-
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 4
வெள்ளத்தின் சத்தத்தை போன்ற இரைச்சல் இருவர் கவனத்தை திருப்பவும், ஏஞ்சல் அது என்ன சத்தம்? ஏதாவது வெள்ளம் வரப் போகுதா?
உன்னால அந்த சத்தம் என்னன்னு புரிந்து கொள்ள முடியலையா? உண்மையில், என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனமா பாரு குட்டிமா?
அவர்களை சுற்றிலும் ரொம்பவே பிரகாசத்தால் நிறைந்திருந்தது. ஏஞ்சல் ரொம்பவே வெளிச்சமா இருக்கு. உங்களை நான் பார்த்தப்ப இருந்த பிரகாசத்தை விட பல்லாயிரம் மடங்கு வெளிச்சமா இருக்கு.
ஆமா, உண்மையா அப்படித்தான் இருக்கு.
ஆனா இவ்வளவு வெளிச்சம் தெரியுற இந்த சமயம், தூரத்தில ஏன் இருட்டு தெரியுது?
உண்மையில் என்ன நடந்ததுன்னு உனக்கு புரியலையா குட்டிமா?
தேவன் இந்த உலகத்தை உருவாக்கும் போது, முதலில் சொல்லப்பட்ட வார்த்தையா பைபிளில் என்ன இருக்கு?
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
சரியா சொன்ன, அதுதான் இப்ப நடந்தது.
அச்சோ, இது எப்படி எனக்கு தெரியாம போச்சு. அப்ப நம்ம தேவன் வெளிச்சம் உண்டாக்கின காரியங்கள்தான் இதுவா? சாரி ஏஞ்சல், நான் என்னுடைய தேவனுடைய குரலை ரொம்பவே மெல்லிய சத்தமாகவே எதிர்பார்த்தேன். ஆனா தீடீர்னு வெள்ள இரைச்சல் சத்தம் வந்ததும், அது தேவனுடைய சத்தம்ன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை.
நம்ம தேவன் தன்னுடைய வல்லமையால இந்த உலகத்தையும், இதுல இருக்கிற எல்லாவற்றையும் படைக்கும் போது அவருக்கு இருந்த மகிமையையும், மகத்துவத்தையும் முழுமையா உணர்ந்து கொள்ளணும்னா நீ அவர்கிட்ட உதவி கேட்டாதான் சரி வரும்.
கண்டிப்பா ஏஞ்சல், என் தேவன் செய்கிற காரியங்களை என் கண்கள் காணப்போகுதுன்னு எனக்குள்ள ரொம்பவே பெருமை இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அதுனாலதான் என் தேவன் பேசின போது அவர் சத்தத்தை என்னால புரிந்து கொள்ள முடியலை. இயேசப்பா, எனக்குள்ள எந்த பெருமை இருந்தாலும் தயவு செய்து உங்க அன்பினால் அதை மன்னித்து, அதை என்னில் இருந்து அகற்றி போடுங்க.
என் இயேசப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் ஏஞ்சல். கண்டிப்பா அவர் என் இருதயத்தில் இருந்தும், என் சிந்தனையில் இருந்தும் எல்லா பெருமைகளையும் எடுத்து போட்டுருவாங்க.
ஒரு வல்லமையான மின்னல் போன்ற ஆயுதம் வெளிச்சத்தையும், இருளையும் தேவனுடைய கரத்தில் இருந்து பிரித்து வைத்தது. ஏஞ்சல் அங்க பாருங்க. நம்ம தேவன் வெளிச்சத்தையும், இருட்டையும் பிரிச்சு வைக்கிறாங்க. எவ்வளவு அழகாக நம்ம தேவன் கொஞ்சம் கூட இருள் வெளிச்சத்தில் இல்லாத வண்ணம் பிரிச்சி வைச்சிட்டாங்க. எனக்கு ஒரு சந்தேகம் ஏஞ்சல்?
சொல்லு குட்டிமா?
நம்ம தேவன் நம்மளை இந்த உலகத்துக்கு வெளிச்சமாய் இருக்குறீங்கன்னு சொல்லி இருக்காங்க. அப்படி இருக்கும் போது நமக்குள்ள எப்படி இருள் இருக்க முடியும்? இந்த பாருங்க, வெளிச்சத்தில் இருந்த சின்ன இருளை கூட நம்ம தேவனால் பிரிச்சி வைக்க முடியுது. அப்ப தேவ பிள்ளைகள்கிட்ட மட்டும் தேவையில்லாத இருள் எப்படி இருக்க முடியும்?
தேவ பிள்ளைகள் நம்ம தேவனை மறந்து ஓடுற சமயங்களில் தான் இந்த இருள் அதாவது, சாத்தான் தன்னுடைய தந்திரங்களால் அவர்களில் கூட சின்னதா இடம் போட்டு உட்கார்ந்துக்கிறான். ஆனா அந்த பிள்ளைகள் தன்னுடைய சமாதான குறைச்சலை கண்டுபிடித்து, தேவன்கிட்ட உதவி கேட்கும் போது அந்த சின்ன இருள் தேவ வெளிச்சம் பட்டதால முழுமையா வெளியே விலகி ஓடுகிறான். சப்போஸ் அந்த பிள்ளை மட்டும், அதை தேவ சந்நிதானத்தில் உட்கார்ந்து அலசி ஆராயாம ஓடிட்டே இருந்தா, பலவீனங்கள் ஏற்படும் போதுதான் புரிஞ்சுக்க முடியும். ஏன்னா, சாத்தான் கொஞ்சம் இடத்தை பிடிச்சி, வெளிச்சத்தை எல்லாம் விரட்டி, தன்னுடைய படுக்கையை போட்டு படுத்தே கொள்ளுவான். இன்னும் தேவ சந்நிதானத்தில் உட்காரமா போனா ரொம்பவே மோசம். அவர்களில் இருக்கிற வெளிச்சத்தை எவ்வளவு வேகமா தன்னுடைய இருளால் பலவீனமடைய செய்வான் தெரியுமா? அதுனாலதான், பொல்லாத ஆவிகள் பிடித்தவர்கள் முகம் ரொம்பவே இருண்டதா காணப்படுது. அதே நேரம் தேவ பிள்ளைகள் முகம் தேவன் அவர்களுக்குள் வாசம் பண்ணுகிரதால, வெளிச்சமா காணப்படுது.
நீங்க சொன்னதை நானும் பார்த்துக்கிறேன் ஏஞ்சல். ஒருத்தர் ரொம்பவே சந்தோசமா பேசும் போது அவர் முகம் பொலிவா இருக்கிறதுக்கும், கோபமோ இல்லை சோர்வோ வருகிற சமயம் அந்த முகம் பொலிவிழந்து போறதுக்கும் நல்லாவே வித்தியாசம் தெரியும்.
நீ சொல்லறது உண்மைதான் குட்டிமா. ஆனா உனக்கு தெரியுமா? இந்த உலகத்தில சாத்தானை தவிர வேற எவராலும் வெளிச்சத்தை வெறுக்க முடியாது. ஒருத்தர் தன்னுடைய வாழ்கையில் வெளிச்சத்தையோ இல்லை தேவ வசனங்களையோ வெறுத்தா அவர்கிட்ட இருள் மண்டி கிடக்கிறதா எல்லாராலும் கண்டுபிடிக்க முடியும்.
உனக்கு பகல் என்று பெயர் இடுகிறேன். உனக்கு இருள் என்று பெயர் இடுகிறேன்…….தேவனின் சத்தம்.
ஏஞ்சல் நம்ம தேவனுடைய சத்தத்தை கேட்டீங்களா? எனக்கு நல்லா நம்ம தேவனுடைய சத்தம் கேட்குது. அப்ப எனக்குள்ள இருந்த தவிப்புக்கு என்னுடைய தேவன் பதில் கொடுத்துட்டார், அப்படிதான. என்னால என் தேவனின் சத்தத்தை கேக்க முடியுது. இப்ப இங்கு என் தேவனுடைய சத்தம் வெள்ளத்தின் இரைச்சல் போல இல்லை, ஏதோ ஒரு நபர்கிட்ட பேசும் போதுள்ள ஒரு சாதாரண குரல் மாதிரிதான் எனக்கு தோணுது. நன்றிகள் ஆண்டவரே, என்னுடைய ஜெபத்தை கேட்டதற்காக ஸ்தோத்திரங்கள் சமர்பிக்கிறேன்.
என்ன ஏஞ்சல், திரும்பவும் ஏதோ நாம பார்க்கிற பகல் பொழுது மாதிரி தோணுது. அப்ப ஒரு நாள் முடிந்து போயிருச்சா?
பதில் வரவில்லை. என்ன ஏஞ்சல் உங்ககிட்டதான் கேட்டுட்டு இருக்கேன். நம்ம தேவன் டே அண்ட் நைட்ன்னு பிரிச்சி வைச்சவுடன் முதல் நாள் முடிந்ததா நம்ம பைபிள்ல போட்டிருக்கு. இப்ப பார்த்தீங்களா? உண்மையில் நாம தினமும் ரசிக்கிற காலை நேரம் மாதிரி தெரியுது?
என்ன குட்டிமா? தூக்கத்தில் என்ன புலம்பிட்டு இருக்க? காலை நேரம் ஆனது கூட தெரியாம என்ன கனவு பார்த்துட்டு இருக்க. சீக்கிரம் முகம் கழுவிட்டு, பிரஸ் பண்ணிட்டு வா. நானும் அப்பாவும், உனக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். பேமிலி prayer பண்ணனும்.
அம்மாவின் முகத்தையே மலங்க மலங்க பார்த்தாள். அம்மாதான் அவளை எழுப்பி கொண்டிருந்தார்கள். என்னடி ஆச்சு? ஏன் இப்படி பார்க்குற? ஏதாவது கனவு பார்த்தியா?
ஆமா அம்மா…..அவள் உதடுகள் சொல்லி கொண்டிருந்த நேரம் ஸ்ஸ்…..குட்டிமா, உனக்கு நம்ம தேவன் வெளிபடுத்துற சத்தியங்கள் முடியுற வரைக்கும் யார்கிட்டயும் இந்த உண்மைகளை சொல்ல கூடாது. இது நமது தேவனின் கட்டளை.
அம்மாகிட்ட……அவள் சொல்ல ஆரம்பிக்கிறதுக்குள் உங்க அம்மாகிட்ட கூட சொல்ல கூடாது. பிறகு நான் உன்னை சந்திக்கிறேன். தேவன் கொடுத்த இந்த நாளில் மகிழ்ந்திரு. bye……என்றவண்ணம் கைகளை அசைத்து பறந்து போனார்.
என்ன ஆச்சு உனக்கு? என்னங்க இங்க பாருங்க உங்க செல்ல பொண்ணை. ஏதோ மாதிரி உட்கார்ந்திருக்கா. என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீக்கிரா. என்னன்னு வந்து கேளுங்க? அம்மா புலம்பி கொண்டே ஹால் பக்கம் நகர அப்பா வருவதற்குள் வேகமா பாத்ரூமில் நுழைந்தாள்.
முகத்தையும், பல்லையும் சுத்தம் பண்ணியவள், அம்மா, அப்பாவுடன் prayerல் கலந்து கொண்டாள்.
ஏதாவது பிரச்சனையா செல்லம். அம்மா என்னமோ சொல்லுறா?
இல்லைப்பா, ஒண்ணும் இல்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். தீடீர்னு தூக்க கலக்கத்தில எழுந்ததால அப்படியே உட்கார்ந்துட்டேன். அதுக்குள்ள அம்மா பயந்துட்டாங்க.
சொல்லிவிட்டு பைபிள்ளை கையில் எடுத்தாள். சங்கீதம் 9ஐ வாசிக்க ஆரம்பித்தாள். எப்போதும் பேமிலி prayerல் சங்கீதம் வாசிப்பது அவள்தான்.
1. கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
உண்மையில் இயேசப்பா உங்களை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன். அது மட்டுமில்ல நீங்க செய்த அதிசயங்களை எல்லாம் நீங்க சொல்லுற நாள்ல எல்லாருக்கும் விவரிப்பேன். யு ஆர் மை…….அதற்கு மேல் வார்த்தைகள் வர வில்லை. ஒரு மெல்லிய காற்று அவளை வருடியது அவளுக்கும் தெளிவாகவே உணர முடிந்தது. கண்களில் கண்ணீருடன் தேங் யூ பிரெண்ட்………
அடுத்த வசனத்தை வாசிக்க ஆரம்பித்தாள்.
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 3 பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 5
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 4
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives