-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)- 36
ஊரில் இருந்து வந்த நாள் முதல் அவள் மனதில் என்றும் அந்த கேள்வி ஒலித்து கொண்டே இருக்கிறது. எனக்கு அன்னிக்கி என்ன ஆச்சு….. ஆனால் அவளுக்கு யாரிடமும் வாய் திறந்து கேட்கத்தான் பயமாக இருந்தது. இதை பத்தி நான் பேச கூடாதுன்னு என்னுடைய இயேசப்பா நினைச்சி….சப்போஸ் அதை நான் கேட்கிறதால என் இயேசப்பா மனசை நான் ஏன் கஷ்டபடுத்தனும்….எப்போதும் போல இன்றும் தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள்.
ஸ்கூல் ஆரம்பித்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் தனக்குள் அந்த கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு அவளே பதிலை சொல்லி கொள்வாள். மண்டையை போட்டு குழப்பி கொண்டது மட்டும்தான் மிச்சம்…..ஊருக்கு கிளம்பும் போகும் போதும் கூட…..தன் பிரெண்ட் வேதாவிடம் நைஸாக பேசி பார்த்தாள்.
எங்க வீட்டில எல்லாரும் உன்னை நல்ல பொண்ணுன்னு சொல்லுவாங்க. நீயும் எங்க வீட்டில ஒரு நபரா மாறிட்ட…..அந்த வார்த்தைகள் மட்டும்தான் சொன்னான்.
அவள் கண்களுக்கு முன்பே அவனுடைய அப்பா முழுமையான மாற்றத்தோடு நடமாடின அந்த சமயம் உண்மையில் அவள் தன் தேவனுக்கு நன்றிகள் சொன்னாலும்…..அப்படி என்னதான் நடந்துச்சு….மனம் கேள்வி கேட்காமல் இல்லை.
கிட்டதட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் அவள் இயேசப்பாவின் பிரசன்னத்தையோ, ஏஞ்சலின் அருகாமையோ அவள் உணர முடிய வில்லை. அது வேறு அவள் மண்டையை போட்டு குழப்பியது. என் கண்ணுக்கு முன்னாடிதான் அந்த பூதங்கள் எல்லாம் பயந்து ஓடிச்சிச்சு……ஆனா அதற்கடுத்து நான் மயக்கமானேன். அடுத்து கண் முழிச்சி பார்த்தப்ப, யாரும் அதை பத்தி என்கிட்டே பேசவே இல்லை. இல்லாட்டி என் கண்களுக்கு என் இயேசப்பா காண்பிச்ச அந்த அதிசயம் மத்தவங்க பார்க்க முடியாத மாதிரி என் இயேசப்பா எதுவும் மறைச்சிருப்பாங்களோ…..அந்த நாளில் இருந்து தொடங்கின குழப்பம் இன்னும் மனதை வேதனைபடுத்தி கொண்டேதான் இருந்தது அவளுக்கு.
ஊர் கிளம்பும் நாள் வரைக்கும் வேதா இவளோடு ஒரு பிரெண்டாக முழு உரிமையும் பாராட்டினான். ஆனா இடைப்பட்ட நேரத்தில இதை பத்தி கேள்வி கேட்டா மட்டும்…..தன் அம்மாவை மாதிரியே…..என் மண்டையை போட்டு உடைச்சிக்கிற. நம்ம தேவன் செய்த அதிசயத்தால் என்னுடைய அப்பா முழுமையா திருந்திட்டாரு. ஊர்ல நடக்க இருந்த எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு. ஊர்ல உள்ள எல்லா மக்களும் சந்தோசமா இருக்காங்க. அது மட்டுமில்ல எங்க அப்பா வாழ்க்கையிலும், என் வாழ்க்கையிலும் நடந்த அதிசயத்தால நம்ம ஊர் மக்கள் ஓரளவுக்கு இப்ப சர்ச்சுக்கு ஒழுங்கா வர்றாங்க……இப்படி மாற்றங்கள் எவ்வளவோ நடந்திருக்கே. அதை விட்டுட்டு……அன்னைக்கி என்ன நடந்துச்சுன்னு தேவையில்லாத ஆராய்ச்சி இப்ப உனக்கு தேவையா…..அவன் சொல்லும் போதே அவள் வாய் தானே மூடி கொள்ளும். ஆனா உனக்கு தெரியுமா…..தினமும் என்னுடைய இயேசப்பா என்னோடு இடைபடுவாங்க. தன் வார்த்தைகளால், அவருடைய மெல்லிய சத்தத்தால் என்னை வழி நடத்துவாங்க. ஆனா இந்த ஊருக்கு வந்த பிறகு, முதல் நாள் உன் வாழ்கையில் பார்த்த அதிசயம் அடுத்து உங்க அப்பா வாழ்கையில் நடந்த அதிசயத்தை பார்த்ததோடு சரி…..இப்பவே ரெண்டு, மூணு நாளுக்கு மேல ஆகுது…..ஆனா என்னால என் இயேசப்பாவை உணர முடியலை. ரொம்ப மன கஷ்டமா இருக்கு. நான் அன்னிக்கி என் இயேசப்பா பேச்சுக்கு முதலில் கீழ்படியாத காரணத்தினால்தான இதெல்லாம் நடக்குதோன்னு பயந்து உன்னை கேட்டா நீ….ஒரு விஷயம் கூட சொல்ல மாட்டிக்கிற….அன்று அவனிடம் பேசின பிறகு இருந்த மன வேதனை தினம் தினம் கூடினதே தவிர இன்னும் அவளால் அதை குறைத்து கொள்ள முடியலை.
இயேசப்பா….ப்ளீஸ் என்று சொன்னதோடு சரி….அதுக்கு மேல் தன் தேவனிடம் அவளுக்கு பேச கூட மனம் இல்லை. மனம் முழுவதும் ஒரு பாரம் அடைத்தது போல தோன்றியது. ஏன் இயேசப்பா முந்தி மாதிரி உங்ககிட்ட என்னால பேச முடியலையே…..ஏன் என்னால முடியலை….நீங்க எதுவும் என் கூட பேச கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கீங்களா???? கேள்வியை கேட்டு, அவளே பதிலும் சொல்லி கொண்டு அழ ஆரம்பித்து விடுவாள். இன்றும் கூட அதைத்தான் செய்தாள். இந்த மன பாரத்தை தாங்குவதை விட…..எங்காவது யாருமே இல்லாத இடத்திற்கு போகலாம் என்று கூட அவள் மனதிற்கு தோணியது. அம்மா, அப்பா விடம் கூட இயல்பாக இருப்பது போல நடிக்க தான் செய்தாள்.
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
இயேசப்பா நீங்க கொடுத்த வார்த்தை….நானும் எத்தனை நாளா உங்ககிட்ட சொல்லிட்டே இருக்கேன். என்னால இந்த பாரத்தை தாங்க முடியலை. ப்ளீஸ்….எனக்காக இந்த பாரத்தை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்க. எந்த பதிலும் வர வில்லை. மீண்டும் அவளுக்கு கண்ணீர் எட்டி பார்த்தது. ஏன்….இயேசப்பா. என்னால கொஞ்சம் கூட முடியலை. ப்ளீஸ்…… சொல்லி அழ ஆரம்பித்தாள்.
ஸ்கூல் கிளம்ப வேண்டிய நேரம் வேறு நெருங்கி கொண்டிருந்தது. நான் முதல்லயே உங்ககிட்ட சொன்னேனே. நான் அந்த ஊருக்கு போக மாட்டேன்னு. ஆனா இப்படி ஒரேடியா நீங்க பேசாம இருப்பீங்கன்னு தெரிந்திருந்தா, நான் கண்டிப்பா அந்த ஊருக்கு போயிருக்கவே மாட்டேன். அழுத தன் கண்களை நன்றாக அழுத்தமாக துடைத்தாள். அம்மா, அப்பாக்கு இந்த விஷயம் தெரிய கூடாது. இது என் இயேசப்பாக்கும், எனக்கும் நடக்கிற காரியம்….இதை பத்தி தெரிஞ்சி அவங்களால் என்ன பண்ண முடியும்???? தன் அறையில் இருந்து வெளியே வந்தாள்.
அம்மா வழக்கம் போல கிச்சனில் இவளுடைய காலை, மதியம் சாப்பாடுக்காக சமைத்து கொண்டிருந்தார்.
என்ன குட்டிமா. இன்னிக்கும் நீ குளிக்க போறதுக்கே லேட்டா ஆக்கிட்ட. இயேசப்பாகிட்ட prayer பண்ணிட்டு வேகமா வர வேண்டாமா…..அவள் அம்மா கேட்டதுக்கு
சாரி அம்மா. இயேசப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிட்டேன் போல. இதோ இப்ப கிளம்பிட்டேன்….என்று சொல்லி மகளையே பார்த்து கொண்டிருந்தார் அவர்.
தன் பொண்ணு முந்தி மாதிரி சந்தோசமாக இல்லை என்பது அவருக்கும் தெரியும். ஆனால் அதை வாய் திறந்து கேட்க முடியாத நிலையில் அவர் இருந்தார். அவளில் ஒரு பெரிய குழப்பம் இருப்பது அவள் அம்மா, அப்பாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனா கேட்பதற்கு அவங்க இயேசப்பாதான் permission கொடுக்கலையே….. ஒன்றும் பேசாமல் தன் சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
ஆனால் அவருடைய காதில் வேதா சொன்ன வார்த்தைகள் மட்டும் ஒலித்து கொண்டே இருந்தது. வேதா அப்பாவுடைய வாழ்கையில் அதிசயம் நடந்த அதே நாளில் தான் தேவனுடைய வார்த்தைகள் இவர்களுக்கும் கிடைத்தது.
அவளுடைய அம்மா அன்று நடந்த காரியத்தை நினைத்து பார்த்தார்.
வேதா அப்பா சொன்னது இன்னும் ஆச்சரியத்தை கொடுத்து கொண்டிருந்த அந்த சமயத்தில்…..ஜான் அங்கிள்தான் முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
நம்ம கொஞ்சம் கூட நினைச்சி பார்க்க முடியாத அதிசயத்தை நம்ம இயேசப்பா வேதா அப்பாவின் வாழ்கையில் அதுவும் நம்ம பொண்ணு மூலமா செய்திருக்காங்க. அதுனால நாம நம்ம தேவனுக்கு நன்றிகள் சொல்லிட்டு, அவர் நாமத்தை போற்றுவோம். அவர் சொல்ல எல்லாரும் கண்களை மூடி தன் தேவனை துதிக்க ஆரம்பித்தனர்.
அப்பொழுதுதான் அவர்கள் வேதா பேசுவதை கேட்டனர். தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டவாதாக. இனி பாவம் செய்யாதே…..உன் தேவனாகிய கர்த்தரில் களி கூரு. என்றும் அவர் வார்த்தைகளில் நடக்க அசதியாயிராதே…..எல்லாருக்கும் புரிந்தது, இது வேதா அப்பாக்காக கொடுக்க பட்ட வார்த்தைகள் என்று.
நீயோ சிறு பெண்ணே….தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக இந்த காரியம் நடந்தது. உன்னில் என்றும் பெருமையின் வேர் பற்றிக் கொள்ளாத வண்ணம் உன்னை பார்த்து கொள். இல்லை என்றால் நீ படும் பாடுகளை உன் ஜனம் பார்க்கும் வண்ணம் மிகவும் கொடியதாக இருக்கும்……அவன் சொல்லி முடித்த போது, எல்லாரும் ஒரு நிமிசம் ஒன்றும் பேச முடியாமல் அமைதியாகி விட்டனர்.
பெருமையுள்ளவனுக்கு என்னுடைய தேவன் எதிர்த்து நிற்கிறார்…..எல்லாரும் அறிந்த விசயம். ஆனா ஒரு சின்ன பெண்கிட்ட நம்ம தேவன் இத்தனை கடினமா நடந்து கொள்ளணுமா என்ன ….அங்கிருந்த அனைவரும் யோசிக்காமல் இல்லை.
ஆமென்…..சொல்லி விட்டு எல்லாருடைய முகத்தையும் பார்த்தான் வேதா. எல்லார் முகத்திலும் கொஞ்சம் பயம் தெரிந்தது. ஏன்…..அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
தேவ வார்த்தைகள்…..அவளை பற்றி சொல்லப்பட்ட வார்த்தைகள்…..யாராலும் ஜீரணிக்க முடியாத வண்ணம் இருந்தன என்பதுதான்……
அங்கிள், ஆன்ட்டி நீங்க உங்க பொண்ணை பற்றி ஏன் பயப்படுறீங்க. அடுத்து ஏன் இந்த தேவையில்லாத பதட்டம். உங்க பொண்ணை நம்ம இயேசப்பா கையில ஒப்புவித்த அந்த அர்ப்பணிப்பு அப்படியே இருக்கட்டும். இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இங்க உங்க பொண்ணை வைச்சி நம்ம தேவன் செய்த அதிசயத்தை நம்ம கண்கள் எல்லாவற்றையும் பார்த்திருந்தாலும், உங்களுக்கு தெரியும் என்கிறது அவளுக்கு மறைக்க வேண்டிய காரியம்….. என்னைக்கு ஒரு மனிதனுக்குள்ள பெருமை வந்து சேருதுன்னா…..அது தன் வாழும் வாழ்கையில் மற்றவங்களை விட தான் உயர்வா வாழ்வதா அவங்க நினைக்கும் போது, அதாவது ஜீவனத்தின் பெருமை அவனுக்குள்ள வரும் போது…….தேவையில்லாத காரியமான மற்றவங்களோட தன் வாழ்கையை ஒப்பிட்டு பார்க்கிற பழக்கம் வரும் போது…..இதுவரைக்கும் நான் அவளோட பேசினதில அவளுக்குள்ள அந்த காரியம் இருக்கிறதா நான் பார்த்தது இல்லை. ஆனா இந்த காரியம் தெரிய வரும் போது, கண்டிப்பா தன் ஆவி தேவனால் பயன்படுத்தப் பட்ட அந்த நிகழ்ச்சியை தெரிந்து கொள்ளுற சமயத்தில் கண்டிப்பா ஆவிக்குரிய பெருமை வந்து…..அது முழுக்க முழுக்க தேவனுக்கு விரோதமா குணமா கூட வெளியே தெரிய வரலாம். அவள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுக்க முழுக்க அந்த பொல்லாத காரியத்தால் அடிமைபடுத்தபட்டா, அது அவளை நம்ம தேவன் சொல்லுகிற அந்த வேதனைகளின் வழியா கடந்து போகும் படி அமையும்…..அவன் சொல்லி முடித்த போது தேவ வார்த்தைகளுக்கு விளக்கம் சொன்ன அவன் ஞானத்தை பாராட்டாமல் இருக்க முடிய வில்லை அனைவராலும்.
வேதா அம்மா, அப்பாவின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது….நான் கொஞ்சம் கூட உபயோகம் இல்லாதவன். ஆனா என் பிள்ளையை கூட என் தேவன் எவ்வளவு அழகா எடுத்து நடத்துறாங்க……. தேவனுக்கு நன்றிகள் செலுத்தினர்.
ஏற்கனவே வேதா சொன்னது ஞாபகம் வரவும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக…..ஜான் அங்கிள் சொல்ல
மேரி ஆன்ட்டியும், வேதாவும் சேர்ந்து ஆமென்….என்று சொன்னார்கள்.
அவளுடைய அப்பாதான் பேச ஆரம்பித்தார். நீ சொன்னது முழுக்க முழுக்க உண்மை வேதா. தேவனால் பயன்படுத்த படுகிற பாத்திரங்கள் ரொம்பவே தாழ்மையானதா இருக்கணும்….அது அவருடைய எதிர்பார்ப்பு. அதில என் பொண்ணு தவறி போக கூடாதுன்னு அவர் நினைக்கிறதில என்ன தப்பு இருக்கு. இது வரை அவளை காத்து வந்த அவர்கிட்டயே இன்னொரு தடவை முழுமையா ஒப்புவிக்கிறோம். அவர் எங்களுக்கு கட்டளையிட்ட இந்த காரியத்தையும்……இங்க நடந்த அதிசயத்தை கண்டிப்பா நாங்க அவகிட்ட சொல்ல மாட்டோம்….நம்ம தேவன்தாமே எங்களுக்கு அத்தகைய ஒரு திடத்தை தரணும்….அது மட்டுமில்ல என்றும் அவளை என் தேவனின் வழிக்குள் நடத்தின அதே பெற்றோரா இருக்க உதவி செய்யணும் எங்க தேவன்…..அவகிட்ட இருக்கிற மாற்றத்தை நாங்க எந்த வழியிலும் தெரிந்து கொண்டோம் என்பதை தெரியப்படுத்தாதவர்களா இருக்கணும்…….என்று அவர் சொல்லி முடிக்க
ஆமென்…..கண்களில் கண்ணீருடன் சொன்னார் அவளுடைய அம்மா. கொடுக்கபட்ட காரியம் பெரியதாயிற்றே…..கொஞ்சம் கூட பிசகினாலும் என் பொண்ணு வாழ்க்கை அழிந்து போகறதுக்கு நாங்களே காரணமா ஆயிருவோம்….. அவர் மனதில் பதட்டம் வந்து சேர்ந்து கொண்டது. ஆனா உங்களை நான் நம்புறேன் இயேசப்பா…..உள் மனம் சொல்லவும் தன்னையே திடப்படுத்தி கொண்டார் அவளுடைய அம்மா.
தன் மனைவி ஏதோ யோசித்து கொண்டிருகிறாள் என்பதும், அவள் கண்களில் கண்ணீர் தெரிய வரவும்…..அவளுடைய அப்பா முழுமையாக தெரிந்து கொண்டார்….அது தன் பெண்ணை நினைத்து தன் மனைவி விடுகிற கண்ணீர் என்று.
இப்ப ஏன் அழுதிட்டு இருக்கமா…..என்றவருக்கு
நம்ம பொண்ணு கொஞ்சம் கூட சந்தோசமா இல்லைங்க.எப்பவும் ஏதோ ஒரு யோசனையிலேயே இருக்கிற மாதிரி இருக்கா. நம்மகிட்ட பேசுறதை வைச்சே நீங்களும் கண்டுபிடிச்சிருப்பீங்களே….எனக்கு ரொம்பவே மனசு கஷ்டமா இருக்கு…..நாம ஏன் அந்த ஊருக்கு போகணும். நம்ம பொண்ணு மூலமா தேவன் நடத்தின காரியங்களை நாம ஏன் பார்க்கணும்…..இப்ப இப்படி ஏன் அழணும்…..அவர் பேசி முடித்த போது
அவளுடைய அப்பா பேச ஆரம்பித்தார். நீ ஏன் எதையும் புரிஞ்சுக்காம பேசுற. நம்ம இயேசப்பா நம்ம பொண்ணையும் தன் பிள்ளைகளை மீட்டெடுக்க பயன்படுத்துறாங்க என்பது எவ்வளவு பெரிய காரியம். நாம கொஞ்சம் கூட தகுதி இல்லாதவங்க. ஆனா அப்படி இருந்தும் நம்ம பொண்ணு மேல எப்பவும் அவர் கண்ணோக்கமா இருக்கிறது எவ்வளவு பெரிய சந்தோசமான விஷயம். ஆனா இத்தனை பெரிய சந்தோசத்தையும் நாம என்றும் பெறனும்னா கொஞ்சம் தியாகங்கள் பண்ணினா தான் முடியும்…..அவர் சொல்லவும்
ஆனா இந்த மாதிரி கஷ்டங்களை எல்லாம் என் பொண்ணு இவ்வளவு சின்ன வயசிலயே அனுபவிக்கணுமா என்ன? இப்படியெல்லாம் இருக்கிறதா இருந்தா என் தேவன் என் பொண்ணை ஒரு சாதாரணமான பொண்ணாகவே படைச்சிருக்கலாம்…..சொல்லி விட்டு அவர் அழுதார்.
ஏன் உன் மனசில உன் பொண்ணை நம்ம தேவனுடைய காரியங்களுக்கு விட்டு கொடுக்க முடியலை. உன்னை மாதிரியே எல்லா அம்மாமார்களும் தன் பிள்ளைகளை பத்தி நினைக்க ஆரம்பிச்சிட்டா யார் நாட்டுக்காக போராட…..யார் இந்த மக்களை பாதுகாக்க……சில விசயங்களை நீ கண்டிப்பா புரிஞ்சுக்கணும். நம்மளை நம்ம தேவன் இந்த காரியத்தில பயன்படுத்தா விட்டாலும், நம்ம இயேசப்பா நம்ம பொண்ணை பயன்படுத்துகிறாரே….அதுவும் இந்த வயசிலன்னு நினைக்கும் போது….எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குது. ஆனா அவ பிரயாணம் போற பாதையில நாம கடைபிடிக்க வேண்டிய சில காரியங்களையும் நம்ம இயேசப்பா கத்து கொடுத்திருக்காங்க. எல்லா டைம்லயும் நன்மைகளை மட்டும் எதிர்பார்க்கிறது தப்புமா……அவர் சொல்ல
ஆனாலும்……அவளுடைய அம்மா பேச நினைத்த போது
பரலோகத்திற்கு செல்லுற பாதை ரொம்பவே இடுக்கமும், நெருக்கமும் நிறைந்தது. நம்மளையும் நம்ம இயேசப்பா கூட்டி செல்லுறாரே. இப்ப நம்ம இயேசப்பா நமக்கு கத்துக்கொடுத்திருக்கிற பாடம்…..நம்ம பொண்ணு மேல நமக்கு இருக்கிறதா நினைச்சிட்டு இருந்த சில உரிமைகளை விட்டு கொடுக்க வேண்டியதா இருக்கு…..அது மட்டுமில்ல வேதா மூலமா நம்ம இயேசப்பா எவ்வளவு அழகாக சொல்லி கொடுத்தாங்க…… ஜீவனத்தின் பெருமை….நம்ம பொண்ணுக்கு மட்டுமில்ல….அவள் அம்மா, அப்பாவாகிய நமக்கு கூட அது வரக் கூடாது என்பதுதான் நம்ம தேவனுடைய தீர்மானம்…. இல்லாட்டி நாமளும் கூட, என் பொண்ணை பத்தி தெரியுமா…..அவளை இயேசப்பா எவ்வளவு அழகா நடத்துறாங்க…..ன்னு பெருமை பாராட்ட ஆரம்பிச்சிருவோம்.
என்றென்றும் நம்ம மேன்மையும், மகிமையும் நம்ம இயேசப்பா மட்டும்தான்….. நம்ம பொண்ணு கிடையாது என்பதை இந்த காரியத்தின் மூலமா நம்ம இயேசப்பா சொல்லி கொடுத்திருக்காங்க….புரியுதாமா….என்று அவர் கேட்ட போது அவளுடைய அம்மாவும் ஆமாம் என்பது போல தலையசைத்தார். தேங்க்ஸ் இயேசப்பா….முழு சந்தோசத்தோடு தன் தேவனுக்கு நண்றிகளை செலுத்தினார் அவர்.
எப்பவாது உன் கண் தெரிய நம்ம பொண்ணு கஷ்டபடுகிறதா தெரிந்தா….அந்த நேரத்தில உனக்கு ஒரே ஒரு எண்ணம் என்றும் வரட்டும்…. என் பொண்ணு இந்த மாதிரி கஷ்டப்பட என் தேவன் அவளை அனுமதிக்காட்டி….. நரகத்தில லட்சக்கணக்கான மக்கள் எரிய வேண்டியதற்கு நான் தான் காரணம் ஆயிருவேன்னு. அடுத்து உனக்குள்ள இந்த சுய எண்ணங்கள் வராதுமா…..அவர் சொல்லவும் உண்மையில் உடைந்து போனார் அவளுடைய அம்மா.
சாரி இயேசப்பா….நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். இனி அவ என் பொண்ணு இல்லை. உங்களுடையவ…… இது வரைக்கும் கொஞ்சம் கொஞ்சம் தேக்கி வைச்சிருந்த அந்த உறவை கூட உங்ககிட்ட கொடுத்திட்டேன்….ஆமென்….அவர் ஆழமாக சொன்னார்.
Bible Incidents (for kids) – 35 Bible Incidents (for kids) – 36
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)- 36
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives