-
இயேசு கிறிஸ்து யார்?(44)
விதைக்கிறவர்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம தேவனின் வார்த்தைகள் நம்மளை வேதனைபடுத்தி பார்க்க இல்லை என்றும் சமாதானத்தையும், சந்தோசத்தையும் கொடுக்க வல்லது. அதை புரிந்து கொள்ளவே மாட்டோம்னு நினைக்கிற ஆட்களுக்கு வேணா, அது மாறுபாடுகளை கொடுக்கிற விஷயமா இருந்தாலும், அவரை நேசித்து என்றும் அவருடைய அன்பை நம்புற பிள்ளைகளுக்கு அது என்றும் ஜீவ விருட்சங்கள்.
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 1 : 1, 2
முதன்முதலில் நாம வேதாகமத்தை வாசிக்க தெரிந்த நேரம் சங்கீதங்களை வாசிக்க ஆரபிச்சிருப்போம் அதுனால முதல் சங்கீதத்தில் முதல் இரண்டு வசனங்களும் நல்லாவே மனப்பாடம் சொன்னா சரி வருமா குட்டிகளா. நம்ம தேவன் கொடுத்த சங்கீதத்தில் இரண்டாவது வசனம் உங்களுக்கு தெரிந்த காரியம், அதுல குறிப்பிடுகிற காரியம், நம்ம தேவன் நமக்கு கொடுத்த பைபிள் வசனங்கள். அப்படி தேவன் கொடுத்த தேவ வசனத்தில் நிலை நிற்கிற பிள்ளைகளுக்கு தேவன் கொடுக்கிற ஆசீர்வாதங்களும் உங்களுக்கு தெரிந்த காரியம் தான். 3 வது வசனத்தில் தெளிவா சொல்லப்பட்டிருக்கும். இந்த அளவு நம்ம தேவன் தன்னுடைய வார்த்தைகளில் தியானிக்கிற பிள்ளைகளுக்கு ஏகப்பட்ட ஆசீர்வாதங்களை, நியமனம் பண்ணி இருக்கும் போது, நம்மால ஏன் குட்டிகளா. ஒரு 5 நிமிஷம் கூட முழு மனதோட அவருடைய வார்த்தைகளை தியானிக்க என்ன, வாசிக்க கூட முடியலை. என்றாவது இதை குறித்து யோசித்து பார்த்தது உண்டா குட்டிகளா.
எங்களுக்கு இதை குறித்து எங்க யோசிக்க நேரம் இருக்கு. எப்ப பார்த்தாலும் டெஸ்ட் புக், வொர்க் புக், கிளாஸ் டெஸ்ட், மிட் டேர்ம்……இந்த மாதிரி 1000 காரியங்கள் யோசிக்க இருக்கும் போது, எங்களால் பைபிள் பத்தி யோசிக்க நேரம் இல்லைன்னு சொன்னா நீங்கனாச்சும் புரிந்து கொள்ளுங்கன்னு புலம்புறது புரியுது குட்டிகளா. அப்ப ஒரு காரியம் கேட்கலாமா குட்டிகளா. இந்த மாதிரி உங்களுடைய படிப்பு காரியத்தை பாரமா நினைக்கிற உங்களுக்கு, உங்களுடைய பிஸியான நேரங்களிலும் டிவி காரியங்களை பார்க்க முடியுதே? நம்ம படிப்பை ஒரு பாரமா நினைச்சி புலம்புற நமக்கு மட்டும்தான் தெரியும், நாம சொல்லுறது முழுக்க முழுக்க பொய்ன்னு.
நம்ம தேவ வசனங்களை படிக்க கூட முடியாத அளவுக்கு நமக்கு தேவையில்லாத பாரங்கள் இல்லைன்னு நமக்கே தெரியும். அப்ப, நாம அவருடைய வார்த்தைகளை படிக்க முடியாத அளவுக்கு நம்மளை தடுத்து நிறுத்துறது உண்மையில் என்னன்னு தெரிந்து கொண்டீங்களா? அது நம்மளுடைய சோம்பேறித்தனம்ன்னு சொன்னா சரி வருமா. கண்டிப்பா நீங்க மறுக்க மாட்டீங்கன்னு நம்புறோம்.
இந்த அளவுக்கு கொஞ்சம் இல்லை ரொம்பவே நாம முயற்சிகள் எடுத்து அவருடைய வசனங்களை படித்தாலும், சில நேரம் படித்த வேகத்தில் மறந்து போகறதும் உண்டு. சரிதான. அது ஏன்னு தெரிந்து கொள்ள முயற்சி பண்ணியிருக்கீங்களா?
நம்ம இயேசப்பா நம்மளை மாதிரி உள்ள சின்ன குழந்தைகளும் அவருடைய வார்த்தைகளை புரிந்து கொள்ளுறதுக்காக லூக்கா புத்தகத்தில் நிறையவே உவமைகளோட அதன் அர்த்தங்களையும் சொல்லி இருப்பாங்க. அதுல விதைகளை பற்றியும் அது விதைக்கப்பட்ட இடங்களையும் குறித்து நம்ம இயேசப்பா ரொம்ப அழகாக சொல்லியிருப்பாங்க.
இது உங்களுக்கு ரொம்பவே தெரிந்த விஷயம். அதன் அர்த்தங்களும் ரொம்பவே தெரிந்த விசயமும் கூட. அந்த விளங்கங்களை குறித்து தெரியாத நம்ம நண்பர்களுக்கு நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்கிறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?
லூக்கா 8ம் அதிகாரத்தில் 4ம் வசனத்தில ஆரம்பிச்சி 15ம் வசனங்கள் வரை நம்ம இயேசப்பா தேவனின் வார்த்தைகள் நமக்குள் எப்படி விதைக்கப்படுதுன்னு அழகாக சொல்லி இருப்பாங்க. நம்ம தேவனின் வார்த்தைகள் நமக்குள், அதாவது நம்ம இருதயமாகிய நிலத்தில(எப்படிப்பட்ட இருதயம்) எந்த வகையில விதைக்கபடுகிறதுன்னு சொல்லி இருப்பாங்க. நம்ம தேவன் நல்லோர் மேலயும், தீயோர் மேலயும் எப்படி மழையை பெய்ய பண்ணுகிறாரோ, அதை மாதிரிதான் அவருடைய வார்த்தைகளை நம்ம எல்லார்(எப்படிப்பட்ட இருதயம் கொண்டவர்களா இருந்தாலும்) மேலயும் விதைக்கிறாங்க. உங்களுக்கு நம்ம இயேசப்பா நமக்கு இதன் மூலமா இன்னொரு காரியமும் சொல்ல ஆசைபடுறாங்க. இப்படி அழகாக நம்ம தேவனின் கிருபையால விதைக்கப்பட்ட வார்த்தைகளை எப்படி சாத்தான் திருடி செல்லுகிறான் என்பதும் ரொம்பவே தெளிவா நம்ம இயேசப்பா சொல்லி இருப்பாங்க.
நம்ம இருதயம் சப்போஸ்
வழி போன்ற இருதயம்(என்ன புது பெயரா இருக்கு!)- நான் ரொம்பவே திறந்த மனதுள்ளவன். என்னால யாரயும் அட்ஜஸ்ட் பண்ணி போக முடியும். நல்லவரோட இருக்கும் போது நல்லவனா மாறுகிற நான், கெட்டவர்களோட கெட்டவனாகவும் மாற எப்பவும் ரெடியா இருப்பேன். இந்த உலகத்தில உள்ள மக்களுக்கு தெரியாத ஒரு விசயம்(இரகசியம்) எனக்கு தெரியும். ஊரோட ஒத்து வாழ் என்பதுதான் அந்த இரகசியம். யார் வேணுமானாலும் என்னை ஈஸியா புரிந்து கொள்ளலாம். என்கிட்ட எந்த ரகசியமும் கிடையாது, ஞானமும் கிடையாது.
தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்
நீதிமொழிகள் 28 : 26
உங்களுக்கு நல்லாவே இப்ப புரிந்திருக்கும். நம்ம இயேசப்பா வழி போன்ற இருதயத்தை பெற்றவங்களை எந்த பிரிவுல சேர்த்திருக்காங்கன்னு. ஒரு வார்த்தையில் சொன்னா அவங்க மூடர்கள். நம்ம இயேசப்பா நீதிமொழிகளில் குறிப்பிட்டிருக்கிற மூடனுடைய எல்லா பண்புகளும் இந்த இருதயத்தை பெற்றவங்களுக்கு பொருந்தும். சப்போஸ் நீங்க இவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைபட்டா நீதிமொழிகளில் இருக்கிற மூடர்களை குறித்த வசனங்களை வாசித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்க.
கற்பாறை இருதயம் – இந்த இருதயத்தை பற்றி உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். நம்ம பைபிளில் இருந்து சொன்னா இஸ்ரவேல் மக்கள்ன்னு சரியா வரும்னு நம்ம இயேசப்பா நினைக்கிறாங்க. ஏன்னா நம்ம தேவன் நிறைய முறை அவர்களை(மோசே மூலமா எகிப்தில இருந்து கானான் கூட்டிட்டு வந்த நேரம்) கல்லான இருதயம் கொண்டவர்களேன்னு சொல்லித்தான் திட்டி இருப்பாங்க. தன் நேசித்த தேவனின் அற்புதங்களை கண்ணார கண்டாலும், கொஞ்ச நேரத்திலே எந்த வாயால அவரை பாராட்டினாங்களோ, அதே வாயால சிலுவையில் அறையும் என்பதையும் சொல்ல தயங்க மாட்டாங்க. இப்ப அழகாக புரிந்திருக்கும்னு நம்புறோம்.
முள் இருதயம் – இந்த இருதயத்தை கொண்டவங்களை பற்றி நம்ம இயேசப்பா ரொம்பவே சிறப்பா சொல்ல ஆசைபடுறாங்க. இந்த ஜனங்களை நம்ம தேவன் தெரிந்து கொண்ட விதம் ரொம்பவே அழகான காரியம். ஏன்னா இவங்க, முதலில் சொல்லப்பட்ட மூடரின் இருதயம் கொண்டவர்கள் அனுபவித்த உலக சந்தோசங்களையோ இல்லை கற்பாறை இருதயம் கொண்டவர்கள் கண்ணார கண்ட அதிசயங்களையோ பார்க்காதவங்க. ஆனாலும் இவர்களையும் நம்ம தேவன் தன்னுடைய அன்பினால் வனைகிற வேலையை தொடர்ந்து செய்திட்டேதான் இருக்காங்க. ஏன்னா, இவங்க உலகத்தில இருந்தாலும் உலகத்தை நம்பாதவங்க. தன்னை சுற்றி நடக்கிற எல்லா காரியங்களையும் ரொம்பவே சந்தேக கண்ணோடதான் பார்பாங்கன்னு சொன்னா சரி வரும். இன்னொரு காரியத்தையும் நம்ம இயேசப்பா இவங்களை குறித்து சொல்ல ஆசைபடுறாங்க. இவங்க உலகத்தையும் நம்ப மாட்டாங்க, நம்ம தேவனையும் நம்ப மாட்டாங்க. வாழ்கிற வாழ்கையை ஒரு பயத்தோடேயே வாழ்ந்து ஓட்டத்தை முடிக்கிற இவங்க, பரிதாபகரமான ஆட்கள். இதோட இவங்களை வனைகிற நம்ம தேவனுக்கு எத்தனை விதமான காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும்.
நல்ல இருதயம் – இதுல நம்ம தேவன் மூன்று விதமான நபர்களை பற்றி சொல்லி இருப்பாங்க. 30 மடங்கா, 60 மடங்கா, 100 மடங்கா பலன் கொடுக்கிற இருதயம். மூன்று வகையினரும் நல்ல இருதயமா இருந்தாலும், நம்ம இயேசப்பா அவங்க தன் மேல வைக்கிற விசுவாசத்தை வைத்து மூன்றா பிரித்திருப்பாங்க. விசுவாசத்திற்கும், நம்ம தேவன் மேல அன்பிற்கும் வித்தியாசம் கிடையாது என்பது உங்களுக்கு தெரிந்த விசயம்தானே குட்டிகளா.
நம்மளுக்குள் இப்படித்தான் இருதயம் இருக்குமோன்னு நீங்க ஆச்சர்யப்படுறது எங்களுக்கும் புரியுது. அது மட்டுமில்ல, நம்மில் பாதி பேரு உங்க இருதயம் இருக்கிற பக்கத்தை தொட்டு, நான் இந்த வகையில் எப்படிப்பட்டவன்ன்னு உங்களுக்கு மட்டுமே கேட்கிற குரலில் கேள்வி எழுப்புவதை நம்ம இயேசப்பாவும் கேட்டுட்டு தான் இருக்காங்க குட்டிகளா.
கர்த்தருக்கு பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமாயிருக்கிறார்.
சங்கீதம் 115 : 11
இயேசு கிறிஸ்து யார்?(43) இயேசு கிறிஸ்து யார்?(45)
இயேசு கிறிஸ்து யார்?(44)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives