• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 22

    எழுந்து உட்கார்ந்தவள் தன்னை மீண்டும் பார்த்து கொண்டாள். நான் உண்மையில் நரகத்தில இருந்து வந்துட்டேனா இல்லை சும்மா எதுவும் கனவு பார்த்துட்டு இருக்கேனா…. அவளால் இன்னும் நம்ப முடிய வில்லை.

    தன் கைகளை, முகத்தை கூட தொட்டு பார்த்தாள். என்னை சாத்தான் தன் பெரிய வாயை திறந்து தாக்க வந்ததை நானே பார்த்தேனே…. அப்ப ஒரு பெரிய வெளிச்சம் கூட வந்துச்சு… அந்த சாத்தான் தூரத்தில அந்த வெளிச்சத்தால் விழுந்தது கூட நான் பார்த்தேன்… ஆனா நான் மட்டும் ஏதோ காத்தில மிதக்கிற மாதிரி தோணுச்சே……. நான் அப்ப எப்படி இங்க வந்தேன். நான் இங்க வந்தது உண்மைன்னா அந்த குளோரி அக்காவையும் என்னுடைய இயேசப்பா இந்த பூமிக்கு கூட்டிட்டு வந்துட்டாங்களா……. தன்னையே குழப்பி கொண்டாள்.

    சிறிது நேரம் வீட்டை நடந்து தீர்த்தாள். என்னுடைய வீடு, என்னுடைய இயேசப்பா நான் இந்த பூமியில சுகமா இருக்க எனக்காக கொடுத்த வீடு, ஆனா இந்த வீட்டை பற்றிய அருமை எனக்கு இப்பதான் தெரியுது. ஆசையோடு வீட்டில் உள்ள எல்லா பொருட்களையும் ரசித்து பார்த்தாள். அப்பொழுதுதான் ரேஷ்மியை பற்றிய ஞாபகம் அவளில் தோணியது.

    நான் அந்த நரகத்தில் இருந்து தப்பிச்சிட்டேன்னு என்னென்னமோ யோசித்தேனே….. ஆனா எப்படி ரேஷ்மியை மறந்து போனேன்…. அவளுக்கு என்ன ஆச்சோ….. மனம் மீண்டும் அவளில் வேதனைப்பட ஆரம்பித்தது.

    முழங்காலில் நின்றவள் தன்னுடைய இயேசப்பாவிடம் விண்ணப்பம் பண்ண ஆரம்பித்தாள். இயேசப்பா, பாவியாகிய என்னையும் நீங்க எவ்வளவு பெரிய இரக்கம் பாராட்டி இன்னொரு முறை இந்த பூமியில வாழ்க்கை வாழுவதற்காக கொடுத்த கிருபைக்காக நன்றிகள் ஆண்டவரே. இந்த தயவை நான் என்னைக்கும் என் இருதயத்தில் இருந்து மறந்து போகாத வண்ணம் நீங்க இருதயத்தில் பரிசுத்த ஆவிப்பாவால எழுதி வைச்சிடீங்களே, நன்றிகள் ஆண்டவரே. அப்பா எனக்கு தயவு செய்து இன்னொரு முறை வாய்ப்பு கொடுங்க. ரேஷ்மி எந்த வகையில ஹாஸ்பிடல்ல இருக்கான்னு எனக்கு தெரியாது. ஆனா நீங்க காண்பித்த அவ மேல ஒரு அக்காவா அன்பு வைக்க எனக்கு கிருபை பாராட்டுங்க. முகம் தெரியாத அந்த குளோரி அக்கா, உங்க வார்த்தைகளை எனக்கு கொடுத்து நான் அந்த நரகத்தில இருக்காத வண்ணம் என்னை உங்க அன்பினால் காப்பாத்தினாங்க. அப்ப என் முகம் தெரிந்த ரேஷ்மி மேல நான் எவ்வளவு அன்பு பாராட்டணும். தயவு செய்து ரேஷ்மியை காப்பாத்துங்க. அவ மேல நான் நீங்க சொல்லுற அளவுக்கு அன்பு வைக்க எனக்கும் உதவி செய்யுங்க. ப்ளீஸ் பிரெண்ட். ஆமென்.

    கண்களில் வந்த கண்ணீரை துடைத்து விட்டு, போனின் அருகில் நெருங்கினாள். அவளுக்கு மனபாடமாய் தெரிந்த அவங்க மாமாவுடைய நம்பர். போனில் நம்பரை அமுக்கி விட்டு, என்ன சொல் போறாங்களோ!!! மனதில் பயத்தோடுதான் காத்திருந்தாள். ரிங் சென்று கொண்டிருந்தது.

    பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தாள். மாமா என்ன சொல்லுவாங்க…. இனிமே என்னோடு பேசாதன்னு எதுவும் சொல்லுவாங்களோ???? இருதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கு தெளிவா கேட்டது. மாமா பேச ஆரம்பித்தார்.

    குட்டிமா, நாங்க வீட்டுக்குதான் வந்துட்டு இருக்கோம். நீ பயப்பட வேண்டாம். அப்பாவும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துருவாங்களாம். சொல்லி விட்டு அவர் செல் போனை ஆப் பண்ணுவதற்குள்

    மாமா, ரேஷ்மிக்கு எப்படி இருக்கு….. குரலில் பயங்கர குழப்பத்தோடு கேட்டாள்.

    நீ ரொம்ப டென்ஷன் எடுத்துக்க வேண்டாம். சி ஈஸ் ஆல்ரைட், இன்னும் ஐந்து நிமிசத்தில நாங்க வீட்டுல இருப்போம்….. என்றவாறு போனை ஆப் பண்ணினார்.

    மாமா கூறியதை இன்னும் நம்ப முடியாமல் யோசித்து பார்த்தாள். மாமா என் மேல கோபமே படலை. அப்ப ரேஷ்மி மாமாகிட்ட ஒரு விஷயத்தையும் சொல்லலையா……. அவள் தனக்குள் குழப்பி கொண்டிருக்கும் போதே, அவளுடைய அப்பாவின் டூ வீலர் சத்தம் கேட்கவும் வேகமா எழுந்து கதவை திறந்து பார்த்தாள்.

    ஹாய் குட்டிமா, சாரிடா நாங்க எல்லாரும் சேர்ந்து இன்னைக்கு உன்னை மட்டும் தனியா விட்டுட்டு போயிட்டோம். உன்னுடைய லீவு நாளை ரொம்பவே வேஸ்ட் பண்ணிதற்காக சாரி……. அவளுடைய ரொம்பவே தாழ்மையாக கேட்கவும் அழுதே விட்டாள்.

    அப்பாவுடைய மார்பில் சாய்ந்து அழுது கொண்டே இருந்தாள். அப்பாவால் என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியா விட்டாலும் அமைதியாக இருந்தார். அப்பா நான் உங்களையெல்லாம் பார்க்க முடியாமயே அந்த நரகத்தில கஷ்டப்பட போறேன்னு நினைச்சிட்டேன்….. வாய் வரை வார்த்தைகள் வந்தாலும் அதை அடக்கி கொண்டாள். இதை வெளியே சொல்லுறதுக்கு permission உண்டான்னு தெரியலையே….. மனதில் நினைத்தவாறு அப்பாவின் முகத்தை பார்த்தாள்.

    அவளை சோபாவில் அமர வைத்தவர், என்ன விஷயம், சொல்லு குட்டிமா. நீ ரொம்பவே அழுத. அப்பாவால என்னன்னு புரிஞ்சுக்க முடியாட்டியும் என் குட்டிமாவை ஏதோ ஒரு காரியம் ரொம்பவே கஷ்டப்படுத்திருக்குன்னு மட்டும் புரியுது. சப்போஸ் என்னோட நீ பகிர்ந்து கொள்ள ஆசைபட்டா தாராளமா சொல்லலாம்……. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே அழ ஆரம்பித்து விட்டாள்.

    அப்பா, அந்த விசயத்தை சொன்ன பிறகு என்னை வெறுத்துருவீங்களா……. கேள்வியோடு கேட்டவளுக்கு

    அவள் கேள்வியில் குழம்பி போனாலும் குட்டிமா, நீ எங்களுக்கு குட்டி இளவரசி. உன்னை நாங்க வெறுத்திட்டா எங்களையே வெறுத்ததா அர்த்தம்…… அவளை சமாதானப்படுத்த முயன்றார்.

    அவள் பேச தயங்குவது அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. குட்டிமா, அப்பா உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா…. சப்போஸ் உனக்கு அந்த அளவுக்கு வேதனையோ இல்லை சந்தேகமோ இருந்தா அந்த காரியத்தை குறித்து நாம பேச வேண்டாமே…… அப்பா சொல்வதற்குள் உடைந்து அழ ஆரம்பித்தாள்.

    என்னுடைய அப்பாவே என் மேல் இத்தனை கரிசனமா இருக்கும் போது,  என்னுடைய இயேசப்பா எவ்வளவு கரிசனம் உள்ளவரா இருப்பார். மீண்டும் அழுகை. எவ்வளவு தூரம் என்னை நேசிக்கிற என்னுடைய இயேசப்பாவை நான் கஷ்டப்படுத்திட்டேன். நீங்க சங்கீத புத்தகத்தில் சொன்னது உண்மை இயேசப்பா. உமக்கு பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு……. முந்தி நான் நினைச்சுக்குவேன். பயம்ன்னா இயேசப்பாக்கு பயந்துகிட்டேதான் மன்னிப்பு கேட்கணும் போல…. சப்போஸ் அவர் மன்னிப்பாரா மன்னிக்க மாட்டாரான்னு தெரியாதே……ன்னு யோசித்தது உண்டு. ஆனா இப்பதான் புரிஞ்சுகிட்டேன். பயம் என்பது….. தப்பை செய்திட்டு தேவன்கிட்ட எப்படி மன்னிப்பு கேட்குறது என்பதை குறித்து  கிடையாது. அது உண்மையில், தப்பு என் தேவனை எந்த அளவுக்கு வேதனைப்படுத்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளும் போது, ஏற்படும் பயம். சாரி பிரெண்ட் இனி ஒரு தடவை இந்த மாதிரி நான் உங்களுடைய நொறுங்கின எலும்புகளின் சத்தத்தை கேட்டு, அதை ஏத்துகுற அளவுக்கு என்கிட்ட தெம்பு இல்லை. ப்ளீஸ்…… இனி என் வாழ்கையில் உமக்கு விரோதமான துணிகரம் வேண்டாம். தயவு செய்து என்னை உங்க ரத்தத்தினால் சுத்திகரித்து உங்க பிள்ளையாக என் கடைசி நொடி வரை வாழ பண்ணுங்க.

    அவள் தேம்பி அழும் போதும் ஒன்றும் செய்ய முடியாதவராய் அமர்ந்திருந்தார் அவளுடைய அப்பா. இயேசப்பா, ப்ளீஸ் என்னால முடியலை. நான் உங்களை எவ்வளவு தூரம் விசனப்படுத்தினேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. தயவு செய்து என்னை மன்னிச்சிருங்க. மனதுக்குள் ஏதோ ஒன்று வந்து தனியா பிசையுகிற மாதிரி தோணுது. முடியலைப்பா. ரொம்ப வலிக்குது பிரெண்ட். ப்ளீஸ், நான் இனிமே தப்பே செய்ய மாட்டேன். கதறி அழுதாள். அவளுடைய அப்பா முன் உட்கார்ந்ததால் அழுகையை வேறு அடக்கி கொள்ள வேண்டியதிருந்தது.

    அப்பா, முகத்தை கழுவிட்டு வந்திருட்டுமா….. கண்ணீரோடு கேட்டவளுக்கு சரி குட்டிமா, முகத்தை கழுவிட்டு வா….. என்று மட்டும்தான் அவரால் சொல்ல முடிந்தது.

    அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தாள். இயேசப்பா, நான் என்னுடைய வேலையை பத்தி மட்டுமே யோசித்து என் பொண்ணுடைய உணர்வுகளை புரிஞ்சுக்க மறந்திட்டேனோ…… அவரும் குழம்பி போனார்.

    அவர் அதற்கு மேல் குழப்ப கூடாது என்று நினைத்தவாறு கார் வந்து நின்றது. கார் வந்த சத்தத்தை கேட்டதும் பாத்ரூமில் நின்று கொண்டிருந்தவள், அவசரமாக ஓடி வந்தாள். அவளுடைய மாமாதான் ரேஷ்மியை தூக்கி கொண்டு வந்தார். ரேஷ்மி முகத்தில் அமைதி தெரிந்தது.

    அம்மா முகம் முழுவதும் வருத்தம். ஆவலோடு தன் அம்மாவின் முகத்தை பார்த்தவளுக்கு முகத்தை காண்பிக்கதவராய் குனிந்தார். அம்மாக்கு அப்ப விசயம் தெரியும் போல….. மனதினில் நினைத்தவள் தன்னுடைய முகத்தை காண்பிக்காமல் முகத்தை தாழ்த்தினாள்.

    குட்டிமா, சாப்பிடீங்களா…… மாமாதான் பேச்சை ஆரம்பித்தார்.

    இல்லை….. என்றவாறு தலையை அசைத்தாள்.

    அக்கா…….. நானும், அத்தானும் சாப்பாடு எல்லாருக்கும் வாங்கிட்டு வந்திறோம். ரேஷ்மி பக்கம் திரும்பியவராய்

    குட்டிமா, நான் வரும் வரைக்கும் நல்ல பிள்ளையா இருக்கணும். சரியா…… கேட்டவருக்கு சரி என்றவாறு தலையை ரேஷ்மியும் அசைத்தாள்.

    உண்மையில் அந்த அமைதியை தாங்கி கொள்ள அவளால் முடிய வில்லை. அப்பாவும், மாமாவும் காரில் ஏறும் வரை அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

    ஏறினவுடன் முதலில் ரேஷ்மியின் முன்னால் நின்றாள். சாரி ரேஷ்மி….. என்னை தயவு செய்து என்னை மன்னிச்சிரு….. கதறி விட்டாள்.

    என்னாலத்தான் நீ தேவையில்லாத மன வேதனை அடைய வேண்டியதா போச்சு…. ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு ரேஷ்மி…… அவளுடைய கண்கள் எல்லாம் சிவந்திருந்தது. அழுகை இன்னும் நிற்க வில்லை.

    உன் மேல எனக்கு கோபமே இல்லை. நான் உன்னை விட சின்ன பொண்ணு. என்கிட்டே போய் நீ மன்னிப்பு கேட்டுட்டு….. உண்மையில் நான்தான் பயந்திட்டு இருந்தேன். என்னால தேவையில்லாம நீ கஷ்டபட்டுட்டு இருப்பன்னு…… நான் உண்மையில் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும். ஏன்னா சப்போஸ் இன்னைக்கி நீ சொல்லாம இருந்தா எங்க அம்மா விசயம் எனக்கு தெரியாம கூட போயிருக்கும். ரொம்ப தேங்க்ஸ்….. சொல்லி விட்டு ரேஷ்மியும் அழுதாள்.

    அடுத்து தன் அம்மாவிடம்தான் நின்றாள். அம்மா தலை கீழே குனிந்திருந்தார். அம்மா, சாரி…… என்று சொல்லுவதற்குள் அவளுடைய அம்மா அழுக ஆரம்பித்து விட்டார். நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் குட்டிமா…அம்மாவின் கழுத்தை கட்டி கொண்டாள்.

    நீங்க அட்வைஸ் பண்ணும் போதெல்லாம் எத்தனை தடவை காது கேட்காத மாதிரி இருந்திருக்கேன். அதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்து இன்னிக்கி என் வாழ்கையில நான் கஷ்டப்பட்டுட்டேன்…… சாரிமா. இனி என் வாழ்கையில் கண்டிப்பா தப்பு செய்ய மாட்டேன். உங்க வார்த்தை மீறி நடக்க மாட்டேன். பிராமிஸ்….. சொல்லி விட்டு அழுதாள்.

    அவளுடைய அப்பாவும், மாமாவும் வருவதற்குள் எல்லா சாரி கேட்கும் காரியமும் நடை பெற்றிருந்தது. மூன்று பேர் முகமும் சந்தோசத்தால் நிறைந்திருந்தது.

    என்ன எல்லார் முகமும் சந்தோஷமாய் இருக்கு…..ஏதாவது சந்தோஷமான விஷயமா…. என்ற படி அவளுடைய மாமாதான் பேச்சை ஆரம்பித்தார்.

    அது வந்து அப்பா, இன்னிக்கி நீங்க பீச்சுக்கு கூட்டிட்டு போறேன் சொல்லி எங்களை ஏமாற்றினதால் தான் இப்படி யெல்லாம் பிரச்சனை நடந்திருச்சு. அதுனால நாளைக்கி நீங்க மட்டுமில்ல, மாமாவும் லீவ் போட்டு நம்ம சென்னை ஊரை சுத்தி காண்பிக்க போறீங்க. சரிதான…… என்றவாறு சொல்லி ரேஷ்மி சிரிக்க ஆரம்பித்தாள்.

    மேடம் சொன்னா இல்லைன்னு சொல்லவா முடியும்…….. அவளுடைய அப்பா சொல்லி விட்டு……. குட்டிமா, நாளைக்கி உனக்கு ஸ்கூல் லீவ் போடுறதில எந்த பிரச்சனையும் இல்லையே……… என்றவருக்கு

    இல்லைப்பா….. நாளைக்கி முதல் நாள்ளா நான் ரேஷ்மி கூட சந்தோசமா என்ஜாய் பண்ண போறேன்….. வேணும்னா இப்பவே எங்க டீச்சர்க்கு போன் பண்ணி சொல்லுறீங்களா….. கேட்டு விட்டு ஆர்வத்துடன் தன்னுடைய அப்பாவின் முகத்தை பார்த்தாள்.

    பாப்பா…..அது வந்து படிக்கிற பிள்ளைகள் இப்படியெல்லாம் லீவ் போட கூடாது…... ரேஷ்மி செல்லமாக கோபத்தோடு சொல்லவும்

    அப்படியா சின்ன மேடம்….. படிக்கிற பிள்ளைகள்ன்னா நீங்க யாராம்…… என்ற படி அவளும் சொல்லி சிரித்தாள்.

    நான் நல்லா படிக்கிற பிள்ளைகள் பத்தி மட்டும்தான் சொன்னேன்…… சொல்லி விட்டு சிரித்தாள் ரேஷ்மி.

    ரேஷ்மி அருகில் வந்தவள் மாமா, இப்படிப்பட்ட ஒரு குறும்புதனமான தங்கச்சியை எனக்கு கொடுத்தற்காக தேங்க்ஸ்……. சொல்லி விட்டு ரேஷ்மியின் தலையை செல்லமாக தட்டினாள்.

    தேங்க்ஸ் இயேசப்பா, என்னுடைய பொண்ணு மனதில இந்த ஒரு சந்தோசத்தை கொடுக்கிறதுக்காகதான் இந்த பிரச்சனை நடந்தது போல. நீங்க என்ன செய்தாலும் எங்க நன்மைக்காகதான்…… சொன்னவர் தன்னுடைய தேவனுக்கு மனமார நன்றிகளை செலுத்தினார் அவளுடைய அம்மா.

    மாமாவும் அவளுடைய அப்பாவும் கூட அதே மாதிரியான மனநிலையில் தான் இருந்தனர். ரேஷ்மிக்கும் அவளுக்கும் இருந்த மனஸ்தாபம் போனதே அவர்களுக்கு சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அதற்காக அவள் செலுத்திய கிரயம் பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    நீதிமான்களின் கூடாரங்களில் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − 1 = two

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>