• இயேசு கிறிஸ்து யார்?(37)

    தேவனின் கடிந்து கொள்ளுதல்

    jesus37

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம தேவன் நமக்கு நிறைவான பாத்திரங்கள் பற்றியும், அவங்க வாழ்கையின் ரகசியத்தையும் அழகாக நமக்கு புரியுற வகையில சொல்லி கொடுத்தாங்க. ஆனா நம்ம மனதில தோணுற காரியம், குறைவுள்ள பாத்திரமாகிய என்னை பற்றியும் என்னுடைய இயேசப்பா நினைக்கிறாங்களா…..நிறைவான பாத்திரங்கள், அவருடைய பிள்ளைகள் கஷ்டப்படும் போது, அவங்களுக்காக எலிஷா காலத்தில அவரை காக்க, அக்கினி ரதங்களால் சூழ்ந்து கொண்ட மாதிரி எங்களையும் காத்துக் கொள்ளுவாங்களா? நாங்க எப்படி பார்த்தாலும், அவரை கஷ்டப்படுத்துருவங்கதான. எங்களுக்காக பரிந்து கொண்டு, சாத்தானோட சண்டை போட வருவாங்களா? நாங்க அவனுக்கு பயந்து எங்க இயேசப்பாவை விட்டு கொடுத்தவங்கதான. இல்லை….திரும்பியும் எங்க மனது கஷ்டபடுது….நாங்க எங்க இயேசப்பா அன்பை ஆவலா தேட நினைத்தாலும், அவரை இது வரை படுத்தின பாடுகள், அவரால எங்க மேல இனிமே அன்பு கூர விடாது. ப்ளீஸ்….எங்களை எது சொல்லியும் சமாதானம் படுத்த வேண்டாம்.

    நம்ம இயேசப்பா இந்த நேரத்தில கூட நம்மளை கடிந்து கொள்ள ஆசைப்படுறாங்க. நிறைவான பாத்திரங்களுக்கு மட்டும்தான் நம்ம இயேசப்பா உதவி செய்கிறவரா இருந்தா, அவங்க மேல மட்டும் அவர் அன்பு கூருகிரவரா இருந்தா, நாம யார் குட்டிகளா, அவருக்கு? ஏன் நம்மளையே தாழ்த்துறோம்னு பேருக்கு திரும்பவும் அவரை விட்டு விலகி போறதை மட்டுமே தெரிந்து கொள்ளுறீங்க. நம்ம இயேசப்பா நம்ம மேல முழுமையா அன்பு வைச்சிருக்கிறார் குட்டிகளா. அதுல கண்டிப்பா என்னைக்கும் அவர் பாரபட்சம் காட்டினது கிடையாது. அது நிறைவான பாத்திரங்களா இருக்கட்டும் இல்லை ஒண்ணுத்துக்கும் உதவாத நாமளா இருக்கட்டும், அவர் நம்ம மேல உயிரையே வைச்சிருக்கிறார் என்பதுதான் சத்தியம். அதை முதலில் புரிந்து கொள்ளுங்க.

    சப்போஸ் நம்ம இயேசப்பா நம்மளை கடிந்து கொள்ளாத நிலைமை வரும் போது தான் நாம இந்த அளவுக்கு மனதில feel பண்ணி வருத்தப் படணும். என்னது, என்ன இயேசப்பா என்னை கடிந்து கொள்ளலைன்னா…..அவர் எனக்கு தண்டனைகள் மூலமா என்னுடைய தவறுகளை சுட்டி காட்டாட்டினாதான் நாம உண்மையில் வருத்தபடணுமா? உண்மையில் எங்களுக்கு புரியலை. நமக்கு புரியுற வகையில நம்ம இயேசப்பா சொல்ல ஆசைபடுறாங்க.

    நம்ம இயேசப்பா நிறைவான பாத்திரங்களை பற்றி அழகாக சொல்லி கொடுத்த பிறகு நம்மளை மாதிரி உள்ள குறைவான பாத்திரங்களிலும் இரண்டு வகைகள் உண்டுன்னு நமக்கு சொல்ல ஆசைபடுறாங்க. அதுல ஒரு பிரிவினரை அவர் கடிந்து கொண்டு தன்னோட, எப்பேர்பட்டாவது  பரலோக ராஜ்யத்திற்கு அழைத்து செல்ல நினைப்பார். இன்னொரு வகையினர் உண்டு. அவங்க நம்ம இயேசப்பாவால அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் ,தன்னுடைய பிடரியை கடினப்படுத்தினவங்க. அவர்களுக்கான கிருபை காலங்கள் முடிந்ததுன்னு நம்ம பிதாப்பா சொல்லிட்டா சாரி குட்டிகளா, நம்ம இயேசப்பா கூட அவங்களுக்காக அவர்கிட்ட பரிந்து பேச முடியாது.

    உங்களுக்கு தெரிந்த விஷயம்தான். லூக்கா 13ம் அதிகாரத்தில நம்ம இயேசப்பா அத்தி மரம், தோட்டக்காரன், தோட்டத்துக்கு சொந்தக்காரர்ன்னு ஒரு உவமையை சொல்லி இருப்பாங்க. அதுல தோட்டத்துக்கு சொந்தக்காரர் ஒரு அத்தி மரத்தை நட்டிருந்தார். ஒரு நாள் அவர் தோட்டத்துக்கு வந்து ஆசையாய் பழம் அந்த மரத்தில தேடினப்ப, அந்த தோட்டக்காரன்கிட்ட சொன்னார்” நான் இந்த மரத்தில மூன்று வருசமாய் பழத்தை தேடுறேன். ஆனா இதுல இது வரைக்கும் ஒரு பழம் கூட இல்லை. அதுனால ஏன் இன்னமும் வெட்டியா இந்த மரத்தை வைச்சிருக்கிற. வெட்டி போடு, இது தேவையில்லாம நிலத்தையும் கெடுக்குது பாரு’ன்னு. ஆனா அந்த தோட்டக்காரன் சொன்னார், “ஐயா இது இந்த வருசமும் இருக்கட்டும், நான் இதைச் சுற்றிலும் கொத்தி, எருப்போடுறேன். பழம் கொடுத்தா சரி இல்லைன்னா வெட்டிப்போடலாம்”னு.

    உங்களுக்கு நம்ம இயேசப்பா உவமையின் அர்த்தம் புரியுதா குட்டிகளா. அந்த அத்திமரம் யாருன்னு உங்களுக்கு புரிந்திருக்கும். அது எந்த வகையிலும் நம்ம இயேசப்பாக்குள்ள வர முடியாத நாம்தான். நாம அவர் அன்புக்குள் வராம, அவர் அன்புக்குள் பழம் கொடுக்காம இன்னும் வெறும் இலைகள் கொண்ட ஒரு அத்தி மரம் போலத்தான் இருக்கிறோம். ஆனா நாம இன்னைக்காவது அவர் அன்பை புரிந்து கொள்ள மாட்டோமா, இந்த நேரத்திலனாச்சும் அவருடைய பிள்ளையா, அவர் அன்பை மற்றவங்களுக்கு காண்பிக்க மாட்டோமான்னு நமக்காக காத்திருக்கிறார் தோட்டத்துக்கு சொந்தகாரராகிய நம்ம பிதாப்பா. ஆனா நமக்குள் ஒரு மாற்றத்தையும் காணாம உண்மையில் வருத்தப்படுகிறார்.

    ஆனா நமக்கு பரிந்து பேசுகிறவறாகிய தோட்டக்காரன் நம்ம இயேசப்பாதான் குட்டிகளா. மூன்று வருஷம்ன்னு சொன்னவுடன், அச்சோ, அப்ப என்னுடைய இயேசப்பா என்னுடைய வாழ்கையில இடைபட்டு மூன்று வருஷம் ஏற்கனவே ஆச்சே…அப்ப நான் அவ்வளவுதானான்னு யோசிக்க வேண்டாம். ஏன்னா அது கிருபையின் காலங்களை குறிக்கிற வருசங்கள். அது எவ்வளவு காலங்கள் நமக்குன்னு நம்ம தேவனுக்கு தான் தெரியும் குட்டிகளா.

    நம்ம இயேசப்பா நம்மளுக்கு கொத்தி எருபோடுகிற வேலைன்னு சொன்னது, நம்ம இருதயத்தில இன்னும் ஆழமா அவர் வார்த்தைகளை அவர் விதைக்க ஆசைபடுகிறார் குட்டிகளா. எருபோடுகிற வேலை அதுதான் குட்டிகளா, ஏன்னா நாம அவருக்குள் கனி கொடுக்க வைக்கிறதே அவர் வார்த்தைகள் தான். அதுனால இன்னும் நம்ம இயேசப்பா நம்ம இருதயத்தில ஆழமா தன்னுடைய வார்த்தைகளை கொடுத்து, அவர் நம் மேல அன்பா இருக்கிறதை புரிய வைக்கிறார். அப்பனாச்சும் அந்த மரமாகிய நாம அவருக்குள்ள கனி கொடுக்க மாட்டோமான்னு அவருக்கு ஒரு ஆசை.

    இதுல முக்கியமா நாம கவனிக்க வேண்டிய காரியம், கெட்ட கனிகள் கொடுக்கிற மரங்கள் மட்டுமில்ல, நல்ல கனிகளை கொடுக்காத மரம் மட்டுமில்ல, நம்மளை மாதிரி கனியே கொடுக்காம, நம்ம பிதாப்பா சொன்னபடி பார்த்தா, நிலத்திற்கு வெட்டியா இருக்கிறவங்களையும் நம்ம பிதாப்பாவும், நம்ம இயேசப்பாவும் வெட்டி போடுற சந்தர்ப்பங்கள் நேரிடும். அதற்கு அவங்க கண்டிப்பான குணம்தான் காரணம்ன்னு நம்மளால் கூட சொல்ல முடியாது. ஏன்னா, நாம தான் நம்மளுக்கு கொடுக்கிற வாய்ப்புகளை வீணாக்குறோம்.

    சரி குட்டிகளா, கிருபையின் காலங்கள்ன்னு நம்ம இயேசப்பா குறிப்பிடுகிற நாட்கள் கூட நம்ம தேவனுக்கு உட்பட்டது. அதுனால அன்பாகவே இருக்கிற நம்ம தேவனா இருந்தாலும், அந்த காலங்கள் முடியுற சமயம், அவர் நம்மளை கைவிட வேண்டிய நிலைமை வந்துடும். நம்ம பிதாப்பா நமக்கு வைத்திருந்த கிருபையின் காலங்கள் முடிந்தது கூட தெரியாம, நம்ம இயேசப்பாவும் ஒண்ணும் செய்ய முடியாம, பிதாப்பா பேச்சுக்கு கீழ்படிந்து நம்மளை விட்டு போனது கூட தெரியாம, அந்த ஐஸ்வரியவான் வாழ்கையில நடந்த மாதிரி, ஆசாப் சங்கீதக்காரன் பொறாமைப்பட்ட துன்மார்க்கன் வாழ்க்கை மாதிரி நம்ம வாழ்கையும் தீடீர்னு முடியும் போது தான் நமக்கு தெரியும். “ஐயோ, என் வாழ்க்கை எனக்கு முடிஞ்சிருச்சே, நான் எங்க இருக்கேன், நரகத்திலயா வெந்திட்டு இருக்கேன்”ன்னு புலம்பும் போது தான் கிருபையின் காலங்கள் என்பதற்கும் அர்த்தம் உண்டு என்கிற விஷயம் புரியும் குட்டிகளா.

    என்ன குட்டிகளா, பயமா இருக்குதா? நம்ம தேவன் அன்பானவரா இருந்தாலும், அவர் நீதி, நியாயத்திற்கு கொஞ்சம் கூட விலகாத தேவனும் கூட. அதுனால எச்சரிக்கை குட்டிகளா. இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும். குறைவுள்ள பாத்திரங்களுக்குள்ள நம்ம இயேசப்பா இரண்டு வகையா யாரை வைச்சிருக்காங்கன்னு. ஒண்ணு கிருபையின் காலங்களில் ஓடிட்டு இருக்கிற நாம. நமக்கு நம்ம இயேசப்பாவின் கடிந்து கொள்ளுதல், சின்ன தண்டனைகள் இன்னமும் கிடைக்குதே. அதுனால நாம நம்ம இயேசப்பாவின் பரிந்துரையின் பேர்ல, அவரே நமக்கு சுத்தி, கொத்தி எருபோடுற கிருபையின் காலங்களில் இருக்கிறோம்.

    ஆனா அந்த கிருபையின் காலங்கள் முடிந்தது கூட தெரியாம, பாரு, பாரு…..என்னை பாரு….நான் எத்தனை தப்புகள் செய்தாலும், ஒரு வியாதியும் வராம, ஒரு பிரச்சனையும் நடக்காம சந்தோசமா வாழுறேன்…..ன்னு உங்களை பார்த்து கிண்டல் பண்ணுகிறவங்களைதான் இங்க சொல்லுறாங்க. அவர்களுடைய முடிவு அவங்க கொஞ்சம் கூட நினைக்காத சமயம், சடிதியில வரப்போகுது. அப்ப அவங்க, என்ன வேதனைபட்டாலும், நம்ம இயேசப்பா கால்களை பற்றி எவ்வளவு தூரம்தான் கதறினாலும் எதையும் மாற்ற முடியாது. அதுனால உங்களை கிண்டல் அடிக்கிற அவங்க சொற்களுக்கு கொஞ்சம் கூட செவி கொடுக்காம, நம்மளையும், இந்த உலகத்தில கிருபையா காத்து வருகிற அவருடைய அன்புக்கு தேங்க்ஸ் எந்நாளும் சொல்லி, அவர் நம்ம மேலயும் கோபப்படுகிரதுக்காக இன்னும் நன்றிகள் சொல்லுவோமா?

    சரி குட்டிகளா, இப்ப எங்களுக்கு சொல்லுங்க, நம்ம இயேசப்பா நம்ம மேல கோபப்படலாமா இல்லை கோபப்பட கூடாதா?     

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine + = 15

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>