• இயேசு கிறிஸ்து யார்?(9)

    அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப்

    jesus9

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் கிருபையால் உங்களை மீண்டும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசம் அடைகிறோம். நாம நம்ம இயேசப்பா, சாத்தானோடு எதிர்த்து நின்ன காரியங்களை குறித்து அவர் என்ன சொல்லுறாங்கன்னு கேட்டுட்டு இருக்கோம். சாத்தான் நம்ம இயேசப்பாகிட்ட கல்லுகளை அப்பங்களாகும் படி சொன்னப்ப என்ன பதில் கொடுத்தாங்கன்னு நல்லாவே தெரிந்து வைச்சிருப்பீங்க. நம்ம இயேசப்பா அதன் மூலம் உணர்த்தின காரியங்களை என்றும் மறந்துராதீங்க. ஏன்னா இது கடைசி காலம். இந்த நாட்கள்ல கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்ட தேவ பிள்ளைகளையும் சாத்தான் வஞ்சிப்பான்(மத்தேயு 24 : 24)னு நம்ம பைபிள்ல சொல்லப்பட்டிருக்கு. அதுனால இது விழிப்போட இருக்க வேண்டிய நாட்கள். விழிப்போட இருக்க நம்ம தேவன்கிட்ட தேவையான பலத்தை வாங்கிகோங்க, ப்ளீஸ்……………….

    சரி குட்டிகளா, இப்ப நாம நம்ம இயேசப்பா சாத்தான்கிட்ட அடுத்து என்ன சொன்னாங்கன்னு பார்ப்போமா?

    நம்ம இயேசப்பாவை பரிசுத்த நகரத்திற்கு கொண்டு போனான்(மத்தேயு 4 : 5). லூக்கா புத்தகத்தில எருசலேம்னு எழுதப்பட்டிருக்கு. அதுனால பரிசுத்த நகரம்னா எருசலேம்னு உங்களால புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமில்ல குட்டிகளா, வனாந்தரத்தில் இருந்த நம்ம இயேசப்பாவை அவன் எருசலேம்க்கு கொண்டு போனான். நீங்க மத்தேயு புத்தகத்திலும், லூக்கா புத்தகத்திலும் சரியா வாசித்து பார்த்தா, சாத்தான் நம்ம இயேசப்பாவை கொண்டு போனான்னுதான் எழுதப்பட்டிருக்கு. கூட்டிட்டு போனான்னு சொல்லப்படலை. அதனால சாத்தானும் ஆவியில் கொண்டு போகிற வல்லமையை கொண்டிருக்கிறான்னு உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

    என்னது, சாத்தானுக்கு இத்தனை வல்லமை இருக்கா!!!!!!!ன்னு உங்க மனது கேள்வி கேட்குதா? யெஸ் குட்டிஸ், அவன் இப்ப நரகத்தில பாடுபட்டு கொண்டிருக்கிற ஒரு சபிக்கப்பட்ட கேருபீனா இருந்தாலும், முதன் முதல்ல அவன் எப்படிப்பட்டவனா இருந்தான்னு உங்களுக்கு தெரியுமா?

    எசேக்கியேல் புத்தகத்தில 28ம் அதிகாரத்தில 12ம் வசனத்தில ஆரம்பிச்சி 15ம் வசனம் வரை நீங்க வாசித்து பார்த்தா உங்களுக்கு புரியும். எதற்காக அவன் உருவாக்கப்பட்டான் என்பதும், எப்படி அவன் இருந்தான் என்பதும் உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

    அவன் நம்ம தேவனால் உருவாக்கப்பட்ட முத்திரை மோதிரம்ன்னு சொல்லபட்டிருக்கும். நம்ம தேவன் நமக்கு ராஜா என்கிறது உங்களுக்கு தெரிந்த விஷயம். பண்டைய காலங்களில் ராஜா என்பவருக்கு அவருடைய செங்கோலும், முத்திரை மோதிரமும் ரொம்பவே முக்கியமானது. செங்கோல் அவருடைய பாரபட்சம் இல்லாத நீதியையும், முத்திரை மோதிரம் என்பது அவருடைய வல்லமையை குறிக்கிற காரியம்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட முத்திரை மோதிரம் மாதிரி அவனை நம்ம தேவன் உருவாக்கியிருந்தா, எந்த அளவு வல்லமையை அவனுக்கு கொடுத்திருப்பார்.  அது மட்டுமில்ல அவனுக்கு நம்ம தேவன் எந்த அளவு அதிகாரமும், முக்கியத்துவமும் கொடுத்திருப்பார். எந்த இடத்தில அவன் இருந்தவன் என்கிறதும் அழகா சொல்லப்பட்டிருக்கு குட்டிகளா. ஏதேனில் இருந்தவனாம்.

    அதுனாலத்தான் ஆதாம், ஏவாளை நம்ம தேவன் ஏதேன் தோட்டத்தில வைத்ததை அவன் வெறுத்தான் என்பதை நாங்க சொல்லாமயே நீங்க புரிஞ்சிருப்பீங்க. அவனை குறித்து சொல்லும் போது ரொம்பவே அழகு நிறைந்தவன்னு அழகாக சொல்லப்பட்டிருக்கு. அது மட்டுமில்ல அவனை நம்ம தேவன் காப்பாற்றுகிற வேலைக்காக அபிஷேகம் பண்ணினாராம்.

    நம்ம பைபிள்ல நம்ம தேவனுடைய சிங்காசனம் பக்கம் இரண்டு கேருபீன்கள் மட்டுமே சொல்லப்பட்டிருக்கே. இது என்ன புதுசா ஒரு கேருபீன்னு நீங்க நினைக்கலாம். நம்ம தேவனால் படைக்கப்பட்டது மூன்று கேருபீன்கள் குட்டிகளா. அதில நாம தெரிந்து வைச்சிருக்கிற காபிரியேல் என்ற கேருபீன் நற்செய்திகளை கொண்டு செல்கிறவர். மிகாவேல் என்கிற கேருபீன் தேவனுடைய சேனைகளை நடத்தி செல்லுகிறவர். சாத்தான்(லூசிபர்) என்கிற கேருபீன் காப்பாற்றுவதற்காக படைக்கப்பட்டவன். சாத்தான் தேவனுடைய கோபத்தால் நரகத்திற்கு தள்ளப்பட்டதால் இரண்டு கேருபீன்கள் பற்றி மட்டுமே சொல்லப்படுது.

    இப்ப எண்ணிக்கையில உங்களுக்கு குழப்பம் இருக்காதுன்னு நம்புறோம். தேவன் இந்த அளவு நேசித்து உருவாக்கின கேருபீனா இருந்த சாத்தான் அப்படி என்னதான் தப்பு பண்ணினான்னு உங்க மனது கேள்வி கேட்கலாம்? ஆனா அதற்கு முன்னாடி தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட அவனை, அவர் தேவனுடைய பர்வதத்தில வைச்சாங்க. அவன் உலாவினது எங்க தெரியுமா குட்டிகளா, அக்கினி மயமான கற்கள் நடுவில(வானத்தில). இது வரை நல்லாதான போயிட்டிருக்கு. அவன் ஏன் தேவ கோபத்துக்கு ஏதுவானான்? உங்க மனது கேட்ட கேள்விக்கு பதில் இது தான் குட்டிகளா. அவன் அழகினால் அவன் இருதயம் மேட்டிமையானது தான் காரணம்.

    மேட்டிமை அதாவது பெருமை கொண்ட அவனை நம்ம தேவன் என்ன செய்தாங்கன்னு ஏசாயா புத்தகத்தில 14ம் அதிகாரத்தில 12 ம் வசனத்தில ஆரம்பிச்சி 17 ம் வசனம் வரைக்கும் உள்ள வசனங்களில் அழகாக சொல்லியிருக்காங்க. பெருமை கொண்ட அவன் என்ன நினைச்சான் தெரியுமா குட்டிகளா. நான் வானத்திற்கு ஏறி, மேகங்களுக்கும் மேலா உன்னதத்திற்கும் ஏறி, உன்னதமானவர் அதாவது நம்ம தேவனுக்கு நிகராவேன்னு அவன் இருதயத்தில சொன்னதுதான் அவன் அழிவிற்கு காரணமானது. இப்ப புரியுதா குட்டிகளா, ஒரு மனிதனுக்கு பெருமை வந்தா ஏன் அந்த அளவு நடந்துக்குறான்னு. எல்லாமே சாத்தான் அவன் மனதில வந்து தேவனுக்கு விரோதமா எழுப்பி விடுகிறதனால்தான்.

    சரி, இந்த மாதிரி நம்ம தேவனோடயே சண்டைக்கு வந்த அவனுக்கு என்னதான் ஆச்சு? நம்ம தேவன் அவனை பாதாளத்தில தள்ளிட்டாங்க. அவனுடைய பெருமைக்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நரகத்தில என்றும் தீக்கள் மத்தியில வேதனை. அவனுக்கு மட்டுமில்ல, அவனோடு நம்ம தேவனுக்கு விரோதமா சண்டைக்கு எழும்பின அவனுடைய தூதர்களும் இதே தண்டனைதான் இப்பவும் அனுபவிக்கிறாங்க.

    நரகத்தில விழுந்தாலும் அவனுடைய கோபமோ, பெருமையோ, வெறுப்போ கொஞ்சம் கூட கம்மியாகலை. இன்னும் நம்ம தேவனை எந்த விதத்தில பழி வாங்க முடியும் என்பதுதான் அவனுடைய எண்ணம். நம்ம தேவனை பழி வாங்குறதுக்கு நேரடியா ஒண்ணும் செய்ய முடியாதுன்னு அவனுக்கு தெரியும். அவனை விரட்டிட்டு நம்மளை ஏதேன் தோட்டத்தில வைத்த போதே அவன் தெரிந்து கொண்டான். நம்ம தேவன் நம்மளை எந்த அளவு நேசிக்கிறாங்கன்னு. அதுனாலதான் நம்மளை பற்றி இடைவிடாம நம்ம தேவன்கிட்ட குற்றம் சொல்லிட்டே இருக்கிறான்(வெளி 12 : 10). அது மட்டுமில்ல அவர் முழுமையா நேசிக்கிற நம்மளை காயப்படுத்தி நம்ம தேவனை வேதனைப்படுத்துறதுதான் அவரை பழி வாங்குகிற காரியம் குட்டிகளா.

    சாத்தானை பற்றி இவ்வளவு அதிகமா ஏன் நம்ம இயேசப்பா சொல்லுறாங்க?ன்னு நீங்க யோசிக்கலாம். நம்ம எதிரியுடைய பலத்தை பற்றி நீங்க தெரிந்து கொள்ளனும் என்பதற்காக மட்டுமில்ல நம்ம தேவனுடைய வல்லமையும், அவர் நம்ம மேல வைச்சிருக்கிற அன்பையும் நீங்க தெரிந்து கொள்ளனும் என்பதற்காக.

    சோர்வில்லாம என்றும் விழிப்போட இருந்தா மட்டுமே நம்ம எதிரியை வெல்ல முடியும் குட்டிகளா. அது மட்டுமில்ல பிரச்சனைகள் வந்து சூழ்ந்து காயப்படுத்தி மரணத்துக்கு நம்மளை அழைக்கும் போது இந்த சாத்தான் என் வாழ்கையை கெடுத்துட்டான் என்று புலம்ப இதை சொல்லலை. இந்த சாத்தான் யாரு? என் தேவனால துரத்தி விடப்பட்டவன். என் மேல அவனுக்கு என்ன அதிகாரம் இருக்கு? அவனை விட என் தேவன் பெரியவர் என்கிற எண்ணம் மட்டும் என்றும் உங்க மனதில இருக்கட்டும்.

    சரி குட்டிகளா, நம்ம இயேசப்பாகிட்ட பரிசுத்த ஆலயத்தில இருந்து சாத்தான் குதிக்க சொன்னதும், நம்ம இயேசப்பா ஏன் அவனை பார்த்து அந்த பதிலை சொன்னார் என்பதும் உங்களை மாதிரியே எங்களுக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கிற காரியம். அதை குறித்து நம்ம இயேசப்பா சொல்லுறதை அடுத்த முறை கேட்டு தெரிந்து கொள்ளலாமா?

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    four × = 20

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>