• இயேசு கிறிஸ்து யார்?(21)

    உண்மையான சந்தோசம்

    jesus21

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நமது தேவனின் நாமத்தை நீங்க தெரிந்து கொண்டதற்காக நன்றிகள் குட்டிகளா. நீங்க நமது தேவனின் அன்பை தெரிந்து கொண்டதற்காக அவர் ரொம்பவே சந்தோசப்படுகிறார். உங்களுக்கு ஒரு விஷயம் நம்ம இயேசப்பா சொல்ல ஆசைப்படுறாங்க. அது என்னன்னா நம்ம தேவனின் நாமத்தை தொழுது கொள்ளனும், அவர் வார்த்தை என்னவோ அதற்கு பரிபூரணமா செவி கொடுக்கணும்னு நீங்க எடுத்த தீர்மானங்கள் நம்ம தேவனை ரொம்பவே மகிழ்வித்த காரியம். ஏன்னா மனம் திரும்புகிற(அவரிடத்தில திரும்புகிற) ஒரே பாவியின் நிமித்தம் பரலோகமே சந்தோசப்படுமாம். பரலோகம்னா உங்களுக்கும் தெரியும். அதுல யார் இருக்கிறாங்க என்பதும் உங்களுக்கு தெரிந்த காரியம். அப்ப நம்ம பிதாப்பா, இயேசப்பா, பரிசுத்த ஆவியானவர், அதோட கோடிக்கணக்கான தூதர்களும், பரிசுத்தவான்களும் நாம நம்ம தேவனின் நாமத்தை தெரிந்து கொண்டதற்காக சந்தோசப்படுவாங்க, அப்படிதானா குட்டிகளா அர்த்தம்.

    எங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல முடியுமா? நீ உன்னுடைய வகுப்பில முதல் மார்க் வாங்கும் போது, அது உன்னுடைய வகுப்பில எத்தனை பேருக்கு சந்தோசத்தை கொடுக்கும். உன்னால கண்டிப்பா சொல்ல முடியுமா? உன்னுடைய வகுப்பில இருக்கிற எல்லாருக்கும் உன்னுடைய உயர்வு சந்தோசத்தை தரும்னு சொல்ல முடியுமா? சாரி குட்டிகளா, ஏன்னா யாரோ எடுக்க வேண்டிய மேன்மையை நீ பிடுங்கி கொண்டதாகத்தான் அவங்க நினைப்பாங்க. அதுனால முழுமையா சந்தோசபடுறவங்க எண்ணிக்கை ரொம்பவே சொற்பமான அளவாதான் இருக்கும். நாங்க சொல்லுறது சரியா குட்டிகளா. இதை பத்திதான் யோசிச்சா நம்மளால் நம்ம வாழ்க்கை இலக்கை எட்ட முடியாது, உங்களுக்கு தெரியுமா? மார்க் எடுத்தோமா, அடுத்து நாம என்ன செய்யணும்னு யோசித்து அதற்கான காரியங்களை பார்க்கணும். அதை விட்டுட்டு, நான் முதல் மார்க் வாங்கினதால நீ சந்தோசப்பட்டியா, நீ சந்தோசப்பட்டியா……ன்னு ஒவ்வொரு rowல இருக்கிற எல்லாரையும் கேட்க முடியாது.

    ஏன்னா அறிவியல்ல நாம படித்த பாடம்தான். வலிமையுள்ளவங்க தான் சூழ்நிலையை ஆக்கிரமிக்க முடியும். மற்றவங்களுக்காக யோசித்திட்டு உட்கார்ந்தா ஒண்ணும் செய்ய முடியாது. என்னால என் இடத்தை மற்றவங்களுக்கு விட்டு கொடுக்க முடியாது, சரியா!!!!!!!!!! இந்த மாதிரிதான் நீங்க தினமும் யோசித்து கொள்ளுவீங்களா குட்டிகளா ? 

    நம்மளுடைய வாழ்கையில இதே மாதிரி நாம தினமும் எதிர்கொள்ளுகிற பிரச்சனைகள் ஏராளம் குட்டிகளா. ஆனா அதையும் மீறி நம்ம மனதை தொடுற மாதிரி ஏதாவது மெல்லிய சந்தோசத்தை நீங்க உணர்ந்தது உண்டா? நம்ம போட்டி, நம்ம அம்மா/அப்பா, நம்ம வீட்டுப்பாடம், நம்ம ப்ராஜெக்ட் வொர்க், நம்ம வீட்டு வாலுக, நம்ம நண்பர்கள் கூட்டம்…..ஒரு விஷயம் சொல்ல மறந்திட்டோம், நம்ம டிவி. ஏன்னா நமது வீட்டுல இருக்கிற பெருபான்மையான நேரங்கள் இதுலதான போகுது. ஆனா நம்ம இயேசப்பாவை தெரிந்து கொண்ட பிள்ளைகளுக்கு இந்த டிவி காரியம் கண்டிப்பா கடைசி இடத்திலதான் இருக்கும்னு சொல்ல முடியும்.

    உங்க டிவி விசயத்தை விட்டுட்டு பார்த்தா நீங்க உங்க வாழ்கையில உண்மையான சந்தோசத்தை(நீங்களா நினைத்து கொள்ளுவது, சாரி அது உண்மையான சந்தோசம் கிடையாது) உணர்ந்த நேரங்கள் உண்டா குட்டிகளா. ஏற்கனவே நம்ம இயேசப்பா சொல்லிட்டாங்க, இந்த டிவி காரியங்கள் களியாட்டுகள் விசயத்தில வருது. அது மூலமா உங்களுக்கு கிடைக்கிற எந்த ஒரு சந்தோசமா(இயேசப்பா பற்றி தெரிந்து கொள்ளுகிற சேனல் பத்தி நாங்க இங்க குறிப்பிடலை) இருந்தாலும் அது உங்களுக்கு உண்மையில் சந்தோசத்தை கொடுக்கலை குட்டிகளா. அது முழுக்க முழுக்க உங்க மனதில நம்ம இயேசப்பா கொடுத்திருக்கிற சமாதானத்தை எடுத்துட்டு போகுது.

    ஒரு நாள் நீங்களே உங்களை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு……ஒரு முரடனா(கார்ட்டூன் சேனல் உருவாக்கின காரியம், எல்லாம் அடிதடி சண்டைகள், போட்டிகள் இப்படிப்பட்ட விசயங்கள் தான வருது குட்டிகளா)………ஒரு தொட்டாசிணுங்கியா…….எதற்கெடுத்தாலும் குறை சொல்லுகிறவனா…………கோபப்படுகிறவளா……………நிறைய கற்பனைகள் காண்கிறவனா…….மாறும் போது தான் நீங்களே புரிந்து கொள்ளுவீங்க குட்டிகளா. ஆனா, என் வாழ்கையில நான் முக்கால் பாகம் செலவழித்த டிவி காரியம் என்னை என்றும் வேதனை படுகிறவனா மாற்றி  அமைச்சதுன்னு நீங்க புரிந்து கொள்ளுகிறதுக்கு முன்னாடி உங்க வாழ்கையில நீங்க வைச்சிருந்த சமாதானம் காணாம போயிரும் குட்டிகளா. அடுத்து என்ன செய்ய முடியும், ஐயோ, என்னால என்னை மாற்றி கொள்ள முடியலையே…..என்ன செய்ய……என்ன செய்ய…..யோகா கிளாஸ் போகலாமா….டாக்டரை பார்க்கலாமா….ன்னு புலம்ப வேண்டியதா போயிரும். நமக்கு தேவையா இத்தனை வேதனைகள்?? உங்க மனதில இந்த டிவி காரியங்கள் ஒரு விஷம் மாதிரி கிரியை செய்கிறது தெரியாமேயே அதை பார்த்து சிரிக்கிறோம்…..சிரிக்கிறோம்…..கடைசியில ரொம்பவே அழ போகிறோம்.

    டிவி காரியம் உண்மையான சந்தோசம் கிடையாது, அது எங்களை கொஞ்சமா கொஞ்சமா வேதனைபடுத்திட்டு இருக்குதுன்னு சொல்லுறீங்க, அப்ப இந்த உலகத்தில உண்மையான சந்தோசம் என்கிற வார்த்தையே கிடையாதான்னு நீங்க புலம்புறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. உண்மையான சந்தோசம் உண்டு, அதுவும் நம்மளுக்குள்ள(நம்ம தேவன் நமக்கு உணர்த்துகிறார்) இருக்கு. ஆனா அதை கொஞ்சம் கூட நாம நினைத்து கூட பார்க்காம மற்ற விசயங்களை குறித்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கோம்.

    நம்ம இயேசப்பா நம்மளுக்காக காத்திருக்கிறார் என்பதும், நம்ம கூட இப்பவும் பேச துடிக்கிறார் என்பதும் தான் அந்த முழுமையான சந்தோசம். எப்பவும் நம்ம இயேசப்பாவின் அன்பு மட்டும்தான் நமக்கு முழுமையான சந்தோசத்தையும், இன்பத்தையும் கொடுக்கிற காரியம். உண்மையில் அதை தெரிந்து கொள்ள ஆசைபட்டா அதை இப்பவும் ருசித்திட்டுருக்கிற ஆட்களை கேளுங்க. அவங்க சொல்லுவாங்க. அது நீங்க டிவி பார்த்த நேரத்தை விட சந்தோசத்தையும், நீங்க யோசிக்கிற பொழுது போக்கை விடவும் இன்பத்தையும் தரும்னு.

    என்ன குட்டிகளா, நாங்க அந்த உண்மையான சந்தோசத்தை எப்படி பெற்றுக் கொள்ளணும் ன்னு கேட்க ஆரம்பிச்சிட்டீங்க, குட். நீங்க உங்களுடைய வேலைகளை செய்ய வேண்டிய நேரங்கள்ன்னு சில நேரங்களை ஏற்கனவே ஒதுக்கி வைச்சிருப்பீங்க. அந்த நேரங்களை தவிர்த்து, எப்ப உங்களுக்கு டிவி பார்க்கணும்னு தோணுதோ, அப்ப நம்ம இயேசப்பாவின் சமூகத்தில போய் உட்கார்ந்திருங்க. அவர் நம்ம கூட பேசுறதுக்காக கொடுத்திருக்கிற மொபைல் போனாகிய பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பிங்க. முதல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். என்ன டிவில ஓடுதுன்னு மனம் எல்லாம் அதுலதான் இருக்கும். ஆனா, நம்ம இயேசப்பா உங்களுக்கு கொடுக்கிற பலத்தினால் உங்களால சாத்தானின் தந்திரமாகிய டிவி காரியத்தை கண்டிப்பா ஜெயிக்க முடியும்னு நம்புறோம்.

    என்ன குட்டிகளா, டிவி காரியத்தை ஜெயிக்க இன்னைக்கே இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை(பைபிள்) நம்ம இயேசப்பாவின் சமுகத்தில எடுத்தீட்டீங்க போல………………………….நமது தேவன்தாமே கிருபை பாராட்டுவாராக!!!!!!!!!!!!!!      

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    five − 4 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>