அவர் தன்னை குறித்து சொன்ன தீர்க்கத்தரிசனத்தை புரிந்து கொள்ள முடியாம போச்சுன்னு எங்களுக்கு சொல்லுவீங்களா குட்டிஸ்?( நாம பைபிள் வாசிக்கும் போது, நம்ம தேவன் கொடுக்கிற வார்த்தைகளை என்னதான் நம்ம அறிவு திறமையால புரிந்து கொள்ள முயற்சி பண்ணினாலும், பரிசுத்த ஆவிப்பா அதற்கான விளக்கங்களை நமக்கு சொல்லாட்டி நம்ம பாடு அதோ கதிதான்!!!!!!!!!!!!!!!!!!!!)

    இதோட நாலு கேள்விகள் முடிஞ்சுச்சுன்னு நினைக்கிறோம், சரிதானே குட்டிகளா. இந்த கேள்விக்கான பதிலையும் உங்க வீட்டுல உள்ளவங்ககிட்டயோ இல்லை உங்க சண்டே ஸ்கூல் டீச்சர்கிட்ட கேட்டோ நீங்க எங்களுக்கு தெளிவா எழுதுங்க. உங்க பதில்களை leave a reply மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்க.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − five = 0

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>