-
இயேசு கிறிஸ்து யார்?(46)
வழி போன்ற இருதயம்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
நம்ம இயேசப்பா, எந்த வகையில சாத்தான் நம்மகிட்ட இருக்கிற தேவ வார்த்தைகளை களவாட வருகிறான் என்பதை சொல்லி கொடுத்தாங்க, அப்படித்தான குட்டிகளா. அதுல நாம தப்பிக்கிறது எப்படின்னு என்பதையும் சொல்லி கொடுத்தாங்க. தேவன் கொடுத்த சர்வாயுதங்களையும் பூண்டு, விழிப்போட ஜாக்கிரதையா இருக்கிறது மட்டும்தான் ஒரே வழி. இதை நம்ம இயேசப்பா சொன்னப்ப, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு சொன்னா சரி வருமா. தேவ வார்த்தைகள் எனக்குள் இல்லாம நான் மூச்சு விட கூட கஷ்டம் என்பதை என்னுடைய இயேசப்பா சொல்லி கொடுத்துட்டு, நீங்க எப்படித்தான் சர்வாயுதத்தையும் போட்டிருந்தாலும், பலவானா சாத்தான் வந்தா, என்னுடைய ஆயுதத்தை அவன்கிட்ட இழக்கிறது மட்டுமில்ல, என்னுடைய பொக்கிஷங்களையும் அவன்கிட்ட விட்டுட்டு ஓட வேண்டியதா ஆயிருமே. இது எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டம்.
நம்ம இயேசப்பா சாத்தான் வந்து உங்களை கொள்ளையடிக்கும் போது, நீங்க விழிப்போட இருக்கிறதையும் சொல்லி கொடுத்தாங்களே, அதை ஏன் மறந்தீங்க குட்டிகளா. அது மட்டுமில்ல, சாத்தான் உங்களை வந்து கொள்ளை அடிக்கிறதுக்கு முன்னாடி, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறாரே, அதை ஏன் அலட்சியபடுத்திறீங்க? நாம எல்லாரும் பலவீனமான ஆட்கள்ன்னு உங்களுக்கும் தெரியுமே? அப்படி இருக்கும் போது, எங்களுடைய பலவீனங்களால் நாங்க விழுந்து போகறதை நீங்களும் குற்றப்படுத்துணுமா? உங்க கேள்வி சரியான கேள்விதான். ஆனா நம்ம தேவன் நமக்கு ஏற்கனவே சொன்ன காரியத்தையும் நாம மனதில எடுக்கணுமே குட்டிகளா.
என்னதுன்னு நீங்க கேள்வி கேட்க நினைச்சா, நம்மளை சாத்தான் தோற்கடிக்க கொண்டு வருகிற ஆயுதம், நம்மளுடைய பலவீனங்கள்ன்னு சொன்னாங்களே, அதை பத்தி ஏதாவது யோசித்தீங்களா?
பலவீனம்ன்னா எனக்கு கொஞ்சம் பொய் சொல்ல வரும். மற்றவங்களை கிண்டல் அடிக்கிற பழக்கம் உண்டு. டிவி பார்ப்பேன். அம்மா, அப்பா பேச்சை கேட்க மாட்டேன், இது மாதிரி நிறைய காரியங்கள்……..சரி குட்டிகளா, எங்களுக்கு சொல்லமுடியுமா? நாம செய்யுற தப்புகள் நமக்கே தெரியும் போது, அதில இருந்து வெளியே வர நம்ம தேவன்கிட்ட என்னென்ன உதவிகள் இது வரை கேட்டிருக்கீங்க?
நம்மால கண்டிப்பா பதில் சொல்ல முடியாது குட்டிகளா. சரிதான. ஏன்னா, அந்த தப்புகள் செய்யும் போது ஏற்படுகிற வேதனை, நம்ம தேவன்கிட்ட இருந்து கண்டிப்பா கேட்டு பலன் வாங்கி கொள்ளனும்னு தோணுற உணர்வுகள், அடுத்த நொடி எங்க போகுது? சரி, இப்ப நம்ம இயேசப்பா நம்மளை சாத்தான் எந்தெந்த பலவீனங்கள் மூலமா ஜெயிக்கிறான் என்பதை சொல்லி கொடுக்க போறாங்க, அதை கேட்டு தெரிந்து கொள்ளலாமா?
நம்ம இயேசப்பா நமக்கு ஏற்கனவே நம்முடைய இருதயம் எப்படிப்பட்டதுன்னு சொல்லி கொடுத்துட்டாங்க. அதுனால நமக்கு நம்முடைய இருதயம் எந்த வகையை சேர்ந்ததுன்னு நல்லாவே தெரியும். இப்ப நம்ம இருதயத்திற்கு ஏற்ற மாதிரி அவன் கொண்டு வருகிற பலவீனங்கள் என்னன்னு தெரிந்து கொள்ளுவோம்.
வழி போன்ற இருதயம் – நம்ம இயேசப்பா அவர்களை மூடர்கள்ன்னு சொல்லி இருக்காங்க. இப்படிப்பட்ட இருதயத்தில இருந்து தேவ வார்த்தைகளை திருட சாத்தான் எந்த யுக்தியை use பண்ணுறான்னு பார்ப்போமா?
முதலில் வழி அருகே விழுந்த விதைகள் மிதியுண்டதுன்னு சொல்லி இருக்காங்க. நம்மால் ஏற்கனவே ரகசியத்தை காக்க முடியாது. இந்த பார்த்தியா, நான் இன்னைக்கி ஒரு சர்ச்ல போற வழியில இந்த வசன அட்டை கொடுத்தாங்க. நல்லா இருக்கு பார்த்தியா? நமக்குதான் மற்றவங்களை ஈஸியா நம்புறது பிடிக்குமே. அதுனால நீங்க நண்பர்களா நினைக்கிற நண்பர்கிட்ட இதை பத்தி நீங்க பேச, தேவ கிருபை இருந்து, யாராவது ஒருத்தர் நம்ம தேவனுடைய வார்த்தைகளை உங்க இருதயம் தொடுற மாதிரி விதைகளை ஊன்றி வைச்சிட்டா நல்ல விஷயம். ஆனா மூடர்களின் நண்பர்கள் மூடராதான் இருப்பாங்கன்னு ஏற்கனவே நம்ம தேவன் நீதிமொழிகளில் சொல்லி இருப்பாங்க. அதுனால, அதை குறித்து உங்களுக்கு விளக்கம் சொல்லுற வேலையை இல்லை குட்டிகளா, முழுக்க முழுக்க அந்த வார்த்தையையோ, இல்லை அதை குறித்த விளக்கங்களையோ கிண்டல் பண்ணி, குழப்பி விட்டு, உண்மையில் நம்ம தேவன் நொறுங்கி போயிருவார் குட்டிகளா. கடைசியில் அவங்க எடுக்கிற முடிவு, இதுதான் வாழ்க்கை ஓட்டத்தை முடிக்கிற நிலமையில் இருக்கிறவங்க யோசிக்க வேண்டிய விஷயம். ஆனா நமக்குதான் இன்னும் நாள் இருக்கே. இன்னொரு நாள் நிதானமா யோசிக்கலாம். தேவ வார்த்தைகள் எந்த அளவு மிதிக்க பட்டதுன்னு பார்த்தீங்களா? அது நம்ம காலால இல்லை நாம நம்பின ஆட்களால மிதிக்கப்படும்.
மிதிக்கப்பட்ட தேவ வார்த்தைகளை, ஆகாயத்துபறவைகள் வந்து பட்சித்து போடும். ஆகாயத்து பறவைகள்ன்னா, வானத்தில் இருந்து ஏதாவது ஒரு பறவை வந்து இருதயத்தில விதைத்த வார்த்தைகளை சாப்பிட்டுட்டு போயிருமோன்னு நீங்க யோசிக்கலாம். இங்க ஆகாயத்து பறவைகள்ன்னு நம்ம இயேசப்பா குறிப்பிட்டது, மனிதனால் போதிக்கப்படுற உபதேசங்கள். இன்னும் உங்களுக்கு புரியலையா குட்டிகளா. சப்போஸ் நமக்கு சீக்கிரத்தில் கோபம் வர்ற பழக்கம் உண்டுன்னு வைச்சுக்கோங்க. அதில இருந்து நாம வெளிய வரதுக்கு எத்தனை பிரயாசம் எடுத்திருந்தாலும் தோத்திருப்போம். அப்ப மனுசனுடைய உபதேசங்கள், எனக்கு இந்த பிரச்சனை இருக்கு, இதில் இருந்து வெளியே வருகிறது எப்படின்னு தெரியலைன்னு யார்கிட்டாவது சொல்லிட்டோம் வைச்சுக்கோங்க. முடிந்தது நம்ம நிலைமை. அவங்க ஒவ்வொருத்தரும் உங்களுக்கு கொடுக்கிற ஆலோசனைகள், உங்களுக்குள்ள நம்ம தேவன் விதைத்த வார்த்தைகளை முழுக்க முழுக்க மறக்கடித்து விடும். நான் அப்படிதான் கிடையாதுன்னு நினைத்தாலும், தேவன் சந்நிதானத்தில் உட்காருகிரதை விட, மற்றவங்க சொன்ன ஆலோசனைகளின் படி, செய்து பார்க்கிறது ரொம்பவே ஈஸியான விஷயமாச்சே. நாம எல்லா முறைகளையும் முயற்சித்து பார்க்குறதுக்குள்ள, நமக்குள்ள தேவன் போட்ட விதைகள் காணாம போயிரும் குட்டிகளா.
கொஞ்சம் கூட நீங்க எதிர்பார்க்காத காரியம், அப்படிதான. ஏன்னா நம்ம வாழ்கையில எத்தனையோ காரியங்களை நாம இதே மாதிரி கடந்து போயிருப்போம். ஏன்னா, நம்மளை பொறுத்த வரைக்கும் நான் என்றும் நல்லவன்/நல்லவதான். அவங்கதான் என்னை முட்டாளாக்கிட்டாங்கன்னு மற்றவங்க முன்னாடி பெருமை பாராட்டுற ஆட்கள்தான. ஸ்கூல்ல ஒரு சாதாரண காரியம் நடந்திருக்கும். உங்க நண்பன்கிட்ட ஏதோ ஒரு பையன் நீ சொல்லாத விசயத்தை சொன்னதா சொல்லிட்டான் வைத்து கொள்ளுங்க. என்ன செய்வீங்க குட்டிகளா. உங்க நண்பன்கிட்ட போய் நடந்த விசயத்தை விளக்கி சொல்லுவீங்களா? இல்லை உன் வகுப்பில இருக்கிற எல்லார்கிட்டயும் போய் என்னை பத்திதான் உங்களுக்கு தெரியுமே, ஆனா நான் சொல்லாதைதான் சொல்லிட்டான்ன்னு நம்பிக்கை வாக்கெடுப்பு எடுத்துட்டு இருப்பீங்களா.
இதுதான் குட்டிகளா வித்தியாசம். நாம எப்ப உலகத்தை பார்க்க ஆரம்ப்பிச்சோமோ அன்னைக்கே, நம்மளை பற்றி மறந்திட்டோம். அதாவது, என்னைக்கி என்னை பத்தி மற்றவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யோசிக்க ஆரம்பித்தோமோ, அன்றே நம்ம படைத்த தேவனையும் மறந்திட்டோம். அவர் நமக்குள்ள பேசுற வார்த்தைகளையும் மறந்திட்டோம்.
அப்ப என்னதான் வழின்னு கேட்டா, தேவ சமூகம் மட்டும்தான் பிரதானம். நம்ம தேவன் நமக்கு வார்த்தைகள் கொடுத்தா, தெரியாத நம்ம நண்பர்கிட்ட பேசி இன்னும் குழப்பி கொள்ளுகிறதை விட, தேவ சமுகத்தில் உட்காரலாம். அவர் கொடுத்த வார்த்தைகளின் விளக்கத்தையும், நமக்கு தெரியுற வகையில அவராலதான் புரிய வைக்கவும் முடியும். சாரி குட்டிகளா, இதுல யாருடைய உதவியும் சரி வராது. அப்ப ரொம்ப காத்திருக்கணுமேன்னு, நீங்க நினைத்தா, காத்திருக்கணும். ஆனா அந்த விதைகள் மிதிக்கபடுறதில இருந்து தப்பிச்சிருமே. அது மட்டுமில்ல, ஆவலா அவர் சமூகத்தில் உட்காரும் போது, அவர் கண்டிப்பா குட்டிகளா பதில் தருவார். அது மட்டுமில், நம்ம தேவனே அந்த வார்த்தைகளுக்கு விளக்கம் கொடுக்கிறதால, கண்டிப்பா அந்த வார்த்தைகளின் ஜீவன், மற்ற மனுஷ உபதேசங்களை உள்ளுக்குள் விடாது.
இன்னும் புரியுற விதத்தில சொல்லணும்னா, அந்த வார்த்தைகளின் ஒளி, இருட்டான, மனுஷ உபதேசங்களை உங்களுக்குள் உள்ள வர விடாது குட்டிகளா. உங்க காதுகள், மற்றவங்க உபதேசங்களை கேட்டாலும், இல்லை…..இது வழி கிடையாது. என்னுடைய பலவீனங்களில் இருந்து விடுதலை ஆகுறதுக்கு, இந்த வழி சரியானது கிடையாது. கண்டிப்பா என்னுடைய தேவனால் மட்டுமே, இந்த சிக்கலுக்கு சரியான பதிலை தர முடியும். என்னுடைய பிரச்சனையை தீர்த்து வைக்கவும் முடியும். உலகத்தில இருக்கிறவங்க என்னை பத்தி என்ன சொன்னாலும் பரவாயில்லை. நான் எந்த ஸ்டெப்ஸ் எடுத்தும் என்னை நல்லவன்/நல்லவன்னு புரிய வைக்க மாட்டேன். அவர் சந்நிதானத்தில், அவர் பாதங்களை கட்டியா பிடிச்சுக்குவேன். எனக்காக அவர் எல்லாத்தையும் பார்த்து கொள்ளுவார்.
எனது உள்ளம் யாருக்கு தெரியும் இயேசையா
எனது நினைவு யாருக்கு புரியும்
என்னை நீர் அறிவீரே
உம்மை நான் அறிவேனே
என்னை மீட்டெடுத்த தெய்வம் நீரே இயேசையா
என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே
இந்த பாடலை வாசிக்கும் போது உண்மையில் என்ன தோணுது குட்டிகளா. இந்த உலகமே நம்மளை கிட்டத்தட்ட பைத்தியம், முட்டாள்ன்னு சொன்னாலும், நம்மளை பற்றி தெரிந்து கொண்ட தேவன் மட்டுமில்ல, நம்மளை நேசிக்கிற ஒருத்தரும் அவர் தான் குட்டிகளா. நம் தேவனால் எல்லாம் கூடும். அதுனால நம்பிக்கையை இழந்துராதீங்க. வழி போன்ற இருதயத்தையும் நல்ல இருதயமா மாற்றுகிற தேவனைதான் நாம தெய்வமா பெற்றுக்கிறோம். அதுனால
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்.
பிலிப்பியர் 4 : 4
இயேசு கிறிஸ்து யார்?(45) இயேசு கிறிஸ்து யார்?(47)
இயேசு கிறிஸ்து யார்?(46)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives