-
இயேசு கிறிஸ்து யார்?(6)
பெத்தாபராவில் ஞானஸ்நானம்
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். ஞானஸ்நானம் என்ற வார்த்தை உங்களுக்கும் தெரிந்த விஷயம். ஏன்னா தேவனுடைய பிள்ளைகள் சபையில உறுப்பினர்களா சேர்க்கப்படுவதற்கு இதுதான் முழுமையான அடையாளம்.
இந்த ஞானஸ்நானம் குறித்து சொல்லறதா இருந்தா ஒவ்வொரு சபையை பொறுத்து கருத்துகள் மாறுபடலாம் குட்டிகளா. ஏன்னா பிள்ளைகள் ரொம்பவே சிறு குழந்தைகளா இருக்கும் போது ஞானஸ்நானம் கொடுக்கிற சபைகள் உண்டு. சில சபைகளில் ரட்சிக்க பட்ட பிறகு ஞானஸ்நானம் எடுக்கப்படணும்னு சொல்லலாம். நம்ம இயேசப்பா தன்னுடைய 30 வயதில்தான் ஞானஸ்நானம் எடுத்தார். அதுனால அந்த வயதில கண்டிப்பா எடுக்கணும்னு சொல்லுற சபைகளும் உண்டு. இப்படி எத்தனையோ கருத்துகள் இருந்தாலும் உங்களை மாதிரி உள்ள குழந்தைகளுக்கு நம்ம இயேசப்பா ஞானஸ்நானம் பற்றி சொல்ல ஆசைபடுற விஷயம் என்ன தெரியுமா குட்டிகளா?
நான் என்றும் என் தேவனுக்குரியவன், தேவனுக்குரியவள்னு தண்ணீரால் வாக்கு கொடுக்கிற உத்தரவாதம்தான் இந்த ஞானஸ்நானம்.
சரி குட்டிகளா, இப்ப பெத்தாபராவில் நம்ம இயேசப்பா எடுத்துகிட்ட ஞானஸ்நானம் பற்றி அவர் என்ன சொல்லுறாங்கன்னு கேட்கலாமா? நம்ம இயேசப்பா ஞானஸ்நானம் எடுத்த இடம் யோர்தான் அக்கரையில இருந்த பெத்தாபரா. நம்ம இயேசப்பாக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர் யோவான்ஸ்நானன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் குட்டிகளா.
ஆனா அவர்தான் நம்ம இயேசப்பாக்கு ஞானஸ்நானம் கொடுக்க தேவனால் ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்ங்கிற ரகசியம் உங்களுக்கு தெரியுமா? யூதேயா தேசத்தில அப்ப ஏரோது என்பவர்தான் ராஜாவா இருந்தார். அப்ப அபியா இன்னும் ஆசாரிய வகுப்பில இருந்த சகரியா என்னும் ஆசாரியனுக்கும் அவருடைய மனைவி எலிசபெத்துக்கும் அவங்க முதிர்ந்த வயதில நம்ம தேவன் கொடுத்த கிருபைதான் இந்த யோவான்ஸ்நானன். அவர் வளர்ந்து இஸ்ரவேல் மக்களுக்கு தன்னை காண்பிக்கிற நாள் வரைக்கும் காடுகளில் தான் வாழ்ந்து வந்தாராம். அவர் யோர்தான் நதிக்கு அருகே ஏற்கிற பகுதிகளுக்கு போய் பாவத்தில இருந்து மனம் திரும்பி தேவனுடைய பிள்ளைகளா ஆக்குற ஞானஸ்நானம் பற்றி எல்லாருக்கும் தெரிவிச்சார். அதுனால தன் மனதில தொடப்பட்ட எத்தனையோ பேரு அவர்கிட்ட ஞானஸ்நானம் எடுக்க வந்தாங்க. அவங்ககிட்ட நம்ம தேவனுடைய வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா குட்டிகளா…..
மனம் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபமாயிருகிறதுன்னு. என்ன குட்டிகளா, இந்த வார்த்தைகள் ஒருத்தர் மனதை தொட முடியுமான்னு நீங்க யோசிக்கிறீங்க, சரியா.
நம்ம தேவனை பற்றி மற்றவங்களுக்கு நீங்க சொல்லறதுக்கு மிக நீண்டதா பிரசங்கம் செய்ய தேவையில்லை குட்டிகளா. நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த ஒரு வார்த்தை போதும். ஏன்னா ஓடுகிறவனாலும் அல்ல பிரயாசப்டுகிறவனாலும் அல்ல, எல்லாவற்றையும் செய்கிற தேவனாலே ஆகும். அதுனால நம்ம தேவனால் தான் எல்லாம் கூடும். நம்ம பிரயாசங்கள் என்றும் விருதா. அதற்காக நான் பிரயாசம் எடுக்க மாட்டேன்னு தயவு செய்து நினைச்சிராதீங்க குட்டிகளா. ஏன்னா , நீங்க எப்படி நம்ம இயேசப்பாவின் அன்பை ருசிக்கிறீங்களோ, அதை மாதிரிதான் உங்க நண்பர்களும் நம்ம இயேசப்பாவின் அன்பை ருசிக்க அழைக்கப்பட்டிருக்காங்க. நம்ம தேவனுடைய வார்த்தைகளை விதைக்கவேண்டியது உங்க பொறுப்பு. ஆனா அதை செடியா வளரச் செய்றதும், நல்ல கனிகளை கொடுக்க வைக்கிறதும் நம்ம தேவனுடைய பொறுப்பு குட்டிகளா. ஆனா நீங்க விதை விதைச்சதுக்கு கூலி நம்ம இயேசப்பா, இந்த உலகத்தில இல்லை குட்டிகளா பரலோகத்தில தருவாங்க. அதுனால சோர்வில்லாம விதை விதைங்க. அது மட்டுமில்ல
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறதுக்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கக்தரிசியை அனுப்புகிறேன்.
நான் வந்து பூமியைச் சங்கரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.
மல்கியா 4 : 5, 6
நம்ம தேவனுடைய வார்த்தை எது தரப்பட்டதோ அதைத்தான் யோவான்ஸ்நானன் இஸ்ரவேல் மக்களுக்கு வெளிபடுத்தினார். திருப்புகிற வேலை, அதாவது நம்ம பிதாப்பாகிட்ட அவருடைய பிள்ளைகளை மீண்டும் திருப்புகிற வேலை. அதுல ஒரு வார்த்தை கூட அவரா பேசலை குட்டிகளா. ஏன்னா யோவான்ஸ்நானனுக்கு தெரியும். தன் தேவன் தனக்கு எந்த வேலை கொடுத்திருக்கிறாரோ, எதை சொல்ல சொன்னாரோ அதை மட்டும்தான் செய்யணும், சொல்லணும்ன்னு. ஏன்னா அதுல ஒரு விஷயம் தவறா செய்தாலும் அது தன்னுடைய தேவனுக்கு வேதனை கொடுக்கிற விசயம்னு.
என்ன குட்டிகளா, நீங்களும் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க. நம்ம வாழ்க்கை மட்டுமில்ல, நம்முடைய ஊழியம் கூட தேவன் என்ன சொல்ல சொல்லுகிறாரோ, எதை செய்ய சொல்லுகிறாரோ அதை கவனமா செவி கொடுத்து செய்யணும், சொல்லணும். இல்லை மற்றவங்க ஆசைபடுகிற மாதிரி சில விசயங்களை என் தேவனுடைய வார்த்தைகளோட சேர்த்து சொல்லறதால என்ன பிரச்சனை வந்துரும்னு மனதில நினைக்காதீங்க. ஏன்னா அது நம்ம தேவனை கண்டிப்பா வேதனைபடுத்துற காரியம். நாம இந்த உலகத்தில நம்ம தேவனை பிரியப்படுத்ததான் வந்திருக்கிறோமே தவிர மனிதர்களை பிரியப்படுத்த அல்ல, தேவனின் சுவையை சொல்ல வந்திருக்கிறோம். உங்களை மாதிரி உள்ள சின்ன குழந்தைகளுக்கு நம்ம தேவன் குட்டி ஊழியம் கொடுத்திருந்தாலும் சரி, அதை முழுக்க முழுக்க அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து செய்யுங்க. கூடவும் வேண்டாம், குறையவும் வேண்டாம். என்ன சொன்னாரோ அதை அப்படியே செய்யுங்க.
இப்ப நம்ம யோவான்ஸ்நானன் பற்றி தெரிந்து கொள்ளலாமா? இவரை பற்றி நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு நாம கேட்கலாமா? மத்தேயு 17ம் அதிகாரத்தில் 10, 11, 12ம் வசனங்களில் நம்ம இயேசப்பா மல்கியா 4ம் அதிகாரத்தில 5, 6ம் வசனங்களில் சொல்லப்பட்ட எலியா தீர்க்கதரிசி யோவான்ஸ்நானன்தான் விளக்கியிருக்காங்க. இப்ப புரியுதா குட்டிகளா. அக்கினி ரதம் மூலமா அப்படியே உயிரோட எடுக்கப்பட்ட எலியா தீர்க்கதரிசியை நம்ம தேவன் எந்த இடத்தில் கொண்டு வந்து உபயோகபடுத்தியிருக்காங்க குட்டிஸ். உணரும் போதே எவ்வளவு ஆச்சர்யமா இருக்குது. இப்ப நீங்களும் புரிஞ்சிருப்பீங்க, நம்ம ஆராதிக்கிற தேவன் எவ்வளவு ஞானம் உள்ளவர்னு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இப்படி எல்லா வகையிலும் நமக்காக யோசித்து பார்த்து செய்கிற நம்ம பரம பிதா எலியா தீர்க்கதரிசியை தன்னுடைய குமாரன் இருந்தப்ப அனுப்பி வைச்சதுக்கு காரணம் என்னன்னு தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வம் வந்திருக்கும். ஏசாயா 40ம் அதிகாரம் 5வது வசனத்தில
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாயிற்று.
இப்ப புரியுதா குட்டிகளா, யோவான்ஸ்நானன் இந்த ஊழியத்திற்காக அழைக்கப்பட்டிருக்காருன்னு உங்களால புரிந்து கொள்ள முடியும்.
கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், அப்படின்னா நம்ம பிதாப்பாவில இருந்து வெளிபடுத்தப்பட்ட நம்ம இயேசப்பா தேவனுடைய மகிமையை வெளிபடுத்தப்போகிறார் என்பதுதான் அதன் அர்த்தம்.
மாம்சமான யாவும் அதை காணும், அதாவது நம்ம இயேசப்பா தன்னுடைய மக்களோடு 30 வருசங்களா தங்கியிருந்தாலும், இனி அவர் செய்ய போகுற காரியங்களை மாம்சமான யாவராலும் காண முடியும் என்பதைத்தான் இந்த வார்த்தை உணர்த்துகிறது.
தன்னுடைய பையன்னு தேவன் வெளிபடுத்தினாரே “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியாமாயிருக்கிறேன் என்று உரைத்தது” என்கிற வார்த்தைதான் கர்த்தருடைய வாக்கு உரைத்தது என்பதன் அர்த்தம்.
இப்ப புரியுதா குட்டிகளா, நம்ம தேவன் தன்னுடைய குமாரன் தன்னுடைய 30வது வயதிலதான் தேவனுடைய மகிமையை வெளிபடுத்தனும்னு அவரே முன் குறித்த காரியம். அதுனாலத்தான் நம்ம இயேசப்பா அது வரைக்கும் காத்திருந்தார். அதாவது……என் இயேசப்பா என் கூட பேசினாங்க தெரியுமா……கனவில என்னை பரலோகத்திற்கு அழைச்சிட்டு போனாங்க தெரியுமா………நரகத்தை கூட நான் பார்த்தேன்…….இப்படி மற்றவங்க முன்னாடி பேசிட்டு இருக்கிறதாலோ, வீண் ஜம்பம் அடிக்கிறதாலாயோ என்ன குட்டிஸ் உபயோகம் இருக்கு. உங்களுக்கு தேவன் சில காரியங்களை வெளிபடுத்தினார்ன்னா அது கண்டிப்பா ஒரு காரியத்திற்காக. உங்களில் அவர் தீர்மானம் நிறைவேற. தயவு செய்து அவர் சந்நிதிதானத்தில் அமர்ந்து, காத்திருந்து அதை தெரிந்து கொள்ளுங்க.
அது மட்டுமில்ல நம்ம பிதாப்பா வானத்தில இருந்து சொன்ன வார்த்தைகள்கூட, ஏதோ தன்னுடைய பையனுக்கு புகழ் தேடி தரணும்னு என்பதற்காக இல்லை. பாவங்களிலும், வேதனைகளிலும் துவண்டு போயிருக்கிற தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுத்த நற்செய்தி. அதை யார் மூலமா கொடுக்கணும்னு தேவன் ஏற்கனவே நியமித்திருந்தார். யெஸ் குட்டிகளா, யோவான்ஸ்நானன் என்பவர்தான் அவர்.
யோவான் முதல் அதிகாரத்தில் யோவான்ஸ்நானன் இஸ்ரவேல் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்த இடத்திற்கு யூதர்கள் ஆசாரியரையும், லேவியரையும் நம்ம யோவான்ஸ்நானன் பற்றி தெரிந்து கொள்ள அனுப்பினாங்க. வந்தவர்களுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா குட்டிகளா?
நான் கிறிஸ்து இல்லை என்பதை அறிக்கை இட்டதும் மட்டுமின்றி, நீர் எலியாவான்னு கேட்டதுக்கும் அல்ல என்றார். என்ன குட்டிகளா, உறைந்து போயிட்டீங்க. நாம் இயேசப்பா சொன்னாங்களே யோவான்ஸ்நானன் தேவனால் அனுப்பப்பட்ட எலியா தீர்க்கத்தரிசின்னு. அப்ப ஏன் பொய் சொன்னாங்க. இதுதான உங்க மனதில நீங்க நினைக்கிற காரியம்.
தன்னை பற்றி அப்ப என்னதான் அவர் சொன்னார்ன்னு தெரிந்து கொள்ளலாமா?
நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்ன்னு சொன்னார். அப்படின்னா தேவன் தன்னுடைய மகிமையை வெளியரங்கமா இந்த உலகத்திற்கு காண்பிக்க போறாருன்னு கூப்பிட்டு சொன்ன அவருடைய அழைப்பு. அதாவது தேவன் எதற்காக தன்னை அழைத்தாரோ, அதை மக்களுக்கு சொன்ன ஊழியம். அது மட்டும்தான் அவர் மனதில ஓடிட்டு இருந்தது. தான் தேவனால் அனுப்பப்பட்ட எலியா என்கிற வார்த்தை அவர் மனதில தொடவே இல்லை, அதுனாலதான் அவங்க கேள்விக்கு இல்லைன்னு பதில் சொன்னாரு. அவர் எலியாவா இருந்தாலும் தன்னுடைய தேவன் தனக்கு கொடுத்த ஊழியம் மட்டுமே அவர் மனதில் இருந்தா, எவ்வளவு தாழ்மையுள்ளவரா இருந்திருப்பார். எங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல முடியுமா குட்டிகளா……… இன்னும் தேவனுக்குள்ள பலப்படாம நான் தேவனுடைய ஊழியன், அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவன், தீர்க்கத்தரிசி, அற்புதங்களை செய்கிறவன் என்கிற போலியான விளம்பரங்கள் நமக்கு இனிமேலும் கண்டிப்பா தேவையா குட்டிகளா.
இன்னொரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்ல ஆசைபடுகிறோம். நம்ம இயேசப்பாவின் சீஷர்கள் அவரை பற்றி எழுதிய மூன்று புத்தகத்திலயும் தேவன் வானம் திறந்து நம்ம இயேசப்பாவை தன்னுடைய பையன்னு சொன்ன காரியம் எழுதப்பட்டிருக்கு. ஆனா அது நேரடியா அவங்க பார்த்த காரியம் இல்லன்னு உங்களுக்கும் தெரியும். முழுக்க முழுக்க யோவான்ஸ்நானன் என்பவரால நம்ம இயேசப்பாவின் சீஷர்களுக்கு சொல்லப்பட்ட உண்மை. அப்படியான்னு நீங்க ஆச்சர்யப்படுறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. யோவான் 1ம் அதிகாரத்தில் 29ல ஆரம்பிச்சி 41ம் வசனம் வரை நீங்க வாசித்து பார்த்தீங்கன்னா உங்கலாயும் தெரிந்து கொள்ள முடியும். அப்ப நம்ம யோவான்ஸ்நானன் தன்னுடைய அழைப்பிற்கான ஊழியத்தை நிறைவேற்றினாரா குட்டிகளா?
நம்ம இயேசப்பா ஞானஸ்நானம் எடுத்துக் கொண்ட காரியம் ஏதோ ஒரு சடங்காச்சாரம் கிடையாது குட்டிகளா. அது யோவான்ஸ்நானன் என்பவரை இந்த பூமிக்கு அனுப்பின நம்ம தேவனுடைய நோக்கம். நம்ம தேவன் நம்மளை நேசிக்கிறாங்கன்னு இந்த உலகத்துக்கு கொடுத்த நற்செய்தி. இப்ப கேள்வி பகுதிக்கு போகலாமா?
- யோவான்ஸ்நானன் தன்னை தேவன் அனுப்பின எலியா தீர்க்கதரிசின்னு சொல்லிக்க கூட நினைக்காம ஊழியத்தை பார்த்தவர்ன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா நம்ம இயேசப்பா புதிய ஏற்பாடுல முதல் நாலு புத்தகங்களிலும் தன்னை அதிகமாகவே பிதாப்பாவுடைய பையன்னு சொல்லியிருக்காங்க. அது ஏன்னு சொல்ல முடியுமா குட்டிகளா?(சப்போஸ் நம்ம இயேசப்பா தன்னை பத்திய உண்மையை சொன்னாதான் தன் வார்த்தைகளை மக்கள் கேட்பாங்கன்னு நினைச்சாரோ!!!!!!!!)
இந்த கேள்விக்கான பதிலையும் தெரிந்து கொள்ள உங்க அம்மா/அப்பாகிட்ட ஓடிட்டீங்கன்னு நினைக்கிறோம் குட்டிகளா. ஆனா ஒரே ஒரு நிபந்தனை. கேள்விக்கான பதில் ஒரே வார்த்தையில் இல்லாம தெளிவா இருக்க உங்ககிட்ட கேட்டு கொள்ளுகிறோம். ப்ளீஸ்……………..
இயேசு கிறிஸ்து யார்?(5) இயேசு கிறிஸ்து யார்?(7)
இயேசு கிறிஸ்து யார்?(6)
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives