• இயேசு கிறிஸ்து யார்?(25)

    ஆவியில் எளிமை

    jesus25

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவனின் வார்த்தைகளை ருசிக்கணும்னு உங்களுக்கும் ஆசை வந்திருச்சு போல குட்டிகளா. குட். அதென்ன, எங்க இயேசப்பா வார்த்தைகள் எங்க கைக்கு விலங்கு போட இல்லை, எங்களுக்கு முழுக்க முழுக்க சந்தோசத்தை மட்டுமே கொடுக்கிற காரியம்னு உங்களால் சொல்ல முடியுதேன்னு சில பேரு எங்களை கேள்வியோட பார்க்கிற மாதிரி தோணுது? நம்ம தேவனின் வார்த்தைகளை பற்றி இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு இப்ப தெரிந்து கொள்ளலாமா?

    மத்தேயு புத்தகத்தில மலை பிரசங்கத்தில நம்ம தேவனுடைய வார்த்தைகளை பற்றி ரொம்பவே தெளிவா நம்ம இயேசப்பா நமக்கு கற்றுக் கொடுத்திருப்பாங்க. அதுல நம்ம இயேசப்பா யார் பாக்கியவான்களா இருப்பாங்கன்னு முதல்ல சொல்லி இருப்பாங்க. முதலில் நம்ம இயேசப்பா யாரைக் குறித்து பாக்கியவான்கள் சொல்லி இருக்காங்கன்னு  உங்களுக்கு நல்லாவே தெரியும் குட்டிகளா.

    ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்.

    நாம நம்ம தேவனின் ரூபத்தின் படி, ஆவி, ஆத்துமா, சரீரம் என்கிற மூன்று விதமான பண்புகளால் படைக்க பட்டிருக்கோம்னு நம்ம இயேசப்பா ஏற்கனவே சொல்லி கொடுத்திருக்காங்க, அப்படிதான குட்டிகளா. இதுல சரீரம் என்பது நம்ம கண்களால் நாம பார்க்ககூடிய உடல். ஆத்துமா என்பது நம்ம தேவன் நமக்குள் படைத்திருக்கிற ஒரு அழகான படைப்பு. ஆவி என்பது நம்ம இயேசப்பா நம்மை உயிருள்ளவர்களா இந்த உலகத்தில நடமாட வைக்க பரிசுத்த ஆவியானவரை நமக்குள் கொடுத்திருக்காங்க.

    நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். நீர் உம்முடைய ஆவியை அனுப்பும் போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்;

    சங்கீதம் 104 : 29, 30

    இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா. நம்ம தேவன் நமக்குள் பரிசுத்த ஆவியானவரை தந்தருளி, எத்தனை விதமா நம்மளை அழகாக நடத்துகிறார். அதுனாலதான் நம்ம இயேசப்பா நம்மகிட்ட சொன்னாங்க, உங்களுக்குள் முத்திரையா பெற்ற பரிசுத்த ஆவியானவரை துக்கப் படுத்தாதிருங்கள். நாங்க எங்கே எங்க இயேசப்பா எங்களுக்குள் கொடுத்த பரிசுத்த ஆவியானவரை துக்க படுத்துகிறோம்? நாங்க எந்த ஒரு தப்பும் செய்தாலும், அது எங்களுடைய இயேசப்பாவை கஷ்டப்படுத்தும், அதுவேனா சொல்லுங்க, உண்மை. அடுத்து எங்களுடைய ஆத்துமா தன்னுடைய தேவனை துதிக்கணும், அவரை பார்க்கணும்ன்னு நாடிட்டு இருக்கிற அதனுடைய ஆசைகளை நிராகரிக்கிறோம், அதுவும் உண்மை. ஆனா எங்க இயேசப்பா எங்களுக்குள் கொடுத்த பரிசுத்த ஆவியை துக்க படுத்துறோமா, கண்டிப்பா சான்சே இல்லை.

    ஆனா உங்களுக்கு தெரியுமா குட்டிகளா, நம்ம இயேசப்பா களியாட்டுகள் பற்றி சொல்லும் போது, நம்முடைய தப்புகள் சில நேரம் நமக்குள் ஒரு வலியை கொடுக்கும்னு சொல்லி இருப்பாங்க. அந்த வலிக்கான காரணம், நம்ம தப்புகள் நமக்குள்ள இருக்கிற பரிசுத்த ஆவியானவரை வேதனைப்படுத்துகிற காரணத்தினால்ன்னு சொன்னாங்க, அப்படிதான குட்டிகளா. நம்ம இயேசப்பா நம்ம தப்புகள் மூலமா சிலுவையின் வேதனையை சுமக்கும் போது, அந்த வேதனையை நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் உணரும் போதுதான் நாமும் அந்த வலியை உணர்கிறோம். ஆனா தப்புகளின் ஆதிக்கம் தொடரும் போது, நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர் உணர்கிற வேதனையை. சாத்தான் மறக்கடிக்கிறதால, அந்த வலியை பல நேரங்களில் நாம உணர்கிறதில்லை.

    இப்ப நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்தது மூலமா, நமக்கும், நம்ம ஆத்துமாக்கும், நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவிக்கும் என்ன சம்பந்தம் உண்டுன்னு தெரிந்து வைச்சிருப்பீங்க. சரிதான குட்டிகளா. ஆனா ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்னா என்ன அர்த்தம் குட்டிகளா, எங்களுக்கு சொல்ல முடியுமா? நீங்க கேட்டதுக்காக நாங்க சொல்லுறோம்னு, எங்களுக்கு பதில் சொல்ல வந்தா நம்ம தேவனுக்குள் ரொம்பவே சந்தோசப்படுகிறோம். எப்ப ஒருத்தங்க இவன் எளிமையானவன், இவள் ரொம்பவே எளிமையானவள்ன்னு  மற்றவங்களை சொல்லுவாங்க தெரியுமா? அவங்களுக்கு எல்லா வசதிகளும் இருந்தும், தன்னை ரொம்பவே சிம்பிளா வைச்சுக்கிட்டா, அப்பதான் அவங்களை குறித்து சொல்லுவாங்க. வாவ்…..வாட் அ சிம்பிள் personன்னு. நீங்க சொன்னது சரிதான் குட்டிகளா. ஆனா நம்ம இயேசப்பா நமக்கு கற்றுக் கொடுத்தது, ஆவியில் எளிமையுள்ளவர்கள்.

    நமக்குள் இருக்கிற ஆவியை பற்றியே நமக்கு இப்பதான் நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்தாங்க. ஆனா நமக்குள் இருக்கிற ஆவியை பற்றி நாம எப்படி ஆராய்ச்சி பண்ணறது குட்டிகளா. நமக்குள் இருக்கிற ஆவியை குறித்து நம்ம தேவன் அநேக வார்த்தைகள் சொல்லி கொடுத்திருக்காங்க. அதுல ரொம்பவே முக்கியம். “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.” (மாற்கு 14 : 28)ன்னு நம்ம இயேசப்பா தன்னுடைய சீசர்களுக்கு சொல்லி இருப்பாங்க. இப்ப புரியுதா குட்டிகளா, நமக்கும், நம்ம இயேசப்பாக்கும் எந்த வகையில சம்பந்தம் வந்ததுன்னு. நம்மளை தாங்கி நிற்க வைக்கிறதே, நம்ம தேவன் நமக்குள் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியானவர்தான். அவர் தான் நம்ளுடைய சரீர  பலவீனங்கள் வரும் போது நம்மளை தாங்குகிறார்.

    மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்தஆவி யாரால் தாங்கக்கூடும்?

    நீதிமொழிகள் 18 : 14

    இப்ப புரியுதா குட்டிகளா, நம்மளுடைய சரீரம் தான் இது வரைக்கும் என்ன பிரச்சனை வந்தாலும் தாங்குதுன்னு நினைச்சிருப்போம். ஆனா நம்ம கையில நிறைய பயிற்சிகள் பண்ணி பாதுகாத்து வைச்சிருக்கிற வலிமை எந்த விதத்திலும், பலவீனங்கள் வரும் போது தாங்குரதில்லை. நம்ம தேவன் நமக்குள் கொடுத்திருக்கிற பரிசுத்த ஆவியின் வலிமைதான் நமக்கு வல்லமையை தருதுன்னு உங்களுக்கும் புரிந்திருக்கும். அது மட்டுமில்ல குட்டிகளா, நம்ம இயேசப்பா நமக்கு கொடுத்த வசனத்தின் இரண்டாவது பகுதியையும் பார்க்கணுமே. அதென்ன முறிந்த ஆவி? ஏதோ, மரம் முறிந்து விழுற மாதிரி சொல்லியிருக்காங்கலேன்னு நீங்க நினைக்கலாம்.

    நமக்கு விரோதமா சாத்தான் கொண்டு வருகிற எந்த ஒரு போராட்டமா இருந்தாலும், நமக்காக யுத்தம் பண்ணறது நமக்குள் இருக்கிற பரிசுத்த ஆவியானவர்தான். ஆனா அவர் கூட சோர்ந்து போகுற மாதிரி நிலைமை வருமான்னு நீங்க யோசிக்கலாம். யெஸ் குட்டிகளா, ஒரு மரம் முறிந்து விழுகிற நிலைமை நாம இதற்கு முன்னாடியே சந்திச்சிருக்கலாம். அந்த நேரம் நம்ம உடல் பலவீனமும் சேர்ந்து கொண்டா நாம மூச்சு விட கூட கஷ்டப்படுவோம், அப்படிதானே. உங்களுக்கு புரியுற மாதிரி நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா?

    நீங்க நம்பிக்கை வைச்சிருக்கிற நபர், சப்போஸ் உதாரணத்திற்கு சொன்னா, நம்ம வாழ்கையில அந்த ஆளைத்தான் முதல் இடத்தில வைச்சிருக்கோம். ஆனா அந்த நம்ம நண்பனோ இல்லை யாரோ நம்ம அன்பை உதாசீன படுத்தினாலோ இல்லை நமக்கு பண விசயத்தில ஏதாவது ஒரு காரியத்தில ஏமாற்றத்தை கொண்டு வந்தாலோ அந்த நேரத்தில நம்ம மனதில ஏதோ ஒரு பெரிய வேதனையை உணர்கிற மாதிரி நீங்க சந்திச்சிருக்கலாம். அதுதான் அந்த நொடியில நாம உணர்கிற வலி, வேதனை அதுதான் முறிந்த ஆவி. அதை தாங்க வல்லது, நம்ம இயேசப்பாவுடைய அன்பு மட்டுமே. அவரை, அவர் சந்நிதானத்தை சரண்டர் ஆகாம நம்மளால் ஒன்றும் செய்ய முடியாது.

    இதுதான் நமக்குள் நடக்கிற புரியாத ஆவி, ஆத்துமா, சரீரம் சம்பந்தங்கள். நம்ம இயேசப்பா நமக்கு சொன்னது மூலமா கொஞ்சம் நமக்கு புரிஞ்சிருக்கும். ஆனா இந்த ஆவியில் எளிமைன்னா? நீங்க கேள்வி கேட்குறது புரியுது குட்டிகளா. அது மட்டுமில்ல இந்த ஆவி, என்னுடைய ஆவி எப்படிபட்டதா இருக்குதுன்னு நம்ம இயேசப்பாக்கு மட்டும் தெரியும்ன்னு நீங்க சொல்ல ஆசைபடுறது எங்களுக்கும் புரியுது. எளிமைன்னா குட்டிகளா, ஊருக்கு மட்டும், நான் ரொம்ப சிம்பிள்ன்னு வேஷம் போட்டுட்டு, உள்ளுக்குள் எப்பவும் தம்பட்டமும், பெருமையும் இருந்தா என்ன செய்ய முடியும் குட்டிகளா.

    ஆனா நம்ம இயேசப்பா நம்மகிட்ட எதிர்பார்க்கிறது, வெறும் வெளிப்படையான எளிமை இல்லை குட்டிகளா. அது நமக்குள் அவர் வாசம் பண்ணுகிற ஆவியே எளிமையானதா இருக்க ஆசைபடுகிறார். அது எப்படி முடியும்?ன்னு நீங்க கேட்கலாம். முடியும் குட்டிகளா. அது உங்களை நீங்க ஒரு சிறு குழந்தை அளவுக்கு தாழ்த்தும் போது நிச்சயம் இந்த எளிமை தானா வந்துரும், நாம ஒன்றும் கிடையாது. நமக்கு நம்ம தேவன் கொடுத்ததுதான் எல்லாம். நான் வெறும் களி மண்ணாலும், தூசியாலும் படைக்கப்பட்டவன்/பட்டவள் புரிந்து கொள்ளும் போது, நமக்குள் என்றும் இந்த பெருமையோ இல்லை எந்த ஒரு உலகத்தை குறித்த எதிர்பார்ப்போ தோணாது குட்டிகளா. ஒரு குழந்தைக்கு அப்படித்தானே குட்டிகளா, அது தன்னுடைய சகலத்துக்கு தன் அம்மாவை மட்டும்தான் எதிர்பார்க்கிறது. வேற எந்த ஒரு எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பும் மனிதர் மேலயோ இல்லை நான் பெரியவனா இல்லை அழகானவளான்னு அந்த குழந்தைக்கு தெரியாதே. அதுனாலதான் அந்த குழந்தைகள் நம்ம தேவ சந்நிதானத்தில் தேவ தூதர்களை தினமும் தரிசிக்கிறாங்க.

    ஆனா நம்மளை பாருங்க, எவ்வளவுதான் முட்டினாலும், மோதினாலும் நம்ம இயேசப்பாவை சந்திக்கவும் முடியாம, அவர் தீர்மானங்களை தெரிந்து கொள்ளவும் முடியாம ஊருக்கு நல்லவனாகவும், நம்ம இயேசப்பாவை சந்தோசப்படுத்த நினைக்கிற ஒரு பாவியாகவும் இரட்டை வேடம் போடுறோம் குட்டிகளா. இப்ப புரியுதா, நாம தினமும் நம்ம இயேசப்பாகிட்ட நான் நல்லவன்/நல்லவள் ஆக பார்க்கிறேன்னு நடிச்சிட்டு இருக்கோம். ஆனா ஒரு சின்ன குழந்தைக்கு இது பற்றியெல்லாம் எதுவும் தெரியாது குட்டிகளா. அந்த குழந்தைக்கு தெரிந்தது எல்லாம் அந்த குழந்தையுடைய அம்மா மட்டுமே. நம்மளால் முடியுமா குட்டிகளா, நம்ம வாழ்கையும் நம்ம தேவனை மட்டுமே, அவர் முகத்தை மட்டுமே நாடுற, அவர் விருப்பத்தை மட்டுமே தேடற ஒரு எளிமையான வாழ்க்கை வாழ முடியுமா குட்டிகளா? யோசிக்க கஷ்டமா நாம நினைச்சாலும், ஏன் செய்யவே முடியாதுன்னு நாம தர்க்கம் பண்ணினாலும், ரொம்பவே சிம்பிள்ளான வழியும், வாழ்கையும் இதுதான் குட்டிகளா.

    ஒரு சிறு குழந்தை அளவுக்கு நாம நம்மை தாழ்த்தி, அதோட அவர் முகத்தை மட்டுமே தேடுற வாழ்க்கை வந்தா அதற்கு பேர் தான் ஆவியில் எளிமைன்னு அர்த்தம். அப்படிப்பட்ட ஆவியை கொண்டவன்  நம்ம தேவனின் பார்வையில் ஒரு சிறு குழந்தைக்கு சமானம். அப்படிப்பட்டவங்கதான் பரலோக ராஜ்யத்தில் இருப்பாங்கன்னு நம்ம இயேசப்பா சொன்னா நாம கண்டிப்பா ஒத்துக்க முடியும்னு நம்புறோம். இப்ப சொல்லுங்க குட்டிகளா, இன்னைக்கில இருந்து நம்ம ஆவியை குறித்து ஆராய்ச்சி பண்ணுற வேலையையும், அதுல இருக்க வேண்டிய எளிமையையும் இருக்க சொல்லி நம்ம இயேசப்பாவை நம்பி பொறுப்பை முழுமையா ஒப்படைப்போமா??????

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine + = 15

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>