• இயேசு கிறிஸ்து யார்?(1)

    prayer9

    ஹாய் குட்டிஸ், உங்களோட “இயேசு கிறிஸ்து யார்?” என்கிற தலைப்பில பேசுறதுல உங்களுடைய நண்பர்களாகிய நாங்க மிகுந்த சந்தோஷம் அடைகிறோம்.

    தலைப்பை கேட்டதும் இயேசப்பாவை பத்திதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே, வேற எதுவும் முக்கியமானது சொல்ல போறீங்களா? அப்படீன்னு நீங்க கேட்டா, ஆமா குட்டிஸ் உங்களுக்கு மட்டுமில்ல நம்ம இயேசப்பாவை பத்தி தெரியாத உங்க நண்பர்களுக்கும் கூட இயேசப்பாவை குறித்து இந்த நாட்களில் தெரிந்து கொள்ளணும்,  இன்னும் அதிகமாய் நீங்க இயேசப்பாவை குறித்து சொல்லணும் என்பதற்காக தேவன் எங்களுக்காக காண்பித்த பாதை இது. அதுனால இது கட்டாயம் ஒரு வித்தியாசமான கட்டுரையா இருக்கும்னு நம்புறோம்.

    சரி குட்டிஸ், உங்களோட இயேசு கிறிஸ்து யார்? (Who is Jesus?) என்கிற தலைப்புல பேசுறதுக்கு முன்னாடி இயேசப்பா உங்களுடைய வாழ்கையில் செய்த, செய்துகொண்டு இருக்கிற மற்றும் செய்ய போகிற நன்மைக்காக நன்றிகள் பல சொல்ல வேண்டியதிருக்கே? (காலையில் எழும்பும் போதும், நைட் தூங்கறதுக்கு முன்னாடியும் ஜெபம் பண்ண அம்மா உங்களுக்கு சொல்லி கொடுத்துருப்பாங்க. அதே மாதிரியான ஒரு குட்டி ஜெபம்தான் இது!) சரி இப்ப ஒவ்வொரு காரியத்துக்காக தேங்க்ஸ் சொல்ல ஆரம்பிப்போமா.

    • எப்பவும் உங்களை நம்புற பிள்ளையா என்னை ஆக்கினதற்காக நன்றிகள் இயேசப்பா
    • எத்தனையோ தப்பான கெட்ட பழக்கங்களில் இருந்து என்னை மீட்டு நல்ல பிள்ளையாய் மாத்தினதுக்காக நன்றிகள் இயேசப்பா
    • நான் செய்யுற ஒவ்வொரு காரியத்தையும்(ஸ்கூல்ல என்னை ஒரு நல்ல பையன்/பொண்ணு) வாய்க்க பண்ணினதுக்காக நன்றிகள் இயேசப்பா
    • எத்தனையோ வியாதிகளை நீக்கி எனக்கு நல்ல சுகத்தை கொடுத்த உங்க கிருபைக்காக நன்றிகள் இயேசப்பா
    • ஒவ்வொரு சண்டேயும் தவறாமல் உங்களுடைய ஆலயத்திற்கு என்னை வரச் செய்த உங்க அன்புக்காக நன்றிகள் இயேசப்பா
    • ஒவ்வொரு கிளைமேட் மாற்றத்தின் கஷ்டத்திலும் என்னை அழகாக காப்பாற்றுவதற்காக நன்றிகள் இயேசப்பா
    • என்னை எதிர்த்து நிற்கிற சாத்தானுடைய எல்லா சதித்திட்டங்களையும் பட்சித்து என்னை என்றைக்கும் ஜெயம் உள்ளவனா/உள்ளவளா நடத்துவதற்காக நன்றிகள் இயேசப்பா
    • இயேசப்பா உங்க நாமத்தை துதிக்க, உங்ககிட்ட ஜெபம் பண்ண நீங்க எனக்கு காண்பித்த தயவுக்காக நன்றிகள் இயேசப்பா

    இயேசப்பாவுக்கு நன்றிகள் சொல்லியாச்சா? வெரி குட்.

    இவ்வளவு காரியம் இயேசப்பா எனக்காக பண்றாங்களா! கேட்கும் போதே ரொம்ப ஆச்சர்யமா இருக்குதா? கண்டிப்பா. இதை விட இன்னும் ஆச்சர்யமான காரியங்களை நமக்காக ஒவ்வொரு நிமிஷமும் செய்திட்டிருக்காங்க நம்ம இயேசப்பா.

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    4 × six =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>