• இயேசு கிறிஸ்து யார்?(17)

    என்னதான் செய்ய போகிறோம்??????

    jesus17

    ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.

    நம்ம இயேசப்பா நம்ம கூட தேவனுடைய வார்த்தைகளின் மகத்துவத்தை பற்றி சொல்ல ஆசைபடுறாங்க. ஏன் நம்ம தேவனுடைய வார்த்தைகளுக்கு இந்த அளவு முக்கியத்துவம்ன்னு நீங்க யோசிக்கலாம். நம்ம இயேசப்பா  வெளிப்படுத்தின விஷேத்தில எனக்கு செவி கொடுங்கள், எனக்கு செவி கொடுங்கள், காதுள்ளவன் கேட்கக்கடவன்னு நிறைய முறை சொல்லியிருப்பாங்க. அது மட்டுமா தீர்க்கத்தரிசிகள் புத்தகங்களில் கூட எல்லா இடங்களிலும் நம்ம தேவன் என் ஜனங்களே எனக்கு செவி கொடுங்கள்ன்னுதான் அடிக்கடி தன்னுடைய பிள்ளைகள் மூலமா தன் ஜனங்களை கடிந்து கொண்டாங்க.

    இந்த அளவுக்கு ஏன் நம்ம தேவனாகிய கர்த்தர் நம்மளை செவி கொடுங்கள் குட்டிகளா, என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கன்னு எப்ப பார்த்தாலும் சொல்லறாங்க. உங்க மனதில கேள்விகள் எழும்பலாம். நம்ம வீட்லயே நம்ம அம்மா, நம்மளை ஒரு தடவை சொன்ன காரியத்தை இரண்டாவது முறை சொல்லிட்டா சப்போஸ் கிண்டல் பண்ணுவோம். இல்லை உங்களுக்கு வேற வேலையே இல்லையான்னு கோபப்படுவோம். நம்ம அம்மாமார்களும் ஒரு தடவை சொல்லுவாங்க, இரண்டாவது முறை சொல்லுவாங்க. உங்ககிட்ட பதில் கிண்டலோ இல்லை கோபமோ வந்தா, ஒண்ணும் கண்டுக்காம விட்ருவாங்க இல்லை கோபம் வந்தா அன்னைக்கி நமக்கு கிடைக்குமே பிறந்த நாள் பரிசு. அடுத்து அந்த கிண்டல் அடிக்கிற பழக்கம் எங்கே போச்சுன்னு நமக்கே தெரியாது.

    ஆனா நம்ம தேவனாகிய கர்த்தர் மட்டும் கொஞ்சம் கூட சலிச்சி போகாம எனக்குச் செவி கொடுங்கள்னு நிறைய முறை தன்னுடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் மக்கள்கிட்ட தீர்க்கத்தரிசி புத்தகத்தில சொல்லியிருப்பாங்க. சப்போஸ் நீங்க தெரிந்து கொள்ள ஆசைப்பட்டா உன்னதப்பாட்டு முடிந்த பிறகு ஆரம்பிக்கிற ஏசாயா புத்தகத்தில ஆரம்பிச்சி மல்கியா புத்தகம் வரை வாசித்து பாருங்க. நீங்களே ஆச்சர்யப்படுவீங்க. கோபமா இத்தனை தண்டனைகள் உனக்கு நியமித்திருக்கிறேன்னு சொன்னாலும் அதற்கு நடுவிலயும் இப்பனாச்சும் எனக்கு செவி கொடுங்கள்னு நம்ம தேவன் நிறைய முறை சொல்லி இருக்கிறதை உங்களால் பார்க்க முடியும் குட்டிகளா.

    நீங்க நினைக்கலாம், கொஞ்ச நாள் நம்ம பிதாப்பா சொல்லி இருப்பாங்க, அடுத்து கோபத்தில் எங்க அம்மா மாதிரி பேசாமயே இருந்திருப்பாங்கன்னு  நினைச்சா சாரி குட்டிகளா, தன்னுடைய இஸ்ரவேல் ஜனங்களும், யூதா ஜனங்களும் தன்னை என்று மறந்து அந்நிய விக்கிரங்களுக்கு தன்னை அடிமையாக்கி வாழ்ந்தாங்களோ அன்று ஆரம்பிச்சி, தன்னுடைய பிள்ளைகள் பாபிலோன் நாட்டுல அடிமையாக வாழ்ற நாட்களில் கூட தன் பிள்ளைகளை நோக்கி கூப்பிட கொஞ்சம் கூட அவர் சலிக்கவே இல்லை. உண்மையாகவான்னு நீங்க ஆச்சர்யப்படுறது எங்களுக்கு நல்லாவே புரியுது குட்டிகளா. நீங்க அம்மா/அப்பா மூலமா நம்ம பைபிளில் உள்ள ராஜாக்களை பற்றி தெரிந்து வைச்சிருந்தாலும் இல்லை நீங்களே படிச்சி நம்ம தேவனின் அன்பை தெரிந்து வைச்சிருந்தாலும், இன்னும் ஒரு முறை இராஜாக்கள் புத்தகத்தையும், தீர்க்கத்தரிசிகள் புத்தகத்தையும் நிதானமா வாசித்து பாருங்க. என்று அவங்க நம்ம தேவனை விட்டு அந்நிய தேவனை கையெடுக்க ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கில இருந்து நம்ம தேவன் அவங்களை கூப்பிட ஆரம்பிச்சிருப்பாங்க.

    என்ன குட்டிகளா, நீங்க பைபிள் வாசித்து நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகளை அழைச்ச விதம் பத்தி தெரிந்து கொண்டப்ப  ரொம்பவே பிரம்மிப்பை அடைந்திருப்பீங்க. உண்மைதான குட்டிகளா. ஒருத்தரால இந்த அளவுக்கு அவருடைய பிள்ளைகள் அவரை விட்டு விலகி போன பிறகும் கூட என்கிட்ட வாங்க…..வேதனைப்படாதீங்கன்னு சொல்லிட்டே இருக்க முடியுமா….எத்தனை தீர்க்கதரிசிகள்…..எத்தனை அதிகாரங்கள்……எத்தனை தீர்க்கதரிசனங்கள்……….ஒன்று கூட பொய்க்கலையே  குட்டிகளா. என்ன நம்ம தேவன் தன் பிள்ளைகள்கிட்ட சொன்னாரோ அதெல்லாம் நடந்தேறியதே…….இல்லைன்னு யாராலும் மறுக்க முடியுமா? இல்லை பைபிள்ல இருக்கிற வசனங்களை குறை கூற முடியுமா? நம்ம தேவன் பேசுற தெய்வம் குட்டிகளா. தன்னுடைய பிள்ளைகளை இந்த அளவு நேசிக்கிற தெய்வம் அவர் ஒருத்தராத்தான் இருக்க முடியும். வேதாகமத்தில இருக்கிற ஒவ்வொரு வசனங்களும், அவர் தனக்குன்னு பிரித்தெடுத்த இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும்தான் போலன்னு…..தப்பா நினைச்சராதீங்க. நம்ம பைபிள்ல இருக்கிற ஒவ்வொரு வசனங்களும் அவருடைய பிள்ளைகளாகிய நம்ம எல்லாருக்கும் தான் குட்டிகளா. அவர் நம்மளை படைத்தவர் மட்டுமில்ல என்றும் நம்மளை காத்து வருகிற தேவனும் கூட.

    இன்னும் நம்ம தேவனுடைய வார்த்தைகளை பற்றி சொல்லணும்னா நிறைய சொல்லலாம் குட்டிகளா. அந்த ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொண்டதால்தான் நம்மளுக்குள்ள தேவையில்லாத கீழ்படியாமை பாவத்தை சாத்தான் ஏற்கனவே புகுத்திட்டான். கீழ்படியாமை என்பதற்கு என்ன அர்த்தம் குட்டிகளா, சொன்ன பேச்சை கேட்காமை. நம்ம தேவன் வார்த்தைகளை எந்த அளவு முக்கியப்படுத்திருக்கிறார்னு உங்களுக்கு தெரியும் குட்டிகளா. ஏன்னா நம்ம தேவன் தன்னுடைய வார்த்தையால(இயேசப்பா)தான் இந்த உலகத்தை உருவாக்கினாங்க. இதை நீங்க ஆதியாகமம் முதல் அதிகாரத்திலேயே படிச்சிருப்பீங்க. இப்படி நம்ம தேவனால் உருவாக்கப்பட்ட வானமும், பூமியும் கூட அழிந்து போகுமாம்(லூக்கா 16 :17, 21 : 33). ஆனா அவர் தன்னுடைய வாயில இருந்து தன்னுடைய பிள்ளைகளாகிய நமக்கு சொன்ன வார்த்தைகள் மட்டும் என்றும் ஒழிந்து போகாது.

    அது எச்சரிக்கையா இருந்தாலும் சரி ஆசீர்வாதமா இருந்தாலும் சரி கண்டிப்பா மாறாது குட்டிகளா. என்ன குட்டிகளா, இதெல்லாம் கண்டிப்பா ஆகுமான்னு இன்னும் உங்க மனது கேள்வி கேட்குதே????????? நம்ம தேவனுடைய வார்த்தைகளின் வல்லமைகளை ஏன் குட்டிகளா நம்மளால நம்ப முடியலை? நம்ம உள்ளத்துக்குள் இன்னும் பயம் இருக்கிறதினாலா……இல்லை அவரை இன்னும் நம்ப முடியாத காரணத்தினாலா……..அவர் நம்மளை நம்ப வைக்க இன்னும் என்ன செய்யணும்னு நாம ஆசைபடுறோம் குட்டிகளா. நம்ம கண் முன்னாடி வந்து அவர் நின்னு அவருடைய ஆணி பாய்ந்த கரங்களை காண்பிச்சி குட்டிமா…..உன்னை நான் நேசிக்கிறேன்…..அதனால்தான் உன்னுடைய எல்லா பாடுகளையும் நான் ஏற்கனவே சிலுவையில சுமந்திட்டேன்……இப்பனாச்சும் என்னுடைய அன்பை புரிந்து கொள்வாயா….ன்னு சொன்னாதான் நம்புவோமா இல்லை அதற்கும் மேல நம்ம கண் முன்னாடி அவர் சிலுவையில தொங்கினாதான் நம்புவோமா…..

    என்ன குட்டிகளா, அமைதியாயிட்டீங்க. கண்டிப்பா நம்ம இயேசப்பாவை நம்பதான் செய்யணுமான்னு யோசித்திட்டே நம்ம வாழ்கையை வாழ போறோமா இல்லை சாத்தான் நம்மளை ஏதாவது பண்ணிருவானோன்னு ஒவ்வொரு நொடியும் பயந்திட்டிருக்கிறதை விட நம்மளை நினைக்கிற, நேசிக்கிற தேவன் எவ்வளவு பெரியவர், எத்தனை ஆச்சர்யமானவர்னு புரிந்து கொண்டு, அவர் அன்பை மட்டும் நாம தேட போறோமா??????

    Related Post

    Categories: Do you know Jesus

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    3 × = eighteen

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>