-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 44
மீண்டும் அந்த எக்காள சத்தம் கேட்கவும் என்ன என்பது போல பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். இப்பனாச்சும் நம்ம எஜமானர் வந்துட்டாங்க.....என்கிற சந்தோஷ செய்தியை கேட்க மாட்டேனா என்கிற ஏக்கம் அதில் தெரிந்தது. அதை புரிந்து கொண்ட ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தவராய்......இன்னும் ஆயத்தங்களே மேற்கொள்ளாம உடனே என் எஜமானரை பார்க்கணும்னு நினைக்கிறது சரி வருமா.....ன்னு நீயே சொல்லு....அவர் சொன்ன போது அவளாலும் ஒன்று சொல்ல முடிய வில்லை.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 44
இத்தனை பெரிய இக்கட்டில் மாட்டி விடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் இயேசப்பா.....மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள். தேவன் தன்னுடைய பிள்ளைகள் தன்னோடு வழக்காடும்படி பரமானதொன்றையும் சுமத்த ,மாட்டார் என்கிற வசனம் அவளுக்கு அந்த நேரம் காற்றில் பறந்து போனதுதான் துரதிர்ஷ்டம்.
ஏன் நீ அழுதிட்டே இருக்க...... நீ செய்யுற காரியம் உன் எஜமானருக்கு பிடித்தமானதுன்னு நம்புறியா.....அந்த ஏஞ்சல் கேட்ட போது பதில் சொல்லாமல் அமைதியானாள்.
உனக்கே தெரியும். நம்ம தேவன் ரொம்பவே அன்பு நிறைந்தவர். அவர்கிட்ட இதே மாதிரி துக்கங்களோ, துயரங்களோ, வேதனையோ நாங்க பார்த்ததே இல்லை. அப்படி இருக்கும் போது அவருடைய சுவாசத்தை பெற்றுக் கொண்ட உன்னால மட்டுமே அந்த மாதிரி விசயங்களை வெளியே காண்பிக்க முடியுது....பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 43
வந்த கண்ணீரை துடைத்து கொள்ள கூட மனதில்லாமல் முழங்காலில் நின்றவள் அப்படியே அமர்ந்தாள். ஏன் இயேசப்பா.....கேள்விகள் வந்து கொண்டே இருந்தது.
கண்காணிப்பவர் ஏஞ்சல்கள் சுத்தியும் நின்றும் கூட ஏதோ என்றும் தெரியாத அத்வான காட்டில் மாட்டி கொண்ட மாதிரி உணர்ந்தாள் அவள். அப்பா, அவ்வளவுதானா.....நான் இனி எப்ப உங்களை பார்ப்பேன்.....மனம் ஊமையாய் ஓலமிட்டது.
தேவனின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது. சோர்ந்து போய் அமர்ந்திருத்த அவளை தேற்ற முடியாதவனாய் கண்காணிப்பவர் நோக்கினான். இந்த பொண்ணை எப்படி நான் சமாதானப்படுத்த.....வழி தெரியாமல் விழித்தான்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 42
தூக்கத்தின் நடுவிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்துவது உண்மையில் அவளுக்கு பிரியமாகவே இருந்தது. எந்த ஒரு குழப்பமான கனவுகள், நினைவுகள், எண்ணங்கள் இல்லாமல் முழுக்க தேவனின் பிரசன்னத்தில் இருப்பதை போல உணர்ந்தாள்.
அந்த வெளிச்சமான பாதையில் நடந்து கொண்டே இருக்க அவளுக்கு பிடித்திருந்தது. எல்லா பக்கமும் பார்த்தாலும் பச்சை பசேல் என்றுதான் தெரிந்தது.
இயேசப்பா உலகத்தில் எல்லா தாவரங்களையும் அதற்குள்ள படைச்சிட்டாங்களா.....மனதினில் நினைத்து சிரித்து கொண்டாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 41
வீட்டிற்கு வந்த பிறகும் கூட ரம்யா வீட்டில் நடந்த காரியங்களை நம்ப முடியாமல் யோசித்தாள் அவள். அப்பா அவளுடைய காரியங்களை குறித்து பேசி கொள்ள வில்லை. அவள் அப்பா ரம்யாவிடம்தான் பேசினார்.
ரம்யா....இந்த உலகத்திலேயே உன்னுடைய பிறந்தநாள் தான் ரொம்பவே விசேஷமானது. எத்தனை பெரிய ஆச்சரியத்தை இயேசப்பா உன்னுடைய வாழ்கையில் ஏற்படுத்தி தந்திருக்காங்க. அது மட்டுமில்ல உனக்கு நம்ம இயேசப்பா கொடுத்த கிப்ட்தான் ரொம்பவே விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.......
அவள் அப்பா சொன்ன போது ரம்யா சிரித்த வண்ணம்..... தயவு செய்து என்னை அந்த அளவுக்கு பாராட்ட வேண்டாம் அங்கிள். இது முழுக்க முழுக்க நம்ம தேவனின் மகிமைக்காக என் இயேசப்பா நிகழ்த்தின அதிசயம். இதுல என்னுடைய பங்கு ஒண்ணு கூட கிடையாது. அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!!!பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 40
அந்த டிரஸ்ஸில் அவளுக்கே தோன்றியது. தான் மிகவும் அழகாக இருப்பதாய். அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டாள். அம்மா தன்னை கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
குட்டிமா....கண்ணாடியில் உன்னை பார்த்தது போதும். உன் பிரெண்ட் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. சீக்கிரமா கிளம்பு........அம்மா அவளை அவசரப்படுத்தி கொண்டிருந்தார்.
இன்று அவள் பிரெண்ட் ரம்யா பிறந்தநாள். அவள் வீட்டுக்கு ஏற்கனவே ரம்யா அம்மா வந்து.....கண்டிப்பா எல்லாரும் வந்திரணும்.....அழைத்து சென்றிந்தார். ஆனா அவள் அம்மாக்கு காலையில் தான் தெரியும்.....பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 39
ஏஞ்சலின் முகத்தில் இன்னும் கவலை தெரிந்தது. கேட்கலாமா.....கேட்க கூடாதா மனதில் எண்ணங்கள் அலை மோதின. இப்படி யோசித்து மனதை போட்டு குழப்பி கொள்ளுறதை விட....நேரடியா கேட்டுருலாமே.... அடுத்து நம்மால தேவையில்லாம ஏன் இந்த மாதிரி புழுக்கள் பெருக்கம் வரணும்.....எண்ணம் கொண்டவளாய்
ஏஞ்சல்....நான் ஒண்ணு கேட்கலாமா.... சொன்ன அடுத்த நொடியே
லிசாபத்தி தெரிந்து கொள்ள ஆசைபடுறியா.....என்று கேட்டவுடனேபைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 38
இன்னிக்கி ஏஞ்சல் என்னை எங்க கூட்டிட்டு போறாங்க....அன்னிக்கி ஒரு வீட்டுக்கு என் இயேசப்பா கூட்டிட்டு போன மாதிரி இன்னிக்கும் ஏதாவது ஒரு வீட்டுக்கு நான் போகணும்னு என்பது என்னுடைய இயேசப்பா சித்தமா இருக்கும் போல.....மனதினில் நினைத்து கொண்டாள்.
ஆனால் பாதை மாறி போகவே பயம் வந்து அவளை சூழ்ந்து கொண்டது....ஏஞ்சல்....ஏன் இந்த பாதையில போறாங்க. இது அன்னிக்கி அந்த பூதம் கூட்டிட்டு போற பாதை மாறி மாதிரி தெரியுதே. அப்ப நான் நரகத்திற்குத்தான் போறேனா.....நினைத்த போதே அவளை ஒரு பயம் சூழ்ந்து கொண்டது.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 37
வீட்டில் வந்த உடனேயே தன் ரூமில் தான் நுழைந்தாள். அவள் சத்தத்தை கேட்டு ஹால் வரும் வரை வந்த அம்மா தன் பெண்ணை அங்கே தென்படாமல் போகவும் தெரிந்து கொண்டார்.....தன் பொண்ணுக்கு இன்னும் குழப்பம் தீரலை போல.....என்று. அந்த நொடியே தன் தேவனிடம் வேண்டினார்.
இயேசப்பா, என் பொண்ணு கஷ்டபடுறான்னு உங்ககிட்ட சொல்லி அழ நான் இப்ப உங்களை கூப்பிடலை. அவளுக்கு நீங்க என்ன செய்தாலும் அதுல உங்க ஞானம் விளங்கும்ன்னு நான் முழுமையா நம்புறேன். இப்ப உனக்கிட நான் விண்ணப்பம் பண்ணுறது.....ஒரு அம்மாவா நான் அவகிட்ட என்ன பேசணும்னு தெரியலை....அவளை எப்படி ஆறுதல் படுத்தணும்னு தெரியலை.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 36
ஊரில் இருந்து வந்த நாள் முதல் அவள் மனதில் என்றும் அந்த கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. எனக்கு அன்னிக்கி என்ன ஆச்சு..... ஆனால் அவளுக்கு யாரிடமும் வாய் திறந்து கேட்கத்தான் பயமாக இருந்தது. இதை பத்தி நான் பேச கூடாதுன்னு என்னுடைய இயேசப்பா நினைச்சி....சப்போஸ் அதை நான் கேட்கிறதால என் இயேசப்பா மனசை நான் ஏன் கஷ்டபடுத்தனும்....எப்போதும் போல இன்றும் தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள்.
ஸ்கூல் ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் தனக்குள் அந்த கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு அவளே பதிலை சொல்லி கொள்வாள். மண்டையை போட்டு குழப்பி கொண்டது மட்டும்தான் மிச்சம்.....ஊருக்கு கிளம்பும் போகும் போதும் கூட.....தன் பிரெண்ட் வேதாவிடம் நைஸாக பேசி பார்த்தாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 35
உண்மையில் அவன் அம்மாவின் பார்வை மட்டும் ரொம்பவே பரிதாபமாக இருந்தது. ஏதோ நடக்க கூடாத விபரீதத்தை நடந்தது போல திகைத்தார்.
என்னடி....அம்மாவும், பையனும் ஒவ்வொரு வீடா நுழைந்து என் பெயரை கெடுக்குறீங்களா??? கையை, காலை வெட்டி போட்டா எப்படி ஒவ்வொரு வீடா நுழைய முடியும்னு நானும் பார்க்கிறேன்???? வேதா அப்பா வார்த்தைகளை அள்ளி வீச எல்லாருக்கும் வேதனையாகி விட்டது. கொஞ்சம் நேரத்திக்கு முன் இருந்த சந்தோசம் எல்லாம்......அப்படியே எங்கோ தொலைந்து போனதை போல உணர்ந்தாள் அவள். அதுவும் முதன்முறையாக அவள் இந்த மாதிரி உள்ள காரியங்களை பார்ப்பதால் உண்மையில் பயந்து போனாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 34
இவர்கள் சிரித்து கொண்டு இருக்கும் போதுதான் அவனின் அம்மா வீட்டினில் நுழைந்தார். அவர் கேட்டின் முன் நிற்கிற கூட்டத்தை அதிசயமாகத்தான் பார்த்தார். ஆனால் இது வரை சத்தம் எழுப்பி பேசி கொண்டிருந்த கூட்டம், இப்போது கப்சிப்பாகி விட்டது. எல்லாருடைய கண்களும் இப்போது, அவன் அம்மா மேல்.
பார்ப்பதற்கு வேதாவின் சாயல் தெரிந்தது. ஆனால் கண்களில் கண்ணீர் வந்து அதை துடைத்தது அழகாகவே தெரிந்தது. வேதாவும் தன் அம்மாவை பார்த்ததும், ஓடி போய் கட்டிப் பிடித்து கொண்டான். அவன் கண்களிலும், அவன் அம்மாவின் கண்களிலும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதுவரை இருந்த துக்கம் எல்லாம் இன்றோடு மாறி போச்சு என்பதை சொல்லுகிற சந்தோஷ கண்ணீராய் தான் அவளுக்கு தோணியது.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 33
இவர்கள் இருவரும் ஜான் அங்கிள் வீட்டினில் நுழைந்த போது, பாட்டிமா கூட அதே மாதிரிதான் பார்த்தார். உண்மையில் அவரால் கூட ஆச்சரியத்தை வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை. இது எப்படி சாத்தியம்.....மனதினில் நினைத்து கொண்டார்.
கேட்டின் முன் கூட ஆட்கள் நின்று அவர்கள் இருவரையும் பற்றிதான் பேசி கொண்டிருந்தனர். பாட்டிமா கூட கவனித்தார். கேட்டின் அருகில் ஆட்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது.
பாட்டி....முதலில் இவள்தான் பேச்சை ஆரம்பித்தார். எனக்கு என்னுடைய இயேசப்பா கொடுத்திருக்கிற பிரெண்ட். இவன் பேரு வேதா....பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 32
உண்மையில் வந்த கோபத்தில் அந்த நாய் குட்டியை பத்தி விடத்தான் அவளுக்கு தோன்றியது. ஆனாலும் ஏனோ புரிய வில்லை. வீட்டினில் நுழைந்தவள் தனக்கென்று வைத்திருத்த பிஸ்கட்டை கொண்டு வந்து சின்ன சின்ன பீசாக உடைத்து அதுக்கு போட ஆரம்பித்தாள். அதுவும் தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தது.
இவள் நாய்க்கு பிஸ்கட் வைத்து கொண்டிருப்பதை அந்த பாட்டிம்மாவும் பார்த்தார். இவளை பார்த்து சிரித்தார். அவர் இவளிடம் ஏதோ பேச வருவதை போல தெரிந்தது. ஆனா....கதை பேசுவார்களோ....மனதினில் நினைத்து கொண்டாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 31
வழக்கம் போல அவள் மனதினில் கேள்விகள் வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த லீவ்க்கு எங்க போக...... டீச்சர்.......இன்னும் பத்து நாள் உங்க எக்ஸாம் லீவா நம்ம ஸ்கூல்ல சொல்லி இருக்காங்க. அதுனால....ன்னு சொல்லி என்ன என்ன எழுத வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கணக்கு படி பார்த்தா கூட இந்த ஹோம் வொர்க் முடிக்கிறதுக்கே கிட்டத்தட்ட மூணு நாள் ஆயிரும் போல....அடுத்து ஒரு வாரம் மட்டும்தான் லீவ். அப்ப எந்த ஊருக்கு போகலாம்....மனதினில் கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்த பிறகும் கூட இதே எண்ணம் தான் அவளில் இருந்தது. அவள் யோசித்து கொண்டிருப்பதை அவளுடைய அம்மா கூட பார்த்தார்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 30
கண்களை திறக்கவே கஷ்டமாக தோணியது அவளுக்கு. ஒவ்வொரு நாளும் தன் தேவன் தனக்கு வெளிபடுத்தின சத்தியங்களை ஆச்சர்யமாய் யோசித்து பார்த்தாள். என் தேவன் என்னுடைய இயேசப்பா மூலமா இந்த உலகத்தில படைத்த எல்லா காரியங்களும் ரொம்பவே அபூர்வமான விசயங்கள். மனதில நினைத்து பார்த்து கொண்டே எழுந்தவளுக்கு அதற்கு மேல் தூங்க பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்தாள்.
இன்னிக்கி ஏன் இன்னும் விடியலை. ஆனா ரொம்பவே நேரம் ஆன மாதிரி தோணுது???பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 29
காலையில் எழுந்ததில் இருந்தே தலை வலிப்பதை போல உணர்ந்தாள். இன்னிக்கி ஸ்கூல் போகணுமே.....என்ற எண்ணத்தை விட.....இயேசப்பா, இன்னிக்கி எந்த துர்மரண செய்தியையும் நான் கேள்விபடாத வண்ணம் என்னை காத்துக் கொள்ளுங்க என்றவாறு நினைத்தாள்.
இயேசப்பா சொன்ன அட்வைஸ் எல்லாம் காலையில் எழுந்த அந்த நிமிஷத்தில் இருந்தே மறந்து போச்சு போல......அவள் மனம் அவளை குற்றப்படுத்தியது. இயேசப்பா, உன்கிட்ட எப்படி prayer பண்ண சொன்னாங்க. நீ என்ன பண்ணிட்டு இருக்க...அவள் மனம் இடித்து காட்டவும்பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 28
அம்மா அவளைதான் எழுப்பி கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் தூங்கினா நல்லா இருக்குமே, ஏக்கத்துடன்தான் எழுந்தாள் அவள்.
மம்மி, ப்ளீஸ்....... என்ற போது......என்ன குட்டிமா, எவ்வளவு நேரம் தூக்கம். நானும், அப்பாவும் அப்பவே prayer முடிச்சிட்டு, உன்னோட ஜெபம் பண்ணத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரம் எழுந்திருமா......என்ற போது......
அச்சோ, prayerக்கு நேரம் ஆச்சா......ஒரு குதிப்புடன் எழுந்தாள். மம்மி, கொஞ்சம் நேரத்தில நான் வந்திருவேன்.......ஓட்டமாய் பாத்ரூமில் நுழைத்தாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 27
அவள் மனம் இன்னும் ஏன்....என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய இயேசப்பா ரொம்ப எங்க மேல அன்பா இருக்காங்களே. அப்ப ஏன் நீதிமானா ஆக நினைக்கிறவங்க கூட அவர் சமூகத்தில பிரவேசிக்க முடியலை.
என் இயேசப்பா என்னை முழுமையா நேசிக்கிற தகப்பனா இருந்தாலும், அவர் நீதி தவறாத நீதிபரர் என்பது அவள் மனதுக்கு தெரிந்தாலும், என் இயேசப்பா ஏற்றுக் கொள்ள நினைத்த ஆவி, அவரை பற்றி தெரிந்து கொள்ளுறதுக்கு முன்னாடியே நரகத்தில சித்திரவதை பட போயிருச்சே என்பதுதான் அவளுடைய ஆதங்கம்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 26
என்னடா நடந்தது...... உங்க பாஸ்டர் ஐயா இனிமே என் பொண்ணை தேட வேண்டாம்னு சொல்லிட்டாங்க......ஒண்ணுமே புரியலை. என்ன தோணுச்சு அவங்களுக்கு. தன் பொண்ணு கிடைக்க மாட்டான்னு அவரே நினைச்சிட்டாரா...... அவளுடைய அம்மா தன் தம்பியிடம் சொல்லி கொண்டிருந்தது இன்னும் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
அவளுடைய மாமாவும் அதே குழப்பத்தில் தான் இருந்தார் என்பது அவர் முகமே காட்டி கொடுத்தது. நம்மளுக்கு ஏதும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நினைச்சிருப்பாரோ...... பாவம் அவள் மாமா மனதுள் நினைத்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 25
ஸ்கூல் பெல் அடித்ததும் ஆட்டோமேடிக்காக அவள் மனது கலங்க ஆரம்பித்தது. ஸ்கூல் முடிஞ்சிருச்சு...... காலையில் பார்த்த கனவு நடக்குமா..... மனதினில் புலம்ப ஆரம்பித்தாள். தேவ வார்த்தைகளின் சத்தியங்களை அறிந்த போது கூட அவளுக்குள் கலக்கம் வந்ததில்லை. இன்னும் இயேசப்பா permission கொடுக்கலையே. ஆனா இந்த காரியம் என்ன நடக்கக் போகுதுன்னு அறிந்து கொண்டது மட்டுமில்லை அது நடக்குமா நடக்காதான்னு என்கிற எண்ணம் வேறு அவளில் மிகவும் கலக்கத்தை உண்டு பண்ணியது.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 24
கண்களை திறந்தவள் ஏஞ்சலின் முகத்தை கேள்வியோடு நோக்கினாள். குளோரி அக்கா விசயத்தை பத்தி கேட்கலாமா......
இவளின் எண்ணங்களை புரிந்து கொண்டவராய் சொல்லு குட்டிமா, உனக்கு அந்த குளோரி விசயத்தை பத்தி தெரிந்து கொள்ளணும், அப்படிதான
முகத்தில் முழுமையான புன்னகையோடு ஆமா ஏஞ்சல்..... நான் நரகத்தில் சந்தித்த ஒரு அற்புதமான நபர்..... என் மனசில என்ன ஓடிட்டு இருக்குதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என்னை மாதிரியே குளோரி அக்காவும் அவங்க அம்மா, அப்போவோடு சேர்ந்துட்டாங்களான்னு மனசில தோணிட்டே இருக்கு...... எனக்கு சொல்லுவீங்களா ஏஞ்சல்பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 23
படுக்கையில் படுத்த பிறகும் அவளுக்கு தூக்கம் மட்டும் வர வில்லை. அம்மாவும் அப்பாவும் இன்னும் ஜெப அறையில் ஜெபித்து கொண்டிருப்பது அவளுக்கும் தெளிவாக தெரிந்தது. எப்பவும் அவள் தூங்கும் நேரம்தான். ஆனால் இன்று மட்டும் கண்களில் தூக்கம் சிறிது கூட இல்லை.
கண்களை மூடினாலே அந்த பெரிய பாம்பு வந்து போனது. நடுவில் குளோரி அக்காவுக்கு என்ன ஆச்சு என்கிற எண்ணம் வேற. அந்த அக்காவும் அவங்க அம்மா, அப்பா கூட சேர்ந்திருப்பாங்களா!!!!! உண்மையில் இத்தனை எண்ணங்கள் மத்தியில் அவள் தூக்கம் தொலைந்து போனது.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 22
எழுந்து உட்கார்ந்தவள் தன்னை மீண்டும் பார்த்து கொண்டாள். நான் உண்மையில் நரகத்தில இருந்து வந்துட்டேனா இல்லை சும்மா எதுவும் கனவு பார்த்துட்டு இருக்கேனா.... அவளால் இன்னும் நம்ப முடிய வில்லை.
தன் கைகளை, முகத்தை கூட தொட்டு பார்த்தாள். என்னை சாத்தான் தன் பெரிய வாயை திறந்து தாக்க வந்ததை நானே பார்த்தேனே.... அப்ப ஒரு பெரிய வெளிச்சம் கூட வந்துச்சு... அந்த சாத்தான் தூரத்தில அந்த வெளிச்சத்தால் விழுந்தது கூட நான் பார்த்தேன்... ஆனா நான் மட்டும் ஏதோ காத்தில மிதக்கிற மாதிரி தோணுச்சே.......பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 21
சாத்தானின் சிரிப்பும், சுற்றிலும் இருந்த பூதங்களின் சிரிப்பும் இன்னும் அடங்க வில்லை. வலியின் மிகுதியில் முனங்கினாள். எழும்பி உட்கார முயன்றாள். ம்கூம்..... உடலை அசைக்க கூட முடியாதவளாய் திணறினாள். குளோரி இவளை பாவமாய் பார்ப்பது அவளுக்கும் புரிந்தது.
முகத்தில் சிரிப்பை கூட கொண்டு வர இயல வில்லை அவளால். தலையை குனிந்தவளாய் படுத்திருந்தாள்.
மீண்டும் பூதங்கள் இவளை சுற்றி நிற்கவும் பயந்து போனாள். என்ன செய்ய போறாங்க..... மனதின் பயத்தை மறைக்க முயன்றாள். முடிய வில்லை. ஆனா போயும் போயும் இந்த பூதங்கள்கிட்டயும், சாத்தான்கிட்டயுமா நான் என்னுடைய பயத்தை காண்பிக்கணும்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 20
ஏன் எனக்கு அடிக்கடி இந்த மாதிரி ஆகுது??? எழும் போதே புலம்பி கொண்டேதான் எழுந்தாள். எழுந்தவளுக்கு வழக்கம் போல் அதிர்ச்சி. அவள் உடல் காணாமல் போயிருந்தது. என்ன ஆச்சு அந்த பொண்ணை காணும்.....தன் தலையை தட்டி கொண்டவள்.....என் உடம்பை காணும்....... புலம்பி கொண்டே குகையின் வெளிப்புறத்தை எட்டி பார்த்தாள்.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 19
தூங்கி அவள் எழுந்த போது அந்த அறை காலியாக இருந்தது. எனக்கு என்ன ஆச்சு........நான் சாலொமோன் ராஜாவை அந்த பூதங்கள் கஷ்டப்படுத்துறதைதான பார்த்திட்டு இருந்தேன்.....அப்ப தீடீர்னு எனக்கு எப்படி தூக்கம் வந்தது..........சுற்றிலும் நோட்டம் விட்டாள். ஒன்றையும் காணும். சாலோமோன் ராஜாவை எங்க தூக்கிட்டு போனாங்க......மற்றவங்களையும் காணுமே.......தலையை குழப்பி கொண்டாள். மெதுவாக எழுந்தவள் நடக்க ஆரம்பித்தாள். எங்க போணும்......நான் போற பாதையில பூதங்கள் வந்து.......எங்க போன......ஓட பார்க்குறியா.....ன்னு கேள்வி கேட்டா என்ன செய்வேன்......மனது முழுக்க கேள்விகளோடு நடக்க ஆரம்பித்தாள்.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 18
அத்தனை இருட்டிலும் கந்தக தீயினால் அந்த குகை ஜொலிக்க தான் செய்தது. அப்படி என்னதான் இருக்கு.......என்று குகையை சுற்றிலும் நோட்டம் விட்டவள், அதில் ஒரு மனிதனுடைய ஈனமான குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. யார் அது.....இன்னும் யார் இங்க இருக்காங்கன்னு பார்க்க முடியலை.....அதிகமாகவே அவள் தேடல் இருந்தது. மனதினுள் தைரியத்தை வைத்து கொண்டு குகையின் நுழை வாயிலேயே நின்று கொண்டிருந்தவள் இப்போதுதான் உள்ளே நுழைந்து தீவிரமாகவே அலசி ஆராய்ந்தாள். ஒரு நிமிடம் குகையின் வெளி புறத்தையும் பார்த்து கொண்டாள். ஏதாவது பூதம் வருகிறதா.......கண்கள் வெளிப்பக்கமும் இருந்தது.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 17
இவளில் ஏற்பட்ட எந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ளாத பூதங்கள் தன்னுடைய பேச்சை நிறுத்த வில்லை. ஆமா, நீ சொல்லுறது சரி. ஆனா இந்த அளவுக்கு நம்ம தேவனுடைய குமாரன் விரும்புறார்னா, அவர் எப்படி இவளை இங்க வருறதுக்கு விட்டார். அடுத்த பூதம் கேள்வி கேட்கவும் அது என்னுடைய தப்புதான். நான் என்னுடைய தேவையில்லாத குணத்தால இங்க வர வேண்டியதா போயிருச்சு. என் இயேசப்பா மேல எந்த தப்பும் இல்லை. அவர் என்னை நேசிக்கிற தகப்பனா இருந்தாலும் நியாயம்ன்னு வரும் போது, அதை விட முடியாதவர். நான் தான் காரணம்.....ஓங்கி கத்த தோன்றியது அவளுக்கு.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 16
ஆமா....அப்படி அவன் என்னதான் பண்ணினான்.....ஒரு பூதம் கேட்கவும் உண்மையில் அந்த குழந்தைக்கும் இவனுக்கும் எந்த தகராறும் கிடையாது போல. சின்ன கோபத்தில அடிச்சிருக்கான். விழுந்த பிள்ளை இறந்து போச்சு. அந்த சாரும் நானா ஒரு குழந்தையை கொன்னுட்டேன்ங்கிற பயத்தில தற்கொலை பண்ணிட்டு நேரா இங்க வந்துட்டார். கேட்கவே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தெரியாம செய்த தப்புக்கு கூட இப்படிப்பட்ட தண்டனை இருக்குமா என்ன.....ஒரு பூதம் இரக்கப்பட்டு கேட்கவும்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 15
பிண வாடை அதன் இடமிருந்துதான் வந்ததை அவள் தெரிந்து கொண்டாள். அதன் விரல்களில் இருந்த நகம் அவளுடைய கைகளை குத்தி அவள் சதையை பிய்த்து கொண்டிருந்தது. இது கனவில்லை. என்னால என்னுடைய வலியை உணர முடியுதே. அப்ப நான் உண்மையிலேயே நரகத்திற்குத்தான் போயிட்டு இருக்கேனா.... மனதில் கேள்விகள் முட்டி மோதின. அந்த குட்டி பிசாசின் விரல்களில் இருந்த நீண்ட நகம் வேறு வேதனைபடுத்தி கொண்டிருந்தது.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 14
சுற்றிலும் இருந்த மலைகளும், காலை ரொம்பவே மிதமாக வருடும் மிருதுவான மணலும் உள்ளத்தில் அவளுக்கு அதிக சந்தோசத்தை கொடுத்தது. இப்ப பக்கத்தில நம்ம ஏஞ்சல் இருந்தா நல்லா இருந்திருக்குமே? மனதில் யோசித்து கொண்டாள். ஆனா அதற்கு தேவன் சித்தம் இல்லையே என்று தன்னையே தேற்றி கொண்டாள். காலாற நடந்தாள். தனக்கு எவ்வளவு முடியும் அன்று அவள் நினைத்தாளோ அந்த அளவு நடந்து தீர்த்தாள்.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 13
மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில் இருவரும் தேவனுக்கு நன்றிகள் செலுத்திக் கொண்டே எழுந்து நின்றனர். அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் ஆடவும் பயமடைந்தவளாய் ஏஞ்சலின் கரத்தை இறுக பற்றி கொண்டாள். ஏஞ்சல் என்ன ஆச்சு, ஏன் இந்த மாதிரி பூமி ஆடுது? நீ நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கினதை பார்க்கணும்னு ஆசைப்பட்டது?
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 12
ஏஞ்சல், நம்ம இயேசப்பா எனக்கு கடலுடைய சீற்றத்தை எப்படி கதவுகள், தாழ்பாள்கள் போட்டு அடக்கினாங்கன்னு காண்பித்தாங்க. அப்ப நம்ம தேவன் பூமியை உருவாக்கின அந்த வல்லமையும் காண்பிப்பாங்களா? கண்டிப்பா குட்டிமா, அது தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதா இருந்தா? நான் உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னு நினைச்சேன் ஏஞ்சல். தேவனுடைய சித்தம்ன்னு அடிக்கடி சொல்லுறீங்களே, அப்படின்னா என்ன அர்த்தம். ஏன்னா எங்க அம்மா கூட அடிக்கடி இந்த வார்த்தையை use பண்ணுவாங்க.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 11
என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது. அதிக சத்தத்தோடு ஒலித்து கொண்டிருந்த அந்த வார்த்தைகளை கேட்டு கொண்டே எழுந்தவள், கண்களை திறக்க முயற்சித்தாள். கண்களை திறக்க சிறிது கஷ்டமாக இருந்தது. கண் விழித்தவளுக்கு ரொம்பவே பிரகாசமான விண்மீன்கள் நடுவில் உலாவும் நிறைய ஏஞ்சல்களை பார்க்க முடிந்தது. நிலவை அவர்கள் அனைவரும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர். இங்க மக்கள் ஏற்பாடு செய்யுற அலங்கார விளக்குகள் காட்சி எல்லாம் ஜுஜெபி என்கிற வண்ணம் அந்த பிரம்மாண்டமான காட்சி இருந்தது.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 10
இன்னிக்கின்னு பார்த்து ஏன்தான் இந்த ஸ்கூல் வேன் வர இவ்வளவு நேரம் ஆகுது? முணுமுணுத்து கொண்டே வேன் வரும் வழியை எதிர்பார்த்தாள். பக்கத்தில் அவளுடைய அம்மா, தன்னுடைய மகளின் பதட்டத்தை பார்த்த வண்ணம் இருந்தாள். அம்மா, வேன் டிரைவர்க்கு போன் பண்ணீங்களா? போன் பண்ணினேன் குட்டிமா. ஆனா அவர் எடுக்கலை. நான் உன்கிட்ட முதல்ல இருந்தே சொல்லிட்டு இருக்கேன். நாம ஆட்டோல போலாம்னு சொன்னேன். நீதான் இல்லைமா, என் ஸ்கூல் வேன் வந்திரும்னு அரை மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்க. இப்பனாச்சும் கிளம்பலாமா?
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 9
ஏஞ்சல், உண்மையில் நம்ம தேவன் வல்லமையுள்ள தேவன்தான்.
என்ன தீடீர்னு இப்படி சொல்லுற குட்டிமா, நம்ம தேவன் என்றென்றும் வல்லமையுள்ள தேவன்தான?
ரொம்பவே சாதாரணமா ஒருத்தராதான் என் இயேசப்பாவை நான் இது வரை என் வாழ்கையில் உனார்ந்திருக்கேன். அதாவது என்னுடைய பிரெண்ட்டா, என்னுடைய வழிகாட்டியா……….ஆனா இன்னைக்கி சமுத்திரத்தின் மும்முரத்தையும், அதின் அலைகளின் இரைச்சலின் சத்தத்தையும் அடக்கி ஆளுற ஒரு வல்லமையுள்ள தேவனா அவரை உணர்ந்து கொண்டதால அந்த சந்தோசம் இன்னும் எனக்குள்ள ஆச்சர்யமா இருக்கு.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 8
தேவையில்லாத கனவுகள். இது ஏன் இப்படி இருக்கு?ன்னு மனதில கேட்டால் ஒழிய எழ மனதில்லை அவளுக்கு. ரொம்பவே பயங்கரமான இருள். நம்ம இயேசப்பா சில நேரங்களில் சொன்ன அந்தகார இருள் இதுவாத்தான் இருக்குமோ நினைத்து கொண்டே அந்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. ஆனா பயம் மட்டும் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது.
இது என்ன? ஏன் முழுமையா இருட்டா இருக்கு. அதுவும் பார்க்கவே பயங்கரமா. ஏன் இவ்வளவு இருள்? நான் எதுவும் இன்னைக்கி என் இயேசப்பா மனதை கஷ்டப்படுத்திட்னேனோ?பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 7
என்னமா, தூங்கி எழும்பும் போதே, ரொம்ப டயர்டா இருக்க. தூக்கம் சரியில்லையா? அம்மாவுடைய கேள்வியில் இருந்த அன்பு சந்தோசத்தை அளித்தது அவளுக்கு.
இல்லைமா, அப்படி ஒண்ணும் கிடையாது. இன்னைக்கிதான் இந்த மாதத்துக்கான டெஸ்ட் ஆரம்பிக்குது. இன்னைக்கி உள்ள டெஸ்ட்க்கு ரொம்ப தெளிவா படிச்சதா தோணலை. அதுனாலத்தான் யோசித்திட்டு இருக்கேன்.
இப்பவும் உன் மன பாரங்களை ஷேர் பண்ணுறதுக்கு உனக்குதான் நம்ம இயேசப்பா இருக்காங்களே. அவர்கிட்ட உன்னுடைய எந்த எண்ணங்களா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லு. அவர் உனக்கு நல்ல வழியை வெளிப்படுத்துவார்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 6
சொல்லு குட்டிமா, இப்ப எத்தனை நாள் ஆச்சு?
நம்ம பைபிள்ல சொல்லப்பட்டிருக்கு ஏஞ்சல். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
நம்ம தேவன் வானத்தை உருவாக்கின அதிசயத்தை உன்னுடைய கண்கள் நேரடியா இப்ப பார்த்திருக்கு. நீ என்ன நினைக்கிற?
என் தேவன் எனக்கு காண்பித்த கிருபைக்காக நான் என்றும் நன்றிகள் சொல்லிட்டே இருப்பேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஏஞ்சல். டிவில டிஸ்கவரி சேனல்ல சொல்லும் போது, பூமி இந்த வகையில உருவாகியிருக்கலாம். அடுத்து சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் இந்த மாதிரி சில வினைகள் மூலமா உருவாகியிருக்கலாம்ன்னு நிறைய சொல்லுவாங்க. அப்பெல்லாம் எனக்கு மனசுல தோணும்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 5
படுக்கையில் திரும்பி திரும்பி படுத்தாள். தூக்கம் வந்தபாடில்லை. உண்மையில் ஏஞ்சல் வந்தாங்களா? இல்லை நானாதான் அப்படி யோசித்து பார்த்தேனா?
எவ்வளவு தூரம் யோசித்து பார்த்தும் பதில் கிடைக்க வில்லை. இயேசப்பா ஒண்ணும் புரியலை. இன்னிக்கி காலையில prayer பண்ணுற நேரம் நீங்க என் மேல மெல்லிய காற்றா வந்தது நிஜம். ஆனா ஏஞ்சல் வந்து என்னை, நீங்க உலகத்தை படைக்கிற நேரத்தில கூட்டிட்டு போய் கண்ணார பார்க்க வைத்தது, நான் எதுவும் கனவு பார்த்திருப்பேனோ? சப்போஸ் அது நிஜம்ன்னா இனிமே எப்ப திரும்பவும் என் தேவனை பார்ப்பேன்?பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 4
வெள்ளத்தின் சத்தத்தை போன்ற இரைச்சல் இருவர் கவனத்தை திருப்பவும், ஏஞ்சல் அது என்ன சத்தம்? ஏதாவது வெள்ளம் வரப் போகுதா?
உன்னால அந்த சத்தம் என்னன்னு புரிந்து கொள்ள முடியலையா? உண்மையில், என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனமா பாரு குட்டிமா?
அவர்களை சுற்றிலும் ரொம்பவே பிரகாசத்தால் நிறைந்திருந்தது. ஏஞ்சல் ரொம்பவே வெளிச்சமா இருக்கு. உங்களை நான் பார்த்த பிரகாசத்தை விட பல்லாயிரம் மடங்கு வெளிச்சமா இருக்கு.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 3
ஏஞ்சல் நீங்களும், உங்களோட சேர்ந்து எல்லா தூதர்களும் நம்ம தேவனை இரவும் பகலும், ஓயாது தொழுது கொண்டிருப்பார்கள்ன்னு நான் பைபிள்ல வாசித்திருக்கேன். நம்ம தேவனை பக்கத்தில இருந்து தொழும் போது, அந்த சந்தோசம் எப்படி இருக்கு?
அது ரொம்பவே பாக்கியத்திற்குரியவை குட்டிமா. அந்த சந்தோசத்தை எங்களால் வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட மகிமை உள்ள தேவனை துதிக்கிறதுக்கு அவர் எங்களை தெரிந்து கொண்டதே அவர் எங்களுக்கு காண்பித்த கிருபை. நம்ம தேவன் ரொம்பவே வல்லமையுள்ளவர், மகிமையானவர், ஒளியானவர், பரிசுத்தம் நிறைந்தவர்.....நீயும் பைபிள்ல படிச்சிருப்ப. அப்படிப்பட்ட மகிமையுள்ள நம்ம தேவனை நாங்க எப்பவும் பக்கத்தில இருந்தே துதித்தாலும், அவர் பரிசுத்தத்திற்கு முன்னாடி நாங்க கூட நிற்க முடியாது.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 2
அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவளுடைய கைகளை பற்றிய ஏஞ்சல், காற்றின் வேகத்தை விட அதிக வேகமாய் பறந்தார். காற்று இவ்வளவு வேகமாகவா வீசும்......மனத்துக்குள் நினைத்து கொண்டாள். புயலா இருக்குமோ....கண்களை இறுக்க மூடி கொண்டாள்.
கண்களை திறந்த நேரம் ஏதோ ஒரு இருட்டினுள் இருந்த நிலை தோன்றியது அவளில்.
ஏஞ்சல் என்னை இந்த இடத்திற்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க?
நீ என்ன பார்க்குற குட்டிமா?பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) - 1
என்ன எங்க பார்த்தாலும் இருட்டு, ஒரு சத்தமும் காணும்........என்னால ஒண்ணும் பார்க்க முடியலை, உங்களுக்கு ஏதாவது தெரியுதா, உங்களால எதையாது கேட்க முடியுதா........என்ன ஒரு சத்தத்தையும் காணும், யாராவது பக்கத்தில இருக்கீங்களா பிரெண்ட்ஸ்.........
நான் எதுவும் கனவு பார்த்திட்டு இருக்கேனோ......இல்லை என் கண்லத்தான் எதுவும் பிரச்சனை வந்திருச்சோ....தயவு செய்து யாராவது பேசுங்களேன், ப்ளீஸ்.....
ஆ.....கிள்ளினா கை வலிக்குதே. அப்ப இது கனவில்லை. அப்ப நான் படுத்திருந்த பெட் எங்க? எங்க அம்மா, அப்பாவை காணும். எங்க வீடு எங்க போச்சு?
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives