• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 3

    ஏஞ்சல் நீங்களும், உங்களோட சேர்ந்து எல்லா தூதர்களும் நம்ம தேவனை இரவும் பகலும், ஓயாது தொழுது கொண்டிருப்பார்கள்ன்னு நான் பைபிள்ல வாசித்திருக்கேன். நம்ம தேவனை பக்கத்தில இருந்து தொழும் போது, அந்த சந்தோசம் எப்படி இருக்கு?

    அது ரொம்பவே பாக்கியத்திற்குரியவை குட்டிமா. அந்த சந்தோசத்தை எங்களால் வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட மகிமை உள்ள தேவனை துதிக்கிறதுக்கு அவர் எங்களை தெரிந்து கொண்டதே அவர் எங்களுக்கு காண்பித்த கிருபை. நம்ம தேவன் ரொம்பவே வல்லமையுள்ளவர், மகிமையானவர், ஒளியானவர், பரிசுத்தம் நிறைந்தவர்…..நீயும் பைபிள்ல படிச்சிருப்ப. அப்படிப்பட்ட மகிமையுள்ள நம்ம தேவனை நாங்க எப்பவும் பக்கத்தில இருந்தே துதித்தாலும், அவர் பரிசுத்தத்திற்கு முன்னாடி நாங்க கூட நிற்க முடியாது. என்ன சொல்லுவாங்க. நம்ம தேவன் முன்னாடி எப்பவும் தலை கவிழ்ந்து விழுந்து கிடக்கதான் தோணும். அவர் பாதத்தில் பணிந்து கொள்ளதான் இருதயம் விரும்பும். ஏன்னா நம்ம தேவன் அவ்வளவு மகிமையுள்ள தேவன்.

    எனக்கு புரியலை ஏஞ்சல். எங்களை உருவாக்கினவர், அவருடைய பிள்ளையா அவர் பக்கத்திலேயே உட்கார வைக்கத்தான் ஆசைபடுறாங்க. அப்படி இருக்கும் போது, அவர் முன்னாடி சந்தோசமா, அப்பான்னு சொல்லி அவரை கட்டி பிடிக்க தோணாம, பாதத்தில் விழுந்து கிடக்கதான் தோணும்ன்னா என்ன அர்த்தம்?

    நம்ம தேவன் ரொம்பவே அன்பானவர்ன்னு உனக்கு தெரியுமே குட்டிமா? அவருடைய விலை மதிக்க முடியாத அன்புக்கு முன்னாடி நீ தலை நிமிர்ந்து நிற்க ஆசைபடுவீயா? இல்லை தலை கவிழ்ந்து கனத்தை கொடுக்க விரும்புவீயா?

    தலை கவிழ்ந்து வணக்கம் செலுத்த ஆசைபடுவேன். ஆனா அவர் பாதத்தில் மட்டுமே விழுந்து கிடக்கணும்னு எண்ணம் வருமான்னு தோணலை ஏஞ்சல்?  

    இந்த காரியத்திற்கு நம்ம இயேசப்பாதான் பதில் சொல்லணும்.

    உதடை பிதுக்கியவள் எப்ப சொல்லி கொடுப்பாங்க?

    கொஞ்சம் கூட அவள் எதிர்பாராத நேரம், குட்டிமா………..ரொம்பவே மெல்லிய ஓசை……..தேவனின் சத்தம் தான். தெளிவா புரிந்தது அவளுக்கும். இது என்னுடைய இயேசப்பா குரல். உடனே தன்னையும் மீறி முழுக்க சாஷ்டங்கமாய் அந்த இடத்திலேயே விழுந்தாள். சொல்லுங்க இயேசப்பா, இந்த அடிமைகிட்ட என்ன சொல்ல ஆசைபடுறீங்க?

    கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. முகம் முழுமையும் அவர் முகத்தை தேடி, எழ கூட எண்ணம் இல்லாதவளாய் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.

    “நான் உன்னை நேசிக்கிறேன் குட்டிமா” என்ற வார்த்தைகள் இயேசப்பாகிட்ட இருந்து வந்ததும் இன்னும் தேம்பி அழுதாள்.

    தேங்க்ஸ்பா…….வார்த்தைகள் முடிக்க கூட முடியாமல் குழறியது. அப்பா, அப்பான்னு சொல்லி கதற மட்டுமே தோணியது அவளில். எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்பது ஏஞ்சல் அவள் கைகளை பற்றி எழுப்பி விடும் வரை அவளுக்கும் தெரியாது.

    கண்ணீரை துடைத்தவள் ஏன் ஏஞ்சல் என்கிட்டே முதல்லேயே சொல்லி இருக்கலாமே. மகிமைன்னு சொன்ன நீங்க நம்ம இயேசப்பா நம்ம மேல வைச்சிருக்கிற அன்பு நம்மளை அவர் முன்னாடி நிற்க கூட விடாமல், அவர் மார்பில உடனே சாய்ந்து கொள்ளத்தான் தோணும்னு. அவர் வார்த்தையில் எவ்வளவு அன்பு தெரிஞ்சுச்சு தெரியுமா? உடனே அவர் பாதங்களை பிடித்து, அப்பா, நான் உங்க அன்புக்கு தகுதியானவள் கிடையாது. என்னை விட்டு போயிராதீங்கன்னு கெஞ்சணும்னுதான் தோணுச்சு. நீங்க சொன்னது உண்மைதான். நம்ம தேவன் முன்னாடி யாராலயும் நிற்க முடியாது.

    உண்மையில் இந்த மாதிரி ஒரு அன்பான, மகிமையான நம்ம தேவன் பக்கத்திலேயே இருக்கிற நீங்க ரொம்பவே பாக்கியமானவர்கள். ஆனா உங்களை எப்படி நம்ம தேவன் படைத்தார் ஏஞ்சல்?

    எங்களை நம்ம தேவன் தன்னுடைய வாயின் சுவாசத்தினால் உருவாக்கினாங்க.

    ஒரு நிமிஷம் ஏஞ்சல், மூக்கு வழியாக நாங்க காற்றை வாங்குறோம், அடுத்து வெளியே விடுறோம். ஆனா வாய் சுவாசம்னா என்ன?

    உனக்கு சளி வந்து, மூக்கு அடைபடும் போது எப்படி மூச்சு விடுவன்னு யோசித்து பார்த்தது உண்டா?

    ம், கண்டிப்பா ஏஞ்சல். அந்த நேரம் நான் வாய் மூலமா சுவாசம் எடுப்பேன். அப்ப நம்ம தேவனுக்கும் சளி பிடிச்சது உண்டா?

    சிரிப்புடன், இல்லை. நாம பேசும் போது கூட நம்ம வாய் வழியா நம்ம சுவாசம் ஏற்படும். ஒருத்தருக்கு சுவாசம் சம்பந்தா பிரச்சனை ஏற்படும் போது முதல் உதவி வாய் வழியா கொடுக்கப்படும்.

    நான் பார்த்திருக்கேன் ஏஞ்சல். தீடீர்ன்னு யாராவது மயக்கம் போட்டு விழுந்துட்டா, அவருக்கு சுவாசம் இருக்கா பார்ப்பாங்க. இல்லைனா அவருக்கு தன் வாய் மூலமா சுவாசம் கொடுப்பாங்க. எங்க டீச்சர் கூட முதல் உதவி பற்றி உள்ள பாடத்தில இதை குறித்து சொல்லி இருக்காங்க. நீங்க எப்படி அப்ப நம்ம தேவன் மூலமா உருவானீங்க?

    நம்ம வார்த்தைகள் பேசும் போது, நம்ம வாயில் இருந்து சுவாசம் வரும். நீ கவனிச்சிருப்பன்னு நினைக்கிறேன். சில டைம் சிலர் பேசும் போது, கெட்ட வாடை வருதுன்னு சொல்லுவாங்க. அது கூட சுவாசம்தான். ஆனா அந்த கெட்ட வாடை வரது, பல் சுத்தமா வைக்காத காரணமா இருக்கலாம் இல்லை குடல் சம்பந்தமான பிரச்னையா இருக்கலாம்.

    இதெல்லாம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு. ஆனா இன்னும் நீங்க, நம்ம தேவனில் இருந்து எப்படி உருவானீங்கன்னு சொல்லவே இல்லை.

    நம்ம தேவன் இந்த உலகத்தையும், அதில் இருக்கிற எல்லாவற்றையும் தன்னுடைய வார்த்தையால்தான் படைத்தாங்கன்னு உனக்கு தெரியும், அப்படித்தான

    ஆமா ஏஞ்சல், பைபிள் வாசித்து தெரிந்து கொண்டேன். அது மட்டுமில்ல, எங்க அம்மா எனக்கு சொல்லி கொடுத்திருக்காங்க. நம்ம தேவன் வாயில் இருந்து அப்ப வந்த வார்த்தை, எங்க இயேசப்பான்னு சொல்லி இருக்காங்க. அதாவது நம்ம இயேசப்பா(வார்த்தை) மூலமாதான் நம்ம தேவன் இந்த உலகத்தையும், இதில் இருக்கிற எல்லாவற்றையும் படைத்தாங்களாம்.

    சரியா சொன்னமா. நாங்க அதாவது என்னை மாதிரி உள்ள ஏஞ்சல் எல்லாரும், இப்படி நம்ம தேவன் வாயில் இருந்து வார்த்தைகள் புறப்பட்ட நேரத்தில வெளி வந்த அந்த சுவாசத்தினால் உருவானவங்க.

    இப்ப புரியுது ஏஞ்சல். ஆனா நம்ம தேவன் எந்த வார்த்தை பேசினப்ப வந்த சுவாசத்தினால் நீங்க உருவானீங்கன்னு சொல்லுவீங்களா?

    சாரி குட்டிமா, அந்த மறை பொருளை அறிவிக்கிறதுக்கு எனக்கு நம்ம இயேசப்பா அனுமதி கொடுக்கலை.

    ஏன்னு தெரிந்து கொள்ளலாமா?

    நீ பைபிள்ல வாசித்திருப்பீயே. சில காரியங்களை நம்ம தேவன் தன் பிள்ளைகளுக்கு மறைவா வைத்தா, அது மறைவானதுதான். புரிந்து கொள்ளுவன்னு நம்புறேன்.

    கண்டிப்பா ஏஞ்சல், என்னுடைய இயேசப்பா சில காரியங்களை மறைவா வைக்கிறார்ன்னா அது கண்டிப்பா என்னுடைய நல்லதுக்காக மட்டுமே இருக்கும். ஒண்ணு அந்த காரியம் எனக்கு உபயோகம் இல்லைன்னு மறைச்சிருக்கலாம். இல்லை அந்த காரியம் இப்ப எனக்கு தேவை இல்லை, இனி எப்போதாவது என் தேவன் வெளிப்படுத்துவாங்க.

    சரியா சொன்ன குட்டிமா, தேவன் மறைக்கிற காரியங்களை நான் கண்டிப்பா தெரிந்தே கொள்ளுவேன்னு சில பேரு தேடி திரியுறதால வெறும் இளைப்பு மட்டுமே அவர்களில் காணப்படுது.   

    அதிக படிப்பு உடலுக்கு இளைப்புன்னு பிரசங்கி புத்தகத்தில சாலொமோன் ராஜா சொல்லி இருப்பாரு. நான் கூட நிறைய படிக்கிறேன் தெரியுமா ஏஞ்சல்?

    அப்படியா!!! என்ற வண்ணம் சிரித்தார்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine − = 3

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>