• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 24

    கண்களை திறந்தவள் ஏஞ்சலின் முகத்தை கேள்வியோடு நோக்கினாள். குளோரி அக்கா விசயத்தை பத்தி கேட்கலாமா……

    இவளின் எண்ணங்களை புரிந்து கொண்டவராய் சொல்லு குட்டிமா, உனக்கு அந்த குளோரி விசயத்தை பத்தி தெரிந்து கொள்ளணும், அப்படிதான

    முகத்தில் முழுமையான புன்னகையோடு ஆமா ஏஞ்சல்….. நான் நரகத்தில் சந்தித்த ஒரு அற்புதமான நபர்….. என் மனசில என்ன ஓடிட்டு இருக்குதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என்னை மாதிரியே குளோரி அக்காவும் அவங்க அம்மா, அப்போவோடு சேர்ந்துட்டாங்களான்னு மனசில தோணிட்டே இருக்கு…… எனக்கு சொல்லுவீங்களா ஏஞ்சல்

    உனக்கு ஏற்கனவே தெரிந்த விசயம்தான். நம்ம தேவனுடைய சித்தம் இருந்தா மட்டுமே அந்த காரியங்களை குறித்து நீ தெரிந்து கொள்ள முடியும். ஆனா……. சொல்லி விட்டு நிறுத்தியவரை ஆர்வமாக பார்த்தாள்.

    உன் மனசு என்ன நினைக்குதுன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா சாரி குட்டிமா, உன்னுடைய குளோரி அக்கா அவங்க அம்மா, அப்போவோடு சேரலை….. இதை மட்டும்தான் இப்போதைக்கு என்னால சொல்ல முடியும். மற்றதை குறித்து…… யோசிக்க ஆரம்பித்தார்.

    உண்மையில் கலங்கி போனாள் அவள். அந்த குளோரி அக்கா எவ்வளவு நல்லவங்க. அவங்களும் என்னை மாதிரியே அவங்க குடும்பத்தில சேர்ந்திருப்பாங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்…… ஆனா அவங்க சேரலையாம்….. சப்போஸ் திரும்பியும் தன்னுடைய அந்த ஆள்கிட்டயே போயிருப்பாங்களோ…… மனதினில் குழப்பி கொண்டாள்.

    அவள் கண்களில் கண்ணீர் வழிந்ததை அவரும் பார்த்தார். ஒன்றும் அவரால் கூட சொல்ல முடிய வில்லை.

    ஏஞ்சல், என்னுடைய இயேசப்பா என் மேல கிருபை பாராட்டி நரகத்தில இருந்து தூக்கி எடுத்துருக்காங்க. அப்ப தன் தவறை ஒத்துக் கொண்ட அந்த குளோரி அக்கா மேலயும் என் தேவன் இரக்கம் பாராட்டி இருப்பாங்களே…….  சொல்லி விட்டு அழுதவளை

    ஆனா நீ ஒரு விசயத்தை மறந்திட்ட குட்டிமா. நரகத்திற்கு போன பிறகு நம்ம இயேசப்பாகிட்ட பாவ மன்னிப்பு கேட்கிறதால என்ன ஆகப் போகுது, சொல்லு. அப்படின்னா உன்னுடைய குளோரி அக்கா மாதிரியே நிறைய பேரு ஒவ்வொரு நொடியும் நம்ம இயேசப்பாகிட்ட நேரடியா மன்னிப்பு கேட்க துடிச்சிட்டிருக்காங்க. எல்லாரையும் நம்ம தேவன் திரும்பவும் பூமிக்கு கொண்டு வர முடியாதே. எல்லாருக்கும் நம்ம தேவன் கொடுத்திருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதுவும் இந்த பூமியில் கொடுத்திருக்கிற ஒரு அழகான வாழ்க்கை. அந்த வாழ்கையில் அவங்க நம்ம இயேசப்பாவை கண்டு கொண்டு, அவர் உதவியோட தன் ஓட்டத்தை முடிக்கிறாங்களா இல்லை பாதிலயே பாதை மறந்து நரகத்தில போய் விழுறாங்களா என்பதுதான் அவங்களுக்கு வைக்க படுகிற டெஸ்ட். அப்படி இருக்கும் போது, ஒருத்தர் அந்த வாழ்கையை இந்த பூமியில முடிச்சிட்டு, நரகத்திற்கு போன பிறகு நம்ம இயேசப்பா அன்பை புரிந்து கொள்ளாம போயிட்டேன்னு புலம்புறதால என்ன நடந்திர போகுது????

    சரி என்றுதான் அவளுடைய மனதும் சொல்லியது. ஆனா நான் இந்த பூமிக்கு வர இயேசப்பா அந்த அக்காவை பயன்படுத்தினாங்களே. அப்படி இருக்கும் போது அப்படிப்பட்ட உதவி செய்த ஆத்துமாக்கு என் இயேசப்பா நரக தண்டனையா கொடுப்பாங்க….. அவளில் கேள்வி எழும்பியது.

    அவளுடைய கேள்வியின் நியாயத்தை புரிந்து கொண்டவராய் சிரித்தார். வேறு எதுவும் அவர் சொல்ல வில்லை. சரி குட்டிமா….. இனிமே உன் மனதில எந்த வேதனையோ, குற்ற உணர்வோ இல்லாம முழுமையா உன் இயேசப்பா உன்னை மன்னித்தது மட்டுமில்ல இப்பவும் உன்னை நேசிக்கிறாங்க என்கிற சந்தோசத்தை மட்டும் ஞாபகத்தில வைச்சுக்கோ…… என்ற வண்ணம் புறப்பட தயாராக இருந்தார்.

    அவள் மனதில இருந்த குழப்பம் இன்னும் முடிய வில்லை…… ஏஞ்சல் அவள் முகத்தை பார்த்து கொண்டிருப்பதும், அவர் சொன்ன வார்த்தைகளும் அவள் மனதில் ஏறவே இல்லை….. அப்ப குளோரி அக்காக்கு என்ன ஆச்சு……. என்ற எண்ணம் மட்டும் குழப்பமாய்…. ஏக்கமாய்….

    குட்டிமா, உனக்கு நான் ஒண்ணு சொல்லட்டுமா….. நீ தேவன் உனக்கு கொடுத்த கிருபையை மறந்து போயிறாத என்றென்றைக்கும்…… சொல்லும் போதுதான் ஏஞ்சலின் வார்த்தைகளில் கவனம் வைத்தாள்.

    சே…..இதை எப்படி நான் மறந்தேன். குளோரி அக்காக்கு கிடைக்காத கிருபையை என் தேவன் என் மேல பாராட்டி என்னை இந்த பூமிக்கு திரும்பவும் கொண்டு வந்திருக்கார்ன்னா கண்டிப்பா அது என் மேல வைச்சிருக்கிற நேசம் மட்டுமே….. அதை எப்படி நான் மறந்து போவேன்……. மனதில் நினைத்தவளாய்

    சாரி ஏஞ்சல்….. என் மேல தான் தப்பு. நான் குளோரி அக்கா பற்றிய எண்ணத்தில் நீங்க பேசிட்டு இருந்ததை கூட கவனிக்க மறந்துட்டேன். என் தேவன் எனக்கு கொடுத்திருக்கிற வார்த்தைகள் குறித்து தெரிந்து கொள்ள ஆசைபடுறேன்…..

    உன் இயேசப்பா இப்பவும் உன்னை நேசிக்கிறாங்க…… உன்னை தன் முழு மனதோடும் மன்னிச்சிட்டாங்க….. அதுனால தேவையில்லாத குற்ற உணர்வுகள் வேண்டாம். தேவன் சொல்லி கொடுத்த எல்லா பாடங்களையும் மனதில நிலை நிறுத்து….. என்றும் அதை நினைத்து உன் தேவனை மகிமைப்படுத்த அதை உன்னுடைய டைரியில குறிச்சுகோ……. சொல்லி விட்டு தன் இறக்கைகளை விரித்து பறக்க ரெடியானவர்

    குட்டிமா, ஏற்கனவே நியாய தீர்ப்பு அடைந்த ஆத்துமாக்காக பரிதபித்து இன்னும் இந்த பூமியில உயிரோடு வாழ்ந்திட்டு இருக்கிற ஆத்துமாக்களை மறந்திராத. சரியா……

    அவள் சரி என்று தலை அசைக்கவும் அவரும் பறந்து போனார்.

    ஏஞ்சல் அந்த இடத்தில் இருந்து போனதும் தன் நின்று கொண்டிருந்த இடத்திலேயே முழங்காலில் நின்றாள். கண்களை மூடி தன் இயேசப்பாவிடம் பேச ஆரம்பித்தாள்.

    இயேசப்பா என்னால இப்பதான் புரிஞ்சுக்க முடிந்தது. எங்க அம்மா சொன்னது உண்மைதான். நரகத்திற்கு போனவங்க திரும்பவும் வந்ததா சொல்லப் பட்டதே கிடையாது. அப்படி இருக்கும் போது நீங்க என்னை அழைத்து வந்திருக்கீங்க. இது முழுக்க முழுக்க உங்க சுத்த கிருபை. நீங்க எனக்கு பாராட்டின கிருபைக்காக கோடான கோடி ஸ்தோத்திரங்களை சமர்ப்பிக்கிறேன், இயேசப்பா. ஆமென்….. சொல்லி கொண்டிருந்த போதே கண்கள் சொருகியதை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது. கீழே படுக்க வேண்டாம்…… பெட்டில் போய் படுக்கணும்….. மனதில் எண்ணங்கள் வந்தாலும் அவளால் நகர கூட முடிய வில்லை. அப்படியே தூங்கி போனாள்.

    காலையில் எழுந்ததில் இருந்தே அவளுடைய மனதில் கலக்கம் வந்து சேர்ந்து கொண்டது….. ஏன்…… இது கனவுதான….. இல்லை அம்மா சொல்லுற மாதிரி ஏதாவது தரிசனமா….. புரிந்து கொள்ள முடிய வில்லை.

    அவள் முகத்தை வைத்தே அவளுடைய அம்மா புரிந்து கொண்டார்கள். என்ன குட்டிமா….. என்ன பிரச்சனை, முகம் டல்லா இருக்கு. ஏதாவது கனவா….. அக்கறையோடு கேட்கவும்

    அம்மாவிடம் சொல்லுவது தப்பில்லை என்று அவளுக்கு தோன்றியது. இது இயேசப்பா வெளிபடுத்திய வார்த்தைகளின் சத்தியம் கிடையாதே….. அப்ப சொல்லலாமா….. இன்னும் குழப்பம்தான் அவளில்.

    ஓகே…..முழுவதும் சொல்ல வேண்டாம். நமக்குள்ள இருக்கிற குழப்பத்தை அம்மாவாலதான் தீர்த்து வைக்க முடியும் என்று எண்ணியவளாய்…. அம்மா, எனக்கு காலையில ஒரு கனவு வந்துச்சு….. எனக்கு ரொம்பவே குழப்பம். அதுனாலத்தான்…… அம்மாவை கேள்வியோடு நோக்கினாள்.

    சரி சொல்லு. உனக்கு அந்த கனவால என்ன பிரச்சனை, நீ விருப்பப்பட்டா எனக்கு சொல்லலாம்……. அம்மா வினவவும்

    அம்மா, எனக்கு என்ன சந்தேகம்னா அது என்னுடைய இயேசப்பா கொடுத்த தரிசனமா…. இல்லை சாத்தான் தேவையில்லாம கொடுத்த கனவான்னு குழப்பம்…... இன்னும் அவளில் குழப்பம் இருக்கத்தான் செய்தது.

    அந்த கனவு உன்னை பயமுறுத்துற மாதிரி இருந்துச்சா இல்லை ஏதாவது சந்தோஷமான காரியமா தோணுச்சா….. அம்மா கேட்கவும்

    அது வந்து…… மறுபடியும் யோசித்தவள்….. இயேசப்பா என்னை காப்பாத்துங்க, நீங்க ஏற்கனவே வார்த்தைகளில் கவனம் தேவைன்னு சொல்லி கொடுத்திருக்கீங்க. இப்ப கூட குழப்பம்தான் எனக்கு. இதை அம்மாகிட்ட சொல்லலாமா இல்லை சொல்ல கூடாதான்னு. நீங்கதான் எனக்கு உதவி செய்யணும். நீங்க தயவு செய்து எனக்காக பேசுங்க. ப்ளீஸ்….. ஒரு சிறு விண்ணப்பதை த் தேவனிடத்தில் வைத்து விட்டு பேச ஆரம்பித்தாள்.

    அம்மா, அந்த கனவில ஒருத்தரை பார்த்தேன். ஆனா அவரை இது வரை நான் பார்த்தது கிடையாது. அவர் நம்ம வீட்டுக்கு வருகிற மாதிரி….. நம்மளோட உட்கார்ந்து பேசுற மாதிரி…… அதற்கு மேல் பேச அவளுக்கு பாவம் அனுமதி கிடைக்க வில்லை.

    தேங்க்ஸ் இயேசப்பா, என்னை காப்பாத்திட்டீங்க.நன்றிகள் சொல்லி கொண்டாள்.

    சரி குட்டிமா…. இந்த கனவுக்காக ஏன் பயப்படுற….. சப்போஸ் நம்ம வீட்டுக்கு நம்ம தேவனுடைய சித்தம் இருந்து, யாராவது வருணும்னா வரட்டுமே…. இதுல ஏன் தேவையில்லாத குழப்பம். அதற்கு மேல் உன் மனசில குழப்பம் இருக்கிறதா நீ யோசித்தா, நம்ம இயேசப்பாவுடைய சமுகத்திற்கு போ….. அங்க அவர்கிட்ட கேளு…. அப்பா, எனக்கு இந்த மாதிரி ஒரு கனவு வந்திருக்கு. இது எனக்கு குழப்பமா இருக்கு. நீங்கதான் பதில் சொல்லணும்னு……சரியா…..என்று அம்மா சொன்ன போது

    அவளும் மகிழ்ச்சியாக தலையை அசைத்தாள். தேங்க்ஸ் மம்மி…. என்று சொல்லியவள் அவளுடைய அம்மாவின் கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு தன் ரூமை நோக்கி ஓடினாள்.

    உண்மையில் அவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் கேட்ட பிறகு ரொம்பவே சந்தோஷமாய் உணர்ந்தாள்.

    தன் படுக்கையில் அமர்ந்தாள். இயேசப்பா, எனக்கு காலையில என்ன கனவு வந்ததுன்னு உங்களுக்கும் தெரியும். எனக்கு ஏன் குழப்பம் வந்ததுன்னு கூட நீங்க நல்லாவே தெரிந்து வைச்சிருப்பீங்க. அப்பா எனக்கு சொல்லுவீங்களா. எனக்கு காலையில வந்தது தொல்லையின் திரட்சியால வந்த கனவா….. இல்லை இனி நடக்க போறதை  தெரிவிக்கிறதுக்காக நீங்க கொடுத்த தரிசனமா….. சொல்லி விட்டு அமைதியாக இருந்தாள்.

    மீண்டும் அந்த கனவின் மேலயே அவள் எண்ணங்கள் சென்றது. அவள் ஸ்கூல் முடித்து விட்டு வரும் போதே, அவளுடைய அம்மாவோடு ஒருத்தர் பேசி கொண்டிருப்பது அவளுக்கு தூரத்தில் தெரிந்தது. அவர் போட்டிருப்பது நீட்டான டிரஸ் என்பதும், அவர் காரில் வந்திருப்பதும் மட்டும் வெளியே இருந்தே அவள் அனுமானித்த காரியங்கள். வீட்டுக்குள் நுழைந்த போது, அவளுடைய அம்மா இவளை அவரிடம் காட்டி, இது என் பொண்ணு….. 5ம் வகுப்பு படிக்கிறா….. என்று சொல்லவும் அவர் இவளிடம் நல்லா படிப்பியாமா என்று கேட்டு அவளை பார்த்து சிரித்த போது, உண்மையில் ஆச்சர்யப்பட்டாள். ஏன்னா அவள் அந்த முகத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறாள்….. எங்க பார்த்தேன்…. மண்டையை போட்டு இப்போது கூட உடைத்து கொண்டாள்.

    இப்ப அவளுக்கும் புரிஞ்சிருச்சு…. அது குளோரி அக்கா முகம். அதே முகம் மாதிரிதான் இருக்கா…. சப்போஸ் அது அந்த அக்காவுடைய அப்பாவா…. உண்மையில் குழம்பி போனாள். இது வரை வந்த காரியங்கள் அவளை ஆச்சர்யப்படுத்த வில்லை. கனவில் அது வரை அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவளுடைய அம்மாவை காண வில்லை. அப்போது அவள் தோளை யாரோ தட்டி…. நீ நரகத்தில பார்த்ததை சொல்லு…… என்று சொன்ன போது வியர்த்து போனாள். அவள் குரல் வந்த திசையை பார்த்தே சொன்னாள். இல்லை…. இதை சொல்லுறதுக்கு என் இயேசப்பா எனக்கு அனுமதி கொடுக்கலை என்று. மீண்டும் அந்த சத்தம் அவளை தொந்தரவு படுத்தியது. தன்னை இழந்து போன ஆத்துமாக்காக வேதனைபட்டு அழிய நினைக்கிற ஆத்துமாவை விட்டுராத. சொல்லு……என்றது. நான் இவர்கிட்ட இதை பத்தி சொன்னா அவர் நொறுங்கி போயிருவார். என்னால அதை தாங்கி கொள்ள முடியாது. நான் என்னுடைய இயேசப்பாவை கஷ்டபடுத்த மாட்டேன். என் இயேசப்பா சொல்லி இருக்காங்க….. வார்த்தைகளில் கவனம் தேவைன்னு…..

    மீண்டும் அதே சத்தம்….. என் தீர்மானத்தை நிறைவேற்று….. என்றவுடன் அவள் கதி கலங்கி போனாள். நான் இவர்கிட்ட எப்படி அதை பத்தி சொல்ல…. அவள் குழம்பி கொண்டிருக்கும் போதே நீ சொல்ல நினைக்கிறதை சொல்லுமா….. அவரே வாய் திறந்து கேட்கவும் பயந்து எழுந்து விட்டாள். என்ன இப்படி ஒரு கனவு என்றுதான் இது வரை நினைத்திருந்தாள். ஆனா இப்ப அந்த பெரியவருடைய முகம் குளோரி அப்பா போல தெரியவும் ரொம்பவே பயந்து போனாள். என்ன இயேசப்பா…. ஒண்ணும் புரியவே இல்லை. தன்னை குழப்பி கொண்டாள்.

    இயேசப்பா….. என் மன குழப்பத்தை நான் உங்ககிட்ட சொல்லிட்டேன். சப்போஸ் குளோரி அக்காவுடைய அப்பா நம்ம வீட்டுக்கு வந்து தன் மகள் நரகத்தில் கஷ்டப்பட்டதை அவர் தெரிந்து கொள்ளணும் என்பது தான் உங்க சித்தமா இருந்தா உங்க வார்த்தைக்கு முழுமையா கீழ்படியுறேன் பிரெண்ட். சப்போஸ் நேத்து முழுவதும் குளோரி அக்காவை குறித்து நான் புலம்பிட்டு இருந்தால்தான் இந்த கனவு வந்தோ இல்லை என்னை என் இயேசப்பா பேச்சை மீற வைக்கிறதுக்காக சாத்தான் இந்த மாதிரி எண்ணங்களை கொடுத்திருந்தாலோ, என்னை தயவு செய்து உங்க சிறகுகளின் நிழலில் காத்து கொள்ளுங்க….. ப்ளீஸ்…..ஆமென். 

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    5 − = zero

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>