• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 26

    என்னடா நடந்தது…… உங்க பாஸ்டர் ஐயா இனிமே என் பொண்ணை தேட வேண்டாம்னு சொல்லிட்டாங்க……ஒண்ணுமே புரியலை. என்ன தோணுச்சு அவங்களுக்கு. தன் பொண்ணு கிடைக்க மாட்டான்னு அவரே நினைச்சிட்டாரா…… அவளுடைய அம்மா தன் தம்பியிடம் சொல்லி கொண்டிருந்தது இன்னும் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.

    அவளுடைய மாமாவும் அதே குழப்பத்தில் தான் இருந்தார் என்பது அவர் முகமே காட்டி கொடுத்தது. நம்மளுக்கு ஏதும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நினைச்சிருப்பாரோ…… பாவம் அவள் மாமா மனதுள் நினைத்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    கடைசி நேரம் அவர்கள் கிளம்பும் முன்பும் கூட…… உங்க பொண்ணு உங்களுக்கு கிடைத்திருக்கிற பொக்கிஷம். அவளை பத்திரமா பார்த்து கொள்ளுங்க…… பாஸ்டர் அம்மா சொன்னதுதான் அவளுடைய அம்மாக்கே ஆச்சர்யம். வீட்டுக்கு வந்து ரொம்ப நேரம் ஆன பின்பும் கூட, ஒரு வார்த்தை பேச காசு கேட்பார் போல தோன்றியவர்….. இவ்வளவு தாராளமாய் பேசியது அவளுடைய அம்மாக்கும் அவளுடைய மாமாக்கும் ரொம்பவே ஆச்சர்யம்.

    அவர்கள் சொன்ன வார்த்தைகளில் எதையும் காதில் எடுத்து கொள்ள கூடாது என்று அவள் தீர்மானித்தாலும் குளோரி அம்மாவும், அப்பாவும் கிளம்பும் போது, அவளை அணைத்து முத்தம் கொடுத்தது இன்னும் அவள் எண்ணத்தில் நீங்காத வண்ணம். அந்த அணைப்பிலும், முத்தத்திலும் அவர்களுடைய வேதனையை அவளாலும் உணர முடிந்தது. இழந்து போன தன் பொண்ணை இனிமே எங்க போய் மீட்க…..என்ற அந்த வேதனையை அவளும் உணர்ந்தாள்.

    இல்லை…..இதை பத்தி இனிமே நிறைய யோசிக்க கூடாது. நான் ஏன் குளோரி அக்காவை சந்திச்சேன்…..ன்னு என் இயேசப்பாகிட்ட கேட்ட கேள்விக்குதான் அவர் பதில் தந்துட்டாரே. அழிய நினைத்த ஆத்துமா…… குளோரி அம்மாவுடைய வாழ்கையில் என் இயேசப்பா செய்த அற்புதம் எவ்வளவு ஆச்சர்யமானது. சான்சே இல்லை. தன்னுடைய எத்தனையோ வருச வாழ்கையை வெறும் உலகத்திற்காக மட்டுமே வாழ்ந்தவங்க…..இன்னையில இருந்து என் தேவனுடைய ஊழியம் செய்ய போறவங்க….. என் தேவனால் எல்லாம் கூடும்…… மனதினில் நினைத்து சிரித்து கொண்டாள்.

    குளோரி அம்மா, அப்பாவை பற்றி நிறைய நினைத்து கொண்டிருந்தாலோ என்னவோ தூக்கம் வரவே இல்லை. அம்மா, மாமா ஆச்சர்யத்தை நேரில் பார்த்த பிறகும் கூட அது தன் தேவன்தான் நடத்தினார் என்பதை வெளியே சொல்ல முடியாமல் மறைத்தது என்னவோ போல தோன்றியது அவளுக்கு. அம்மா, மாமாவும் என்ன நினைச்சாலும் பரவாயில்லை. இது என் தேவனுடைய சித்தம்….. கண்டிப்பா வெளியே சொல்ல கூடாதுன்னு அவர் சொல்லி இருக்கும் போது, நான் எப்படி வெளியே சொல்ல முடியும். இயேசப்பா…..தயவு செய்து என் வாய்க்கு காவல் வையுங்க. என் உதடுகளின் வாசலை காத்துக் கொள்ளுங்க. மனதில் தன் தேவனுக்கு நன்றிகள் சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்தாள். சிறுது சிறிதாக தூங்கியும் போனாள்.

    கண்களை திறக்கவே கஷ்டபடுவதை போல உணர்ந்தாள். அதுக்குள்ளவா விடிஞ்சிருச்சு. மனதில் எண்ணங்கள் தோணினாலும் கண்களை திறக்க அவளுக்கு பிடிக்க வில்லை. இப்படியே தூங்கிட்டே இருந்தா நல்லா இருக்குமே…… ஆனா இன்னைக்கி ஸ்கூல் லீவ் கூட கிடையாது. எப்படி தான் சமாளிக்க போறேனோ…… மனதினில் எண்ணங்களோடு கண்களை திறந்தாள். ஆனால் கண் முன் பார்த்த நிகழ்ச்சியால் உண்மையில் உறைந்து போனாள். என்ன இது…… நான் இப்ப யாரை பார்த்தேன். குளோரி அக்காவையா….. மீண்டும் பாதி கண்களை மட்டும் திறந்து பார்த்தாள். சந்தேகமே இல்லை. குளோரி அக்காதான்.

    ஆனா அவங்க எப்படி இங்க…… மனதினில் நினைத்து கொண்டவள்….. அப்ப நானும் திரும்பியும் நரகத்திற்குதான் வந்திட்டேனா…… அந்த வார்த்தைகள் தன் வாயில் இருந்து வருவதற்குள் துள்ளி குதித்து எழுந்தாள். பார்த்தால் சுற்றிலும் இருட்டு.

    அப்ப நான் திரும்பவும் பொல்லாத நரகத்திற்கு வந்திட்டேனா…… அவள் கண்களையே அவளால் நம்ப முடிய வில்லை. இனிமே பூதங்கள்….. சாத்தான்…..சித்திரவதை…… என் வாழ்க்கை இனிமே இங்கதானா…… நினைக்கும் போதே அழுக ஆரம்பித்தாள். நான் என் இயேசப்பா இன்னிக்கி எந்த காரியத்தில் கஷ்டப்படுத்தினேன். தீவிரமாக அலசி ஆராய்ந்தாள். சப்போஸ் நேத்து லீவ் போட்டதா இருக்குமா……. ஆனா அதை கூட நான் டீச்சர்கிட்ட சொல்லிட்டேனே…. மனதில பல விதமான எண்ணங்கள் வந்து போனது. இனிமே என்னால யாரையும் பார்க்க முடியாது. என்ற எண்ணம் வந்த மாத்திரத்தில் ஓவென்று கத்த தோன்றியது அவளுக்கு.

    இயேசப்பா, என்னை நரகத்தில இருந்து தப்பிக்க வைத்தது நீங்கதான். ஆனா இன்னிக்கி என்னுடைய கீழ்படியாமையினால் திரும்பவும் இங்கேயே வந்திட்டேன்னா…….. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அமைதியானாள். முதலில் கண்களில் தெரிந்த குளோரி அக்கா கூட இப்போது காணும். சுற்றிலும் நோட்டம் விட்டாள். உடல் மட்டும் பயத்தில் பதைத்தது அவளுக்கே தெளிவாக தெரிந்தது. ஆனால் அனைத்தையும் மறைத்தவளாய் குளோரி அக்கா எங்க போனாங்க…… கண்கள் தேடியது.

    அவள் தேடலின் முடிவில் அவளுக்கு கிடைத்தது…… அவளுடைய பிரெண்ட் ராசிகாவின் அப்பா கோவிந்த். உண்மையில் அவரை அவள் இங்கே எதிர்பார்க்க வில்லை. அவர் கூட இவளை அடையாளம் கண்டு கொண்டார்.

    என்னமா…… நீயுமா இங்க வந்த. என்று அவர் இவள் அருகில் வந்த போதுதான் தான் காண்பது கனவில்லை. உண்மை என்பது அவளுக்கே தெரிந்தது.

    ஆனால் அவர்க்கு என்ன பதில் சொல்லணும் இயேசப்பா…… இயேசப்பாவிடம் ஒரு வார்த்தை கேட்டாள். ம்கூம்…… பதில் தர வில்லை தேவன். உண்மையில் மனம் நொடிந்து போனாள். ஒரு சிரிப்பை மட்டும் கொடுத்தாள்.

    நீங்கெல்லாம் ரொம்ப சின்ன பிள்ளைக. ஆனா என்கிட்டே எத்தனை தடவை ப்ளீஸ், அங்கிள். ராசிகாவை சர்ச்சுக்கு அனுப்பி வைங்க. நீங்களும் சர்ச்சுக்கு வாங்கன்னு சொல்லி இருப்பீங்க….. அவர் ரொம்பவே தயக்கமாய் பேச்சை ஆரம்பித்தார். இவளுக்கு ஒன்றும் புரிய வில்லை.

    ஏன் அங்கிள்….. இந்த டாப்பிக்கை பத்தி பேசுறாங்க. அதுதான் எல்லாம் முடிஞ்சிருச்சே. கடவுள் இல்லைன்னு சொல்லி சின்ன பிள்ளைகளான எங்ககிட்ட வாதாடினது…….. என்னுடைய பிரெண்ட் ராசிகாவை குறித்து  எத்தனையோ முறை ப்ளீஸ் அங்கிள்…… விபிஸ் ஆரம்பிச்சிருக்காங்க. இந்த ஒரு தடவை மட்டும் ராசிகாவை விடுங்க……என்று சொன்ன போது……

    குட்டிகளா, உங்களுக்கு எல்லாம் இது புரியாது. கடவுளே இல்லைன்னு சொல்லுறேன். அதற்கடுத்து அவருக்கு ஆராதனை…… துதிக்க போறோம்ன்னு இந்த வயசிலேயே கிளம்புறீங்களே….. போப்பா…..ஏதாவது நல்ல வேலையா இருந்து பாருங்க. நீ போற வழியில ஏதாவது கண் தெரியாதவங்க வந்தா அவங்களுக்கு உதவி செய்யுங்க. பசியில் யாராவது உன்னை தேடி வந்தாங்கன்னா அவங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்க. இப்படி செய்கிறதை விட்டுட்டு, உருவமே இல்லாத கடவுளாம். அவரை பத்தி தெரிந்து கொள்ள போறேன்னு சொல்லிட்டு, உங்க நேரத்தை ஏன் கெடுக்க போறீங்க…… என்று ஒரு நீண்ட வியாக்கியானம் சொன்ன போது அந்த நேரம் தலை சுற்றியதை போல அவளும், அவளுடைய பிரெண்டும் உணர்ந்தனர். கலங்கிய விழிகளோடு இவர்களை ராசிகா பார்த்தது இப்போது கூட அவளுக்கு தெளிவாக ஞாபகம் வந்தது.

    என்ன….நான் பேசிட்டே இருக்கேன். நீ எங்கயோ யோசித்திட்டிருக்கமா…… என்று அவர் மீண்டும் கேட்கவும்…..

    அது ஒண்ணுமில்லை அங்கிள். நாங்க ராசிகாவை விபிஸ் கூப்பிட வந்தப்ப……நீங்க என்ன சொன்னீங்களோ அது இப்ப ஞாபகத்துக்கு வந்திச்சு….. என்றவாறு பேச்சை ஆரம்பித்தாள்.

    அவர் கண்கள் கலங்குவது அவளுக்கும் புரிந்தது. கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தார். அவளுடைய எண்ணம் எல்லாம்…. இது நரகம்ன்னா அப்ப சுத்தி எரிகிற அக்கினி கந்தகம், பூதங்கள், அடுத்து….. ஒரு விதமான கெட்ட வாடை எதுவும் இங்க வரலை. அப்ப இந்த இடம் என்னது???? தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டாள். இயேசப்பா, நான் நிற்கிற இடம் எரிநரகம் இல்லை என்பது உங்க வார்த்தைன்னா இது என்ன இடம்???? உண்மையில் குழம்பி போனாள்.

    சப்போஸ் இது பாதாளமா இருக்குமா??? ஆனா பாதாளத்தில் கூட எரிக்கிற அக்கினி உண்டுன்னு பைபிள்ல லாசரு பத்தி நம்ம இயேசப்பா சொன்னப்ப தெளிவா சொல்லி இருக்காங்களே. அப்ப இது எரிநகரமும் இல்லை….. பாதாளமும் இல்லைன்னா……என் பிரெண்ட் ராசிகா அப்பா இந்த இடத்தில ஏன் இருக்காங்க…… அவளை அதற்கு மேல் குழம்ப விட கூடாது என்று இயேசப்பாவே நினைத்தார் போல…… அவளுடைய பிரெண்ட் அப்பா பேச ஆரம்பித்தார்.

    நீ வந்திருக்கிற இடம் என்னதுன்னு உனக்கு தெரியுமா…… என்று அவளை கேட்டார்.

    ஒன்றும் பதில் சொல்லாமல் உதடுகளை மட்டும் பிதுக்கினாள்.

    உங்க இயேசப்பாவை மறுதலித்த நான் இங்க வந்தா ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. ஆனா நீ ஏன் இங்க வந்த. நீதான் எப்பவும் இயேசப்பா…..இயேசப்பான்னு சொல்லிட்டே தான இருப்ப. உனக்கும் இங்கதான் இனி வாழ்க்கையா…… அவர் கூறியது அவளுக்கே வேதனையா இருந்தது. உண்மையில் இயேசப்பா….. இனிமே என் வாழ்க்கை இங்கதானா.

    அவர் பேசட்டும் என்று காத்திருந்தாள்.

    இப்பவும் என்னால நம்ப முடியலை. எனக்கு டாக்டர்ஸ் கான்செர் வந்திருக்குன்னு சொன்னப்ப கூட என் மனசு கஷ்டப்படலை. இந்த உலகத்திற்கு வந்த மனுஷன் என்னைக்காவது ஒரு நாள் உலகத்தில இருந்து போய்தான் ஆகணும்ன்னு நானே எனக்கு ஆறுதல் சொல்லி கொண்டேன். அது மட்டுமில்ல ஏற்கனவே நான் செய்திட்டு வந்த நல்ல காரியங்களையும், நீதிகளையும் இன்னும் அதிகபடுத்தினேன். ஆனா அந்த பூமியில கண் மூடின பிறகு எனக்கு சொர்க்கம் கிடைக்கும்ன்னு ஆவலா காத்திட்டு இருக்க….. கிடைச்சது…….சொல்லி கொண்டிருந்தவர் அமைதியானார்.

    அவளுக்கே வேதனையாக இருந்தது. கடவுளும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. நான்தான் எனக்கு கடவுள்……ன்னு எத்தனையோ பேரு இந்த பூமியில் வாழ்ந்திருந்தாலும் கடைசியில் அவங்க வாழ்க்கை கூட இப்படித்தான் ஆகுமா….மனதில் நினைத்து கொண்டாள்.

    கண்களை திறந்து பார்த்தால் ஏதோ ஒரு மயானத்தில் நிற்பது தெரிந்தது. என்னடா….நான் செத்து போகலையா….. சப்போஸ் எனக்கு ஏதோ அதிசயம் நடந்திருச்சுன்னு ஓட்டமா வீட்டுக்கு போனா என் பொண்ணும், மனைவியும் அழுதிட்டு இருந்தாங்க. நான் உயிரோட இருக்கேன். அதுனால இனிமே அழ வேண்டியதில்லைன்னு அவங்களை தொட போனா தொட முடியல்லை. நான் பேசுறது எதுவும் அவங்களுக்கு கேட்கலை. என்னதுன்னு புரிந்து கொள்ளவும் முடியலை. நான் இறந்து போன பிறகு மூணு வருசமா இப்படித்தான் சுத்திட்டு இருக்கேன். நான் மட்டுமில்லை. என்னை மாதிரி நிறைய பேரு இந்த பூமியில சுத்திட்டு இருக்காங்க……….. உண்மையில் இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    என்னது இயேசப்பா, ஒரு மனிதன் இந்த பூமியில இறந்து போன பிறகு, அவனுடைய உடல், அதாவது நீங்க செய்த மண் கூடு இந்த பூமியில அழிந்து போகும்ன்னு சொல்லப்பட்டிருக்கு. அடுத்து ஆவி தான் படைத்த தேவன்கிட்ட திரும்ப போகும் போது, அது பரலோகமா, நரகமா பொறுத்து, அதனதன் உடல் கிடைத்து, பரலோகத்தில தேவனோடு சந்தோசமா வாழுவதோ இல்லை நரகத்தில கஷ்டப்படுவதோ தேவனுடைய சித்தம். ஆனா இது என்னது இயேசப்பா புதுசா….. பரலோகத்திற்கும் போகாம, நரகத்திலயும் போகாம, வெறும் ஆவியா இந்த பூமியில இருக்க முடியுமா என்ன…… குழம்பி போனாள்.

    இது நரகம் இல்லை….. பரலோகமும் இல்லை….. மக்கள் இறந்து போன பிறகு ஆவியா இந்த பூமியில நடமாடுகிற இடம்…… இது என்ன காரணத்தினால?????

    அப்போதுதான் அவளிடம் என்றுமே தேவ வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளும் ஏஞ்சல் அவள் முன் தோன்றவும் ஆச்சர்யப்பட்டாள். அவர் தோன்றிய பிரகாசத்தால் அவளிடம் பேசி கொண்டிருந்த அவள் பிரெண்ட் ராசிகாவின் அப்பா கூட வேகமா ஓடி மறைந்தார்.

    ஏன் என்ன ஆச்சு……. அவள் மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே என்ன குட்டிமா, எப்படி இருக்கு இந்த இடம்……. ஆவலாக அவளிடம் கேட்டார்.

    ஏஞ்சல், நீங்க வந்ததும் ஏன் என்னுடைய பிரெண்டுடைய அப்பா ஓடி போயிட்டாங்க…….

    குட்டிமா, இது நம்ம தேவனுடைய திட்டம். ரொம்பவே இரகசியமான காரியம். உன்கிட்ட சொல்லுறதுக்கு இயேசப்பா சித்தம் உண்டான்னு தெரியலை….. அவர் யோசித்து கொண்டிருக்கவும்

    ஓகே ஏஞ்சல். அது என் தேவனால் காக்கப்படுகிற ரகசியமாக இருந்தா கண்டிப்பா நான் தெரிந்து கொள்ள வில்லை. ஆனா எனக்கு ஒரு பெரிய சந்தோசம் என்னன்னா குளோரி அக்கா, நரகத்தில வெந்திட்டு இருக்கலை. அவங்க இந்த பூமியில ஆவி வடிவுல நடமாடிட்டு இருக்காங்க. அது மட்டும் எனக்கு சந்தோசம்…… அவள் கூறி விட்டு சிரிக்கவும்

    அவள் சொன்னதுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ஏஞ்சல். அந்த நேரத்தில்தான் யாரோ தன்னை தொடவும் யாராய் இருக்கும்…… என்று திரும்பி பார்த்தவள்….நின்று கொண்டிருந்தது குளோரி அக்கா என்று தெரியவும் சந்தோசப்பட்டாள்.

    ஹாய் அக்கா….. உண்மையில் உங்களை இங்க பார்ப்பேன்னு நினைச்சி கூட பார்க்கலை……. சிரிப்புடன் அவள் பேசி கொண்டிருந்தாள். பக்கத்தில் இருந்த ஏஞ்சலை மறந்தே போனாள்.

    ஆனால் இவள் முகத்தில இருந்த சந்தோஷத்தில் ஒரு பங்கு கூட அந்த குளோரி அக்கா முகத்தில் இல்லை. ஏன்….. தனக்குள்ளே அவள் கேட்டுக் கொண்டாள்.

    உங்க முகத்தில சந்தோசம் இல்லை….. ஏன்னு தெரிந்து கொள்ளலாமா….. கேள்வியுடன் கேட்டவளுக்கு

    அது….. குளோரி பேச ஆரம்பித்த போதே, ஏஞ்சல் அவள் முன் நிற்கவும் சாரி ஏஞ்சல்….. அக்காவை பார்த்ததில் உங்களை மறந்திட்டேன்…… மன்னிப்பு கேட்டுக் கொண்டாள்.

    சொல்லு குளோரி. நீ உன்னுடைய அனுபவங்களை உன் பிரெண்ட்கிட்ட சொல்லு…… அவர் கூறவும்

    ஒன்றும் புரியாமல் ஏஞ்சலையும், குளோரியையும் மாறி மாறி பார்த்தாள். அப்படி என்ன ரகசியம்….. மனதினில் நினைத்து கொண்டாள்.

    உனக்கு ஒரு உண்மை தெரியப்படணும் என்பது நம்ம தேவனுடைய சித்தம். அதுவும் நீ மனதில ரொம்பவே வேதனைப்பட்டு கொண்டிருந்த குளோரி மூலமா தெரிந்து கொள்ளனும் என்பது தான் அவருடைய விருப்பம்….. ஏஞ்சல் சொல்லி கொண்டே சென்றார்.

    நான் உன்னிடம் நம்ம இயேசப்பா வார்த்தைகளை சொல்லி கொண்டிருக்கும் போதே என்னை பூதங்கள்  இழுத்துட்டு போனதை நீயும் பார்த்திருப்ப. ஆனா அவங்க என்னை அந்த சித்திரவதை ரூமில் அடைக்கிறதுகுள்ள ஏதோ ஒரு பெரிய ஒளி வரவும் நான் நினைச்சிகிட்டேன்…..எனக்கு இந்த நரகத்தில இருந்து விடுதலை கொடுக்க நம்ம இயேசப்பா வந்துட்டாங்கன்னு நினைச்சேன். ஆனா அடுத்து நான் பார்த்தது இந்த பூமி தான். இன்னும் இந்த பூமியில ஆவி வடிவத்தில தான் நடமாடிட்டு இருக்கேன். நான் மட்டுமில்ல என்னை மாதிரி தன் வாழ்கையை நம்ம இயேசப்பாகிட்ட திருப்பாம அவசரப்பட்டு, செத்து போனவங்க, தற்கொலை செய்து கொண்டவங்க, ஆக்சிடென்ட்டில் இறந்து போனவங்க….. இன்னும் இந்த பூமியில் நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும் தேவனை ஏற்று கொள்ளாம இறந்து போனவங்க……. கடவுள் இல்லைன்னு வாதாடி நரகத்திற்கு போகாம இந்த ஆவி உலகத்திற்கு வந்தவங்க…..இப்படி எத்தனையோ பேரு…… குளோரி சொல்லி கொண்டே போனாள்.

    சிறிதளவு புரிந்து கொண்டாள் அவளும்.

    அப்ப ஏஞ்சல்…… இந்த ஆவி உலகத்திற்கு வந்தவங்க எல்லாரும் ஓரளவுக்கு நல்லவங்க மாதிரி தோணுது…….

    நீ சொன்னது ஒரளவுக்கு சரி குட்டிமா….. நம்ம இயேசப்பாவை முழுமையா பிடித்து கொள்ளாம விழுந்து விழுந்து எழுந்த தேவ பிள்ளைகள் கூட இதுல இருக்காங்க……. என்று அவர் கூறவும்

    இவங்களுக்கு நரக தண்டனையும் இல்லை…..அடுத்து நம்ம இயேசப்பா சொல்லி இருக்கிற பாதாள தண்டனையும் இல்லைன்னா…… இவங்க கடைசியில என்ன ஆவாங்க ஏஞ்சல்….. ஆவலோடு கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடினார்.

    நான் சொல்லுறேன். நீங்க ஏன் ஏஞ்சல் வேதனைபடுறீங்க. நானும் முதலில் இந்த உண்மையை தெரிந்து கொண்டப்ப வேதனைபட்டேன். ஆனா இப்ப நான் கவலைபடலை. எனக்கு என் தேவன் அனுமதித்திருக்கிற தண்டனை நியாயமானது…... அவளை நோக்கி திரும்பிய குளோரி

    நான் உன்கிட்ட சொன்ன எல்லா ஆவிகளும் நம்ம தேவன் வைத்திருக்கிற நியாயத்தீர்ப்பு நாள் வரும் வரைக்கும் இதே மாதிரி ஆவியாக தான் அலைவோம். நம்ம இயேசப்பா நியாய சிங்காசனத்தில் உட்கார்ந்து நியாய தீர்ப்பு செய்யும் சமயம் நாங்களும் அங்கே அவர் முன்பு நியாய தீர்ப்பு அடைய நிற்போம். அப்ப நம்ம இயேசப்பா எங்களை நியாயம் தீர்த்து அக்கினி கடலுக்கு அனுப்பி வைப்பாங்க……. என்று சொல்லி கொண்டே போனாள்.

    பாவம் அவளுக்கு தான் அழுகை வந்தது.

    என்ன அக்கா….இப்படி சொல்லிட்டீங்க. நான் நீங்க நரகத்தில இல்லைன்னு தெரிந்து கொண்டதும், உண்மையில் சந்தோசப்பட்டேன். ஆனா நீங்க சொல்லுறதை பார்த்தா நித்திய நியாயத்தீர்ப்புக்கு காத்திருக்கிறதும், அது அக்கினி கடல் என்பதும் ரொம்பவே கஷ்டமா இருக்கு…… அவள் அழுது கொண்டே சொல்லவும்

    நீ ஒரு விசயத்தை புரிந்து கொள்ளணும். என் தேவன் எனக்கு கொடுத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை வீணாக்கிட்டு என் அவசர புத்தியால நான்தான் என் வாழ்கையை தீர்மானித்தேன். இப்ப வந்து என் தேவன் என்மேல கிருபை பாராட்டணும்னு நினைச்சா அது ரொம்பவே பேராசை. என்னை மாதிரி உள்ள எத்தனையோ தேவனால் நிரகாரிக்கபட்ட ஆவிகள் மட்டுமில்ல, சில நேரம் நல்ல ஆவிகள் கூட இந்த ஆவிகளின் உலகத்தில நான் பார்த்திருக்கேன். அதுல ஒரு நல்ல ஆவிதான் எனக்கு கடைசி நாட்கள் பற்றி சொல்லும் போதுதான் இந்த காரியத்தை  சொன்னாங்க. முதலில் எனக்கு கஷ்டமா இருந்தாலும், இப்ப எனக்கு உண்மை புரிந்ததால இப்பெல்லாம் கவலை படுறதில்லை. அந்த நல்ல ஆவி எனக்கு இந்த விசயத்தை சொல்லிட்டு நம்ம இயேசப்பாகிட்ட போயிருச்சு. ஆனா எனக்குதான் ஒன்றும் செய்ய தோன்ற வில்லை. நம்ம இயேசப்பா இந்த ஆவிகளின் உலகில் எங்களுக்கு ஒரு எல்லை கொடுத்திருக்காங்க. அந்த எல்லையை தாண்டி எங்களால் எங்கயும் போக முடியாது. இப்போதைக்கு இந்த ஆவி உலகத்திற்கு வரும் ஆவிகளுக்கு தேறுதல் சொல்லறதுதான் என்னுடைய வேலை……. சொல்லி விட்டு கிளம்ப போன குளோரியை

    உங்களுக்கு சாத்தானாலும், அவன் தூதர்களாலும் எந்த பிரச்சனையும் வராதா???? என்று அவள் கேட்க

    சில நேரங்கள் வர்றது உண்டு. சாத்தான் தூதர்கள் சில நேரத்தில எங்களை மாதிரி உள்ள ஆவிகளை தொடர்பு கொண்டு தேவ பிள்ளைகளுக்கு விரோதமா தப்பு செய்ய தூண்டுவான். சில நேரம் அந்த  ஆவிகள் அவன் பேச்சுக்கு கீழ்படிந்து, தப்பு செய்திட்டு, கதறிட்டே நரகம் போறதை கூட பார்த்திருக்கேன். ஆனா சில ஆவிகள் அவன் பேச்சுக்கு கீழ்படியாம தைரியமா எதிர்த்து நிற்கிறதும் உண்டு….. இதுதான் இந்த ஆவிகளின் உலகத்தை பற்றிய இரகசியம்…… நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். நம்ம தேவன் உனக்கு கொடுத்த சத்தியங்களை என்றைக்கும் மறந்து போகாதே……. குளோரி சொல்லி கொண்டு இருக்கும் போதே…… ஒரு ஆவி பதட்டத்தோடு ஓடவும்

    சாரி…..ஏஞ்சல்….. ஒரு ஆவி இப்பதான் இந்த ஆவிகளின் உலகத்தில நுழைந்திருக்கு. அதை தேறுதல் படுத்தனும்….. இல்லைனா பயத்தில தெரியாம….. சாத்தான் தூதர்கள் பேச்சை நம்பி நரகத்தில அது கஷ்டப்பட போயிரும். அதுக்கு நான் என்னுடைய இயேசப்பா அன்பை பற்றி சொல்ல போறேன்…. சொல்லி விட்டு குளோரி சென்று விட்டாள்.

    இவள்தான் ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தாள். குட்டிமா, உனக்கு ஓரளவுக்கு இந்த ஆவிகளின் உலகத்தை பற்றி தெரிந்திருக்கும். அதுனால நாம கிளம்பலாமா?????

    என்னால முடியலை ஏஞ்சல். என் இயேசப்பா எங்களை ரொம்பவே நேசிக்கிறாங்க. நான் இந்த பூமியில இருக்கிறதே அவர் கிருபைதான். ஆனா குளோரி அக்கா….. நம்ம இயேசப்பாகிட்ட முழு மனதோட மன்னிப்பு கேட்ட பிறகும் அவங்க நரகத்தில கஷ்டப்படுராங்களேன்னு தான் வேதனைபட்டுட்டு இருந்தேன். அவங்களை இங்க பார்த்தப்ப ஒரு சின்ன நம்பிக்கை. எப்படியும் அவங்களை பரலோகத்தில சந்திக்க முடியும்னு. ஆனா அக்கா சொல்லுறதை பார்த்தா…... சொல்ல முடிய வில்லை அவளால்.

    கடைசியில அக்கினி கடலில் தான் அவங்க வாழ்க்கைங்கிறதை என்னால ஜீரணிக்க முடியலை ஏஞ்சல்…… அழுது கொண்டே சொன்னாள்.

    ஏன் ஏஞ்சல்…. இந்த ஆவிகளின் உலகத்தில கூட சாத்தானின் தந்திரத்தால தன்னை தீட்டு படாம காத்து கொள்ளுகிற ஆவிகளும் அக்கினி கடலில் தான் நித்திய காலமாய் எரியனுமா…… என்று அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே

    குட்டிமா, நம்ம தேவனின் நியாய தீர்ப்புகளின் சத்தியத்தை யாராலும் உணர்ந்து கொள்ள முடியாது. யாருக்கு தெரியும், சப்போஸ் தேவ சத்தியங்களை இந்த பொல்லாத உலகில் உள்ள ஆவிகளுக்காக சொல்றதுக்காகதான் குளோரியை நம்ம இயேசப்பா அனுப்பி இருந்தா….. அது அவளுக்கு நியமிக்க பட்ட ஊழியமா இருந்தா…….

    உண்மையாகவா ஏஞ்சல்….. அப்ப குளோரி அக்காவுக்கு நம்ம இயேசப்பா நியாய தீர்ப்பு செய்யும் போது கிருபை பாராட்டுவாங்களா…… கேட்டு கொண்டிருந்தவளை பார்த்து ஏஞ்சல் சிரித்தார்.

    தேங்க்ஸ் lord. உங்க கிருபைக்காக நன்றிகள் ஆண்டவரே. உண்மையில் என்னுடைய இயேசப்பாவின் அன்பை விளக்கி சொல்ல முடியாது ஏஞ்சல். நரகத்தில விழுந்து கதறிட்டு இருக்கிற ஆத்துமாக்களுக்கு மட்டுமில்ல எல்லா ஆத்துமாக்களுக்கும் என் இயேசப்பா போதுமனவராகவே இருக்காங்க…….வாய் திறந்து தன் நன்றிகளை தேவனுக்கு செலுத்தினாள்.

    ஆமென்….. இருவரும் ஒரு சேர ஒலித்தனர்.

    யாரோ தன்னை தொடுவது போல தோன்றவும் குளோரி அக்காவா….. மகிழ்ச்சியுடன் பின் திரும்பியவளுக்கு அவளுடைய பிரெண்ட் ராசிகாவின் அப்பாதான் நின்று கொண்டிருந்தார்.

    நான் தூரத்தில நின்னு எல்லாத்தையும் கவனிச்சிட்டு இருந்தேன். உண்மையில் நீ வணங்குகிற தேவன் உண்மையானவர்ன்னு புரிஞ்சிகிட்டேன்மா. ஆனா காலம் கடந்த யோசனை……. அவர் வருத்தபடுவது அவளுக்கும் புரிந்தது.

    உன்னால கண்டிப்பா முடியும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா???? கேள்வியுடன் நிறுத்தியவரை பார்த்தவள்

    சொல்லுங்க அங்கிள்……என்னால முடிந்தா கண்டிப்பா செய்யுறேன்…… உற்சாகமா சொன்னாள்…..மனதினில் நினைத்து கொண்டாள்…..என் தேவன் அனுமதித்தா மட்டுமே……

    இனிமே என்னுடைய பொண்ணையும், மனைவியையும் ஒவ்வொரு வாரமும் சர்ச்க்கு கூட்டிட்டு போக முடியுமா…… இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அவங்க உண்மையான தேவனாகிய இயேசப்பாவை தான் வணங்கணும்னு சொல்லு……. ஆவலோடு அவள் என்ன சொல்லுவாள் என்று கவனித்து கொண்டிருந்தார்.

    அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள்.

    அவர் சிரிக்கவும் கண்டிப்பா சொல்லுறேன் அங்கிள்……. என்றவுடன் அவர் முகம் உண்மையில் ஏதோ ஒரு பெரிய காரியத்தை சாதித்த வெற்றியோடு தெரிந்தது.

    ஏஞ்சல்…..அப்ப இந்த ஆவி கூட நம்ம தேவன் கிருபைக்கு நியாய தீர்ப்பில் இடம் பெற வாய்ப்பு இருக்குமா…… என்று அவள் வாய் சொல்ல நினைத்த போதே ஒரு பெரிய இரைச்சலோடு யாரோ வருவது போல தெரியவும் மேலே பார்த்தாள்.

    மேலே ரொம்பவே பெரிய அளவில் பறந்து கொண்டிருந்த பூதத்தை பார்த்ததும் பயந்தே போனாள். ஏஞ்சல்…… பெரிய பூதம்….. என்றவாறு இன்னும் நெருக்கமாய் ஏஞ்சலின் அருகில் வந்து நின்றாள்.

    முடிந்தால் அவருடைய சிறகுகளின் அடியில் ஒளிந்து கொண்டால் நல்லா இருக்குமே…….. மனதினில் நினைத்து கொண்டிருந்த போதுதான் அந்த பூதம் ராசிகாவின் அப்பாவை அப்படியே தூக்கி கொண்டு சென்றது. அந்த பூதம் அந்த இடத்தில் இருந்து போன பிறகும் கூட, அவருடைய கதறல் சத்தம் இன்னும் அவள் காதுகளில் ரீங்காரமாய்.

    கேள்வியோடு ஏஞ்சலின் முகத்தை பார்த்தார்.

    உன்னுடைய கேள்வி எனக்கு புரியுது குட்டிமா. ஆனா உன்னுடைய பிரெண்ட் ராசிகாவின் அப்பா சாத்தானோடு ரகசிய உடன்படிக்கை பண்ணியிருந்தார். அது மீண்டும் தன் உடம்பு கிடைக்க….. தேவ பிள்ளையின் வாழ்கையில் சாத்தனின் தந்திரத்தை நுழைக்க ஒப்புக் கொண்டார். அந்த பொண்ணு தேவ வல்லமையால் அந்த தந்திரத்தை தவிடு பொடியாக்கினாலும், அதனோடு உடன்படிக்கை பண்ணி கொண்ட, உன்னுடைய பிரெண்ட் அப்பா இப்ப நரகத்தை நோக்கி போயிட்டிருகிறார்…… ஏஞ்சல் வார்த்தையில் கவலை தெரிந்தது.

    உண்மையில் அவளால் நம்ப முடியவில்லை. நம்ம இயேசப்பா கிருபையால பரலோகத்தை சென்றடைய முடியுமேன்னு நினைத்து கொண்டிருந்த ஆவி அல்லவா……. அழுகையே வந்து விட்டது அவளுக்கு.

    ஏஞ்சல்….. அப்ப யாரால் தான் பரலோகத்தை சுதந்தரிக்க முடியும்…… அழுகையோடு கேட்டவளுக்கு அது நம்ம தேவனுக்கு மட்டும் தெரிந்த இரகசியம் குட்டிமா. நீ இந்த காரியங்களில் தலையிட்டு உன் மண்டையை குழப்பிக்காத…….. என்றாவாறு அவர் தெளிவாக சொல்லவும்

    ஆனா ஏஞ்சல்……ஏஞ்சல்…..அவர் கூட……. அதற்கு மேல் அவளால் கூட பேச முடிய வில்லை.

    அழுது கொண்டுதான் இருந்தாள். காலை எழுந்த பின்பும் கூட.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × 1 = nine

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>