• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 16

    ஆமா….அப்படி அவன் என்னதான் பண்ணினான்…..ஒரு பூதம் கேட்கவும்

    உண்மையில் அந்த குழந்தைக்கும் இவனுக்கும் எந்த தகராறும் கிடையாது போல. சின்ன கோபத்தில அடிச்சிருக்கான். விழுந்த பிள்ளை இறந்து போச்சு. அந்த சாரும் நானா ஒரு குழந்தையை கொன்னுட்டேன்ங்கிற பயத்தில தற்கொலை பண்ணிட்டு நேரா இங்க வந்துட்டார்.

    கேட்கவே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தெரியாம செய்த தப்புக்கு கூட இப்படிப்பட்ட தண்டனை இருக்குமா என்ன…..ஒரு பூதம் இரக்கப்பட்டு கேட்கவும்

    சே…..பூதங்களில் கூட இரக்கம் உண்டா என்ன…..ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கும் போதே…..

    அந்த மனுஷனுக்காக நீ ஏன் வக்காலத்து வாங்குற. நமக்காக யாராவது பரிந்து பேசுறவங்க உண்டா…..உன் இரக்கத்தை தூக்கி குப்பை தொட்டியில போடு…..அடுத்தது எகத்தாளமாக சிரித்து கொண்டது.

    நாம வாழுறது எல்லாம் ஒரு வாழ்க்கையா என்ன…..எப்ப பார்த்தாலும் அழுகை,பற்கடிப்பு, வேதனை இருக்கிற இந்த இடத்தில நமக்கு என்ன சுகம் கிடைக்க போகுது.

    என்னடா….தீடீர்னு உனக்கு என்ன ஆச்சு. நிறைய வேதாந்தம் பேச ஆரம்பிச்சிட்ட. நீ இப்படி பேசினன்னு தெரிந்தாலே உனக்கு கிடைக்க போற தண்டனை என்னவா இருக்க போகுதுன்னு எனக்கு தெரியலை.

    ஆமா ரொம்பவும்தான் பயம் காட்டாத. நாம இந்த நரகத்திற்கு வந்து யுகம் கணக்கில கடந்து போயிட்டிருக்கு. ஆனா நாம ஏதாவது சந்தோசத்தை அடைந்திருக்குமா….எங்க பார்த்தாலும் இருட்டு…..ஒரு வெளிச்சமும் இல்லாம எந்த நிம்மதியும் இல்லாம ஒரே இடத்திலேயே அடைஞ்சு கிடக்கோம்……குறைபட தொடங்கியது.

    என்ன துரைக்கு இன்னைக்கு என்னதான் ஆச்சு. ஏதேதோ பேசுற…..ஒண்ணும் எனக்கு புரியலை.

    உண்மையைதான பேசிட்டு இருக்கேன். பொல்லாத அந்த சாத்தான் கூட நாம சேர்ந்து நம்மை படைத்த தேவனை மறந்தது மட்டும்தான் நடந்திச்சு. அவரோட இருந்தப்ப நாம எப்படி இருந்தோம். இந்த மாதிரி மனுசங்க பார்த்து கேவலமா நினைக்கிற மாதிரியா இருந்தோம். நல்ல உடை, நல்ல சாப்பாடு, தேவன் செய்த எல்லா வல்லமைகளையும் கண்ணார பார்த்து பூரிச்சு போய் இருந்தவங்கதான் நாம. ஆனா இப்ப கண் பார்க்கிற இடம் எல்லாமே ஒரே இருட்டு. எங்க கேட்டாலும் கதறுகிற சத்தம்மட்டும்தான். தேவனுடைய பராக்கிரமத்தை கண்ட அந்த நாள்ல நம்ம காது எத்தனை அழகான பாடல்களை ரசித்திருக்கு. இப்ப அதே காதுதான் தேவையில்லாத சத்தம் கேட்டிருக்கு…….

    எனக்கென்னமோ தோணுது. உனக்கு மரம் கழண்டு போயிருச்சுன்னு நினைக்கிறேன்.

    நான் சொன்னதை உன்னால மறக்க முடியுமா???? ஆதங்கத்துடன் கேட்ட பூதத்தை பார்க்க அவளுக்கும் ஆசை தோன்றியது.

    இந்த நரகத்தில கூட என் தேவனோட இருந்த நாட்களை யோசிக்கிற பூதங்கள் இருக்கா என்ன……

    நீ சொன்னது உண்மைதான். அதனுடைய கருத்தை ஆமோதித்தாலும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டது.

    ஏன் என்ன ஆச்சு, என்ன பார்த்திட்டிருக்க………பயத்தோடு அது வினவவும்

    உனக்கு தெரியாத விஷயம் இல்லை. நீ இவ்வளவு நேரம் ஆதங்கத்தோடு பேசிட்டு இருந்ததையும் அதற்கு நான் ஆமான்னு சொன்னதையும் யாராவது பார்த்தாங்களான்னு பார்த்தேன். வேற ஒண்ணும் இல்லை.

    அடுத்தது பேச தொடங்கியது. இன்னும் நம்ம வாழ்கையில இன்னும் எத்தனை நாட்கள் இதே மாதிரி இந்த சாத்தானுக்கு பயந்தே வாழ வேண்டியதிருக்கோ………

    நீ சொல்லுறது எல்லாம் சரிதான். அன்னைக்கு இந்த சாத்தானோட சேர்ந்து நம்ம தேவனை எதிர்த்தப்ப நமக்கு எந்த அறிவு இல்லாம போச்சே. சாத்தான் சொன்ன பசப்பு வார்த்தைகளை முழுமையா நம்பி நம்ம தேவனையே எதிர்த்தோம். இன்னைக்கு பாரு. நம்மளை பார்க்க நமக்கே எவ்வளவு அருவருப்பா இருக்கு. சாத்தான் சொன்ன எந்த காரியமும் நடக்கலை……

    நம்மால இப்படி பேசிக்கதான் முடியும். ஒண்ணும் செய்ய முடியாது…….

    நீ சொல்லுறதும் உண்மைதான். ஆனா உனக்கு தெரியுமா. இந்த உலகத்தில கூட அதிசயமான நாட்கள் அதுவும் ரொம்பவே சீக்கிரமா வரப்போகுதுன்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.

    அப்படி என்ன பேசிக்கிறாங்க……….ஆர்வத்துடன் ஒரு பூதம் கேட்கவும்

    இந்த பூமியில கடைசி நாட்கள் வரப் போகுதான். அப்ப இந்த சாத்தான்தான் ராஜாவா இருந்து ஆளுகை செய்யுமாம்.

    இது என்னடா வித்தியாசமா இருக்கு. சாத்தான் ராஜாவாகவா……உண்மையில் ஆச்சர்யமா இருக்கு.

    ஆமா. இது பொய்யில்லையாம். தேவனுடைய பைபிள்ல கூட இதை பத்தி சொல்லபட்டிருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க.

    என்னால எதையும் புரிஞ்சுக்க முடியலை. நம்ம தேவன் அபிஷேகம் பண்ணின அவருடைய குமாரனுக்கு பதிலாகதான, தான் அந்த ராஜா பதவியில் இருக்கணும்னு சாத்தான் ஆசைப்பட்டது. அதுக்குதான தேவையில்லாம சண்டை, போராட்டம் அடுத்து நமக்குன்னு விசேஷமா நரகத்தையும் உருவாக்கி இங்க தேவன் தூக்கி போட்டிருக்கார். அப்ப இனிமே எப்படி சாத்தான் அரசனாக முடியும்???? எனக்கு நம்பிக்கை இல்லை. யாரோ வதந்தியை கிளப்பி விட்டிருக்காங்க. இந்த பூமிக்கு தேவனுடைய ஒரே பையனான இயேசு கிறிஸ்துதான் ராஜா. அதை நம்ம தேவன் மாற்ற விட மாட்டார்.

    நீ சொல்லறது எல்லாம் உண்மைதான். ஆனா அதே இயேசு கிறிஸ்து தன்னுடைய பரிசுத்த ஆவியோட, தன்னுடைய பிள்ளைகளையும் தன்னோட கூட்டிட்டு போகபோற நாட்கள் சீக்கிரத்தில் வர போகுதாம். அப்பதான் அந்த நேரம் தான் சாத்தான் இந்த பூமிக்கு ராஜாவாக போறானாம்.

    அப்ப எந்த மனுஷனும் இல்லாத இந்த பூமியில்தான் சாத்தான் ராஜாவாக போறானா…..இதில என்ன விசேஷம் இருக்கு. ஒண்ணும் இல்லாத இந்த பூமியில் அவன் ராஜாவா ஆளுகை செய்யுறதுக்கும், நரகத்தில பாடு படுறதுக்கும் ஒண்ணும் ரொம்ப வித்தியாசம் வரப் போகுறது கிடையாது. ரெண்டும் ஒரே சுடுகாடுதான். என்ன இது நரகம். இனிமே பூமியில…….

    ரொம்பதான் குறைபடாத. எல்லா மனுஷர்களையும் இயேசு கிறிஸ்து கூட்டிட்டு போக மாட்டாராம். தன்னுடைய பிள்ளைகளை, அதாவது அவருடைய பேச்சுக்கு கீழ்படிந்த பிள்ளைகளை மட்டும்தான்……

    அப்ப இப்ப நரகத்தில பார்க்கிற அளவுக்கு பூமியிலயும் ஆட்கள் இருப்பாங்கன்னு சொல்லு.

    கண்டிப்பா. அது மட்டுமில்ல அப்பனாச்சும் நமக்கு கொஞ்சம் உயர்ந்த பதவி கிடைக்கும்னு நினைக்கிறோம்.

    சப்போஸ் அந்த மாதிரி நினைச்சிருந்தா இப்பவே மறந்திரு. சாத்தானோடு இத்தனை நாட்கள் கூட இருந்தும் உனக்கு இன்னும் அவனை பற்றி தெரியலையே. அவன் என்ன நம்ம தேவனா…..அவர்தான் தன்னுடைய பிள்ளைகளையும் தான் பக்கத்தில உட்கார வைச்சு, அவங்க ஆளுகை செய்யுறதை பார்த்து சந்தோசபடுகிறவர். இவன் அந்த கடைசி நாட்களிலும் நம்மளை இங்க செய்யுற அதே குத்துற, சித்திரவதைபடுத்துற வேலையைதான் தரபோறான்……

    கொஞ்சனாச்சும் நம்பிக்கை வைக்க பாரு. ஆனாலும் இன்னைக்கி நீ ரொம்பவே விரக்தியின் உச்சத்தில இருக்கிறது எனக்கு புரியுது. ஏன் என்ன ஆச்சு. இது வரைக்கும் நான் உன்னை இப்படி பார்த்தது கிடையாது. ஏதும் பிரச்சனையா…….

    ஆமா….இந்த பொண்ணுதான் பிரச்சனை…..வேதனையோடு சொல்லியது.

    இது வரை பூதங்கள் சொல்லி கொண்டிருந்த காரியத்தை அழகாக ரசித்து கேட்டு கொண்டிருந்தவள் பயந்தே போனாள். என்ன இது, நான் இதை என்ன பண்ணினேன். ஒண்ணும் இதை சொல்லலையே…..ஏற்கனவே ரேஷ்மி பிரச்சனைக்கு தண்டனை இருக்கு. இனி இது சொல்ல போற காரியத்தால் என்ன தண்டனை கிடைக்க போகுதோ…..பயந்தாள். பாம்பின் கடியும், ஈட்டியின் வலியும் அவளுக்குள் இன்னும் இருந்து கொண்டுதான் இருந்தது.

    அந்த பயத்திலயும் அவளுக்குள் இருந்த மனதிருப்தி. சாத்தானும் ஏஞ்சலும் எப்படி விழுந்து போனாங்க என்பதை அவள் தெரிந்த கொண்ட சந்தோஷம்தான் அது. அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே…..

    நான் அப்பவே நினைச்சேன். உன் மேல இந்த பொண்ணு காத்து பட்டதாலதான் இப்படி புலம்புறன்னு அப்பவே தோணுச்சு…….

    இந்த பொண்ணை குறித்து ஒண்ணும் சொல்லாத. இந்த பொண்ணை குறித்த விசயத்தை தெரிந்து கொண்டா நீயும் ஆச்சர்யப்படுவ……..

    உண்மையில் அவளுக்கு கூட ஆச்சர்யமாக இருந்தது. அப்படி என்னை குறித்த விசயம் என்ன இருந்துர போகுது…….

    நான் இந்த பொண்ணை நம்ம மாஸ்டர் சொன்ன படி இங்க கூட்டிட்டு வந்த நேரம், இவளை பார்த்து எத்தனை பேரு கண்ணீர் வடிச்சிட்டு இருந்தாங்க தெரியுமா……..

    யாரா இருக்க போகுது. இந்த பொண்ணுடைய அம்மாவும், அப்பாவும் பிள்ளை பாசத்தில அழுதிருக்க போறாங்க…….எகத்தாளமாக பதில் சொல்லியது.

    அவள் மனம் மட்டும் இல்லை, இது இருக்க முடியாது. எங்க அம்மா, அப்பாகுத்தான் என்னை பற்றியே தெரியாதே…..சொல்லி கொண்டே இருந்தது.

    அவங்க எல்லாம் கிடையாது. ஒரு பெரிய ஏஞ்சல் கூட்டமும், நிறைய பரிசுத்தவான்களும் இவ நரகத்திற்கு போயிட்டிருந்ததை பார்த்து அழுகையும், விம்மலுமா கதறினாங்க. அவங்க பேசலைனாலும் இவ மேல அவங்களுக்கு இருந்த அன்பு என்னால புரிஞ்சுக்க முடிந்தது……

    உண்மையில் அதிசயமாக இருக்கு. இந்த ஒரே ஒரு சின்ன பொண்ணுக்கா அத்தனை பெரிய கூட்டம் உன்னை பின் தொடர்ந்து வந்தது…..

    இவளுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது, எனக்காகவா அத்தனை பெரிய கூட்டம் அழுதாங்க. நான்தான் எல்லார் நம்பிக்கையும் வீணாக்கிட்டேன்………என் ஒருத்தியால எத்தனை பேருக்கு கஷ்டம்…….தன்னையே திட்டி கொண்டாள்.

    முதல்ல எனக்கு பயமா போச்சு. நம்ம மாஸ்டர் இந்த பொண்ணை தூக்கிட்டு வர சொல்லியிருக்காரு. ஆனா இவங்க கூட்டமா வந்து, இந்த பொண்ணை என்கிட்டே இருந்து பறிச்சிட்டு போயிருவாங்களோன்னு நினைச்சேன். ஆனா அவங்க ஒண்ணும் சொல்லாம என் பின்னாடி கதறிட்டே வந்தது எனக்கே என்னமோ போல ஆயிருச்சு…….

    அழுதே விட்டாள். என் மடத்தனத்தால எவ்வளவு பெரிய தப்பு செய்திட்டேன்……………அது அடுத்து சொன்ன காரியம்தான் அவளை தூக்கி வாரி போட்டது.

    இதை விடு. இவளை நேசிக்கிற இவளுடைய இயேசப்பா கூட இவளுக்காக அழுது கொண்டிருந்ததை என்னால அத்தனை தொலைவிலயும் நல்லா பார்க்க முடிந்தது. ஒரு கோபமான இயேசு கிறிஸ்துவை பார்த்து பழக்கப்பட்ட எனக்கு அவர் அழுத காரியம் என்னமோ மனதில செய்திருச்சு. என்னால அந்த அன்பை புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. உண்மையில் இந்த பொண்ணை நம்ம தேவனுடைய குமாரன் ரொம்பவே அதிகமாக நேசிக்கிறார்.

    கேட்ட அந்த நொடியே கதற ஆரம்பித்து விட்டாள். இயேசப்பா நான் உங்களை ரொம்பவே கஷ்டப்படுதிட்டேன். இயேசப்பா……இயேசப்பா…….கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது……நான் உங்களை திரும்பவும் பார்ப்பேனாப்பா……….

    முதன் முதலில் அந்த நரகத்தில இருந்து தப்பிக்க முடியுமா என்கிற எண்ணம் அப்போதுதான் அவளுக்கு தோன்றியது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    three − = 1

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>